ரியோ பொது இ-சேவை மையம் பட்டுக்கோட்டை

  • Home
  • India
  • Pattukkottai
  • ரியோ பொது இ-சேவை மையம் பட்டுக்கோட்டை

ரியோ பொது இ-சேவை மையம் பட்டுக்கோட்டை Public & Government Service

பட்டுக்கோட்டை இரயில்வே ஸ்டேஷன் கால அட்டவணை
20/06/2022

பட்டுக்கோட்டை இரயில்வே ஸ்டேஷன் கால அட்டவணை

 #அனைவருக்கும் எங்களது   #72வது இனிய  #சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் ஒற்றுமையே தேசத்தின் வளர்ச்சி  #ரியோ பட்டுக்கோட்டை
15/08/2018

#அனைவருக்கும் எங்களது #72வது இனிய #சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் ஒற்றுமையே தேசத்தின் வளர்ச்சி #ரியோ பட்டுக்கோட்டை

Public & Government Service

குழந்தைகள் நலன் காப்போம்....வீட்டில் இது போன்ற செயல்கலை தவிர்போம்
28/06/2018

குழந்தைகள் நலன் காப்போம்....வீட்டில் இது போன்ற செயல்கலை தவிர்போம்

 #பட்டுக்கோட்டை  #அருள்மிகு  #நாடியம்மன்  #பெரும்  #தேர்  #அலங்காரம்  #திருவிழா                                         ...
13/04/2018

#பட்டுக்கோட்டை #அருள்மிகு #நாடியம்மன் #பெரும் #தேர் #அலங்காரம் #திருவிழா

இன்று இரண்டாம் நாள் அருள்மிகு ஸ்ரீ நாடியம்மன் தேர் திருவிழா

பட்டுக்கோட்டை
அருள்மிகு ஸ்ரீ நாடியம்மனுக்கு
நாடியம்மன் தேர் திருவிழா 13-4-16 (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது...
பக்தர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்

நாடியம்மனின் அருள் பெற வேண்டுகிறேன்...

NEET ENTRANCE EXAM 2018 FOR MBBS AND BDS.EDUCATION: 12th Passed/Appearing Last date to apply online : 09-03-2018ஆன்லைன் ...
22/02/2018

NEET ENTRANCE EXAM 2018 FOR MBBS AND BDS.
EDUCATION: 12th Passed/Appearing
Last date to apply online : 09-03-2018

ஆன்லைன் வழியாக பதிவு செய்ய அனுகவும்....

(ரியோ இ சேவை பட்டுக்கோட்டை) பேருந்து நிலைய

வளாகம்)

நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பெற்றோர், மாணவர்கள் இன்டர்நெட் மையங்களுக்கு படையெடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் விநியோகம் கடந்த 8ம் தேதி தொடங்கியது. மார்ச் 9ம் தேதி வரை மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப் பதற்கான வழிமுறை :

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தல் 4 நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

1) தகவல் அளித்தல்,
2) புகைப்படம்,
3) கையொப்பம் பதிவேற்றம் செய்தல்,
4)விண்ணப்ப கட்டணம் செலுத்துதல்.
அதைத்தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதுடன் நீட் விண்ணப்பித்தல் நிறைவடைகிறது.

www.cbseneet.nic.in என்ற நீட் நுழைவுத்தேர்வுக்கான பிரத்யேக இணையதளத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தின்கீழ் பகுதியில் Apply Online என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். அப்போது மாணவர் தொடர்பாக தகவல்களை அளிப்பதற்கான பக்கம் தோன்றும்.

அதில் மாணவர்/மாணவி பெயர் (ஆதார் கார்டு/ஆதார் விண்ணப்பித்ததற்கான பதிவில் உள்ளவாறு), தாய், தந்தையின் பெயர், ஆதார் எண் அல்லது ஆதார் விண்ணப்பித்ததற்காக பதிவு எண், பிறந்த தேதி, பாலினம் ஆகியவற்றை தவறில்லாமல் பதிவு செய்ய வேண்டும்.

அதேபோல் உபயோகத்தில் செல்போன் எண் (தாய் அல்லது தந்தையின் செல்போன் எண்ணாக இருக்கலாம்), இ-மெயில் முகவரி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.

அதைத்தொடர்ந்து நெக்ஸ்ட் பட்டனை கிளிக் செய்து மாணவர் தனக்காக கடவுச் சொல்லை உருவாக்க வேண்டும்.

ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும். அந்த எஸ்எம்எசில் வரும் எண்ணை இணையதளத்தில் பதிவிட்டால், கடவுச்சொல் ஏற்றுக்கொள்ளப்படும். அதைத்தொடர்ந்து சப்மிட் பட்டனை கிளிக் செய்து புகைப்படம், கையொப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படத்தின் மெமரி அளவு 10 கேபி முதல் 100 கேபி என்ற அளவிலும், ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பத்தின் மெமரி அளவு 3 கேபி முதல் 20 கேபி என்ற அளவிலும் இருக்க வேண்டும். புகைப்படம், கையொப்பம் JPEG format, குறிப்பிட்ட மெமரி அளவிலும் இருந்தால் மட்டுமே புகைப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

அதைத்தொடர்ந்து மாணவருக்கான பிரத்யேக பதிவு எண் மாணவருக்கு வழங்கப்படும். அந்த பதிவு எண், கடவுச் சொல்லை அளித்து தாங்கள் விண்ணப்பித்ததை மாணவர்கள் பார்த்துக்கொள்ளலாம். தொடர்ந்து மார்ச் 10ம் தேதிக்குள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விண்ணப்பித்ததற்கான சான்றை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு நீட் தேர்வு விண்ணபத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில், நீட் இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்படும். மே 6ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நீட் தேர்வு நடைபெறும்.

இயற்பியல், வேதியியல், உயிரியலில் (தாவரவியல், விலங்கியல்) 180 கேள்விகளுக்கு கொள்குறி வகையில் நான்கில் ஒரு விடையை தேர்வு செய்து விடைத்தாளில் விடைக்கான வட்டத்தில் பால்பாயின்ட் பேனா கொண்டு ஷேட் செய்ய வேண்டும்.

ஜுன் 5ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும். நீட் தேர்வு தொடர்பான உதவிக்கு 011-22041807, 011-22041808 என்ற தொலைப்பேசி எண்களிலும், 1800118002 என்ற இலவச எண்ணிலும், 9773720177, 9773720178, 9773720179 ஆகிய செல்போன் எண்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 வரை தொடர்புகொள்ளலாம்.

தவறான தகவலை திருத்திக்கொள்ளும் வாய்ப்பு:

நீட் விண்ணப்பித்தலின் போது தவறான தகவல், எழுத்துபிழையுடன் தகவல் அளித்திருந்தால் மார்ச் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை குறிப்பிட்ட தகவலை திருத்திக்கொள்ளலாம்.

Books for NEET Physics
----------------------------------

1.NCERT books of Physics

2.HC Verma Physics Vol 1 and Vol 2

3.NEET Preparatory Series; Objective Chemistry Vol I and II (Arihant)

4.Objective NCERT at Your Fingertips for NEET – Physics Paperback – 2016

5.Halliday, Resnick & Walker Fundamentals of Physics Reference Book
Best Books for Chemistry

Books for NEET Chemistry
----------------------------------

1.NCERT books of Chemistry

2.A Textbook of Organic Chemistry for AIPMT and all other Medical Entrance Examination: Dr. OP Tandon

3.NEET Preparatory Series; Objective Chemistry Vol I and II (Arihant)

4.Objective NCERT at Your Fingertips for NEET – Chemistry by MTG Editorial Board
Best Books for Biology

Books for NEET Biology
------------------------

1.NCERT Biology Books

2.Trueman’s Biology Volume 1

3.Trueman’s Biology Volume 2

4.Objective NCERT at Your Fingertips for NEET- – Biology by MTG Editorial Board

5.NEET Preparatory Series; Exploring Biology Vol I and II (Arihant)

For more visit http://bit.ly/neetexam2018

✅Railway Recruitment Board (RRB) Jobs 2018 - Announced✅உடனே விண்ணப்பிக்க: https://goo.gl/7fh7Zh✅காலி இடங்கள்: 26502 ALP,...
17/02/2018

✅Railway Recruitment Board (RRB) Jobs 2018 - Announced
✅உடனே விண்ணப்பிக்க: https://goo.gl/7fh7Zh
✅காலி இடங்கள்: 26502 ALP, Technician Posts
✅கல்வி தகுதி: 10th, 12th, ITI, Diploma, B.E/B.Tech
✅Last Date to Apply: 05.03.2018
✅Tamilanguide New App Link: https://goo.gl/P5JVP3

ரெயில்வே குரூப் D தேர்வு பற்றிய சில தகவல்கள்:

* இந்தியாவின் அனைத்து ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்களும் (RRB) ஒருங்கிணைந்த அறிவிப்பினை (CEN No 02/2018) வெளியிட்டுள்ளன.

