இதெல்லாம் என்ன பெருமையா கடமை

  • Home
  • India
  • Perambalur
  • இதெல்லாம் என்ன பெருமையா கடமை

இதெல்லாம் என்ன பெருமையா கடமை all news available.....

The  ...
01/10/2017

The ...

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴*நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் பிறந்த தினம்.*1950 களில்☘பராசக்திமனோகராஎதிர்பாராததுஉத்தமபுத்திரன் ...
01/10/2017

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

*நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் பிறந்த தினம்.*

1950 களில்☘

பராசக்தி
மனோகரா
எதிர்பாராதது
உத்தமபுத்திரன்
வீரபாண்டிய
கட்டபொம்மன்
பாகப்பிரிவினை

*அந்த தலைமுறை சொல்லியது நீ தான் நடிகர் திலகம் என்று.*
🌿🌿🌿🌿🌿

1960 களில்☘

இரும்புத்திரை
படிக்காத மேதை
பாவ மன்னிப்பு
பாசமலர்
கப்பலோட்டிய தமிழன்
பலே பாண்டியா
ஆலயமணி
புதிய பறவை
நவராத்திரி
திருவிளையாடல்
தில்லானா மோகனாம்பாள்
உயர்ந்த மனிதன்
தெய்வ மகன்

*அந்த தலைமுறையும் சொல்லியது நீ தான் நடிகர் திலகம் என்று.*
🌿🌿🌿🌿🌿

1970 களில் ☘

வியட்நாம் வீடு
ராமன் எத்தனை ராமனடி
பாபு
ஞானஒளி
கௌரவம்
தங்கப்பதக்கம்
அவன் தான் மனிதன்

*அந்த தலைமுறையும் சொல்லியது நீ தான் நடிகர் திலகம் என்று.*
🌿🌿🌿🌿🌿

1980 களில் ☘

கல்தூண்
வா கண்ணா வா
மிருதங்க சக்கரவர்த்தி
வாழ்க்கை
முதல் மரியாதை

*அந்த தலைமுறையும் சொல்லியது நீ தான் நடிகர் திலகம் என்று.*
🌿🌿🌿🌿🌿

1990 களில் ☘

தேவர் மகன்
பசும்பொன்

*அந்த தலைமுறையும் சொல்லியது நீ தான் நடிகர் திலகம் என்று.*
🌿🌿🌿🌿🌿

2000 களில் ☘

படையப்பா

*அந்த தலைமுறையும் சொல்லியது நீ தான் நடிகர் திலகம் என்று.*
🌿🌿🌿🌿🌿

2010 களில☘

*கர்ணன் படம் பார்த்து இந்த தலைமுறையும் சொல்லியது நீ தான் நடிகர் திலகம் என்று.*

ஆகவே எந்த தலைமுறைக்கும் *நடிகர் திலகம் நமது சிவாஜி கணேசன் அவர்கள் மட்டும் தான்.*

இன்னும் எத்தனை தலைமுறைகள் இருக்கிறதோ அதுவரை அவர் புகழ் இருக்கும்.

*வாழ்க நடிகர் திலகத்தின் புகழ்.*
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

01/10/2017

Good evening to all...

26/11/2013

ஒருவழியாக 'இரண்டாம் உலகம்'
வெளியாகிவிட்டது. ஆனால்,
எதிர்பார்த்த
அளவுக்கு படத்துக்கு ரெஸ்பான்ஸ்
இல்லை.
பட்ஜெட்டை விட பல
மடங்கு செலவு வைத்துவிட்டதாக
டைரக்டர் செல்வராகவனைக் குற்றம்
சொன்ன தயாரிப்பு தரப்பு கடைசியில்
எப்படி சமாதானமானது என்பது பெரிய
அதிர்ச்சி!
மீண்டும்
ஒரு படத்தை தனது கம்பெனிக்கு இயக்கித்தர
வேண்டும் என்று செல்வராகவனிடம்
ஒப்பந்தம் போட்டிருக்கிறார்களாம்.
இவர் இயக்கித் தரப்போகும் அந்தப்
புதிய படத்திற்கு சம்பளம்
கிடையாதாம்.
இப்படியொரு அக்ரிமென்ட்டில்
செல்வாவும் சைன்
பண்ணியிருக்கிறாராம்.
அடுத்த படத்திற்கு சம்பளம்
இல்லை என்றால் அதற்கெல்லாம்
செல்வராகவன் கவலைப்பட்ட
மாதிரி தெரியவில்லை. ஆனால்,
செல்வாவை இப்படி லாக்
பண்ணியதாக நினைத்துக்
கொண்டிருக்கும் நிறுவனம்,
அப்படியே இவரது தம்பியான
தனுஷையும்
சேர்த்தே இழுத்திருக்கிறதாம்.
இனிமேல் உருவாக இருக்கும் அந்தப்
படத்தை செல்வா இயக்க, அதில்
தனுஷ் நடிக்க வேண்டும் என்று
ஒப்பந்தமும் போடப்பட்டிருக்கிறதாம்.
எந்தப் படத்தில் ஒப்பந்தமானாலும்,
அட்வான்ஸ் என்று சொல்லப்படும்
முன்பணமும் கொடுப்பார்கள். இந்தப்
படத்தைப் பொருத்தவரை யாரும்
அட்வான்ஸ் கொடுக்க
முன்வரவில்லையாம். படத்தைப்
போடுங்க. கலெக்ஷன்
வந்தா பிரிச்சிப்போம்
என்று கூறிவிட்டார்களாம

