Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship

Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship THE OFFICIAL FACEBOOK PAGE OF SHARON GLOBAL REVIVAL MINISTRIES & NAVI MUMBAI PRAYER FELLOWSHIP

Brief Information about Dr. R S A Williams – Founder & President of SGRM/ NMPF
(An anointed servant of God carrying Lord’s word in Tamil & English across the Globe)

- Motivational Speaker to Global Audience on Management Subjects (with Biblical base)
- Anointed Speaker on Evangelism and Spiritual Topics
- Faculty in Seminars/ Retreats and Conventions with the guidance of Holy Sp

irit
- Management Expert specialised in Global Logistics

Spiritual Background and Services to the Lord with Global Span Coverage
• Commenced Lord’s ministry during the year 1988
• Celebrating completion of the 25th year of ministry in this blessed year 2013
• Balanced the ministry with Corporate Career judiciously for 20 years and entered into full time ministry during the year 2007 spanning 6 years now (25 years of glorious ministry in His Vineyard). We are into –
• Ministry among corporate personnel/ politicians & bureaucrats
• Ministry among churches across nations without denominational barrier
• Miracle all night prayer ministry
• Bible study and seminar ministry
• Ministry of personal evangelism
• Ministry among families/ women/ youth & children
• E-mail ministry
• E-magazine ministry
• Television ministry
• Crusade ministry
• Hospital ministry
• Cottage prayer ministry
• Travelled and ministered in more than 17 countries
• Carrying Lord’s word across India and around the Globe with Love and Compassion

Educational Background
• Bachelors Degree in Law/ Bachelors Degree in Arts
• Masters Degree in Business Management
• Masters Degree in Theology
• PG Diploma in Transport Management/ PG Diploma in Personal Management & Industrial Relations
• Honorary Doctorate Degree

Service Background with Industries in India & abroad
• Commenced corporate career with Tata Group immediately after completion of Education and had an opportunity serving with prominent Blue Chip companies by availing more exposure in Logistics field holding designations right from OFFICER to EXECUTIVE DIRECTOR.
• The Industries served are -
Tea Industry
Paper Industry
Steel Industry
Shipping Industry
Logistics Industry
Media Industry
• Served in Belgium (Europe) as a Vice President/ Director Europe Operations for an Indian MNC and travelled extensively around the world spanning more than 16 countries.
• Left worldly job during the year 2007 and serving the Lord within India and across the globe thereafter on a full time basis. Address & Contact Coordinates
..... Presently settled in Mumbai by having base in Kharghar, Navi Mumbai - Maharastra

Dr. R S A Williams - Founder & President
Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship
C-1002, Tharwani Heritage, Sector 7, Kharghar, Navi Mumbai – 410 210 Tel. +91 22 2774 9200
Mob. +91 99672 28488
E-mail: [email protected] [email protected]
FB: www.facebook.com/sgrm.nmpf

🟢⚪🟢 2019-வது நாளின் காலைத்தியானம் 26/06/2026 !!!இந்த காலைவேளையில், "உன் விண்ணப்பத்தைக் கேட்டேன். உன் கண்ணீரைக் கண்டேன்” ...
26/06/2026

🟢⚪🟢 2019-வது நாளின் காலைத்தியானம் 26/06/2026 !!!

இந்த காலைவேளையில், "உன் விண்ணப்பத்தைக் கேட்டேன். உன் கண்ணீரைக் கண்டேன்” ..... "I HAVE HEARD YOUR PRAYER AND SEEN YOUR TEARS" என்று (2 KINGS) 2 இராஜாக்கள் 20:5-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப்போகிறோம்.

நம் அன்பின் தேவன், நாம் ஊக்கமாய் ஏறெடுக்கிற விண்ணப்பத்தைக் கேட்டு, நாம் வேதனையில் வடிக்கிற கண்ணீரைப் பார்த்து நமக்கு ஆறுதலையும், விடுதலையும் தருகிறார்.

வேதத்திலே மரணத்தருவாயிலிருந்த எசேக்கியா, கர்த்தரை நோக்கி, அழுது விண்ணப்பம் பண்ணியபோது, ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக கர்த்தருடைய வார்த்தை உண்டாகி: “உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்” என்று கூறி, சுகப்படுத்தியதாக இந்தநாளின் தியானபகுதி மூலமாக அறிகிறோம்.

மேலும், குழந்தையில்லாத அன்னாள் "… தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால்… நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்..." என்று மிகவும் அழுது, விண்ணப்பம் பண்ணினாள். கர்த்தர் அவள் கண்ணீரோடு ஏறெடுத்த விண்ணப்பத்தைக் கேட்டு, சாமுவேல் என்ற குழந்தையைக் கொடுத்து ஆசீர்வதித்தார் என 1சாமுவேல் 1-ம் அதிகாரத்தில் பார்க்கிறோம்.