* மொத்த பணியிடங்கள் 62907 இதில் தென்னக ரெயில்வேக்கு (2979+EX SERVICEMAN 597+OH 12+HH 18)

* வயது வரம்பு 18 -31(விதிகளின் படி வயது வரம்பு சலுகை உண்டு)

* கல்வித் தகுதி :

#10ம் வகுப்பு

#10ம் வகுப்பு மற்றும் National Apprenticeship Certificate (NAC) granted by NCVT

#10 ம்வகுப்பு மற்றும் ITI from institutions recognised by

NCVT/SCVT

இதில் 10ம் வகுப்பு தகுதி மட்டும்(ITI,NCVT அல்லாது DIPLAMO,ENGINEERING முடித்திருந்தாலும் கூட) உடைய நபர்கள் கீழ்க்கண்ட பதவிகளுக்கு மட்டும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்

HELPER / MEDICAL

HOSPITAL ATTENDANT

ASSISTANT POINTSMAN

GATEMAN

*PORTER / HAMAL / SWEEPER CUM PORTER-(*தென்னக ரயில்வேயில் இந்த ஒரு பதவிக்கு மட்டும் 10ம் வகுப்பு தகுதி மட்டும் உடையவர்கள் விண்ணப்பிக்க முடியும்)

மேலும் 10 ம்வகுப்பு மற்றும் NAC, ITI from institutions recognised by NCVT/SCVT முடித்தவர்கள் அறிக்கையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

*சம்பள வீதம் ரூ.18000 + படிகள் (ஏழாவது ஊதியக்குழு Pay Matrix Level 1)

*விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலமாக மட்டும்.

*விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 10.02.2018

* விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.03.2018

* சென்னை R R B வலைதளம்: www.rrbchennai.gov.in

விண்ணப்பிப்பதற்க்கு முன் தெரிந்துகொள்ள வேண்டியவை

• தேர்வினை தமிழில் எழுதலாம்.

• ஆன்லைன் ல் விண்ணபிக்க OBC சான்றிதழ் தேவை இல்லை.OBC NON CREAMY/CREAMY ஆப்சன் ஐ தேர்வு செய்தால் போதுமானது.(CV க்கு செல்லும் போது மட்டும் அனெக்சர் II ல் குறிப்பிடப்பட்ட மாதிரி வடிவத்தில் கட்டாயம் OBC சான்றிதல் தேவை)

• OBC NONCREAMY LAYER/OBC CREAMY LAYER எது என தேர்வு செய்ய வேண்டும்.

• சமீபத்தில் 1-12-2017 க்கு பின் எடுக்கப்பட்ட புகைப்படம் 20-50 kb jpeg format (பெயர் மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி கட்டாயம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்)

• கண்ணாடி,தொப்பி அணிந்த புகைப்படங்கள்,ஒரு பக்கம் பார்த்தது போல் எடுத்த படங்கள் ஏற்கப்படாது.கண் காது மூக்கு நன்றாக தெளிவாக தெரியும்படி இருக்க வேண்டும் ஏனெனில் தேர்வின் கடைசி நிலை வரை இதே புகைப்படம் பயன்படுத்தப்படும்.

• SC/ST விண்ணப்ப தாரர்கள் தங்களுடைய ஜாதி சான்றிதழை ஸ்கேன் செய்து 50KB-100KB அளவில் JPEG மாதிரியில் வைத்துக்கொள்ள வேண்டும்.

• Scribe Photograph in color (Wherever applicable): JPEG image of size 20 to 50KB

• அறிக்கையில் குறிப்பிட்ட கல்வி தகுதி உடையவர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கான மருத்துவ தகுதி பெற்றுள்ளோமா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.(A2,B2,B2,C1)

• தற்போது பயன்பாட்டில் உள்ள இமெயில் ID மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது)

தேர்வுக்கட்டணம்:

1. For all candidates except the fee concession categories mentioned below at Sl No 2 ` 500/-

2 ` 250/-* For Candidates belonging to SC / ST / Ex-Serviceman / PWDs / Female / Transgender / Minorities / Economically backward class. *This fee shall be refunded duly deducting bank charges, on appearing in CBT. -250/-

விண்ணப்பிக்கும் முறை:

GO TO rrbchennai.gov.in choose notification 2 and apply

• முதலில் அனைத்து விதிமுறைகளையும் தெளிவாக படித்தப்பின் விண்ணப்பிக்க தொடங்க வேண்டும்.

