புதுச்சேரி போராளிகள்

புதுச்சேரி போராளிகள் புதுச்சேரி போராளிகள் - மாற்றத்தை உருவாக்குவோம்

18/04/2026
18/04/2026

உங்கள் பார்வைக்கு...

18/04/2026

காமராஜர் நகர் தொகுதிக்கு உட்பட்ட 45 அடி சாலை சூப்பர் மார்க்கெட் எதிரில் 5 அடி அகலத்தில் திடீரென உள்வாங்கிய சாலை

13/04/2026

காரைக்கால் பாரதியார் சாலையில் நடந்த கட்டிட விபத்தில் ஒரு உயிரை இழந்த சோகம்.

02/04/2026

முத்தியால்பேட்டை தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தற்போதைய தொகுதியின் வேட்பாளர்...முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை எப்படியொல்லாம் கழுவுகிறார் காணொளி....இவர்தான்

28/03/2026

மதி கெட்டு பேசுவது சின்ன புள்ள தனமாக இல்ல...
புதுச்சேரி முதலியார் பேட்டை தொகுதியில் வெற்றி பெறாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுவேன்.!

அமைச்சர் ஜான் குமார் சவால்

23/03/2026

காங்கிரஸின் சீட்டு ஆக்ரோஷமாக போராடும் தொண்டர்கள் நாராயணசாமி நிலை?

21/03/2026

வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார் குப்பத்தில் பல ஆண்டுகளாக மின் பாக்கி செலுத்தாமல் இருந்ததால் மின் இணைப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு துண்டிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பல ஆண்டுகளாக மின் துறை ஊழியர்கள் கண்டு கொள்ளாமல் இருந்ததால்...பிள்ளையார் குப்பத்தில் வெங்கடாசலம் பிள்ளை சிவபெருமான் என்பவர் தனது வீட்டிற்கு திருட்டு மின்சாரத்தை கொண்டு செல்ல பக்கத்தில் உள்ள பச்சையம்மாள் த/பெ ராசு என்பவர் மாடி வீட்டில் ஏறி பக்கத்தில் உள்ள மின் கம்பத்தில் கொக்கி போட்டு மின் திருடும் காட்சி....

08/03/2026
170 நாட்கள் சிறைவாசம் - இறுதியில் ஆதாரமற்றது என நிரூபணம்" அரவிந்த் கெஜ்ரிவால்- டெல்லியின் முன்னாள் முதல்வர்..முதல்வராக இ...
28/02/2026

170 நாட்கள் சிறைவாசம் - இறுதியில் ஆதாரமற்றது என நிரூபணம்"
அரவிந்த் கெஜ்ரிவால்- டெல்லியின் முன்னாள் முதல்வர்..முதல்வராக இருந்த காலத்தில் மதுபான உரிமங்களை வழங்கியதில் சில நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டு, அதன் மூலம் பெறப்பட்ட லஞ்சப் பணம் தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி கைது.... நீண்ட சிறைவாசம்..

இன்று....சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஆய்வு செய்த நீதிமன்றம், அது வெறும் "கற்பனைக்கதை" என்று விமர்சித்துள்ளது. "கோப்புகளைத் தேடித் தேடிப் பார்த்தேன், ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஒரு சிறு துளி ஆதாரத்தைக் கூட சிபிஐ சமர்ப்பிக்கவில்லை" என்று நீதிபதி ஜித்தேந்திர சிங் மிகக் காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை அமைப்புகள் நடுநிலையாகச் செயல்படாமல், கெஜ்ரிவாலை" எப்படிக் குற்றவாளியாக்க வேண்டும்" என்று "முன்கூட்டியே தீர்மானித்து" இந்த வழக்கை நகர்த்தியுள்ளன..

தார்மீக அடிப்படையில் எடுக்கப்பட்ட அரசு முடிவுகளை ஊழல் என்று முத்திரை குத்தி ஒருவரைச் சிறையில் அடைப்பது சட்டத்திற்குப் புறம்பானது...

சாட்சிகளின் வாக்குமூலங்கள் சிபிஐ-க்குச் சாதகமாக மாற்றப்பட்டதையும் நீதிமன்றம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

இந்தத் தீர்ப்பின் ஹைலைட்டே...
சிபிஐ விசாரணை அதிகாரி மீது துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது தான்...??!!