26/11/2013

கும்பகோணம்
அருகே இன்று காலை பள்ளி மாணவ-
மாணவிகள் 41 பேருக்கு வாந்தி–
மயக்கம்...

26/11/2013

திருட்டு கோழியோ,
குருட்டு கோழியோ,
கொழம்பு ருசியா இருந்தா போதும்ங்கற
நினைப்புதான்
எல்லா ஹீரோக்களுக்கும்
இருக்கிறது.
சுசீந்திரன்
இயக்கிய
பாண்டியநாடு படம்
எல்லா ஏரியாவிலும்
கலெக்ஷனை அள்ளிக்
கொண்டிருக்க,
‘அந்த
கதையே என்னோடது தெரியுமா?
என்றொரு உதவி இயக்குனர் புகார்
கொடுத்து அவ்வளவு பெருமையிலும்
கருப்பு மையை பூசிவிட்டார். இந்த
திருட்டுக்கதை பிரச்சனையை கையில்
எடுத்த இயக்குனர் சங்கம்,
சம்பந்தப்பட்ட உதவி இயக்குனரையும்
சுசீந்திரனையும்
விசாரித்து வருகிறது.
இவ்வளவு பஞ்சாயத்துக்கு நடுவிலும்
படத்தின் ஹீரோவான விஷால்
மவுனம் காப்பதுதான் ஆச்சர்யம்.
அவர் வாயை திறந்து நியாயம்
பேசுவார்
என்று நினைத்தவர்களுக்கு பெருத்த
ஏமாற்றமும் கூட. இந்த
பிரச்சனையை உங்களோட
பேசி தீர்த்துக்குங்க. இங்க எங்கிட்ட
வராதீங்க என்று கூறிவிட்டாராம்
அவர். அது மட்டுமல்ல, சுசீந்திரன்
இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப்
போவதாக அறிவித்தார் அல்லவா?
அதில் உறுதியாக இருக்கிறாராம்.
இதற்கிடையில் ஒருநாள்
சுசீந்திரனுக்கு ஒரு பேன்ஸி நம்பரிலிருந்து போன்.
எடுத்து பேசியவருக்கு எதிர்முனை தந்தது ஆச்சர்யமும்,
அதிர்ச்சியும். நான் விஜய் பேசுறேன்.
பாண்டியநாடு படம் நல்லாயிருக்கு.
எனக்கும் ஒரு கதை தயார்
பண்ணுங்க.
ஜில்லா முடிச்சுட்டு கேட்போம்
என்று கூறினாராம்.
யாராவது உதவி இயக்குனர்கள் நல்ல
கதை வைத்திருந்தால்
சுசீந்திரனை அணுகலாம்.
அதற்கப்புறம் ஒரு வருஷம்
கழிச்சு குமுதத்துல இன்டர்வியூவும்
கொடுக்கலாம். வசதி எப்படி?