• எந்த RRB க்கு விண்ணப்பிக்க உள்ளீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.(ஒருவர் ஏதேனும் ஒரு RRBக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்)

• திரையில் தெரியும் பக்கத்தில் name, Date of Birth and Father's name as per para 1.7 of General Instruction, Mother's name, Aadhar number, State, SSLC/Matric Roll number, Year of passing SSLC/MATRIC, mobile number and email-id and then submit for registration. Candidates with ITI/NAC qualification alone can enter Roll number/year of passing for ITI/NAC qualification instead of SSLC/Matric இவற்றை சன்றிதழ்களில் உள்ளது போன்றே பதிவு செய்ய வேண்டும்.தகவல்களை பதிவு செய்த பின் தங்கள் மொபைல் க்கு OTP கிடைக்கப்பெறும் அதனை பதிவு செய்தபின் தங்களுக்கு ஒரு REGISTRATION NUMBER வழங்கப்படும்.அதை வெய்து PART1 பதிவு செய்ய வேண்டும்.

• PART1 பதிவு முறையில் provide the details of Educational qualification, Community, Gender, Religion, ExSM, PWD, CCAA, Minority, Economically backward class, Age relaxation eligibility category as applicable and other details.இவற்றை பதிவு செய்த பின் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.(NET BANKING/OFFLINE CHALAN/POSTAL CHALLAN முறையில் கட்டணம் செலுத்தலாம்).

• கட்டணம் செலுத்திய நிலவரம் உறுதி செய்த பின் PART II பதிவு செய்ய வேண்டும்.இதில் போஸ்ட் PREFERENCEஐ தேர்வு செய்ய வேண்டும் இது கட்டாயம்) Set priority / preferences for posts: If the candidate is eligible for more than one post based on his educational qualification and other details furnished, he/she must set the priority/preferences for the posts. The list of posts (in the selected RRB) for which a candidate is eligible will be displayed. The candidates can set their priority/preferences by clicking on the “Set Priority” button for the various posts that they are eligible for, in the RRB they are applying to. The candidates can fill in the preferences for all the posts listed, or a few of them as per their choice. But at least one preference must be given.

• தேர்வு மொழியினை தேர்வு செய்ய வேண்டும்.தமிழில் தேர்வு எழுதலாம்.

• பின்னர் முகவரி தேர்வு மையம் இதறபிற விவரங்கள் பதிவு செய்தபின்,புகைப்படத்தினை பதிவேற்றம் செய்து SUBMITசெய்ய வேண்டும்.

The Registration number, Selected RRB, email id and mobile number cannot be changed.

தேர்வு செய்யும் முறை:

1.முதலில் கணினி வழியாக CBT தேர்வு நடத்தப்படும்

2.தேர்வு பெற்றவர்கள் PHYSICAL TEST க்கு அழைக்கப்படுவார்கள்

(FOR MALE:Should be able to lift and carry 35 kg of weight for a distance of 100 metres in 2 minutes in one chance without putting the weight down and Should be able to run for a distance of 1000 metres in 4 minutes and 15 seconds in one chance.

FOR FEMALE: Should be able to lift and carry 20 kg of weight for a distance of 100 metres in 2 minutes in one chance without putting the weight down and Should be able to run for a distance of 1000 metres in 5 minutes and 40 seconds in one chance.)

3.பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு

4.மருத்துவ பரிசோதனை.

