SDPI திண்டுக்கல் மேற்கு மாவட்டம்

  • Home
  • India
  • Palani
  • SDPI திண்டுக்கல் மேற்கு மாவட்டம்

SDPI திண்டுக்கல் மேற்கு மாவட்டம் பசியிலிருந்து விடுதலை!!பயத்திலிருந்து விடுதலை!!

31/05/2026

வாக்காளர் உரிமை பறிப்பிற்கு எதிராக நீதித்துறை விழிப்புடன் இருக்க வேண்டும்! - SDPI

தேர்தல் ஆணையத்தின் ‘சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை’ (Special Intensive Revision) உறுதிசெய்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து, எஸ்டிபிஐ (SDPI) கட்சி தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது. பல தசாப்தங்களாக உண்மையான வாக்காளர்களாக இருந்தபோதிலும், முறையான ஆவணங்கள் இல்லை என்ற காரணத்தால் ஏழைகள், புலம்பெயர்ந்தோர், கிராமப்புற மக்கள் மற்றும் விளிம்புநிலை சமூகத்தினர் வாக்காளர் பட்டியலில் இருந்து தவறாக நீக்கப்படலாம் என்ற நியாயமான அச்சங்களை இந்தத் தீர்ப்பு எழுப்புகிறது. மேலும், இது ஆவணங்களை மட்டுமே மிதமிஞ்சி சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கி, அவர்களின் வாக்குரிமை பறிக்கப்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

வாக்காளர் பட்டியலிலிருந்து ஒருவரது பெயரை நீக்குவது குடியுரிமையை ரத்து செய்வதற்குச் சமமாகாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தாலும், சமீபத்திய அரசியல் நகர்வுகள் இத்தகைய நடவடிக்கைகள் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்ற பொதுமக்களின் கவலையை ஆழமாக்கியுள்ளன. மேற்கு வங்க மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, "கண்டறி, நீக்கு, நாடுகடத்து" ("detect, delete and deport") கொள்கையை ஆதரித்துப் பேசிய பொதுக் கருத்துக்களும், ஊடுருவல்காரர்கள் என்று கூறப்படுபவர்கள் குறித்து நிதின் நவீன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் கருத்துக்களும், இத்தகைய பெரிய அளவிலான வாக்காளர் சரிபார்ப்பு நடவடிக்கைகள், படிப்படியாக ஒரு குறிப்பிட்ட பிரிவினரை சந்தேகிக்கவும், குறிவைக்கவும், ஒதுக்கி வைக்கவும் பயன்படுத்தப்படும் கருவிகளாக மாறிவிடுமோ என்ற அச்சத்தை வலுப்படுத்துகின்றன.

எனவே, அரசியலமைப்புச் சட்ட உரிமைகளைப் பாதுகாப்பதிலும், தன்னிச்சையான அல்லது அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைகள் மூலம் எந்தவொரு குடிமகனும் தனது ஜனநாயகப் பங்கெடுப்பிலிருந்து (வாக்குரிமையிலிருந்து) வஞ்சிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதிலும் நீதித்துறை விழிப்புடன் இருக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது.

- எம்.கே. ஃபைஸி,
தேசியத் தலைவர், SDPI

27/05/2026

SDPI மாநில தலைவரின் பக்ரீத் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள பக்ரீத் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;

தியாகத்தின் மேன்மையை பறைசாற்றும் பக்ரீத் பெருநாளை மகிழ்ச்சியுடனும் உவகையுடனும் கொண்டாடும் இஸ்லாமியச் சொந்தங்கள் அனைவருக்கும், எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் எனது இதயம் கனிந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கின்றேன்.

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் உன்னதமான தியாக வாழ்வை நினைவுகூரும் இந்நாள், நமக்குள் தியாக சிந்தனையையும் அர்ப்பணிப்பு உணர்வையும் விதைக்கும் நன்னாளாகும். சமூகத்தின் அறியாமையை அகற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியதிலும், ஏதேச்சதிகார சக்திகளுக்கு எதிராக சமரசமின்றிப் போராடியதிலும் இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் துணிச்சலும், அறிவாற்றலும், அர்ப்பணிப்பும் நமக்கான மிகச்சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கின்றன.

தியாகத்தை போற்றும் இந்நாளில், ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் வாழ்வு மேம்படவும், ஜனநாயகத்தை நிலைநாட்டவும் நாம் உறுதியேற்போம்.

மக்களிடையே அன்பும், பரஸ்பர பாசமும், சகோதரத்துவமும் ஓங்கி வளரவும்; உலகெங்கும் அமைதி, சமாதானம், மனிதநேயம் மற்றும் மதநல்லிணக்கம் தழைத்தோங்கவும் இப்புனித நாளில் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

14/05/2026

திருச்சியில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம்

திருச்சியில் இன்று (மே.14) எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தேசிய செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். மேலும், கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் அப்துல் ஹமீது, அச.உமர் பாரூக், மாநில பொதுச்செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அகமது நவவி, அபூபக்கர் சித்திக், ஏ.கே.கரீம், மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் நஸ்ருதீன், மாநிலச் செயலாளர்கள் ஷபீக் அஹம்மது, ஹமீது ஃப்ரோஜ், நஜ்மா பேகம், வழ.ஹஸ்ஸான், பாஸ்டர் மார்க், மாநில பொருளாளர் முஸ்தபா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். மேலும், இந்த கூட்டத்தில் மண்டல தலைவர்கள், செயலாளர்கள், மகளிர் அணி, வர்த்தகர் அணி, வழக்கறிஞரணி, எஸ்டிடியூ தொழிலாளர் அணி உள்பட அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல், நடப்பு அரசியல் சூழல்கள் மற்றும் பல்வேறு விசயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

*தீர்மானம் 1:*

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், நன்னிலம் தொகுதியில் போட்டியிட்ட எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் அவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், தீவிரமாகக் களப்பணியாற்றிய எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும், கூட்டணி கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. மேலும், தமிழகம் முழுவதும் கூட்டணிக்காக 234 தொகுதிகளிலும் தேர்தல் பணியாற்றிய கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் இக்கூட்டம் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறது.

