SDPI Pattukkottai Assembly

SDPI Pattukkottai Assembly தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தொகுதி

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் SDPI-கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு...
01/04/2026

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் SDPI-கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு...

தஞ்சை தெற்கு மாவட்டம் திமுக சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்ற SDPI-கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் தலைவர் மரியாதைக்குரிய N.முகமது புகாரி அவர்களும் மாவட்ட துணை தலைவர் H.அகமது அஸ்லம் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

உடன் தஞ்சை தெற்கு மாவட்டம் பொதுச்செயலாளர், மாவட்ட நிர்வாகிகள், பட்டுக்கோட்டை தொகுதி நிர்வாகிகள், பட்டுக்கோட்டை நகர நிர்வாகிகள், அதிரை நகர நிர்வாகிகள், மதுக்கூர் நகர நிர்வாகிகள் இருந்தனர்.


்சிதஞ்சைதெற்குமாவட்டம்

SDPI கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சிறப்பு மாவட்ட செயற்குழு இன்று (மே.29) அதிரையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் நிஜாமு...
31/05/2025

SDPI கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சிறப்பு மாவட்ட செயற்குழு இன்று (மே.29) அதிரையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் நிஜாமுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக SDPI-சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா,தமிழ்நாடு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், மண்டல தலைவர் தப்ரே ஆலம் பாதுஷாவும் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள், நிர்வாக மாற்றங்கள், கட்சியின் கட்டமைப்பு பற்றி விரிவான ஆலோசனை நடைபெற்றது. இதன் இறுதியில் கட்சியின் புதிய மாவட்ட தலைவராக அதிரை புகாரி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் கட்சியின் மாவட்ட நிர்வாக பொதுச் செயலாளராக மதுக்கூர் அசார் மற்றும் மாவட்டத் துணைத் தலைவராக மல்லிப்பட்டினம் நிஜாமுதீன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பசியிலிருந்து விடுதலை...!💚பயத்திலிருந்து விடுதலை.!❤️மே-09 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு...
10/05/2025

பசியிலிருந்து விடுதலை...!💚
பயத்திலிருந்து விடுதலை.!❤️

மே-09 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட அனைத்து தலைவர்கள் சந்திப்பு கூட்டம் அதிரை எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் வைத்து தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் AG நிஜாமுதீன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட அமைப்பு பொதுசெயலாளர் S.அசாருதீன் அனைவரையும் வரவேற்று பேசி தொகுத்து வழங்கினார். மாவட்ட நிர்வாக பொது செயலாளர் N முஹம்மது புஹாரி கூட்டத்தை ஒருங்கிணைத்தார்.

எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் AG நிஜாமுதீன் தலைமையுரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொது குழு உறுப்பினர் மற்றும் தஞ்சை மண்டல தலைவர் A. தப்ரே ஆலம் பாதுஷா அவர்கள் சிறப்புரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் வார்டு சம்பந்தமான விஷயங்கள், உள்ளூர் பொது மக்களின் கோரிக்கைகள் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் சேதுபாவா சத்திரம் ஒன்றிய துணைத்தலைவர் மற்றும் செந்தலை கிளைத் தலைவர் A. அன்வர், ஒன்றிய செயலாளர் M. முஹம்மது வஹி மன்சூர், ஒன்றிய இணை செயலாளர் மற்றும் சத்திரம் கிளைத் தலைவர் S. கலீல், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி துணைத்தலைவர் முஸ்தபா, அதிரை நகரத் தலைவர் முஹம்மது இப்ராஹிம், செயலாளர் S.பாரிஸ் அஹமது, மல்லிப்பட்டினம் கிராம பஞ்சாயத்து தலைவர் J.ஜவாஹிர், மதுக்கூர் நகர செயலாளர் பிலால், பட்டுக்கோட்டை கிளை தலைவர் பீர் முஹம்மது, செயலாளர் அந்துவான், அதிரை கிளை-2 தலைவர் அபுல் ஹசன், அதிரை கிளை-1 செயலாளர் கலிஃபுல்லாஹ், அதிரை கிளை-3 தலைவர் இப்ராஹிம், தொண்டரணி தலைவர் ரிஸ்வான், மல்லிப்பட்டினம் கிளை-1 தலைவர் U.இப்ராம்ஷா மற்றும் மல்லிப்பட்டினம் கிளை-2 செயலாளர் A. அப்துல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர செயலாளர் S. பாரிஸ் அஹமது நன்றி கூறினார்.