#நேர்முகத் தேர்வு இல்லை

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:

Question Type and Syllabus: The Questions will be of objective type with multiple choices and are likely to include questions pertaining to:

a. Mathematics Number system, BODMAS, Decimals, Fractions, LCM, HCF, Ratio and Proportion, Percentages, Mensuration, Time and Work; Time and Distance, Simple and Compound Interest, Profit and Loss, Algebra, Geometry and Trigonometry, Elementary Statistics, Square root, Age

Calculations, Calendar & Clock, Pipes & Cistern etc.

b. General Intelligence and reasoning Analogies, Alphabetical and Number Series, Coding and Decoding, Mathematical operations, Relationships, Syllogism, Jumbling, Venn Diagram, Data Interpretation and Sufficiency, Conclusions and Decision making, Similarities and Differences, Analytical Reasoning, Classification, Directions, Statement – Arguments and Assumptions etc.

c. General Science th The syllabus under this shall cover Physics, Chemistry and Life Sciences of 10 standard level.

d. General Awareness on current affairs in Science & Technology, Sports, Culture, Personalities, Economics, Politics and any other subjects of importance.

குறிப்பு:

• TNPSC அளவிற்கு ரெயில்வே தேர்வு அவ்வளவு கடினமாக இருக்காது

• நெகடிவ் மார்க் உள்ளதால் அதற்கு ஏற்ப பயிற்சி செய்ய வேண்டும்

• மேற்கண்ட சிலபஸில் உள்ள பகுதிகளை பத்தாம் வகுப்பு தரத்தில் நன்கு படித்தாலே போதுமானது அதற்கு மேல் படித்தாலும் நன்று.கணிதத்தில் அதிக அளவிலான கேள்விகள் இடம் பெறும்.

• எழுத்து தேர்வு மற்றும் உடற்கூறு தேர்வில் வெற்றி பெற்று விட்டால் அதற்கு பின் CV,MEDICAL TESTல் வெற்றி பெறுவது எளிது.

• இதுவரை நடந்த தேர்வுகளில் வடமாநிலத்தவர் மற்றும் அண்டை மாநிலத்தவரே அதிக ஆதிக்கம் செலுத்துகின்றனர்.காரணம் நம் தமிழ் நாட்டில் ரெயில்வே தேர்வு பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம்.நமக்கு தகுதி இல்லாமல் இல்லை.TNPSCபடிக்கும் நபர்களுக்கு நிச்சயம் ரெயில்வே தேர்வு மிக எளிதானதே.

• இனி வரும் காலங்களில் அதிக அளவிலான தமிழர்கள் ரெயில்வே

தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது விருப்பம்.

• கடின உழைப்பிற்கு நிச்சயம் பலன் உண்டு.

தேர்வு எழுத விரும்பும் நண்பர்கள் அனைவரும் APPLYசெய்து தேர்வில் வெற்றிபெற எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி

QUICK SERVICE AT RIO GLOBAL NETWORKS PATTUKKOTTAI

RRB ALP Recruitment 2018 2019 Apply Online Application Form for 26502 Assistant Loco Pilot (ALP), Technician Posts Apply Online through Of...

17/02/2018

*SBI வங்கியில் துணை மேலாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு 2018*

மேலும் அறிய:. https://goo.gl/wTecJE

காலி இடங்கள்: 50

தகுதி: CA

ஆரம்ப தேதி: 05.01.2018

கடைசி தேதி: 25.02.2018

விண்ணப்பிக்கும் முறை: Online

விண்ணப்பிக்க: https://goo.gl/wTecJE

இந்த தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.. வேலை தேடும் நம் நண்பர்களுக்கும் கண்டிப்பாக உதவுங்கள்...

SBI Dy Manager Recruitment 2018, Apply Online 50 Deputy Manager Posts - Tamilan Jobs
SBI Dy Manager has released released the job notification for 50 vacancies in All over India. The candidates who are from that location can eligible to apply for the…
TAMILANJOBS.COM

SET EXAM 2018 - TAMILNADU STATE ELIGIBILITY TEST (TNSET 2018) Nodal Agency - Mother Teresa Women's University-Kodaikanal...
26/01/2018

SET EXAM 2018 - TAMILNADU STATE ELIGIBILITY TEST (TNSET 2018) Nodal Agency - Mother Teresa Women's University-Kodaikanal - LAST DATE : 09.02.2018
ஆன்லைன் வழியாக பதிவு செய்ய அனுகவும்....

(ரியோ இ சேவை பட்டுக்கோட்டை) பேருந்து நிலைய

வளாகம்) .

