Kavarappattu

Kavarappattu Life is nothing

28/09/2016

21 வயது முடிந்த வேட்பாளர்!!!

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் அந்த தேர்தலுக்கு தொடர்புடைய ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். பெயர் இடம் பெற்றுள்ள வார்டு தொடர்புடைய தேர்தலில் மட்டுமே அவர் வாக்களிக்க தகுதியுடையவராவார். வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று வேட்பாளர் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

28/09/2016

தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன?

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ள தேர்தல் நடத்தை விதிகள் என்னென்ன என்பதைப் தெரிந்து கொள்வோம்...

தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, தேர்தல் முடியும் வரை, ஆட்சியில் உள்ள அரசு புதிய நலத் திட்டங்களை அறிவிக்கக் கூடாது.

அரசு ஊழியர்களையோ, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளையோ பணியிட மாற்றம் செய்யக் கூடாது.

பதவி உயர்வும் அளிக்கக் கூடாது. வேறு வழியில்லை என்றால், தேர்தல் ஆணைய ஒப்புதல் பெற்ற பிறகு இடமாற்றமோ, பதவி உயர்வோ வழங்கலாம்.

அரசு விழாக்களில் அமைச்சர்கள் வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது.

அரசு ஊழியர்களையோ, அரசு வாகனங்களையோ பரப்புரைக்கு பயன்படுத்தக் கூடாது.

பொது மைதானங்கள், ஹெலிபேட் போன்றவற்றைப் பயன்படுத்த அனுமதிப்பதில் கட்சி பேதம் பார்க்கக் கூடாது. வாக்குச்சாவடிக்கோ, வாக்கு எண்ணும் இடத்திற்கோ அமைச்சர்கள் செல்ல அனுமதியில்லை.

வேட்பாளராகவோ, வாக்காளராகவோ அல்லது கட்சியின் அதிகாரப்பூர்வ ஏஜெண்டாகவோ இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட அந்த இடங்களுக்கு அமைச்சர்கள் செல்லலாம்.

சாதி, மத, மொழி மற்றும் இன ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பரப்புரையில் ஈடுபடக் கூடாது.

கோவில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது.

மற்ற கட்சிகளை கொள்கை, செயல் திட்டங்கள், கடந்த கால செயல்பாடுகள் அடிப்படையில் விமர்சிக்கலாமே தவிர, தனி நபர்களின் சொந்த வாழ்க்கை குறித்த விமர்சனம் கூடாது.

மற்ற கட்சிகளின் பரப்புரைக் கூட்டங்களில் குழப்பம் விளைவிக்கக் கூடாது.

அனுமதி பெறாமல் தனியார் இடங்களைப் பரப்புரைக்கு பயன்படுத்தக் கூடாது.

தொலைக்காட்சி, கேபிள் நெட்வொர்க், ரேடியோ போன்றவற்றில் பரப்புரை விளம்பரங்களை வெளியிட, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 3 நாட்களுக்கு முன்னதாகவே தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, வாக்குச்சாவடிக்குச் செல்ல போக்குவரத்து வசதி செய்து தருவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.

28/09/2016

Demographics

As per the 2001 census, Kavarapattu had a total population of 1232 with 558 males and 674 females. The s*x ratio was 1208. The literacy rate was 60.9.

26/09/2016

உள்ளாட்சி தேர்தல் !!!!!!!

தமிழகத்தில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 21-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இத்தகவலை சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன் அறிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, மூன்றாம் நிலை நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான நேரடித் தேர்தல்கள் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும்.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 91,098 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனுக்கள் நாளை (26.09.2016) முதல் பெறப்படும். நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும்.
வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் அக்டோபர் 3-ம் தேதி. தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் அக்டோபர் 4-ம் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 6-ம் தேதியே கடைசி.
வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21-ல் காலை 8 மணிக்கு தொடங்குகிறது. உள்ளாட்சித் தேர்தலில் 4 விதமான வாக்குச்சீட்டுகளை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நேரடி தேர்தல் அனைத்தையும் அக்டோபர் 26-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 5.8 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர்.
தேர்தல் பணிகளை பார்வையிட 37 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
நேரடித் தேர்தலுக்குப் பின்னர் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் என 13,362 பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 2-ம் தேதி மேயர் தேர்தல் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இரங்கள் செய்தி!!!!காவாரப்பட்டு தெற்கு தெரு தெ.வீரப்பன் ஒளிவிராயர் மகனும், ரெ.மைனர் ஒளிவிராயர்,(மூ.ஊ.ம.தலைவர்),ரெ.நாகேஷ் ...
03/02/2016

இரங்கள் செய்தி!!!!

