People Health Movement மக்கள் நலவாழ்வு இயக்கம்

  • Home
  • India
  • Puduchcheri
  • People Health Movement மக்கள் நலவாழ்வு இயக்கம்

People Health Movement  மக்கள் நலவாழ்வு இயக்கம் Official PHM Puducherry page WHERE ARE YOU,WHAT ARE YOU DOING AS A HEALTH ACTIVISTS.

COME AND BE AMONGST THE CADRE'S THAT WILL PLACE HEALTH BACK IN THE HANDS OF THE PEOPLE.

⚠️ இது என்ன நியாயம்? ⚠️புதுச்சேரி அரசின் கவனத்திற்கு...புதுச்சேரியின் மிக முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்றான கரிக்கலாம்ப...
24/02/2026

⚠️ இது என்ன நியாயம்? ⚠️

புதுச்சேரி அரசின் கவனத்திற்கு...
புதுச்சேரியின் மிக முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்றான கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலவழி மையத்தில், தற்போது புதிதாக பணியில் சேர்ந்துள்ள மருந்தாளுநர்களால் (Pharmacists) பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

📍 புதிதாகப் பணியமர்த்தப்பட்டுள்ள மருந்தாளுநர்களுக்குப் போதிய அனுபவம் இல்லாததால், மருந்துகளைக் கையாளுவதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
📍 தவறான மருந்துகள் வழங்கும் அபாயம்: இவர்களின் அனுபவக் குறைவால் நோயாளிகளுக்குத் தவறான மருந்துகளை வழங்கவும், அதன் மூலம் மக்களுக்குப் பாதிப்புகள் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது.

📍 நிர்வாகக் குறைபாடு: அனுபவம் வாய்ந்த மருந்தாளுநர்கள் இருக்க வேண்டிய இடத்தில், போதிய பயிற்சியற்றவர்களைப் பணியில் அமர்த்தியிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோரிக்கைகள்:
✅ இந்த முக்கியமான மருத்துவமனைக்கு உடனடியாக அனுபவம் வாய்ந்த மருந்தாளுநர்களை நியமிக்க வேண்டும்.
✅ அனுபவம் பெறும் வரை, தற்போதுள்ள புதிய மருந்தாளுநர்களை உதவியாளர்களாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் அல்லது அனுபவம் வாய்ந்தவர்கள் கண்காணிப்பில் பணிபுரியச் செய்ய வேண்டும்.
✅ மக்களின் உயிர் காக்கும் மருத்துவமனையில் இத்தகைய அலட்சியப்போக்கைத் தவிர்த்து, தகுதியானவர்களைக் கொண்டு தடையற்ற சிகிச்சை வழங்க வேண்டும்.

பொதுமக்களின் நலன் கருதி, புதுச்சேரி அரசும், சுகாதாரத் துறையும் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரியில் 3 மாத்திரைகள் குறிப்பிட்ட தரத்தில் இல்லாத நிலையில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
20/01/2026

புதுச்சேரியில் 3 மாத்திரைகள் குறிப்பிட்ட தரத்தில் இல்லாத நிலையில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

12/12/2025
புதுச்சேரியில் ரூ. 20 கோடி மதிப்புள்ள போலி மாத்திரைகள் பறிமுதல்: 4 குடோன்களுக்கு சீல்; போலீஸ் தீவிர விசாரணை.   #புதுச்சே...
27/11/2025

புதுச்சேரியில் ரூ. 20 கோடி மதிப்புள்ள போலி மாத்திரைகள் பறிமுதல்: 4 குடோன்களுக்கு சீல்; போலீஸ் தீவிர விசாரணை. #புதுச்சேரி #போலிமருந்துகள்

 #அரசுமருத்துவமனை    #புதுச்சேரி
03/11/2025

#அரசுமருத்துவமனை #புதுச்சேரி

சம்பள உயர்வு கேட்டு சுகாதாரத்துறை அலுவலகத்தை ஆம்புலன்ஸ் டிரைவர்கள் முற்றுகை.   #புதுச்சேரி  #அரசுமருத்துவமனை
20/06/2024

சம்பள உயர்வு கேட்டு சுகாதாரத்துறை அலுவலகத்தை ஆம்புலன்ஸ் டிரைவர்கள் முற்றுகை.

#புதுச்சேரி #அரசுமருத்துவமனை

30/05/2024

அரசு மருத்துவமனைகளை ஒழித்து வரும் புதுச்சேரி அரசு.

புதுச்சேரி GH மருத்துவமனையில் முதல்மாடியில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் அறையிலேயே காயலாங்கடை போல வைத்துள்ளனர்.

