MNM பரமக்குடி தொகுதி

MNM பரமக்குடி தொகுதி மக்கள் நீதி மய்யம் - பரமக்குடி சட்டமன?

08/08/2022

சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநராக தமிழக விஞ்ஞானி நியமனம்!

4500 விஞ்ஞானிகள், 38 ஆராய்ச்சி மையங்களுக்கு தலைமை தாங்கப் போகும் கலைச்செல்வி அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு.

அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சிலின் தலைமை இயக்குநராக தமிழக விஞ்ஞானி கலைச்செல்வி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 38 ஆராய்ச்சி மையங்கள், 4500 விஞ்ஞானிகளுக்குத் தலைமை வகிக்கப்போகும் முதல் பெண் இவர் என்பது கூடுதல் சிறப்பு.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள விக்கிரமசிங்கபுரம் என்ற சிறிய ஊரிலிருந்துச் சென்று, இந்தியாவின் உயர்ந்த அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கப் போகும் கலைச்செல்வி அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

மக்கள் நலத்திட்டங்களை புறக்கணிக்கும் விடியல் அரசுhttps://youtube.com/shorts/ztC85VYzVsI
24/03/2022

மக்கள் நலத்திட்டங்களை புறக்கணிக்கும் விடியல் அரசு

https://youtube.com/shorts/ztC85VYzVsI

மக்கள் பணிகளில் தி மு க வை கலங்க வைக்கும் கமல் ...விழி பிதுங்கும் முதல்வர் ...
23/03/2022

மக்கள் பணிகளில் தி மு க வை கலங்க வைக்கும் கமல் ...விழி பிதுங்கும் முதல்வர் ...

*மய்யம் தொடர்ந்து வலியுறுத்திய ஏரியாசபை, வார்டு கமிட்டிகள் கொண்டுவர   முதல்வர் அறிவிப்பு!*மக்கள் நீதி மய்யம் வரவேற்பு14/...
14/03/2022

*மய்யம் தொடர்ந்து வலியுறுத்திய ஏரியாசபை, வார்டு கமிட்டிகள் கொண்டுவர முதல்வர் அறிவிப்பு!*

மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

14/03/2022

நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் பங்கேற்புடன் கூடிய மக்களாட்சி நிலைப்பெற ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி அமைப்புகளை நடைமுறைப்படுத்த மக்கள் நீதி மய்யம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. கடந்த பிப்ரவரி 21-ம் தேதி தமிழக தலைமைச் செயலாளரிடம் மனுகொடுத்தோம்.

12 ஆண்டுகளுக்கு முன்னரே சட்டமியற்றப்பட்டு இன்னமும் செயல்பாட்டுக்கு வராத இந்த அமைப்புகளை உடனே நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுக்க உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளும் மனு கொடுத்தார்கள்.

சமீபத்தில் நடந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள்,காவல்துறை,வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழகமுதல்வர் விரைவில் ஏரியா சபை, வார்டு கமிட்டிகள் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். தமிழகமுதல்வரின் இந்த அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் சார்பாக வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்.

அதேசமயம், இந்த நடைமுறையை நகராட்சி, மாநகராட்சிகளில் மட்டுமல்லாமல் பேரூராட்சிப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்குரிய சட்ட திருத்தத்தை தமிழக அரசு கொண்டுவரவேண்டும் என்று தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்.

- கமல் ஹாசன்,
தலைவர்,
மக்கள் நீதி மய்யம்

இன்று பிறந்தநாள் காணும் இராமநாதபுர மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் ராம...
10/03/2022

இன்று பிறந்தநாள் காணும் இராமநாதபுர மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

ஆசிரியர்களின் கோரிக்கையை காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - மக்கள் நீதி மய்யம் அறிக்கை.
04/03/2022

ஆசிரியர்களின் கோரிக்கையை காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - மக்கள் நீதி மய்யம் அறிக்கை.

01/03/2022

உள்ளாட்சி அமைப்புகளில் பங்கேற்பு ஜனநாயகத்தை உறுதி செய்யவும், வரவு செலவுகளில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடித்து ஊழலைக் கட்டுப்படுத்தவும் ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டிகளை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்.
அதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களிடம் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. உள்ளாட்சியில் தன்னாட்சியை உறுதிசெய்ய வேண்டியது மாநில அரசின் கடமை. தமிழக அரசு அதைச் செய்ய வேண்டும்.

