SDPI பெரியகுளம் நகரம்

SDPI பெரியகுளம் நகரம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SDPI பெரியகுளம் நகரம், Political Party, Ambedkar Statue Backside, Vadakarai, Periyakulam.

பெரியகுளம் நகராட்சி தென்கரையின் பல பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது.குடிநீரை சுகாதாரமான முறையில் சுத்தம் ...
30/05/2026

பெரியகுளம் நகராட்சி தென்கரையின் பல பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது.

குடிநீரை சுகாதாரமான முறையில் சுத்தம் செய்து தரக்கோரியும், கழிவுநீர் கலக்காத வண்ணம் குழாய் இணைப்புகளை பழுதுபார்த்து சரிசெய்யக் கோரியும் நகராட்சி அலுவலகத்தில் பெரியகுளம் நகர தலைவர் மீரான் அவர்கள் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
உடன் நகர பொருளாளர் அபுதாஹிர் மற்றும் செயல்வீரர்கள் உடனிருந்தனர்.

அனைவருக்கும் இனிய தியாக திருநாள் ஈதுல் அழ்ஹா நல்வாழ்த்துக்கள்..
27/05/2026

அனைவருக்கும் இனிய தியாக திருநாள் ஈதுல் அழ்ஹா நல்வாழ்த்துக்கள்..

தமிழக அரசே! மாநில அரசே!பெரியகுளம் பதிய பேருந்து நிலையம் எதிரில் மற்றும் மூன்றாந்தலில் பேருந்து நிறுத்தம் அருகில் இயங்கி ...
14/05/2026

தமிழக அரசே! மாநில அரசே!

பெரியகுளம் பதிய பேருந்து நிலையம் எதிரில் மற்றும் மூன்றாந்தலில் பேருந்து நிறுத்தம் அருகில் இயங்கி கொண்டிருக்கும் தனியார் மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுக.

பள்ளிக்கூடங்கள், பேருந்து நிலையம்,
பள்ளிவாசல், கோயில், கிளை நூலகம் அனைத்தும் 200 மீட்டருக்குள் இருந்தும் இயங்கி கொண்டிருக்கும் தனியார் மதுபான கடைகளை நிரந்தரமாக மூடவேண்டும்.
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

இவண்,
SDPI கட்சி - பெரியகுளம் நகரம்

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெண் ஒருவருக்கு இரத்தம் தேவைப்பட்டது..SDPI கட்சிய...
09/05/2026

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெண் ஒருவருக்கு இரத்தம் தேவைப்பட்டது..
SDPI கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டு SBI காலணி அஸ்கர் அவர்கள் இரத்ததானம் செய்தார்கள்.

09/05/2026

தவெக தலைவர் விஜய் அவர்கள் தலைமையில் அமையவுள்ள புதிய அரசுக்கு SDPI கட்சியின் மனமார்ந்த வாழ்த்துகள்!

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும், அவரது தலைமையிலான அமைச்சரவைக்கும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அமையவுள்ள புதிய அரசு, அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கித் தமிழ்நாட்டை வெற்றிகரமாக வழிநடத்த வேண்டும்.

​மேலும், மாநில உரிமை, தமிழ்நாட்டின் சுயாட்சி அதிகாரம் மற்றும் தனித்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்துவதோடு, தமிழ்நாட்டின் குரல் இந்திய அளவில் ஓங்கி ஒலிப்பதைப் புதிய அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

அதோடு கடந்த திமுக அரசு செயல்படுத்தி வந்த மக்கள் நலத் திட்டங்களையும், பணிகளையும் தொடர்வதோடு, விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காகச் செயல்படும் உண்மையான மக்கள் அரசாகத் திகழ வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன்.

-முகம்மது முபாரக்,
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு

08/05/2026

வாழ்த்துகள்..!

12 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு SDPI கட்சியின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தேர்வில் தேர்ச்சியை தவறவிட்ட மாணவர்களுக்கு அவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ள நிலையில், மனந்தளராமல் தேர்ச்சிக்காக அவர்கள் மீண்டும் முயற்சிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

-முகம்மது முபாரக்
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு

07/05/2026

அரசியல் இடைவெளியைப் பயன்படுத்தி மும்மொழித் திட்டமான 'பிஎம் ஸ்ரீ' திட்டத்தைத் திணிப்பதா?

-ஒன்றிய அரசின் எதேச்சாதிகாரப் போக்குக்கு எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்!

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, புதிய அரசு இன்னும் பதவி ஏற்காத ஒரு தற்காலிக இடைவெளி நிலவி வரும் நிலையில், ஒன்றிய பாஜக அரசு தனது மும்மொழித் திட்டத்தைத் திணிக்கும் 'பிஎம் ஸ்ரீ' (PM SHRI) திட்டத்தை ஏற்கச் சொல்லி தமிழகத்திற்கு நெருக்கடி தருவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

​மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முழுமையான அரசு பொறுப்பில் இல்லாத நேரத்தில், இத்தகைய கொள்கை முடிவுகளை எடுக்கச் சொல்லி அதிகாரிகளை வற்புறுத்துவது ஜனநாயகப் படுகொலையாகும். தமிழகத்தின் கல்வி உரிமையைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவுள்ள புதிய அரசுக்கே உள்ளது. அதை விடுத்து, அதிகார மட்டத்தில் அழுத்தங்களைக் கொடுத்து மும்மொழித் திட்டத்தை நுழைக்கப் பார்ப்பது ஒன்றிய அரசின் அரசியல் அறமற்ற செயலையே காட்டுகிறது.

​கல்வி மேம்பாட்டிற்கான நிதி என்பது மாநிலங்களின் அடிப்படை உரிமை. அந்த நிதியை வழங்க 'தேசியக் கல்விக் கொள்கையை' ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிப்பதன் மூலம், தமிழகத்தின் இருமொழிக் கொள்கையைச் சிதைக்க ஒன்றிய அரசு துடிக்கிறது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு விடப்பட்ட சவாலாகும்.

​தமிழகத்தின் மொழி உணர்வோடும், கல்வி உரிமையோடும் விளையாடுவதை ஒன்றிய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். புதிய அரசு அமையவுள்ள வேளையில், கொல்லைப்புற வழியாக இந்தித் திணிப்பை மேற்கொள்ளும் 'பிஎம் ஸ்ரீ' திட்டத்தை எஸ்டிபிஐ கட்சி உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் ஒருபோதும் அனுமதிக்காது.

​தமிழகத்தின் கல்விச் சுதந்திரத்தைப் பறிக்க நினைக்கும் ஒன்றிய அரசின் எதேச்சாதிகாரப் போக்கை முறியடிக்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். தமிழகத்தின் மீது இது போன்று மும்மொழி கொள்கைகளை திணிக்கும் நடவடிக்கைகளை ஒன்றிய பாஜக அரசு கைவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

​இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

02/05/2026
01/05/2026
மே தின வாழ்த்துக்கள்..உழைப்போம்
01/05/2026

மே தின வாழ்த்துக்கள்..

உழைப்போம்

Address

Ambedkar Statue Backside, Vadakarai
Periyakulam
625601

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI பெரியகுளம் நகரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share