இப்தார் நிகழ்ச்சி அழைப்பிதழ் 💚❤️*அதிராம்பட்டினம் நகர SDPI கட்சி  ஒருங்கிணைக்கும் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி வருகின...
20/03/2025

இப்தார் நிகழ்ச்சி அழைப்பிதழ் 💚❤️

*அதிராம்பட்டினம் நகர SDPI கட்சி ஒருங்கிணைக்கும் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி வருகின்ற 21-03-2025 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணி அளவில் ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்ட் [ கதீஜா மஹால் ]நடைபெற உள்ளது.*

எனவே அனைத்து ஜமாத் கூட்டமைப்பு, சமுதாய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அனைவரையும் அன்போடு அழைக்கிறது.

SDPI தேசியத் தலைவரின் கைது நடவடிக்கை கண்டனத்திற்குரியது!டெல்லியில் அமலாக்கத்துறை இயக்குநரகத்தால் எஸ்டிபிஐ கட்சியின் தேசி...
04/03/2025

SDPI தேசியத் தலைவரின் கைது நடவடிக்கை கண்டனத்திற்குரியது!

டெல்லியில் அமலாக்கத்துறை இயக்குநரகத்தால் எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே.ஃபைஸி கைது செய்யப்பட்டதற்கு எஸ்டிபிஐ கட்சி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த கைது நடவடிக்கை என்பது, எதிர் குரல்களை, கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கும், அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்கும் மேற்கொள்ளப்படும் பழிவாங்கும் அரசியலின் ஒரு பகுதியாகும்.

எஸ்டிபிஐ தேசியத் தலைவரின் கைது, மத்திய பாஜக அரசாங்கத்தால் எதிர்ப்புக் குரலை நசுக்க மேற்கொள்ளப்படும் பழிவாங்கும் அரசியலைத் தவிர வேறில்லை. பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, விசாரணை ஏஜென்சிகளை தவறாகப் பயன்படுத்தி, ஜனநாயக சக்திகளை மிரட்டி ஒடுக்குவது என்பது பாஜக ஆட்சியின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும். வக்ஃப் திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள எஸ்டிபிஐ கட்சி மீதான, ஆட்சியாளர்களின் சகிப்பின்மையே இந்த கைது நடவடிக்கையின் தெளிவான அறிகுறியாகும். எஸ்டிபிஐ கட்சி இத்தகைய அடக்குமுறை மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, முழு மன உறுதியுடனும், சட்டரீதியாகவும் போராடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

-முகமது ஷஃபி
தேசிய துணைத் தலைவர், SDPI

பசியிலிருந்து விடுதலை...!பயத்திலிருந்து விடுதலை.!❤️பிப்-02 நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் SDPI கட்சி சார்பாக தஞ்ச...
01/02/2025

பசியிலிருந்து விடுதலை...!
பயத்திலிருந்து விடுதலை.!❤️

பிப்-02 நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் SDPI கட்சி சார்பாக தஞ்சை மாநகரில் உள்ள திலகர் திடலில் (மர்ஹூம் ஹாஜி MKN காதிர் முஹைதீன் மறைக்காயர் திடல் ) நடைபெறவிருக்கும் வக்ஃபு உரிமை மீட்பு மாநாடு அழைப்பிதழ் மாநாட்டிற்கு முன்னிலை வகிக்க இருக்கும் அஇஅதிமுக தஞ்சாவூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், ஒரத்தநாடு பேரூராட்சி மன்ற தலைவருமான அண்ணன் மா. சேகர் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. தஞ்சை தெற்கு மாவட்ட துணை தலைவர் S. அஹமது அஸ்லம், பட்டுக்கோட்டை தொகுதி செயலாளர் S. தீன் முஹம்மது, பட்டுக்கோட்டை கிளை தலைவர் J. பீர் முஹம்மது மற்றும் பட்டுக்கோட்டை கிளை செயலாளர் M. அந்துவான் ஆகியோர் உடன் இருந்தனர்.

பட்டுக்கோட்டை
தஞ்சை தெற்கு மாவட்டம்
SDPI கட்சி.

ஆழ்ந்த இரங்கல்...!எஸ்டிபிஐ கட்சியின் வடசென்னை கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவரும், கட்சியின் மாநில செயற்குழுவின் சிறப்பு அழ...
16/09/2024

ஆழ்ந்த இரங்கல்...!

எஸ்டிபிஐ கட்சியின் வடசென்னை கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவரும், கட்சியின் மாநில செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளருமான அன்பு சகோதரர் புஷ்பராஜ் அவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்து விட்டார் என்கிற செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றது. பூரண நலம்பெற்று மக்கள் பணியாற்றிட அவர் மீண்டு வருவார் என்கிற எதிர்ப்பார்ப்பு நிறைவேறாமல் போய்விட்டது.

