அய்யம்பாளையம்

அய்யம்பாளையம் ஈரோடு மாவட்டம், சென்னிமலைக்கு அருகில

ஈரோடு மாவட்டம், சென்னிமலைக்கு அருகில் அமைந்திருக்கும் அழகிய ஊர் தான் அய்யம்பாளையம். சென்னிமலை-ஊத்துக்குளி சாலையில் மேற்கே 6-வது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த ஊர், பெருந்துறை வட்டம், சென்னிமலை ஒன்றியம், எக்கட்டம்பாளையம் பஞ்சாயத்தில் உள்ளது. சிரகிரி வேலன் வீற்றிருக்கும் சென்னிமலையின் தென்மேற்கு அடிவாரத்தில் பரந்து அமைந்துள்ள இந்த ஊரில் கீழ் பவானியின் கிளை வாய்க்கால் மூலம் பாசனம் பெறுகிறது. இ

ங்கு நெல், கரும்பு, வாழை, மஞ்சள், தென்னை, மா மற்றும் பல பொருட்கள் சிறந்த முறையில் சாகுபடி செய்யப்படுகிறது. சென்னிமலை-காங்கயம் சாலையில் வெப்பிலி பிரிவு வழியாகவும், சென்னிமலை-ஊத்துக்குளி சாலை வழியாகவும் இந்த ஊரை அடையலாம். அரசு உயர்நிலைப்பள்ளி, அரசு அங்கன்வாடி மையம், கால்நடை மருத்துவமனை, தபால் நிலையம், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம், அரசு நியாய விலைக்கடை மற்றும் பல தனியார் கடைகள் நிறைந்துள்ள இந்த ஊர், இப்பகுதியில் உள்ள சுற்று வட்டார கிராமங்களுக்கு மைய பகுதியாக விளங்குகிறது.

16/03/2020

கொங்கு சலங்கை ஆட்டம் 12.03.2020

ஶ்ரீ மாரியம்மன் மங்கல விநாயகர் மகா கும்பாபிஷேகம் 13.03.2020
16/03/2020

ஶ்ரீ மாரியம்மன் மங்கல விநாயகர் மகா கும்பாபிஷேகம் 13.03.2020

Ganapathi Homam 10.03.2020
11/03/2020

Ganapathi Homam 10.03.2020

முளைப்பாரி மற்றும் தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வு 11.03.2020
11/03/2020

முளைப்பாரி மற்றும் தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வு 11.03.2020

09/03/2020

அன்புடன் அழைக்கிறோம்...

மஹா கும்பாபிஷேக விழாவிற்கு தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வு 08.03.2020
09/03/2020

மஹா கும்பாபிஷேக விழாவிற்கு தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வு 08.03.2020

08/03/2020
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்...
05/03/2020

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்...

மங்கல விநாயகர் கோபுரத்தில் நவதானியங்கள் நிரப்பும் நிகழ்வு மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள மண்டபம் கணபதி ஹோமம். நாள் 01.03...
04/03/2020

மங்கல விநாயகர் கோபுரத்தில் நவதானியங்கள் நிரப்பும் நிகழ்வு மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள மண்டபம் கணபதி ஹோமம். நாள் 01.03.2020

மகா கும்பாபிஷேக யாகசாலை பந்தல்கால் அமைக்கும் நிகழ்வு மாசி முதல் நாள் 13.02.2020
13/02/2020

மகா கும்பாபிஷேக யாகசாலை பந்தல்கால் அமைக்கும் நிகழ்வு மாசி முதல் நாள் 13.02.2020

அய்யம்பாளையம் ஸ்ரீ மங்கல விநாயகர் ஸ்ரீ தேவி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி நிரல்...
12/02/2020

அய்யம்பாளையம் ஸ்ரீ மங்கல விநாயகர் ஸ்ரீ தேவி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி நிரல்...

12/02/2020

ஈரோடு மாவட்டம், சென்னிமலைக்கு அருகில் அமைந்திருக்கும் அழகிய ஊர் அய்யம்பாளையம். இந்த ஊர் சென்னிமலையில் இருந்து மேற்கே 6 கி.மீ. தொலைவிலும் ஊத்துக்குளியில் இருந்து கிழக்கே 12 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. சென்னிமலையின் மலை அடிவாரத்தில் உள்ள இந்த ஊரின் வழியாக கீழ் பவானி வாய்க்கால் கடந்து செல்கிறது. 700க்கும் மேற்பட்டோர் வசிக்கும் இந்த ஊரில் அரசு உயர்நிலைப்பள்ளி, நியாய விலைகடை, கால்நடை மருத்துவமனை, தபால் நிலையம், ஆவின் பால் கொள்முதல் நிலையம் ஆகிய வசதிகள் அமைந்துள்ளன.

இந்த ஊரின் வடக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தண்ணீர் பந்தல் பிரிவில் அருள்மிகு பழனி ஆண்டவர் சன்னதி அமைந்துள்ளது. ஊரின் மேற்கு பகுதியில் புகழ் பெற்ற புதுப்பாளையம் அங்காளபரமேஸ்வரி ஆலயம் மற்றும் திருமண மண்டபம் அமைந்துள்ளது. விவசாயம் மற்றும் அது சார்ந்த பணிகள் இப்பகுதி மக்களின் பிரதான தொழில்ஆக உள்ளது.

சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி செல்லும் c2, c6, c9 மற்றும் c12 பேருந்துகள் இவ்வழியாக செல்கின்றன.

ஊரின் மையப்பகுதியில் அருள்மிகு விநாயகர் மற்றும் ஸ்ரீ தேவி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பொங்கல் திருவிழா. ஆண்டு தோறும் மாசி மாதத்தில் சிறப்பாக நடைபெறும்.

Address

Perundurai
638051

Website

Alerts

Be the first to know and let us send you an email when அய்யம்பாளையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share