26/05/2026
பெருந்துறையின் பொற்காலம்
மாற்றம் கண்ட பெருந்துறை..
மாற்றி அமைத்த தோப்பு வெங்கடாச்சலம்..
தடையின்றி தண்ணீர் கொடுத்த சிறப்புமிகு குடிநீர் திட்டங்கள்
கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் அனைத்துக் குடும்பங்களுக்கும் சுகாதாரமான குடிநீரை பெற்றுக் கொடுத்தவர்.
கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் பெருந்துறை தொகுதி முழுவதும் 200 புதிய மேல்நிலை நீர்த்தொட்டிகளை அமைக்க அடித்தளம் இட்டவர்.
குடிநீர் இணைப்புக்காகக் காத்திருந்தவர்களுக்கு கொடிவேரி திட்டத்தின் மூலம் புதிய குடிநீர் இணைப்புகளைப் பெற்றுக் கொடுத்தவர்
குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க அனைத்துப் பகுதிகளிலும் ஆழ்குழாய் கிணறுகளை அமைக்க அடித்தளம் இட்டவர்.
பெருந்துறை நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறத்தில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரம்மாண்டமான இராட்சச குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைத்து நகர் முழுவதும் சீரான குடிநீர் விநியோகத்தை ஏற்படுத்தியவர்.
கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி பகுதியில் 5000 வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பைப் பெற்றுக் கொடுத்தவர்.
VCV நகர், தோப்புப்பாளையம், ஆசிரியர் குடியிருப்பு, செஞ்சுரி கார்டன், கூட்டுறவு நகர், ஐஸ்வர்யா நகர், தாமரை நகர் உள்ளிட்ட பகுதிகளில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இராட்சச மேல்நிலை நீர்த்தொட்டி அமைத்து மேற்கண்ட பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் கொடுத்தவர்.