26/11/2013

சேது சமுத்திர
திட்டத்தை அடியோடு கைவிட வேண்டும் :
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும்
கோரிக்கை

26/11/2013

ரஜினியின் 'கோச்சடையான்'
ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்தாக
அமையும் வாய்ப்புகள் நிறைய
இருக்கின்றன. அதற்கு முன்னால்
'கோச்சடையான்' பற்றிய எக்ச்க்ளூசிவ்
தகவல்கள் .
* 'கோச்சடையான்' தென் தமிழகத்தில்
சங்க காலத்தை ஒட்டி ஆண்ட
ஒரு தமிழ் மன்னனின் வீரம்மிக்க
படைத்தளபதி. அவரது மகன் ராணா.
அப்பாவுக்கு வீரம்
மட்டுமே சொத்து என்றால்
மகனுக்கு வீரமும், நடனமும் சொத்து.
* படத்தின் முதல் பகுதியில்
'கோச்சடையான்' ஆதிக்கம் இருக்கும்.
ஆர்வ மிகுதியில் மகன் ராணா சில
வீரதீர காரியங்களில்
இறங்கி எதிரிகளிடம் மாட்டிக்கொள்ள,
அவரை தனி ஆளாக எதிரியின்
கோட்டைக்குள்
சென்று 'கோச்சடையான்' மீட்கும்
காட்சியில் அனல் பறக்கும்.
எதிரிகளால் தந்தை 'கோச்சடையான்'
கொல்லப்பட
தளபதி பொறுப்புக்கு வரும்
ராணா ஆடும் ஆக்ஷன் ஆட்டம்தான்
படத்தின் இரண்டாம் பகுதி.
* 'கோச்சடையான்' ஜோடியாக
ஷோபனா, ராணா ஜோடியாக
தீபிகா படுகோனே, ராணாவின்
டான்ஸ் மாஸ்டராக ருக்மணி.
கோச்சடையானின் நண்பராக
சரத்குமார், ராணாவின் நண்பராக ஆதி.
வில்லன் ஜாக்கி ஷெராப்.
ராஜகுரு நாசர் ஆகியோர்
நடித்திருக்கின்றனர்.
* ஷோபனாவுக்கும், ராணாவுக்கும்
நடக்கும் போட்டி நடனம்
அரங்கத்தை அதிர வைக்கும்.
* படத்தின்
ஆடை வடிவமைப்பு பொறுப்பை தேசிய
விருது பெற்ற
நீத்தாலுல்லு செய்திருக்கிறார். தமிழ்
நாட்டின் பண்டைய
ஆடைகளை கோவில் சிலைகளில்
இருந்து படியெடுத்து வரைந்து கொடுத்திருக்கிறார்.
அதனையே பயன்படுத்தியிருக்கிறார்கள்.
* ஏ.ஆர்.ரகுமான் இசையில்
ஆறு பாடல்கள் இடம்பெறுகின்றன.
அதில் ஒன்று "எதிரிகள் இல்லை..."
என்ற ரத்தத்தை சூடேற்றும் யுத்தப்
பாடல். வைரமுத்துவின்
பாடலை தமிழ், தெலுங்கில்
பாடியிருப்பவர் ரஜினி. இந்தி பதிப்பில்
பாடியிருப்பவர் ஏ.ஆர்.ரகுமான்.
* தமிழ்
தெலுங்கு இரண்டிற்குமே ரஜினி டப்பிங்
பேசியிருக்கிறார்.
* படம் ஓடும் நேரம் 125 நிமிடங்கள்.
இன்டர்வெல் கிடையாது.
* படத்தை 3டியிலும் வெளியிட
இருக்கிறார்கள். இதற்கான பணிகள்
சீனாவில் நடந்து வருவதால் சூப்பர்
ஸ்டாரின் பிறந்த நாளுக்கு வருவதாக
அறிவிக்கப்பட்ட படம்
பொங்கலுக்கு வருகிறது.

இரவு, பகலாக நடந்ததேடுதல் வேட்டையில், ஏடிஎம்கொள்ளையனை போலீஸ்நெருங்கி விட்டதாக,பெங்களூருக்கு கிடைத்த தகவல்கள்தெரிவிக்கின்ற...
26/11/2013

