CPIM Mannadipet

CPIM Mannadipet CPI(M) official page of Mannadipet Commune Committee, Puducherry
Mannadipet , Thirubuvanai Assembly constituencies of Puducherry

Official page of Communist Party of India (Marxist) - Puducherry, Mannadipet Commune Committee.

07/04/2026
திருபுவனை வாக்காளர்களே!-> நேர்மையான-> ஊழலற்ற-> பொறுப்பான-> அரசியல் ஆழத்தோடு-> மக்கள் சேவை ஆற்றும்சுயநலமற்ற ஒரு சட்டமன்ற ...
07/04/2026

திருபுவனை வாக்காளர்களே!

-> நேர்மையான
-> ஊழலற்ற
-> பொறுப்பான
-> அரசியல் ஆழத்தோடு
-> மக்கள் சேவை ஆற்றும்
சுயநலமற்ற ஒரு சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
உங்கள் வாக்கை
அரிவாள் - சுத்தியல் - நட்சத்திர சின்னத்தில் செலுத்தி தோழர் மா.தட்சணாமூர்த்தி அவர்களை சட்டமன்றத்திற்கு அனுப்புங்கள்.

நேர்மையான அரசியலுக்கும் இங்கே இடம் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

புதுச்சேரியை மீட்போம்! முழு மாநில அந்தஸ்து - நமது பிறப்புரிமை! 🇮🇳ஒன்றிய அரசின் கைப்பாவையாக இருப்பதைத் தடுத்து, புதுச்சேர...
07/04/2026

புதுச்சேரியை மீட்போம்!
முழு மாநில அந்தஸ்து - நமது பிறப்புரிமை! 🇮🇳

ஒன்றிய அரசின் கைப்பாவையாக இருப்பதைத் தடுத்து, புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து பெற சமரசமின்றிப் போராடுவோம்!
மாநிலத்தின் கடன் சுமையைத் தள்ளுபடி செய்து, புதுச்சேரியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம்.

நேர்மையே எமது பலம்!
மக்கள் பணியே எமது அடையாளம்!

வாக்களிப்பீர்!
சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில்!

லாஸ்பேட்டை-ஆர். ராஜாங்கம்
திருபுவனை-வழக்கறிஞர் மா. தட்சிணாமூர்த்தி

பாசிச பாஜக - என்.ஆர் காங்கிரஸ் கூட்டணியைத் தூக்கியெறிவோம்!



புதுச்சேரியில் உயர பறக்கும் செங்கொடி  ! 🚩✨மக்களின் உரிமைகளுக்காக எப்போதும் களத்தில் நிற்கும் இடதுசாரி வேட்பாளர்களை ஆதரித...
03/04/2026

புதுச்சேரியில் உயர பறக்கும் செங்கொடி ! 🚩✨

மக்களின் உரிமைகளுக்காக எப்போதும் களத்தில் நிற்கும் இடதுசாரி வேட்பாளர்களை ஆதரித்து, பிரபலத் திரைக்கலைஞர் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர் தோழர் ரோகினிஅவர்கள் நாளை புதுச்சேரியில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்கிறார்! 📢

பிரச்சாரப் பயண விவரம் (04.04.2026):

📍 மாலை 04.00 மணி: லாசுப்பேட்டை தொகுதி - தோழர் இரா. ராஜாங்கம் (CPIM) அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பு.

📍 மாலை 05.30 மணி: உழவர்கரை தொகுதி - தோழர் நாரா. கலைநாதன் (CPI) அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பு.

📍 இரவு 07.00 மணி:திருபுவனை தொகுதி - தோழர் மா. தட்சிணாமூர்த்தி(CPIM) அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பு.

