13/12/2025
பத்திரிக்கை செய்தி
உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் தங்க நகைகள் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து அவர்கள் திருடிச் சென்ற தங்க நகைகளிலிருந்து கிடைத்த பணம் ரூ.13 லட்சம் கைப்பற்றபட்டது
கடந்த 24.11.2025 அன்று மாலை சுமார் 18.00 அளவில் ரங்கநாயகி (78) W/o செல்வராஜ், No : 01, மெயின் ரோடு, திருமால் நகர், கொசப்பாளையம், புதுச்சேரி என்ற மூதாட்டி அவரது ஜோல்னா பையின் உள்ளே ஒரு சிறிய தாம்புல பையில் 22 சவரன் தங்க நகைகளும் மற்றும் ரூ 1,10,000/- ரொக்கத்தை வைத்து எடுத்துக் கொண்டு புதுச்சேரி நெல்லித்தோப்பு சிக்னலில் ரோட்டை கிராஸ் செய்ய காத்திருந்தபோது அடையாளம் தெரியாத சுமார் 30 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் அதில் ஒருவர் கையில் கை குழந்தையை வைத்துக்கொண்டு அந்த மூதாட்டியிடம் “வாங்கப்பாட்டி உங்களை நாங்கள் ரோட்டை கிராஸ் செய்து விடுகிறோம்” என்று கூறி அந்த மூதாட்டியை இருபக்கத்திலும் அணைத்தவாறு பிடித்துக்கொண்டு ரோட்டை கிராஸ் செய்து திருவள்ளுவர் சாலை முனையில் உள்ள அனிதா ஓட்டலின் அருகே விட்டுவிட்டு சென்றதாகவும் அவர்கள் சென்ற பின் அந்த மூதாட்டி தன்னுடைய ஜோன்லா பையை பார்த்தபோது பையின் ஜீப் திறந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து பையை சோதித்தபோது அதன் உள்ளே இருந்த 22 சவரன் தங்க நகைகளும் மற்றும் ரூ 1,10,000/- ரொக்கம் வைத்திருந்த தாம்புல பையை காணவில்லை என்றும் தனக்கு உதவி செய்வதுபோல் தன்னை ரோடு கிராஸ் செய்து விட்ட மேற்படி இரண்டு பெண்கள் தான் அந்த நகை மற்றும் பணத்தை திருடிச் சென்று விட்டார்கள் என்று கடந்த 24.11.2025 அன்று இரவு 09.50 மணியளவில் உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் குற்ற எண் 261/2025 U/S 303(2) BNS r/w 3(5) BNS-ல் திரு.அ.கோவிந்தராஜன், உதவி ஆய்வாளர் அவர்களால் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் வீடியோ பதிவுகளில் உதவியோடு மேற்படி மூதாட்டிக்கு உதவி செய்வதாக சொல்லி மேற்படி தங்க நகைள் மற்றும் பணத்தை திருடி சென்ற பெண்களின் புகைப்படத்தை சேகரித்து அவர்களின் முகவரி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், குப்பம் மண்டல், மல்லனூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் என்று உறுதிசெய்யபட்டுது. மேற்படி குற்றவாளிகளை பிடிக்க காவல் துறை துணை தலைவர் திரு. சத்திய சுந்தரம் IPS., முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திரு. கலைவாணன் SSP(L&O) ஆகியோர்களின் உத்தரவின் பேரில் காவல் கண்காணிப்பாளர் (கிழக்கு) திருமதி சுருதி யரகட்டி IPS., அவர்களின் மேற்பார்வையில் உருளையன்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் அவர்களின் ஆலோசனையின் படி கிழக்கு குற்றப்பிரிவு மற்றும் உருளையன்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார்கள் அடங்கிய சிறப்பு குழு உருளையன்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.அ.கோவிந்தராஜன், அவர்கள் தலைமையில் குற்றவாளியை தேடி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், குப்பம் மண்டல் , மல்லனூர் கிராமம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியில் உள்ள குற்றவாளியின் இருப்பிடத்தை கண்டுபிடித்து கடந்த 27.11.2025 ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் மண்டல், கோத்தையின்லு பகுதியில் பதுங்கி இருந்த பெண் குற்றவாளிகளை பிடித்து விசாரிக்கையில் அவர்கள் பெயர்கள் 1). சாரதா (32) W/o திருமலேஷ், மற்றும் 2). வள்ளி (30) W/o திருமலேஷ், என்றும் அவர்களது பூர்விகம் மல்லனூர் கிராமம், குப்பம் மண்டல், சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் என தெரியவந்தது. விசாரணையில் மேற்படி மூதாட்டியிடம் தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற குற்றத்தை ஒப்புக்கொண்டு அந்த தங்க நகைகளை புரோக்கர் மூலம் விற்று ரூபாய் 15 லட்சம் பெற்றதாகவும் அதில் செலவு செய்தது போக மீதி ரூபாய் 7 லட்சம் பணத்தை குற்றவாளியிடம் இருந்து கைப்பற்றி கடந்த 27.11.2025 இரவு உருளையன்பேட்டை காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு பின் கனம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி காலப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்கள்.
மேலும் கடந்த 10/12/2025 அன்று மாலை, உருளையன்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் மேற்கூறிய இரண்டு எதிரிகளை போலீஸ் காவல் எடுத்து அவர்களிடமும் நடத்திய மேலதிக விசாரணையின் போது, அவர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், மூதாட்டியிடம் திருடப்பட்ட தங்க நகைகளை விற்றதில் கிடைத்த பணத்தில், அவர்களின் செலவுகள் போக மீதமிருந்த ஆறு லட்சம் ரூபாயை மறைத்து வைத்திருந்த இடத்தை அவர்கள் அடையாளம் காட்டினர். அந்தப் பணம், தமிழ்நாட்டில் உள்ள நாட்ராம்பள்ளி கனகநாச்சி அம்மன் கோவிலுக்குப் பின்புறத்திலிருந்து நேற்று, 12/12/2025 அன்று மீட்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை, மேற்கூறிய குற்றவாளிகளிடமிருந்து மொத்தம் 13 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது.
மேற்படி வழக்கில் துரித விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து அவர்கள் திருடிச் சென்ற தங்க நகைகளை விற்ற வகையில் அவர்களுக்கு கிடைத்த பணம் ரூ.13 லட்சம்-தை பறிமுதல் செய்த ஆய்வாளர் திரு.கார்த்திகேயன், உதவி ஆய்வாளர் திரு.அ.கோவிந்தராஜன், துணை உதவி ஆய்வாளர் திரு.K.அருள், சிறப்பு நிலை துணை உதவி ஆய்வாளர் திரு. பெரியண்ணசாமி மற்றும் கிழக்கு குற்றப்பிரிவு & உருளையன்பேட்டை காவல் நிலைய காவலர்கள் அடங்கிய சிறப்பு குழுவிற்கு காவல்துறை துணை தலைவர், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (சட்டம் & ஒழுங்கு) மற்றும் காவல் கண்காணிப்பாளர் (கிழக்கு) புதுச்சேரி ஆகியோர்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்தார்கள்.