அனுப்புனர்,BG.சேகர்,மாவட்ட செயலாளர்இராமநாதபுரம் கிழக்குVM. கார்த்திகேயன்மாவட்ட செயலாளர்,இராமநாதபுரம் மேற்குமக்கள் நீதி ம...
28/02/2022

அனுப்புனர்,
BG.சேகர்,
மாவட்ட செயலாளர்
இராமநாதபுரம் கிழக்கு

VM. கார்த்திகேயன்
மாவட்ட செயலாளர்,
இராமநாதபுரம் மேற்கு

மக்கள் நீதி மய்யம்

பெறுநர்
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
இராமநாதபுரம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

ஐயா,
பொருள்: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பங்கேற்புடன் கூடிய மக்களாட்சி மலர - ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைப்புகளை - நடைமுறைப்படுத்த கோரும் மனு.

‘‘அதிகாரப்பரவலாக்கல்” மூலமே சிறந்த அரசு நிர்வாகத்தைத் தரமுடியும் என்பதில் மக்கள் நீதி மய்யம் அசையா நம்பிக்கை வைத்திருக்கிறது. ஆகவே தான், “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்ற அணுகுமுறையோடு “உள்ளாட்சியில் தன்னாட்சி” என்ற கருத்தாக்கத்தையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். “கிராம சுயாட்சி”க்கு வழிவகுக்கும் ”கிராமசபைகள்” மேம்பட களத்தில் பணியாற்றும்போது பங்கேற்பு ஜனநாயகத்தின் மகத்துவத்தை கண்கூடாக உணரமுடிகிறது. நகர்ப்புறங்களிலும் “கிராம சபைகள்” போன்ற மக்கள் பங்கேற்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டு, அவை விரைவில் செயல்பாட்டுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 21.02.2022 மக்கள் நீதி மய்ய தலைவர் திரு.கமல் ஹாசன் தலைமைச் செயலாளரை சந்தித்து மனு வழங்கினார்.

தமிழகம் தழுவிய அந்த கோரிக்கை மனுவை அடியொற்றி நம் மாவட்டத்தில் அதேபோன்று ஏரியா சபைகள் அமைக்க வேண்டும் என்று
இந்த மனுவைத் தங்களிடம் சமர்ப்பிக்கிறோம். இதனை தமிழக அரசிற்கு அனுப்பிவைத்து இதனை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோருகிறோம்.

நகர்ப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், குடியிருப்போர் நலச் சங்கம் (Resident welfare association) அமைத்து தங்களது தேவைகளைத் தீர்க்கும் ஒரு பங்கேற்பு ஜனநாயகத்தை உருவாக்கி வைத்திருக்கின்றனர். இதன் மூலமாக மின் தூக்கி, குடிநீர் வினியோகம், குப்பை அள்ளுதல், கழிவுநீர் சுத்திகரிப்பு, தெரு விளக்கு,