இரவு, பகலாக நடந்த
தேடுதல் வேட்டையில், ஏடிஎம்
கொள்ளையனை போலீஸ்
நெருங்கி விட்டதாக,
பெங்களூருக்கு கிடைத்த தகவல்கள்
தெரிவிக்கின்றன. பெங்களூரில்
வங்கி பெண்
அதிகாரி ஜோதியை தாக்கிய மர்ம
நபரை இரவு, பகலாக தேடும்
பணியில் தனிப்படை போலீசார்
ஈடுபட்டுள்ளனர். ஆனால்,
இதுவரை அவனது பெயர்,
எங்கு இருக்கிறான்
என்பது தொடர்பாக எந்த தகவலும்
தெரியாததால், அவனை கைது செய்ய
முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம்
ஆந்திர மாநிலத்தில் மர்ம நபர்
பிடிபட்டதாக பரபரப்பு தகவல்
வெளியானது. இறுதியில், அங்கிருந்த
ஒரு ஏடிஎம் மையத்தில் பணம்
எடுப்பது போன்று,
கண்காணிப்பு கேமராவில் பதிவான
வீடியோ மட்டும் வெளியானது.
அந்த புட்டேஜ் கடந்த 12ம்
தேதி பதிவானவை.
ஜோதி மீது கொலைவெறி தாக்குதல்
நடத்துவதற்கு முன்பு, ஆந்திர
மாநிலம் தர்மாவரம் பகுதியை சேர்ந்த
55 வயது பெண்
பிரமிளாவை கொலை செய்துவிட்டு,
அவரது ஏடிஎம் கார்டை திருடி பணம்
எடுக்க வந்தபோது, ஏடிஎம்
மையத்தில் பதிவானதுதான் இந்த
புட்டேஜ். சம்பவம் நடந்த 2 நாட்களில்
மொத்தம் 1,900 ரூபாய்
எடுத்திருக்கிறான்.
அந்த பணத்தை கொண்டு பெங்களூர்
வந்து ஜோதியை தாக்கி விட்டு,
அவரிடம் இருந்து திருடிய
செல்போனை ஆந்திர மாநிலம்
இந்துப்பூரில் ஒரு மொபைல்
கடையில் விற்றிருக்கிறான்.
அதன்பிறகு அவன் எங்கு சென்றார்,
என்பது குறித்த எந்த தகவலும்
கிடைக்கவில்லை. இதையடுத்து,
கர்நாடகா மட்டுமல்லாமல் ஆந்திர
மாநில போலீசாரும்
குற்றவாளியை தீவிரமாக
தேடி வருகின்றனர். இந்நிலையில்,
குற்றவாளி அனந்தபூர்
அல்லது கடப்பாவை சேர்ந்தவராக
இருக்கலாம் என்று ஆந்திர போலீசார்
உறுதிப்படுத்தினர்.
இதுகுறித்து பெங்களூர்
போலீசாருக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது. ஆந்திரா விரைந்த
5 தனிப்படை போலீசார் கடப்பா,
அனந்தபூர்
மாவட்டத்தை முற்றுகையிட்டு,
ஆந்திர மாநில போலீஸ் உதவியுடன்
தேடி வருகின்றனர். இங்குள்ள
ஷாப்பிங் மால், பஸ் ஸ்டாண்ட்,
ரயில்வே ஸ்டேஷன், ஏ.டி.எம்
மையங்கள், வங்கிகளில் தீவிரமாக
தேடி வருகின்றனர். போலீசாரின் இந்த
நடவடிக்கையால் மர்ம நபர் தப்பிச்
செல்ல முடியாத
சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில்,
குற்றவாளி பிடிப்படுவான்
என்று பெங்களூர்
தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆந்திர மாநில போலீசார்
கூறுகையில், ‘‘மர்ம
நபரை வலைவீசி தேடி வருகிறோம்.
கத்ரி போலீசில் பதிவான
கொலை வழக்கில், மர்ம
நபருக்கு தொடர்பு இருப்பதால்,
அவரை பிடித்து விசாரணை நடத்த
முடிவு செய்துள்ளனர். முதலில்
எங்களது விசாரணை முடிந்த பிறகே,
பெங்களூர் போலீசாரிடம்
குற்றவாளியை ஒப்படைப்போம்.
விரைவில் அவனை நாங்கள்
பிடித்து விடுவோம்’’ என்றனர்.
இதற்கிடையே, மர்ம
நபரை பிடித்து விட்டதாகவும்,
அவரிடம் ரகசிய இடத்தில் தீவிர
விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும்,
பெங்களூருக்கு கிடைத்த
உறுதிப்படுத்த முடியாத தகவல்கள்
தெரிவிக்கின்றன.

