Kmdk திருப்பூர் வடக்கு ஒன்றியம், மாநகர மாவட்டம்.

  • Home
  • India
  • Perumanallur
  • Kmdk திருப்பூர் வடக்கு ஒன்றியம், மாநகர மாவட்டம்.

Kmdk திருப்பூர் வடக்கு ஒன்றியம், மாநகர மாவட்டம். Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kmdk திருப்பூர் வடக்கு ஒன்றியம், மாநகர மாவட்டம்., Political Party, Perumanallur.

இன்று பெருமாநல்லூரில் நடைபெற்ற கோவில் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டத்தில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் மாநில செயலாளர் ...
07/02/2024

இன்று பெருமாநல்லூரில் நடைபெற்ற கோவில் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டத்தில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் மாநில செயலாளர் திரு.சூரியமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டார்…

மேலும் திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் திரு.ரோபோ ரவிசந்திரன் அவர்களின் தலைமையில் மண்டல/ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

*திருப்பூர் மாநகர மாவட்டம்*

29/10/2023
இன்று (15.10.2023)கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி திருப்பூர் வடக்கு ஒன்றியம், மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கணக்கம்பாளையம்...
15/10/2023

இன்று (15.10.2023)கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி திருப்பூர் வடக்கு ஒன்றியம், மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கணக்கம்பாளையம் ஊராட்சி ஆலோசனை கூட்டமானது கிருஷ்ணா மஹாலில் நடைபெற்றது கூட்டத்துக்கு சிறப்பு விருந்தினராக திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் திரு.கொங்கு K. தேவராஜ் கவுண்டர் அவர்கள் கலந்துகொண்டார் உடன் ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இன்று(8.10.2023) காலை 10:30 மணி அளவில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி,திருப்பூர் வடக்கு ஒன்றியம்,மாநகர் மாவட்டத்துக்கு உட...
08/10/2023

இன்று(8.10.2023) காலை 10:30 மணி அளவில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி,திருப்பூர் வடக்கு ஒன்றியம்,மாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டமானது இன்று நடைபெற்றது இக் கூட்டத்தில் வருகின்ற பிப்ரவரி 4 2024 ஆம் ஆண்டு பெருந்துறையில் நடைபெற உள்ள மாநாடு மற்றும் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி பற்றி விவாதிக்கப்பட்டது கூட்டத்துக்கு சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் திரு.ரோபோ D.ரவிச்சந்திரன் அவர்கள் மற்றும் திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் திரு.கொங்கு K.தேவராஜ் கவுண்டர் கலந்து கொண்டனர் உடன் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள்.

*E.R.Eswaran MLA (KMDK) General Secretary : ஜவுளி துறையில் தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று புகழ்பெற்ற கோவை பகுதியின் ...
21/09/2023

*E.R.Eswaran MLA (KMDK) General Secretary : ஜவுளி துறையில் தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று புகழ்பெற்ற கோவை பகுதியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.*

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று புகழ்பெற்று ஜவுளித்துறையில் கொடிகட்டி பறந்த கோவை தத்தி தடுமாறுவதைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. அடிப்படையே ஆட்டம் கண்டிருக்கிறது. பருத்தி உற்பத்தியில் நாட்டிலேயே கடைசி இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 40 சதவீதம் பயிரிடுகின்ற நிலப்பரப்பு குறைந்திருக்கிறது. குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் தங்களின் பருத்தி உற்பத்தியை பல மடங்கு அதிகப்படுத்தியிருக்கும் போது தமிழ்நாடு பின் தங்கி விட்டது. மற்ற மாநிலங்களிலிருந்து பஞ்சு வாங்கித்தான் நமது நூற்பாலைகள் இயங்குகின்றன.

ஆயத்த ஆடை ஏற்றுமதியில் பங்களாதேஷ் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் 12.46 சதவீதம் அதிகமாக அதிகப்படுத்தி வளர்ந்திருக்கிறது. இந்தியாவின் வீழ்ச்சி தான் பங்களாதேஷின் வளர்ச்சி. பங்களாதேஷ் அரசின் கண்காணிப்பும், கவனமும் தான் அவர்களின் வளர்ச்சிக்கு காரணம். பனியன் தொழிலின் வளர்ச்சி பங்களாதேஷில் அபரிமிதமாக உள்ளது.

*இதற்கான காரணங்கள் :*

1. அரசின் சலுகைகள், குறைவான உற்பத்தி செலவு.
2. பல இந்திய நிறுவனங்களும் இந்தியாவில் தங்கள் நிறுவனங்களை மூடிவிட்டு பங்களாதேஷில் துவங்கியதும் காரணம்.