சிறுவர் பூங்கா, குடியிருப்பின் பாதுகாப்பு ஆகியவற்றைத் திறம்பட நிர்வகிக்கிறார்கள். இதில் ஏற்படும் குறைகளைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உடனுக்குடன் விவாதித்து சரி செய்கிறார்கள். தேவைக்கேற்ப தீர்மானங்கள் இயற்றி செயல்படுத்துகிறார்கள். செலவினங்கள், வருவாய் உள்ளிட்ட கணக்கு வழக்குகள் சங்க உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. கணக்கும் ஆடிட்டர்கள் உதவியுடன் தணிக்கை செய்யப்படுகிறது. தான் செலுத்தும் மாதாந்திர பராமரிப்புத் தொகை எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை அறியும் உரிமை நலச்சங்க உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இது ஒரு தனியார் அமைப்பில் உள்ள பங்கேற்பு ஜனநாயகம். மக்களின் வரிப்பணத்தை நிர்வகிக்கும் உள்ளாட்சி நிர்வாகத்தில் இதைவிடச் சிறந்த மக்கள் பங்கேற்பு ஜனநாயகம் மலர வேண்டும் என்பது மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படைக் கொள்கைகளுள் ஒன்று.
‘‘கிராம சபைகள்” குறைந்தபட்சம் ஆண்டுக்கு நான்கு முறை கூடுவதால், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்தாலோசிக்கும் வாய்ப்பு உருவாகிறது. மேலும், இதன் மூலம் கிராமப் பஞ்சாயத்தின் வரவு செலவுகள், உள்ளூரில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆகியவை பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரியவருகிறது. கிராமசபைகளைப் போலவே நகரங்களிலும் பங்கேற்பு ஜனநாயகத்தை உருவாக்குவதற்காக, தமிழக அரசு ‘தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் (திருத்தம்) சட்டம் 2010 (எண் 35)’ இயற்றியது. ( 02-12-2010 தேதியிட்ட அரசிதழ் நகல், இணைப்பில்) இந்தச் சட்டம் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், மக்கள் பங்கேற்புடைய ‘‘ஏரியா சபை” மற்றும் ‘‘வார்டு கமிட்டி” அமைப்புகளை உருவாக்க வழிவகை செய்கிறது.
இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டு 11 ஆண்டுகளாகியும் இதனை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான செயல்முறை விதிகள்(Rules) உருவாக்கப்படாததால், இன்றுவரை அமல்படுத்தப்படாமல் இருக்கிறது. தமிழகத்தில் சுமார் 50% மக்கள் நகர உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் வாழ்கின்றனர். இவர்களுக்கு பங்கேற்பு ஜனநாயம் மறுக்கப்பட்டு வருகிறது.
மேலும், மேற்குறிப்பிட்ட சட்டத் திருத்தமானது, மாநகராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கு மட்டுமே, ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி உருவாக்க வழிவகை செய்கிறது. இதனை விரிவுபடுத்தி பேரூராட்சிப் பகுதிகளுக்கும் இதனைச் செயல்படுத்த தமிழக அரசு உரிய சட்ட திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
நமது பக்கத்து மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள மாவட்டங்களில் ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டிகள் செயல்பாட்டில் உள்ளன. ஹரியானாவின் ஃபரிதாபாத், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் போன்ற நகரங்களிலும் இதனைச் செயல்படுத்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கர்நாடகாவின் பெங்களூரு மாநகராட்சியில், ஒவ்வொரு வார்டு கமிட்டிக்கும் 50 லட்சம் தனி பட்ஜெட் என மொத்தம் 198 வார்டுகளுக்கும் சுமார் 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை எவ்வாறு செலவிட வேண்டும் என்பதை அந்தந்த வார்டு கமிட்டியே முடிவு செய்துகொள்ளும். கர்நாடகாவின், மங்களூரு

நகரத்திலும் இந்த அமைப்புகள் மிகச்சமீபத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. தமிழகத்திலும் இதுபோல நிதி ஒதுக்கீடு மற்றும் அதிகாரங்கள் ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டிகளுக்கு வழங்கப்படவேண்டும். இதன்மூலம் அந்தந்தப்
பகுதி மக்கள் குடிநீர்,பாதாள சாக்கடை,சாலை, குப்பை மேலாண்மை, போக்குவரத்து சீரமைப்பு, நீர்நிலை பாதுகாப்பு போன்ற முக்கிய அடிப்படைத் தேவைகளில் எதெற்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்த வேண்டும் என்பதை முடிவுசெய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். மக்களின் தேவையின் அடிப்படையில், மக்கள் பங்கேற்போடு பணிகள் நடைபெறும்போது செயல்படுத்தப்படும் திட்டங்களின் தரம் சிறப்பாக இருக்கும்.
காமராஜர்,பெரியார்,ராஜாஜி உள்ளிட்ட தமிழகத்தின் பல தலைவர்கள் நகர உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தே தங்களது பயணத்தைத் துவங்கினர். அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்க நகர உள்ளாட்சிகளில் பங்கேற்பு ஜனநாயகத்தை உருவாக்குவது அவசியம்.
முறையாக செயல்படுத்தப்பட்டால், நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தில் மாபெரும் புரட்சியை உருவாக்கும் வல்லமை கொண்டவை ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைப்புகள். இதனை சிறப்பாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் பொருட்டு பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் துறைசார் வல்லுனர்களிடம் இதன் செயலாக்கம் குறித்து விரிவான கருத்துக்களைப் பெறுவது குறித்தும்(Public Consultation) தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் தங்களிடம் வலியுறுத்துகிறோம்.
கடைக்கோடி குடிமகனுக்கும் பங்கேற்பு ஜனநாயகத்தை உறுதி செய்தால் மட்டுமே காந்தி, அம்பேத்கர் விரும்பிய உண்மையான மக்களாட்சியும், அண்ணா விரும்பிய உண்மையான அதிகாரப் பரவலாக்கமும் மலரும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்கவுள்ள தற்போதைய சூழலில், ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி போன்றவற்றிற்கான செயல்முறை விதிகள் விரைவில் வெளியிடப்பட்டு நடை முறைப்படுத்தப்படும் என்று நம்புகிறோம்.