'ஸ்மார்ட் கார்டு' வாங்காதவர்களுக்கு மார்ச் முதல் ரேஷன் பொருள், 'கட்'   ஸ்மார்ட் கார்டு பெறுவதற்கு எங்களை அனுகவும்(ரியோ ப...
26/01/2018

'ஸ்மார்ட் கார்டு' வாங்காதவர்களுக்கு மார்ச் முதல் ரேஷன் பொருள், 'கட்'


ஸ்மார்ட் கார்டு பெறுவதற்கு எங்களை அனுகவும்

(ரியோ பொது இ சேவை பட்டுக்கோட்டை)

மேலும் படிக்க : http://bit.ly/2DFEEog

TNUSRB COMMON RECRUITMENT - 2017 - 18 (GR. II POLICE CONSTABLES [Armed Reserve], GR. II JAIL WARDERS, FIREMEN) QUICK SER...
18/01/2018

TNUSRB COMMON RECRUITMENT - 2017 - 18 (GR. II POLICE CONSTABLES [Armed Reserve], GR. II JAIL WARDERS, FIREMEN) QUICK SERVICE AT RIO GLOBAL NETWORKS PATTUKKOTTAI

தமிழ்நாட்டில் முதல் முறையாகவீட்டில் இருந்தபடியே போட்டி தேர்வுகளுக்கு படிப்பதற்காக புதிய ஆண்டிராய்டு செயலிசைதை துரைசாமி த...
12/12/2017

தமிழ்நாட்டில் முதல் முறையாக
வீட்டில் இருந்தபடியே போட்டி தேர்வுகளுக்கு படிப்பதற்காக புதிய ஆண்டிராய்டு செயலி
சைதை துரைசாமி தகவல்

