U.Mahalakshmi Ulaganathan 12th ward Councillor Pattukkottai

U.Mahalakshmi Ulaganathan 12th ward Councillor Pattukkottai காலம் பொண் போன்றது.
கடமை கண் போன்றது!

14/05/2023

அவளது நினைப்பின்றி
அணுவும் அசைவதில்லை
இல்லாமலிருந்தும் இருக்கின்ற
அம்மாவிற்கு...
அன்னையர் தின வாழ்த்துகள்❤️

12வது வார்டில் IOBபேங்க் அருகில் உள்ள கழிவு நீர் கால்வாய் மூடி உள்ளே கழிவு நீர் கால்வாயில் விழுந்த நிலையில் இருந்தது உடன...
09/11/2022

12வது வார்டில் IOBபேங்க் அருகில் உள்ள கழிவு நீர் கால்வாய் மூடி உள்ளே கழிவு நீர் கால்வாயில் விழுந்த நிலையில் இருந்தது உடனே மக்களின் நலனுக்காக நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து நகராட்சி பணி யாளர்கள் புதியதாக மூடி போட்டு சரிசெய்தனர் சமூக ஆர்வலர் மாரிமுத்துவுக்கு நன்றி.

06/11/2022
பட்டுக்கோட்டையில் 12வது வார்டில் நகர சபா கூட்டம் இன்று 4.11.22காலை 10.30மணியளவில் திமுக கவுன்சிலர்கள் மற்றும் தலைமை கழக ...
04/11/2022

பட்டுக்கோட்டையில் 12வது வார்டில் நகர சபா கூட்டம் இன்று 4.11.22காலை 10.30மணியளவில் திமுக கவுன்சிலர்கள் மற்றும் தலைமை கழக பேச்சாளர் மணிமுத்து அவர்கள்
நகர விவசாய அணி தலைவர் வெங்கடேசன் அவர்கள் மாவட்ட பிரதிநிதி அழகேசன் அவர்கள் நகர துணை ச்செயலாளர் ராயல்குமார் MC அவர்கள் ராமலிங்கம் MC அவர்கள் குணசேகரன் MC அவர்கள் பரமேஸ்வரன் MC அவர்கள் முன்னாள் விவசாயஅணி தலைவர் சாந்தி ஹோட்டல் வெங்கடேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் . நகராட்சி பொறியாளர் மற்றும் பணியாளர்கள் மற்றும் 12ஆவுது வார்டு பொதுமக்கள் முன்னிலையில் நகர சபா கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தலைவர் கலைஞரின் மனசாட்சியாக திகழ்ந்து திராவிட கருத்தியல்களை நாடு முழுவதும் கொண்டு சென்ற திரு.முரசொலி மாறன் அவர்களின் பிற...
17/08/2022

தலைவர் கலைஞரின் மனசாட்சியாக திகழ்ந்து திராவிட கருத்தியல்களை நாடு முழுவதும் கொண்டு சென்ற திரு.முரசொலி மாறன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்திற்கு இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினோம். இந்நிகழ்வில், மாண்புமிகு நகர்மன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

"மூவண்ணக் கொடியைப் போற்றுவோம்!மூட அரசியல்தனத்தை அடக்குவோம்!"- தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் ...
14/08/2022

"மூவண்ணக் கொடியைப் போற்றுவோம்!

மூட அரசியல்தனத்தை அடக்குவோம்!"

- தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் உத்தரவாத மடல்.

ம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் உத்தரவாத மடல்.

இந்திய ஒன்றியத்தின் 76-ஆவது விடுதலைநாள் விழா, உணர்வில் கலந்த கொண்டாட்டமாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமான சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், நாட்டுக் கொடியை உயர்த்துகிறேன்.

மாநில முதலமைச்சர்கள் அந்தந்த மாநிலத்தில் கொடி ஏற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவருக்கு நெஞ்சத்தில் நன்றி செலுத்தி, மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்திய ஒன்றியமும் அதில் இணைந்துள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும் மேலும் வலிமைபெற உறுதியேற்பதுதான் விடுதலைப் பவள விழாவான இந்த 75ஆம் ஆண்டு நிறைவின் கொண்டாட்டங்களின் நோக்கமாக உள்ளது.

இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் மூவண்ணக் கொடியையும், விடுதலைக்காகப் பாடுபட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம். தேசபக்தி என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு, தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல்தனத்தைச் சட்டப்படி அடக்குவோம்.

அன்புடன்

மு.க.ஸ்டாலின்

தமிழின தலைவர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளில் தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக...
07/08/2022

தமிழின தலைவர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளில் தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் அவர் செய்த எண்ணிலடங்கா உன்னத திட்டங்களையும் தொண்டையும் எட்டுத்திக்கும் அறியச்செய்வோம்.. நவீன தமிழ்நாட்டின் சிற்பியின் புகழ் பேசுவோம்.. ✍

22/07/2022
இன்று மக்கள் பணியில் 12வது வார்டு நகரமன்ற உறுப்பினர்!பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் குப்பைகள் மற்றும் மரங்களை அகற்றியபோது....
22/07/2022

இன்று மக்கள் பணியில் 12வது வார்டு நகரமன்ற உறுப்பினர்!
பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் குப்பைகள் மற்றும் மரங்களை அகற்றியபோது.

12வது வார்டு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு அன்போடு கேட்டுகொள்கிறோம்.
நமது 12வது வார்டு குறைகளை தெரிவிக்க என்னை தொடர்புகொள்ள செல்:
9842418027.

சுத்தமான நகரமாக நமது பட்டுக்கோட்டை அமைக்க ஒற்றுமையாக செயல்படுவோம்.

மக்கள் பணியில்
திருமதி மகாலட்சுமி உலகநாதன் MC
நகர மன்ற உறுப்பினர்
பட்டுக்கோட்டை.

Address

37 Big Street
Pattukkottai
614601

Telephone

+919842418027

Website

Alerts

Be the first to know and let us send you an email when U.Mahalakshmi Ulaganathan 12th ward Councillor Pattukkottai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share