- மாவட்ட செயலாளர் , மக்கள் நீதி மய்யம்.

இணைப்பு:
1. மக்கள் நீதி மய்ய தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமை செயலாளருக்கு அனுப்பிய மனுவின் நகல்.
2. தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் (திருத்தம்) சட்டம் 2010 (எண் 35) - அரசிதழ் நகல் (02-12-2010)

நடந்து முடிந்த தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் அறிக்கை23/02/2022உயிரே உறவே தமிழே,ந...
23/02/2022

நடந்து முடிந்த தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் அறிக்கை

23/02/2022

உயிரே உறவே தமிழே,

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிகார பலம், பண பலம், கூட்டணி பலம், ஊடக பலம் கொண்டவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட துணிந்த மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான்.

நேர்மையாக தேர்தலை எதிர்கொண்ட வேட்பாளர்களுக்கும், அவர்களுக்காக உழைத்த கட்சியின் உறுப்பினர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் போட்டியிட்ட வார்டுகளில் நீங்கள் வென்றதாகவே நினைத்து மக்கள் பணியைத் தொடருங்கள். உங்களை வெற்றி பெறச் செய்யாததை நினைத்து வருந்துமளவிற்குச் சேவையாற்றுங்கள். நாம் அரசியலுக்கு வந்தது மக்கள் பணி செய்வதற்குத்தான்.

வெள்ளிக் கொலுசு, ஹாட் பாக்ஸ், அண்டா, பட்டுப் புடவை, ரூ.2000 முதல் ரூ.8000 வரை பணம் என வாக்காளர்கள் விலை பேசப்பட்டபோதும் தன் ஆன்மாவை அடகு வைக்காமல் நேர்மைக்கு வாக்களித்த வாக்காளர்களின் நெஞ்சுரம் போற்றுதலுக்குரியது. அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள போதிய நிதி இல்லாமல் தடுமாறியபோது நேர்மை அரசியலுக்கு இயன்றதைத் தாருங்களென மக்களிடமே கோரிக்கை விடுத்தோம். தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்தவர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி.
தோல்விகள் இரண்டு வகைப்படும். ஒன்று permanent failure. திருத்திக்கொள்ள வாய்ப்பில்லாதவை. மற்றொன்று micro failure. திருத்திக்கொண்டு வெற்றியை நோக்கி முன்னகரும் வாய்ப்புள்ளவை. நாம் சந்தித்திருக்கும் பின்னடைவு இரண்டாம் வகை.

பல இடங்களில் 50% குறைவான வாக்காளர்களே தங்களது வாக்குகளைச் செலுத்தி இருக்கிறார்கள். கழகங்கள் போட்ட கள்ள ஓட்டுகளைக் கழித்தால், இன்னமும் கூட குறைவான சதவீத மக்களே இந்தத் தேர்தலில் பங்கேற்றிருக்கிறார்கள். தமிழகத்தில் நிகழும் ஆபாச அரசியலை பெரும்பான்மை மக்கள் விரும்பவில்லை என்பதையே இது சுட்டுகிறது. நாம் பேச வேண்டியது அவர்களிடம்தான்.