மாற்றத்திற்கான குரல் ஒலிக்கட்டும்! மனிதம் காக்க, உரிமை மீட்க கதிர் அறிவாள் மற்றும் சுத்தியல் அரிவாள் நட்சத்திரச் சின்னங்களுக்கு வாக்களிப்போம்! 🗳️✊
தோழர்களே, வாரீர்! அணிதிரள்வோம்! 🚩

திருபுவனை தொகுதியில் செங்கொடி முழக்கம்: தோழர் ஜி. ராமகிருஷ்ணன் பங்கேற்ற எழுச்சிமிகு வாகனப் பேரணிபுதுச்சேரி, திருபுவனை தொ...
03/04/2026

திருபுவனை தொகுதியில் செங்கொடி முழக்கம்: தோழர் ஜி. ராமகிருஷ்ணன் பங்கேற்ற எழுச்சிமிகு வாகனப் பேரணி

புதுச்சேரி, திருபுவனை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மற்றும் இருசக்கர வாகனப் பேரணி இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவரும், மேனாள் அரசியல் தலைமை குழு உறுப்பினருமான தோழர் ஜி. ராமகிருஷ்ணன் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இடது சாரி கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தோழர் மா. தட்சிணாமூர்த்தி அவர்களுக்கு அருவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் நோக்கில் இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.

திருபுவனை தொடங்கிய வாகனப் பேரணி, திருபுவனை மற்றும் திருவெண்டார் கோவில் ஆகிய முக்கிய வீதிகளின் வழியாகச் சென்றது.

நூற்றுக்கணக்கான கட்சித் தோழர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் செங்கொடிகளை ஏந்தி அணிவகுத்து வந்த காட்சி, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

பேரணியின் போது தோழர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது, உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மக்கள் விரோத கொள்கைகளை முறியடிக்கவும் இடதுசாரிகளின் வெற்றி அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

வேட்பாளர் மா. தட்சிணாமூர்த்திக்கு ஆதரவாகத் திரண்ட இந்தத் தொண்டர் படை, தேர்தல் களத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வலிமையை பறைசாற்றுவதாக அமைந்தது. வழிநெடுகிலும் தொழிலாளர்களும், விவசாயிகளும் திரண்டு வந்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இந்த எழுச்சிமிகு நிகழ்வு அருவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

வெல்லட்டும் செங்கொடி!
வெல்லட்டும் அருவாள் சுத்தியல் நட்சத்திரம்!

ஏன் தட்சிணாமூர்த்தி? 🤔​✅ மக்கள் பிரச்சனைகளில் முதல் ஆளாக நிற்பவர்.​✅ சட்ட ரீதியாக மக்களுக்காகப் போராடுபவர்.​✅ எளிய மக்கள...
30/03/2026

ஏன் தட்சிணாமூர்த்தி? 🤔

​✅ மக்கள் பிரச்சனைகளில் முதல் ஆளாக நிற்பவர்.
​✅ சட்ட ரீதியாக மக்களுக்காகப் போராடுபவர்.
​✅ எளிய மக்களின் உண்மையான தோழன்.

​நமது வாக்கு, நம் முன்னேற்றத்திற்காக! 🏹
திருபுவனையில் எழுச்சி பெறட்டும் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம்!

#திருபுவனை

🔥 திருபுவனையில் எழுச்சி! மக்கள் சக்தி களத்தில்! 🔥திருபுவனை இன்று சாதாரண தேர்தல் களம் இல்லை…இது மக்களின் உரிமைக்கான போர்க...
27/03/2026

🔥 திருபுவனையில் எழுச்சி!
மக்கள் சக்தி களத்தில்! 🔥

திருபுவனை இன்று சாதாரண தேர்தல் களம் இல்லை…
இது மக்களின் உரிமைக்கான போர்க்களம்! 🚩

எளிய மக்களின் குரலாக,
நீதிக்காக நீதிமன்றத்திலும்…
மக்களுக்காக தெருவிலும் போராடும்
மக்கள் வழக்கறிஞர் தோழர் தட்சிணாமூர்த்தி! ✊

அவரே உங்கள் உண்மையான பிரதிநிதி!
அவரே உங்கள் குரல்!

💥 பணக்கார அரசியலுக்கு எதிராக
💥 சாதி-மத அரசியலுக்கு எதிராக
💥 மக்கள் நல அரசியலுக்காக

இந்த முறை தீர்மானமாக…
சுத்தியல் 🔨 அரிவாள் 🌾 நட்சத்திரம் ⭐ சின்னத்தில் வாக்களிப்போம்!