இந்திய நாட்டிற்கு பாதிப்பு என்றாலும் அதிகமான பாதிப்பு திருப்பூருக்கும் தமிழ்நாட்டுக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலை தொடர்ந்தால் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் மாவட்டங்கள் மீள முடியாத வீழ்ச்சியை சந்திக்கும். லட்சக்கணக்கான மக்கள் வேலையிழப்பார்கள்.

மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கைகளில் இறங்காவிட்டால் நாட்டின் மாநிலத்தின் பொருளாதாரம் வீழ்வதிலிருந்து காப்பாற்ற முடியாது. கொங்கு மண்டலத்தில் ஏற்றுமதியாளர்கள் வேறு வழியில்லாமல் பங்களாதேஷ் நோக்கிய பயணத்தை தொடங்கி விட்டார்கள்.

உடனடியாக அரசு தொழில் சார்ந்த சங்கங்களை அழைத்துப் பேசி மேல் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டுக்கு தேவை புதிய ஜவுளி பூங்காக்கள் அல்ல, நடந்து கொண்டிருக்கின்ற தொழிற்சாலையை பாதுகாக்கும் நடவடிக்கைகள்..

இன்று ( 19.6.2023) திருப்பூர், பெருமாநல்லூர் ஊராட்சியில் 19.6.1970 இல் நடைபெற்ற விவசாய போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிக...
19/06/2023

இன்று ( 19.6.2023) திருப்பூர், பெருமாநல்லூர் ஊராட்சியில் 19.6.1970 இல் நடைபெற்ற விவசாய போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் 53ஆம் ஆண்டு நினைவஞ்சலி ஆனது இன்று அனுசரிக்கப்பட்டது
இந்த நிகழ்வில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய திரு.AKP.சின்னராஜ் அவர்கள் கலந்து கொண்டார் உடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில,மாவட்ட,ஒன்றிய,மண்டல, ஊராட்சி,வார்டு மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இப்படிக்கு:
திருப்பூர் வடக்கு ஒன்றியம்,
மாநகர் மாவட்டம்,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி.

17/04/2023

இன்று (17.4.2023) தீரன் சின்னமலையின் 267 வது பிறந்த நாளை முன்னிட்டு கிண்டியில் உள்ள தீரன் சின்னமனையின் திரு உருவ சிலைக்கு திரு.E.r.ஈஸ்வரன்MLA அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

13/01/2023

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று பெருமையுடன் அழைக்கப்படும் நமது கோவைக்கு மெட்ரோ வேண்டும் என்று சட்டப்பேரவையில் திரு.ஈஸ்வரன் MLA அவர்கள் வலியுறுத்தினார்...

12/01/2023

தமிழக விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக சட்டப்பேரவையில் திரு. ஈஸ்வரன் அவர்கள் வைத்த கோரிக்கை..
( குறிப்பாக : தென்னை மற்றும் கரும்பு விவசாயிகளின் வருமானம்)

இன்று (29.12.2022) கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி,திருப்பூர் மாநகர், வடக்கு ஒன்றியம் சார்பாக கோவை செழியன் அவர்களின் 92வத...
29/12/2022

இன்று (29.12.2022) கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி,திருப்பூர் மாநகர், வடக்கு ஒன்றியம் சார்பாக கோவை செழியன் அவர்களின் 92வது பிறந்தநாளை முன்னிட்டு பெருமாநல்லூர் நால் ரோட்டில் அவருடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின்,திருப்பூர் மாநகர மாவட்ட, வடக்கு ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு.R.சிவலிங்கம் ...
18/11/2022

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின்,திருப்பூர் மாநகர மாவட்ட, வடக்கு ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு.R.சிவலிங்கம் கவுண்டர் அவர்களுக்கு பணி சிறக்க வாழ்த்துக்கள்…

E.R.Eswaran MLA (KMDK) General Secretary  விபத்துக்கள் மற்றும் மற்றும் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க போதை...
22/09/2022

E.R.Eswaran MLA (KMDK) General Secretary விபத்துக்கள் மற்றும் மற்றும் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

அண்மையில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டாசியர் அலுவலகம் அருகே மகனுக்கு பெண்பார்த்துவிட்டு திரும்ப வந்து நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதிய விபத்தில் அப்பாவி பொதுமக்களின் உயிர் இழப்பு பற்றி அனைவரும் அறிந்ததே.

விபத்தின் போது அந்த ஓட்டுனர் இருந்த நிலை சம்பந்தமாக சமூக வலைதள பக்கங்களில் வந்த வீடியோவை பார்த்தால் மனம் மிகவும் வேதனை அடைகிறது. மிகவும் போதையான நிலையில் வாகனத்தை ஓட்டி வந்து ஒரு குடும்பமே நிற்கதியான சூழ்நிலைக்கு தள்ளிய அவருக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் அது மிகையாகாது.

Address

Perumanallur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kmdk திருப்பூர் வடக்கு ஒன்றியம், மாநகர மாவட்டம். posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share