#அரசுமருத்துவமனை #புதுச்சேரி

25/09/2023

*மக்கள் நலவாழ்வு இயக்கம்*

*நேரலை கூட்டம் –*

*25/09/2023 மாலை 5மணி*

2018ஆம் ஆண்டு ஆயுஷ்மான் பாரத் - பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (AB-PMJAY) தொடங்குவதன் மூலம் சாமானிய மக்களும் எளிதில் அணுகக்கூடிய மற்றும் மலிவு விலையில் மருத்துவத்தை காப்பீடு மூலம் வழங்குவதில் ஒரு மாபெரும் முன்னெடுப்பை இந்தியா எடுத்தது. இவை மூத்த குடிமக்கள் சுகாதார காப்பீட்டுத் திட்டம் (SCHIS) மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வஸ்தியா பீமா யோஜ்னா (RSBY) AB-PMJAY திட்டம் என்றும் அறியப்படுகிறது.

2009 ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞரின் காப்பீட்டுத் திட்டமாகத் (CMCHIS) தொடங்கப்பட்டது, இது ஏழைக் குடும்பங்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சையைப் பெறுவதற்கு வசதியாக இருந்தது. 1.4 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இன்றுவரை இது தொடர்கிறது.

தேசிய சுகாதார அமைப்பு வளமையத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் டி சுந்தரராமன் தலைமையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை (சிஎம்சிசிஐஎஸ்) மேம்படுத்த ஐந்து பேர் கொண்ட குழுவை சுகாதாரத் துறை அமைத்தது. 2) சுகாதார செயலாளர் ககன்தீப் சிங் பேடி, 3) ஜே அமலோற்பவநாதன், ரேலா மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் 4) டாக்டர் முகமது ரேலா, காவேரி குழும மருத்துவமனைகளின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குனர் 5) டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் மற்றும் திட்ட இயக்குனர், தமிழ்நாடு சுகாதாரம் அமைப்பு திட்டம் கோவிந்த் ராவ் ஆகியோரும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

*தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்குத் திட்டங்களை அணுகக்கூடியதாகவும், சிரமமின்றிச் செய்யவும் இக்குழு பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும்.*

இக்குழுவினர் தமிழகத்தின் பல்வேறு தரப்பு பங்காளிகளை சந்தித்து திட்ட மேம்பாட்டுக்கும், செயல்முறை பிரச்சனைகளுக்கும் ஆலோசனை நடத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக இக்குழு *அடுத்தமாதம் முதல் வாரத்தில்* தமிழக அரசு சாரா அமைப்புகள், சமூக அமைப்புகள், தொழில்நுட்ப பிரதிநிதிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளது.

மக்கள் நலவாழ்வு இயக்கத்தின் சார்பாக நமது நிலைப்பாட்டையும், அனுபவங்களையும், மக்களின் தேவை/எதிர்பார்ப்புகளை இக்குழுவிடம் சமர்பிக்க இருக்கிறோம்.

இதுகுறித்து தங்கள் அனைவரிடமும் கலந்துரையாட நேரலை கூட்டம் 25ஆம் தேதி மாலை 5மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

*தாங்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும். மேலும் காப்பீடு திட்ட்த்தில் பாதிக்கப்பட்ட, இயங்கும் பிற அமைப்பு/நபர்களையும் அழைக்கவும்.*

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும் சுரேஷ் – 9840511638, அமீர்கான் - 9443282718

நன்றி
*MNI Inviting you All for Consultation on Insurance*

Time: *Sep 25, 2023 05:00 PM* India

Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/6871926749?pwd=WVhMZGNxNGJVQUhrRUZIaHJJMWgvZz09

Meeting ID: *687 192 6749*
Passcode: *mnimni*

புதுச்சேரி மக்கள் நலவாழ்வு இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட சுகாதாரம் அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும் என்ற சிறப்பு கருத...
18/06/2023

புதுச்சேரி மக்கள் நலவாழ்வு இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட சுகாதாரம் அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும் என்ற சிறப்பு கருத்தரங்கம்.

#அறிவியல்

Address

Puduchcheri
605010

Opening Hours

Monday 10am - 6:15am
Tuesday 10am - 6:15am
Wednesday 10am - 6:15am
Thursday 10am - 6:15am
Friday 10am - 6:15am
Saturday 10am - 6:15am

Telephone

04132290733

Alerts

Be the first to know and let us send you an email when People Health Movement மக்கள் நலவாழ்வு இயக்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to People Health Movement மக்கள் நலவாழ்வு இயக்கம்:

Share