அரவிந்த் கெஜ்ரிவால்... சிறந்த கல்வி அறிவு பெற்ற குடும்பம் .... இவர் பிர்லா தொழில்நுட்பக் கழகத்தில் பயின்ற மின்சாரப் பொறியாளர் கோவிந்த் ராம் கெஜ்ரிவாலின் மகன்..கெஜ்ரிவாலும் அவர் மனைவி சுனிதா கெஜ்ரிவாலும் முன்னாள் இந்திய வருவாய்த்துறை (IRS) அதிகாரிகள்... மகன் மகள் இருவருமே ஐஐடி (IIT) பட்டதாரிகள்..

கெஜ்ரிவால் "அன்னா ஹசாரே"வுடன் இணைந்து 'ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற இயக்கத்தில் முக்கியப் பங்காற்றினார்.
​அரசியலைத் தூய்மைப்படுத்த அரசியலுக்குள்ளேயே செல்ல வேண்டும்" எனக் கூறி2012-ல்."சாமானியர்களுக்கான கட்சி" என்ற அடிப்படையில் "ஆம் ஆத்மி கட்சி"யைத் தொடங்கினார்.டெல்லியின் முதலமைச்சராக மூன்று முறை பதவி வகித்தார்.... சேவைக்காக ஆசியாவின் நோபல் பரிசு எனப்படும் "ராமன் மகசேசே" விருது பெற்றவர்..

இன்று நிரபராதி என்று விடுவிக்கப்பட்டாலும்.....பல மாதங்கள் சிறையில் வாடிய பிறகு கிடைக்கும் "விடுதலை" என்பது வெறும் சட்டப்பூர்வமான காகிதம் மட்டுமே. சிறையில் கழித்த அந்த நீண்ட இரவுகள்....!! இழந்த நிம்மதி..??, அவர்கள் குடும்பம் அனுபவித்த அவமானம்.....எந்த ஒரு இழப்பீடும் ஈடாகாது... ஆனால் இங்கே எல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கிறது....??

​ஒரு நேர்மையான மனிதனை ஊழல்வாதி என்று முத்திரை குத்தி, சிறைக்கதவுகளுக்குப் பின்னால் தள்ளுவது என்பது வெறும் ஒரு நபருக்குச் செய்யப்படும் துரோகம் அல்ல; அது இந்த நாட்டின் ஜனநாயகத்தின் மீதும் மனித நேயத்தின் மீதும் நடத்தப்படும் ஒரு கொடூரமான தாக்குதல்.

அதிகாரிகள் வாங்கும் சம்பளம் இந்த நாட்டு மக்களின் வரிப்பணம். அவர்கள் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் 'அதிகாரம்' என்பது உண்மையை நிலைநாட்டத்தானே தவிர, உண்மையை அடகு வைத்து, ஒரு நேர்மையானவரின் வாழ்வைச் சிதைக்க அல்ல.

தாமதிக்கப்பட்ட நீதி என்பது அநீதிக்குச் சமம். இழந்த காலமும், அடைந்த அவமானமும் சாகும் வரை ஆறாத வடுக்கள்!"

ஆதாரம் தேடாத அதிகாரிகளின் அவசரத்தால், ஒரு நேர்மையானவனின் அடையாளமே சிதைக்கப்பட்டது. இன்று தரும் 'விடுதலை' அவமானம் துடைக்கப்பட்ட காகிதமே தவிர, இழந்த காலத்திற்கான ஈடு அல்ல!"

கூண்டுக்குள் அடைக்கப்பட்ட சிங்கத்தின் கர்ஜனையை விட, விடுதலையாகி வெளிவரும் நேர்மையாளனின் மௌனம் வலிமையானது.. அதை காலம் உணர்த்தும்...

நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார். "என் வாழ்நாள் முழுவதும் நான் சம்பாதித்தது நேர்மை மட்டும்தான்; இன்று கடவுள் நாங்கள் சரியானவர்கள் என்பதை நிரூபித்துவிட்டார்" என்று அவர் உருக்கமாகக் கூறினார.

Address

Pondicherry

Telephone

9655500117

Website

Alerts

Be the first to know and let us send you an email when புதுச்சேரி போராளிகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category