இந்தச் சூழலை மாற்றவே முடியாது என சோர்ந்து போனவர்களும், அரசியல் நமக்குச் சொந்தமானதில்லை என ஒதுங்கிக்கொள்ளும் இளைஞர்களும் மனம் மாறி தங்களது ஜனநாயகப் பங்களிப்பைச் செய்கையில் சூழல் மாறும்.
‘மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்’ என்பது ஒரு சம்பிரதாயமான வார்த்தை. அதை நான் சொல்ல விரும்பவில்லை. மக்களும் பல சமயங்களில் கூட்டாகச் சேர்ந்து தவறான முடிவுகளை எடுப்பார்கள். வரலாறு நெடுக அதற்கு உதாரணங்கள் உண்டு. எங்களைப் போன்ற நேர்மையாளர்களை, அரசியலை பணம் குவிக்கும் தொழில்வாய்ப்பாகக் கருதாதவர்களை, வாக்குறுதி தந்துவிட்டு ஏமாற்றாதவர்களை, ஊழலற்ற வெளிப்படையான திறமையான நிர்வாகத்தின் மூலம் தமிழகத்தைச் சீரமைக்க நினைப்பவர்களைத் தோற்கடிப்பதில் உங்களுக்கு ஒரு பெருமையும் இல்லை.

நீங்கள் யாரை, எதற்காகத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதை உங்களின் அடுத்த தலைமுறை கவனித்துக்கொண்டிருக்கிறது. எங்களைப் போன்ற மாற்று சக்திகளின் கரங்களை வலுப்படுத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. கடமையில் தவறியவர்கள் உரிமையை இழப்பார்கள் என்பதே வரலாறு நமக்கு உணர்த்தும் துரதிர்ஷ்டமான உண்மை.

என் எஞ்சிய வாழ்க்கை தமிழக மக்களுக்குத்தான் என நான்காண்டுகளுக்கு முன் நான் அறிவித்தது வெறும் வாய்ஜாலம் இல்லை. இடைக்கால வெற்றி தோல்விகள் எங்களின் மக்கள் பணியை என்றுமே பாதித்ததில்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும் அதற்கு விதிவிலக்கல்ல.

- உங்கள் நான்.

13/02/2022

இதோ மக்கள் நீதி மய்ய வேட்பாளர் களத்தில் இறங்கி சேவை செய்ய தொடங்கி விட்டார்...! தான் வெற்றி பெற்றால் எவ்வாறு சேவை செய்வேன் என்று காட்டிருக்கிறார்...! மக்களே சிந்திப்பீர்...! வாக்களிப்போம் டார்ச்லைட் சின்னத்திற்கு...!

நமது வேட்பாளர்: M. இராமகிருஷ்ணன்
நமது சின்னம் : டார்ச்லைட்
நமது வார்டு எண் : 32

#மய்ய_வேட்பாளர்கள்





பரமக்குடி நகராட்சி 7வது வார்டில் போட்டியிடும் மய்ய வேட்பாளர் G. R. கார்த்திக் அவர்களின் சத்தியப் பிரமாணம் இங்கே...!வாக்க...
11/02/2022

பரமக்குடி நகராட்சி 7வது வார்டில் போட்டியிடும் மய்ய வேட்பாளர் G. R. கார்த்திக் அவர்களின் சத்தியப் பிரமாணம் இங்கே...!
வாக்குறுதிய படிங்க....! டார்ச்லைட்க்கு உங்கள் வாக்கை செலுத்துங்கள் அன்பான மக்களே...!
#மய்ய_வேட்பாளர்கள்

#மய்ய_வாக்குறுதிகள்

பரமக்குடி நகராட்சி 6வது வார்டில் போட்டியிடும் மய்ய வேட்பாளர் ப. ந. ஜெய்சங்கர் அவர்களின் சத்தியப் பிரமாணம் இங்கே...!வாக்க...
11/02/2022

பரமக்குடி நகராட்சி 6வது வார்டில் போட்டியிடும் மய்ய வேட்பாளர் ப. ந. ஜெய்சங்கர் அவர்களின் சத்தியப் பிரமாணம் இங்கே...!
வாக்குறுதிய படிங்க....! டார்ச்லைட்க்கு உங்கள் வாக்கை செலுத்துங்கள் அன்பான மக்களே...!
#மய்ய_வேட்பாளர்கள்

#மய்ய_வாக்குறுதிகள்

Address

Paramakudi

Alerts

Be the first to know and let us send you an email when MNM பரமக்குடி தொகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share