கட்சியின் துவக்கக் காலத்திலிருந்து நம்மோடு பயணித்துவந்த அவர், எஸ்டிபிஐ கட்சியின் கிளை பொறுப்புகளில் ஆரம்பித்துச் சிறப்பான தன்னுடைய செயலாற்றலால் வளர்ந்து, மாவட்ட தலைவராக, மாநில செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளராகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்தார். 2016 சட்டமன்றத் தேர்தலிலும் (திருவிக நகர்), உள்ளாட்சித் தேர்தலிலும் (சென்னை மாநகராட்சி) கட்சியின் வேட்பாளராகக் களம் இறங்கியவர்.

துடிப்பு மிக்க இளைஞராக, சமூகம் நல்லிணக்கம் பேணக்கூடியவராக, எதிர்கால சமூக சிந்தனையோடு பயணிக்கக் கூடியவராக விளங்கியவர் சகோதரர் புஷ்பராஜ் அவர்கள். கட்சியினுடைய வளர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்து, கட்சியின் எல்லாவித முடிவுகளுக்கும் கட்டுப்பட்டு மிகவும் உறுதுணையாக இருந்தவர் அன்பு சகோதரர் புஷ்பராஜ் அவர்கள்.

தனது உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கூட கடைசிவரை கட்சியின் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வந்தார். உடல் இயங்க மறுத்தாலும் இருந்த இடத்திலிருந்தே கட்சியின் பணிகளை கையாண்டவர்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய தாயாரின் சிறுநீரகத்தைத் தானமாகப் பெற்று நலம் பெற்று வந்த நிலையில் மீண்டும் அவருடைய உடல்நிலை மோசமாகி மரணத்தை தழுவியுள்ளார்.

உண்மையிலேயே சகோதரர் புஷ்பராஜ் அவர்களின் மரணம் எஸ்டிபிஐ கட்சிக்கு பேரிழப்பாகும். அன்னாரின் மரணத்தால் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- நெல்லை முபாரக்,
மாநில தலைவர்,
SDPI கட்சி, தமிழ்நாடு.

06/07/2024
06/07/2024

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் வழ.ஆம்ஸ்ட்ராங் படுகொலை! - எஸ்டிபிஐ கட்சி கண்டனம்

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கவலைக்குரியதாக மாறியுள்ளதாக குற்றச்சாட்டு!
----------------------------
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவரும், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை சமூகத்தின் முன்னேற்றத்துக்காக குரல் கொடுத்து வந்த வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சென்னை பெரம்பூரில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர நிகழ்வு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றது.

சமீப காலமாக தமிழகத்தில் தொடரும் குற்றங்கள், கொலைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுள் அதிகரிப்பு கவலைக்குரியதாக மாறியுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது உண்மையிலேயே அனைவருக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர நிகழ்வை வன்மையாக கண்டிப்பதோடு, படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகள் மற்றும் அதன் பின்புலத்தில் உள்ள அனைவரையும் விரைந்து கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மரணத்தால் அவர்களை இழந்து பரிதவிக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கான அரசியலின் 16-வது ஆண்டு!கண்ணியமான அரசியலுக்கு ஒன்றிணைவோம்!
12/06/2024

மக்களுக்கான அரசியலின் 16-வது ஆண்டு!
கண்ணியமான அரசியலுக்கு ஒன்றிணைவோம்!

மக்களிடையே  மத வெறுப்பைத் தூண்டிதேசத்தின் இறையாண்மையை தகர்க்கும் மோடியேபிரதமர் பதவியை விட்டு வெளியேறு!இந்திய தேர்தல் ஆணை...
25/04/2024

மக்களிடையே மத வெறுப்பைத் தூண்டி

தேசத்தின் இறையாண்மையை தகர்க்கும் மோடியே

பிரதமர் பதவியை விட்டு வெளியேறு!

இந்திய தேர்தல் ஆணையமே தூங்காதே!

SDPI கட்சி நடத்தும்

இந்திய தேர்தல் ஆணைய அலுவலக முற்றுகை போராட்டம்!

வாக்குப்பதிவு எனும் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் முகம்மது முபாரக்...
19/04/2024

வாக்குப்பதிவு எனும் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் முகம்மது முபாரக்.

#திண்டுக்கல்

Address

Pattukkottai

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI Pattukkottai Assembly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SDPI Pattukkottai Assembly:

Share