Daily Thanyhi 10.12.2017

தமிழ்நாட்டில் முதல் முறையாக வீட்டில் இருந்தபடியே போட்டி தேர்வுகளுக்கு படிப்பதற்காக புதிய ஆண்டிராய்டு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
புதிய ஆண்டிராய்டு செயலி
சைதை துரைசாமியின் மனிதநேய மையம் அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் ஏழை மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் பயன்பெறும் வகையில் சேவை நோக்கோடு செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில் தொலைதூரத்தில் இருக்கும் மாணவர்களும், சென்னையில் இருக்கும் பயிற்சி மையத்திற்கு நேரடியாக வந்து பயன்பெற முடியாத மாணவர்களும் பயன்பெறும் வகையில் ஒரு புதிய ஆண்டிராய்டு செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து மனிதநேய அறக்கட்டளை சார்பில் சைதை துரைசாமி கூறியதாவது:-
பொருளாதாரப் பாகுபாடு
தமிழகத்தில் முதல் முறையாக பல்லாயிரக்கணக்கான மாணவர்களை இணைக்கும் வகையில் மிகப்பெரிய தொழில்நுட்ப பின்புலத்துடனும், வினா-விடை மட்டுமின்றி, எல்லா தளங்களிலும் மாணவர்களின் ஐயப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்ட இச்செயலி மிகவும் தனித்துவம் வாய்ந்தது.
பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களில் நேரடியாக சென்று பயிற்சி பெற மிகுந்த செலவும், குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் தேவைப்படும். அதை மனதில் கொண்டு வெளியாகியுள்ள இச்செயலி போட்டித் தேர்வுகளுக்கான தளத்தில் முதல் முறையாக பொருளாதாரப் பாகுபாட்டை நீக்க வந்த கருவியாக செயல்படும்.
வினாத்தாள் வெளியிடப்படும்
இணையத்தில் உலவி வரும் மேம்போக்கான பயன்பாட்டிற்கான செயலிகள் போல் அல்லாமல், லட்சக்கணக்கானோர் உபயோகித்தாலும் எந்தவித தடையுமின்றி செயல்படும் அளவுக்கு பிரத்யேக தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, வெளியாகியுள்ள குரூப்-4 மற்றும் வி.ஏ.ஓ.வுக்கான 9,351 பணியிடங்களுக்கு நடத்தப்படும் தமிழக அரசின் தேர்வுக்கு இலவச மாதிரி வினாத்தாள்கள் இச்செயலியில் வெளியிடப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வின் பாடத்திட்டத்திற்கு ஏற்ப 20 தேர்வுகள் வடிவமைக்கப்பட்டு, அதற்கான தகுந்த கால இடைவெளிகளில் 20 தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
எப்பொழுது அடுத்தத் தேர்வுக்கான வினாத்தாள் வெளியிடப்படும் எனும் செய்தியும் இச்செயலியிலேயே அவ்வப்போது வெளியிடப்படும். மாணவர்கள் இத்தேர்வுகளை ஸ்மார்ட் போன் இருந்தாலே நினைத்த இடத்தில் எழுத முடியும். உடனுக்குடன் தங்களது மதிப்பெண்களையும், தவறாக விடையளித்த வினாக்களுக்கான சரியான பதிலையும் நிமிடத்தில் தெரிந்து கொள்ளலாம்.
காணொளிகள் பதிவேற்றம்
மனிதநேய ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில், தினமும் செய்தித்தாள்களில் வெளியாகும் தலையங்கங்களின் செய்திச் சுருக்கமும், தினசரி நடப்பு நிகழ்வுகளும், போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பதிவேற்றப்படுகிறது. அதுமட்டுமின்றி, அரசு சார்பில் வெளியிடப்படும் பல காணொளிகளும், தமிழக மற்றும் இந்திய அரசின் முக்கியமான அமைச்சகங்களின் வெளியீடுகளும் அதைத் தரவிறக்கம் செய்துகொள்வதற்கான பின்னூட்டங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
மத்திய, மாநில அரசுகளின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து பாடப்புத்தகங்களையும் ஆன்லைனில் தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் இதில் உள்ளது. போட்டித் தேர்வுகளின் பாடத்திட்டத்திற்கு ஏற்ப ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தேவையான பாடக்குறிப்பேடுகளும், வெற்றி பெற்று பணியில் உள்ள அரசு அதிகாரிகளின், வெற்றிக்கு வழிகாட்டும் காணொளிகளும் இதில் பதிவேற்றப்பட உள்ளது.
மாணவர்களுக்கு சிறந்த நண்பன்
அதுமட்டுமின்றி, அனுதினமும் மாணவர்கள் தங்களது அறிவுத்திறனை சோதித்துக்கொள்ளும் வகையில் பயிற்சித் தேர்வுகளுக்கான வினாத்தாள்களையும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், ஏற்கனவே எங்களது மையத்தில் படித்து வெற்றிபெற்ற மாணவர்களுடன் தற்போதைய பயனீட்டாளர்களான மாணவர்கள் கலந்துரையாடும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் நேரடியாகவே மாணவர்கள் தங்களது அனைத்து குடும்பங்களுக்கும் வெற்றியாளர்களிடம் தீர்வுகளை கேட்டறியலாம். அந்த வகையில், இது ஒரு புரட்சிகரமான முன்னெடுப்பாக அமையும். மேலும், மாணவர்கள் ஒரு ஸ்மார்ட் போன் வைத்திருந்தாலே எந்தவித செலவுமின்றி இவ்வசதியை இலவசமாகப் பெறமுடியும். மாணவர்களின் இன்றைய மனவோட்டத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் மனிதநேயம் வெளியிட்டுள்ள இந்த செயலி அரசு தேர்வுகளுக்குப் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த நண்பனாக அமையும்.
பதிவிறக்கம் செய்யலாம்
முதல் முதலில் போட்டித் தேர்வுக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் முதல்படி என்னவென்றே தெரியாமல் குழம்பி நிற்கும் கல்லூரியில் பட்டம் பயிலும் மாணவர்களும் எங்கிருந்து வேண்டுமானாலும், இந்த செயலியின் உதவியுடன் போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கலாம். ஒரே சொடுக்கில் போட்டித் தேர்வுகளுக்கான அனைத்து தேடல்களையும் நிறைவுறச் செய்யும் அனைத்து வசதிகளும் கொண்ட இச்செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் Ma-n-i-d-h-a-n-a-ey-am IAS & IPS Fr-ee Co-a-c-h-i-ng Ce-nt-re என்ற பெயரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
வெற்றிபெற விரும்பும் அனைத்து மாணவர்களும் இச்செயலியை பயன்படுத்தி வெற்றியாளர்களாக வலம்வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
இவ்வாறு சைதை துரைசாமி தெரிவித்தார்

1. Our future2. Brain is like a child. Teach only good things to it3. Always respect yourself!! Feel like king
01/12/2017

1. Our future

2. Brain is like a child. Teach only good things to it

3. Always respect yourself!! Feel like king

Address

Pattukkottai
614602

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when ரியோ பொது இ-சேவை மையம் பட்டுக்கோட்டை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ரியோ பொது இ-சேவை மையம் பட்டுக்கோட்டை:

Share

Category