MNM தேனி மாவட்டம்

MNM தேனி மாவட்டம் மக்கள் நீதி மய்யம் - தேனி மாவட்டம்

பெரியகுளம் மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் திரு.M.G. ஐயப்பன் அவர்களுக்கு பெரியகுளம் மக்கள் நீதி மய்யம் சார்பாக பிறந்த...
09/07/2024

பெரியகுளம் மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் திரு.M.G. ஐயப்பன் அவர்களுக்கு பெரியகுளம் மக்கள் நீதி மய்யம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்

28/09/2022

வன்முறைக் கலாச்சாரத்தை அனுமதிக்கக் கூடாது. தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்ட வேண்டும்.

12/09/2022
12/09/2022

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த மாத ஊதியமான ரூ.12720 வழங்கப்படுவதற்குப் பதிலாக ரூ.8000 மட்டுமே வழங்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.கடந்த பலமாதங்களாகவே நிர்ணயித்த தொகை வழங்கப்படவில்லை. குப்பை அகற்றி மக்களின் சுகாதாரத்தைக் காக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதை நகராட்சி நிர்வாகத்துறை உறுதிசெய்திட வேண்டும்.குறைவான ஊதியம் கொடுத்து அரசின் விதிமுறைகளைக் கடைபிடிக்கத் தவறிய ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். Chief Minister of Tamil Nadu M. K. Stalin K.N.NEHRU District Collector Kancheepuram

12/09/2022

கரூர் மாவட்டம் க.பரமத்தி, குப்பம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன், சட்டவிரோத கல்குவாரிகள் தொடர்பாக கனிமவளத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து, நடவடிக்கை எடுக்கச் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கல் குவாரி கும்பலால் அவர் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டுள்ளார். ஜெகநாதன் குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தப் படுபாதகச் செயலில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் இயற்கை வளங்களைச் சூறையாடுதல், ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளுக்கு எதிராகப் போராடும் சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று மநீம கோரிக்கை விடுக்கிறது. கரூர், கன்னியாகுமரி உள்பட தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாகச் செயல்படும் குவாரிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, கனிமவளக் கடத்தலை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். அனுமதி இல்லாமலும்,அளவுக்கு அதிகமாகவும் கனிம வளங்கள் வெட்டி எடுப்பதை தடுத்து நிறுத்தி,இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும்.
Chief Minister of Tamil Nadu M. K. Stalin Durai Murugan Dr. C. Sylendra Babu IPS Karur District Police

Address

VOC Street
Periyakulam
625603

Alerts

Be the first to know and let us send you an email when MNM தேனி மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to MNM தேனி மாவட்டம்:

Share