26/11/2013

தொடர்ந்து விஷ்ணுவர்தன்
இயக்கத்தில் அஜித் நடித்த 'ஆரம்பம்'
சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
தீபாவளிக்கு ரிலீஸான இப்படம் 100
கோடி வசூலை நெருங்கிக்
கொண்டு இருக்கிறது.
அஜித் நடிக்கும் 'வீரம்' படம்
பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.
இப்போதே படத்தின் மீது அதிக
எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
'ஆரம்பம்' படத்தை பாலிவுட்டில்
ரீமேக் செய்து நடிக்க பலர் ஆர்வமாக
இருக்கின்றனர். 'துப்பாக்கி'. 'ரமணா'
படங்களின் இந்தி ரீமேக்கில் நடிக்கும்
அக்ஷய்குமாருக்கு 'ஆரம்பம்'
ரீமேக்கில் நடிக்க ஆசையாம்.
இந்நிலையில், 'ஆரம்பம்' படம் பார்த்த
ஷாருக்கான், இயக்குநர்
விஷ்ணுவர்தனை மனம்
திறந்து பாராட்டினாராம். ''படம்
பிரமாதம். நீங்கள் விரும்பினால்
இந்தியில் ரீமேக் செய்யுங்கள்.
நானே ஹீரோவாக நடிக்கிறேன்''
என்று ஷாரூக், விஷ்ணுவர்தனிடம்
கூறி இருக்கிறார்.
அதோடு, தமிழில் அஜித் நடித்த
வேடத்தில் ஷாருக்கானும்,
ராணா நடித்த வேடத்தில் அஜித்தும்
நடிக்க இருப்பதாக
சொல்லப்படுகிறது.
ஏற்கனவே, இந்தியில் ஷாரூக் நடித்த
'சாம்ராட் அசோகா' படத்தில் அஜித்தும்
நடித்திருந்தார். இப்போது ஷாரூக்கும்,
அஜித்தும் இணைந்து நடித்தால் அதில்
ஆச்சர்யம் ஏதும் இல்லை.

23/11/2013

ATM இயந்திரத்தில் பணம் எடுக்கும் ஆண்.
******************************
******
1. காரை நிறுத்துவான்.
2. இயந்திரத்தில் அட்டையை செருகுவான்.
3. குறியீட்டு எண்ணை அழுத்துவான்.
4. பணத்தையும் அட்டையையும்
சேகரிப்பான்.
5. காரைக் கிளப்புவான்.
ATM இயந்திரத்தில் பணம் எடுக்கும் பெண்.
******************************
********
1. காரை நிறுத்துவாள்.
2. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.
3. ஓடிக்கொண்டிருக்கும் எஞ்சினை ஆஃப்
செய்வாள்.
4. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.
5. இயந்திரத்தை அணுகுவாள்.
6. கைப்பையில் அட்டையை தேடுவாள்.
7. அட்டையை செருகுவாள்.
8. குறியீட்டு எண்ணை அழுத்துவாள்.
9. அழுத்திய எண்களை ரத்து செய்வாள்.
10. கைப்பையில் எண் குறிப்பை தேடுவாள்.
11. மீண்டும் அட்டையை செருகுவாள்.
12. குறிப்பைப் பார்த்து எண்
அழுத்துவாள்.
13. பணத்தை சேகரிப்பாள்.
14. காருக்கு திரும்புவாள்.
15. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.
16. காரை ஸ்டார்ட் செய்வாள்.
17. ஆஃப் செய்வாள்.
18. இறங்கி ஒடுவாள்.
19. இயந்திரத்தில்
இருந்து அட்டையை பிடுங்குவாள்.
20. காருக்கு வருவாள்.
22. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.
23. ஸ்டார்ட் செய்வாள்.
24. 1 கிலோ மீட்டர் ஓட்டுவாள்.
25. ஹாண்ட் ப்ரேக்கை எடுத்து விடுவாள

22/11/2013

மங்கல்யான் செயற்கைக்கோள்
அனுப்பிய முதல் படம் 'ஹெலன்
புயல்'
ஸ்ரீஹரிக்கோட்டா; செவ்வாய்
கிரகத்தை ஆராய்வதற்காக
ஸ்ரீஹரிக்கோட்டாவின் சதீஷ்தவான்
ஏவுதளத்திலிருந்து கடந்த 5ம்
தேதி மங்கல்யான் செயற்கைக்கோள்
பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம்
விண்ணில் செலுத்தப்பட்டது.
தற்போது பூமியின் சுற்றுவட்டப்
பாதையில் சுற்றி வரும் மங்கல்யான்,
தனது முதல்
புகைப்படத்தை அனுப்பியுள்ளது.
தற்போது ஆந்திர
மாநிலத்தை அச்சுறுத்தி வரும்
ஹெலன் புயலின் நிலையைதான்
மங்கல்யான் தனது முதல்
புகைப்படமாக
அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Address

Perambalur
621708

Telephone

7373989831

Website

Alerts

Be the first to know and let us send you an email when இதெல்லாம் என்ன பெருமையா கடமை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to இதெல்லாம் என்ன பெருமையா கடமை:

Share

Category