👉 மாற்றம் வேண்டுமா?
👉 உரிமை வேண்டுமா?
👉 உண்மையான மக்கள் ஆட்சி வேண்டுமா?

அப்போ…
CPIM-க்கு வாக்களிப்போம்! 🚩

#திருபுவனை 🚩🔥

திருபுவனை சட்டமன்றத் தொகுதியில் மக்கள் வேட்பாளர் தோழர் ம. தக்ஷிணாமூர்த்தி அவர்களுக்கு சுத்தியல் அரிவாள் சின்னத்தில் வாக்...
27/03/2026

திருபுவனை சட்டமன்றத் தொகுதியில் மக்கள் வேட்பாளர் தோழர் ம. தக்ஷிணாமூர்த்தி அவர்களுக்கு சுத்தியல் அரிவாள் சின்னத்தில் வாக்களிப்பீர்

திருபுவனை மக்கள் வேட்பாளர் வெற்றி வேட்பாளராகிறார்! திருபுவனை சட்டமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்,...
23/03/2026

திருபுவனை மக்கள் வேட்பாளர் வெற்றி வேட்பாளராகிறார்!

திருபுவனை சட்டமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர், மக்கள் வழக்கறிஞர் தோழர் மா. தட்சிணாமூர்த்தி அவர்கள் இன்று (23.03.2026) தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார்!

📍 புறப்படும் இடம்: மதகடிப்பட்டு கட்சி அலுவலகம்

🕘 நேரம்: காலை 9:00 மணி (இருசக்கர வாகனங்களில் கொடி கட்டி அணிவகுப்போம்!)

📍 கூடும் இடம்: வில்லியனூர் கண்ணகி பள்ளி அருகில்
🕤 நேரம்: காலை 9:30 மணி (இங்கிருந்து எழுச்சிகரமான ஊர்வலம் தொடங்கும்!)

📍 மனு தாக்கல் செய்யும் இடம்: வில்லியனூர் சப்-கலெக்டர் அலுவலகம்
🕚 நேரம்: காலை 11:00 மணி

கிளைச் செயலாளர்கள், முன்னணிச் செயல்பாட்டாளர்கள், வர்க்க வெகுஜன அமைப்புகளின் தோழர்கள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் திரளாகப் பங்கேற்று, மக்கள் சக்தியைப் பறைசாற்றுவோம்!
வெல்லட்டும் செங்கொடி! 🚩

செங்கொடி ஏந்தி அணிதிரள்வோம் வாரீர்! ✊
திருபுவனையில் புதிய வரலாறு படைப்போம்!

PeoplesCandidate Villianur LeftFront PuducherryElections RedFlag WorkingClassRising vot4cpim

திருபுவனை தொகுதிஉழைக்கும் மக்களின் உரிமைக்குரல்! 🚩திருபுவனை (தனி) தொகுதியில் உழைப்பாளர்களின் முன்னேற்றத்திற்காகவும், சமூ...
20/03/2026

திருபுவனை தொகுதி
உழைக்கும் மக்களின் உரிமைக்குரல்! 🚩

திருபுவனை (தனி) தொகுதியில் உழைப்பாளர்களின் முன்னேற்றத்திற்காகவும், சமூக நீதி காக்கவும் போட்டியிடும் வழக்கறிஞர் தோழர் எம். தட்சிணாமூர்த்தி அவர்களுக்கு 'சுத்தியல் அரிவாள் நட்சத்திரம்' சின்னத்தில் வாக்களிப்பீர்!

* தொழிலாளர் நலன் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கு முக்கியத்துவம்!

* அனைவருக்கும் சமமான வாய்ப்பு மற்றும் வளர்ச்சி உறுதி செய்யப்பட!
வெற்றிச் சின்னம் 'சுத்தியல் அரிவாள் நட்சத்திரம்'!

🚩

Address

10, Canal Street, Madhagadipet, Puducherry
Pondicherry
605107

Telephone

+919843233631

Alerts

Be the first to know and let us send you an email when CPIM Mannadipet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CPIM Mannadipet:

Share