22/07/2024
பொள்ளாச்சி அழகப்பா லே-அவுட் வெங்கடேசா காலனி பகுதியில் பொள்ளாச்சி நகராட்சி மூலம் மக்கள் குடியிருப்பு, சார் ஆட்சியர், நீதியரசர் குடியிருப்பு , வட்டாட்சியர், நெடுஞ்சாலைத்துறை அலுவலர் குடியிருப்பு பகுதி மற்றும் VAO அலுவலகம் அருகில் / பின்புறம் உள்ள சாலையின் ஓரமாக நடைபாதை கடை கட்டப்படுவது தவிர்க்க வேண்டி பொள்ளாச்சி நகர பாஜக தலைவர் திரு. பரமகுரு அவர்களின் தலைமையில் பொள்ளாச்சி நகர பாஜகவினர் பொள்ளாச்சி சார் ஆட்சியாளர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தல்.
மனு முழு விபரம் :
பொள்ளாச்சி அழகப்பா லே-அவுட் வெங்கடேசா காலனி என்ற பகுதியில் பொது மக்கள் குடியிருப்பு, சார் ஆட்சியர், நீதியரசர் குடியிருப்பு, வட்டாட்சியர், மருத்துவமனைகள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர் குடியிருப்பு மற்றும் VAO அலுவலகம் அமைந்து உள்ளது.
இந்த பொள்ளாச்சி நகரின் மத்திய பகுதியாகும். இந்த பகுதியில் பேருந்து மற்றும் கனரக போக்குவரத்து அதிகம் இருக்கும்.
பொள்ளாச்சி பகுதியில் அவ்வப்பொழுது போக்குவரத்து மாற்றம் செய்யும் பொழுது, இப்பகுதி சாலை வழியாகத்தான் மாற்றம் செய்யப்படுகிறது.
கனரக வாகனங்களும் இவ்வழியாகத் தான் அதிகமாக செல்கிறது. அவ்வாறான பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிக்க இப்பகுதிகளில் தற்பொழுது நடைபாதை கடைகள் கட்டப்படுவதாகவும், அதற்கான பணிகள் நகராட்சி மூலம் தற்பொழுது துவங்கப்பட்டுள்ளது.
40 அடி அகலமான சாலை பகுதியில் அமைந்துள்ள 25 அடி அகலமான தார் சாலையை நகராட்சி நிர்வாகமே ஆக்கிரமிப்பு செய்து பாதுகாப்பு நிறைந்த சார் ஆட்சியாளர் குடியிருப்பு பகுதியின் சுற்றுச்சுவரை ஒட்டி ரோட்டில் குழி தோண்டப்படுகிறது.
நகராட்சி நிர்வாகத்தினால் சாலை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வரும் கடைகளினால் மற்றும் அதற்கு வந்து செல்பவர்களின் வாகனங்களை நிறுத்துவதால் பொள்ளாச்சி நகரின் போக்குவரத்து பாதிப்பு அடையும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் முதலிய வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்படும்.
நகராட்சி நிர்வாகத்தின் இந்த செயல் ஒரு சிலரின் காழ்ப்புணர்ச்சி மற்றும் பழி வாங்கும் செயலாகும். சார் ஆட்சியாளர் மற்றும் பிற அரசு துறை குடியிருப்புகளின் பாதுகாப்பு கேள்வி குறியாகும்.
ஏற்கனவே, பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் பார்க்கிங் விதிகள் மீறிய காரணத்தால் 70 க்கும் மேற்பட்ட கடைகள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள சூழ்நிலையில் தற்போதைய நகராட்சி நிர்வாகத்தின் இந்த செயல் தவறானது.
மத்திய அரசு திட்டத்தின் மூலமாக சாலையோர வியாபாரிகளுக்கு கடைகளை சாலையில் கட்டப்படுவதற்கு பதிலாக பொள்ளாச்சி நகரில் தனி வளாகம் அமைத்து அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் பொது மக்களும் எளிதாக பொருட்களை வாங்கி செல்ல வழி வகுக்கும், இந்த விஷயத்தில் தாங்கள் நடவடிக்கை எடுக்க கனிவுடன் வேண்டுகிறோம்.
https://x.com/pollachi_bjp/status/1815414096797261858