*தீர்மானம் 2:*

தமிழகத்தில் புதிய அரசை அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கும், மாண்புமிகு தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உயர்திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கும் இந்த கூட்டம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

புதிய அரசு, அரசியல் காழ்ப்புணர்வு மற்றும் பாரபட்சமின்றி, தமிழகத்தின் நலன், மக்கள் வாழ்வாதாரம், கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மாநில உரிமைகளைப் பாதுகாப்பதை முன்னிறுத்திச் செயல்பட வேண்டும். முந்தைய அரசின் அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும் தொய்வின்றித் தொடர வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

மேலும், தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்; குறிப்பாக, நடப்பு மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். அத்துடன், தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி மகளிர் உரிமைத் தொகையை ரூ. 2,500-ஆக உயர்த்தி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

*தீர்மானம் 3:*

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசின் அமைச்சரவையில், இதுவரை 9 அமைச்சர்கள் பதவியேற்றுள்ள போதிலும், அவர்களுக்கு இன்னும் இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருப்பது அரசு நிர்வாகப் பணிகளில் தேக்கத்தையும், மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தொய்வையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, நிர்வாக நடைமுறைகள் தடையின்றி நடைபெற ஏதுவாக, பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கு உடனடியாக இலாக்காக்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இக்கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

*தீர்மானம் 4:*

பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைத்தல், மீண்டும் 'வீட்டிலிருந்தே பணிபுரியும்' முறையைப் பின்பற்றுதல், ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்த்தல் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களைக் குறைத்தல் போன்ற பிரதமரின் அண்மைய ஆலோசனைகள் பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, லாக்டவுன் போன்றதொரு நிலையை மீண்டும் பின்பற்றச் சொல்வது போன்ற அரசின் இந்த அறிவுறுத்தல்கள், நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறதோ என்ற ஐயத்தை நடுத்தர வர்க்கத்தினரிடையே விதைத்துள்ளன.

இஸ்ரேல்-அமெரிக்காவின் ஈரான் மீதான போர் உள்ளிட்ட சர்வதேசச் சூழலால் இந்தியாவிற்குப் பாதிப்பில்லை என்று கூறிவிட்டு, தற்போது மக்களின் நுகர்வுப் பழக்கவழக்கங்களில் இத்தகையக் கட்டுப்பாடுகளைக் கோருவது முரணாக உள்ளது. எனவே, நாட்டின் உண்மையான நிதி நிலை குறித்து நிலவும் அச்சத்தைப் போக்க, ஒன்றிய அரசு உடனடியாக ஒரு தெளிவான 'வெள்ளை அறிக்கை' வெளியிட வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

*தீர்மானம் 5:*

தமிழகச் சிறைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாடும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யத் தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும். தற்போது அவர்களின் பரோல் காலம் முடிந்து மீண்டும் சிறை செல்லும் நிலை உருவாகியுள்ளதால், சிறைவாசிகளின் குடும்பத்தினர் பெரும் கவலையில் உள்ளனர். எனவே, பேரறிவாளன் வழக்கை முன்னுதாரணமாகக் கொண்டும், இவர்களுக்கும் உடனடியாக நீண்டகாலப் பரோல் வழங்கிடவும், எவ்விதப் பாரபட்சமுமின்றி இவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

08/05/2026

வாழ்த்துகள்..!

12 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு SDPI கட்சியின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தேர்வில் தேர்ச்சியை தவறவிட்ட மாணவர்களுக்கு அவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ள நிலையில், மனந்தளராமல் தேர்ச்சிக்காக அவர்கள் மீண்டும் முயற்சிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

-முகம்மது முபாரக்
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு.

 #உழைப்போம் #ஒன்றிணைவோம் #உரிமையை_வென்றெடுப்போம்சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் SDTU தொழிற்சங்கம் திண்டுக்கல் மேற்கு ...
01/05/2026

#உழைப்போம்
#ஒன்றிணைவோம்
#உரிமையை_வென்றெடுப்போம்

சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் SDTU தொழிற்சங்கம் திண்டுக்கல் மேற்கு மாவட்டம்
#கீரனூர் நகர சார்பாக
கொடியேற்றும் நிகழ்ச்சி, உறுதிமொழி ஏற்பு, இனிப்பு வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள்
நடைப்பெற்றன..

SDTU கீரனூர் நகரம்
திண்டுக்கல் மேற்கு மாவட்டம்

 #உழைப்போம் #ஒன்றிணைவோம் #உரிமையை_வென்றெடுப்போம்சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் SDTU தொழிற்சங்கம் திண்டுக்கல் மேற்கு ...
01/05/2026

#உழைப்போம்
#ஒன்றிணைவோம்
#உரிமையை_வென்றெடுப்போம்

சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் SDTU தொழிற்சங்கம் திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பாக #பழனியில்
கொடியேற்றும் நிகழ்ச்சி, உறுதிமொழி ஏற்பு, இனிப்பு வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள்
நடைப்பெற்றன..

A.M.பாசித்
SDTU மாவட்ட தலைவர்
திண்டுக்கல் மேற்கு மாவட்டம்

26/04/2026

Address

Palani

Telephone

+917845619554

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI திண்டுக்கல் மேற்கு மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share