காவாரப்பட்டு தெற்கு தெரு தெ.வீரப்பன் ஒளிவிராயர் மகனும், ரெ.மைனர் ஒளிவிராயர்,(மூ.ஊ.ம.தலைவர்),ரெ.நாகேஷ் என்கின்ற நாகராஜன் ஒளிவிராயர், ரெ.முகிலரசன் ஒளிவிராயர்
( ஊ .ம.தலைவர்),இவர்களின்
தகப்பனாரான,வீ.ரெத்தினம், ஒளிவிராயர் அவர்கள் இன்று காலை இயற்க்கை ஏய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்...

!!!!!கண்ணீர் அஞ்சலி!!!!

மாயா மாயா மாயாவே-நீர்
மறைந்த துயரம் ஓயாவே!
காயாய் உதிர்ந்து போனீரே-அந்தோ
காலன் கைவசம் ஆனீரே!
தேயா பிறையாய் மனவானில்-என்றும்
தெரிய வாழ்வாய் குணவானே
சாயா குன்றே பதிவுலகில்-ஏனோ
சாய்ந்தாய் நிலைப்பது எதுவுலகில்?
- உமக்கு
கண்ணீர் அஞ்சலி செய்கின்றோம்!

06/05/2014

Kavarapattu is a village in the Orathanadu taluk of Thanjavur district, Tamil Nadu, India.

22/04/2014

கோஷ்டி பூசல்!!!

பத்து பேர் கலந்து நடத்தும் சீட்டை தான் தலைமை பண்புக்கு வரமுடியலைன்னு இரண்டு பேரை கூட்டிட்டு ஒடுவன்களே அது கோஷ்டி பூசல்!

பத்து பேர் சேர்ந்து பேனர் வைத்தால்
இரண்டு பேர் பிரிந்து சென்றால் அது கோஷ்டி பூசல்!

நல்ல இருந்த நண்பர்களை குசு குசு சொல்லி பிரித்து விடுவார்களே !!
அதுவும் கோஷ்டி பூசல்!

Note : உண்மையாக நடந்தது

09/04/2014
சப்பாத்து - தற்காலத்தில் ஷூ எனப்படும் இனத்தைச் சேர்ந்த காலணிக்கு இலங்கையில் போர்த்துக்கீச மொழிச் சொல்லான சப்பாத்து (Sapa...
09/04/2014

சப்பாத்து - தற்காலத்தில் ஷூ எனப்படும் இனத்தைச் சேர்ந்த காலணிக்கு இலங்கையில் போர்த்துக்கீச மொழிச் சொல்லான சப்பாத்து (Sapato) என்ற பெயர் புழக்கத்தில் உள்ளது.

காலணி என்பது மாந்தர்கள் பல தேவைகளுக்காக காலில் அணியப்படும் ஒரு கால் காப்புடை ஆகும். மாந்தர்கள் நடக்கும் பொழுதும், ஓடும் ...
09/04/2014

காலணி என்பது மாந்தர்கள் பல தேவைகளுக்காக காலில் அணியப்படும் ஒரு கால் காப்புடை ஆகும். மாந்தர்கள் நடக்கும் பொழுதும், ஓடும் பொழுதும், தம் கால்களில் கல்லும் முள்ளும் குத்தாமல் இருக்கவும், சுடு வெப்பத்தில் இருந்தும், கடுங்குளிரில் மற்றும் பனியில் இருந்தும் காக்கவும், அழகு உள்ளிட்ட சிறப்பான பிற தேவைகளுக்காவும் காலில் அணியப்படும் ஒரு கால் காப்புடை ஆகும். காலணிகளில் எளிதாக அணிந்து கொள்ளவும் கழற்றவும் வசதியான செருப்பு, மிதியடி போன்றவைகளும், புறங்கால்களையும் குதி கால்களையும் மூடியிருக்கும் ஷூ , பூட்ஸ் முதலிய கால்பூட்டணிகளும், கணுக்கால் வரையும் மூடியிருக்கும் கால்பூட்டணிகளும், கெண்டைக்கால், முழங்கால் வரையும் மூடியிருக்கும் கால்பூட்டணிகளும் உண்டு. கால்பூட்டணிகள் பெரும்பாலும் துணியால் அல்லது தோலால ஆன வாரினால் கட்டி, முடிச்சிட்டு ,பூட்டப்பட்டிருக்கும். பல்வேறு இடச் சூழல்களுக்கும், தொழில்களுக்கும், தட்ப வெப்பத் தேவைகளுக்கும் ஏற்ப காலணிகள் பல வகையாகும்

Address

Kavarappattu
Orathanad
614625

Telephone

96009383133

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kavarappattu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share