எனவே பிரியமானவர்களே,
நம் தேவைகள் எதுவாயிருந்தாலும், கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்வோம். நாம் தனிமையிலே விண்ணப்பம் செய்யும்போது வடிக்கிற கண்ணீரை நம் அன்பின் தேவன் காண்கிறார். நம் கண்ணீரைத் துடைத்து, நம்மை ஆறுதல்படுத்தி, நம் தேவைகளை சந்திக்கிறார். ஆகவே தைரியமடைவோம்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, தேவனாகிய நீர் எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டு, எங்கள் கண்ணீரைக்கண்டு, எங்களை ஆசீர்வதிப்பீர் என விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே....ஆமென்.

ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488.
WhatsApp- 7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India.

🟠⚪🟠2018-வது நாளின் காலைத்தியானம் 25/06/2026 !!!இந்த காலைவேளையில், “துஷ்டன் இனி உன் வழியாய் கடந்து வருவதில்லை" .… "FOR TH...
25/06/2026

🟠⚪🟠2018-வது நாளின் காலைத்தியானம் 25/06/2026 !!!

இந்த காலைவேளையில், “துஷ்டன் இனி உன் வழியாய் கடந்து வருவதில்லை" .… "FOR THE WICKED SHALL NO MORE PASS THROUGH THEE” என்று (NAHUM) நாகூம் 1:15-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

‘துஷ்டன்’என்பவன் பிறருக்குக் கெடுதல் செய்ய முற்படுபவன். இந்த நாளிலும், நம் பெயரை கெடுத்துப்போட நினைக்கிற மற்றும் நம் வாழ்க்கையை அழிக்க முயற்சிக்கிற துஷ்டன், ‘இனி நம் வழியாய் கடந்து வருவது இல்லை’ என்று கர்த்தர் கூறுகிறார்.

வேதத்திலே ராஜாவாகிய அகாஸ்வேரு, ஆமான் என்பவனை உயர்த்தி வைத்திருந்தார். அனைவரும் ஆமானை வணங்கி நமஸ்கரித்தபோதும் மொர்தெகாய், அவனை வணங்கவுமில்லை. நமஸ்கரிக்கவுமில்லை.
ஆகவே ஆமான், மொர்தெகாயை மாத்திரமல்ல, ராஜ்யமெங்கும் இருக்கிற யூதரையெல்லாம் சங்கரிக்க வகை தேடினான்.

ராஜாத்தியாகிய எஸ்தர், ஆயத்தம் செய்த விருந்தில், ராஜாவும், ஆமானும் பந்தியிலிருக்கையில் எஸ்தர், ராஜாவைப் பார்த்து: ‘எங்களை அழித்துக் கொன்று நிர்மூலமாக்கும்படி நானும் என் ஜனங்களும் விற்கப்பட்டுவிட்டோம்’ என்று முறையிட்டதாகப் பார்க்கிறோம்.

உடனே ராஜா, எஸ்தரைப் பார்த்து: ‘இப்படிச் செய்ய துணிகரங் கொண்டவன் யார்?’ என்றான். அப்பொழுது எஸ்தர்: ‘சத்துருவும் பகைஞனுமாகிய அந்த துஷ்ட மனிதன் இந்த ஆமான்தான்’ என்று சொன்னாள்.

ராஜா உக்கிரத்தோடே மொர்தெகாய்க்காக, ஆமான் ஆயத்தம்பண்ணி வைத்திருந்த தூக்குமரத்தில், ஆமானைத் தூக்கிப்போட கட்டளயிட்டபடியே அவனை தூக்கிப்போட்டார்கள் என்று எஸ்தர் 7-ம் அதிகாரத்தில் பார்க்கிறோம்.

எனவே பிரியமானவர்களே, நமக்கு எதிராகப் போரிட்ட துஷ்டமனிதர்களை, நாம் காணமுடியாத அளவுக்கு கர்த்தர் சங்கரித்துப் போடுவார் என்பது நிச்சயம். ஆகவே தைரியமடைவோம்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, எந்த ஒரு துஷ்டனும் இனி எங்கள் வாழ்வின் வழியில் கடந்து வராதபடி பாதுகாத்து வழிநடத்தும்படி ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே....ஆமென்.

ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும் 24/7 - 9967228488.
WhatsApp- 74004 72200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India.

🔵⚪🔵2017-வது நாளின் காலைத்தியானம் 24/06/2026 !!!இந்த காலைவேளையில்,  “என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், அவ...
23/06/2026

🔵⚪🔵2017-வது நாளின் காலைத்தியானம் 24/06/2026 !!!

இந்த காலைவேளையில், “என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், அவர் எனக்கு உத்தரவு அருளினார்" .… "IN MY DISTRESS I CALLED TO THE LORD, AND HE ANSWERED ME”என்று (JONAH) யோனா 2:2-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

‘நெருக்கம்’ என்பது ஒருவரின் கஷ்டம், அழுத்தம், சிரமம், பிரச்சனை போன்றவற்றைக் குறிக்கிறது. யோனா, தன் நெருக்கத்தின் வேளையில், இந்தநாளின் தியானபகுதியை கூறியதாக நாம் பார்க்கிறோம்.

யோனா தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல், தேவனுடைய சமுகத்தினின்று விலகி ஓடிவிட முயற்சித்ததினால், இராப்பகல் மூன்றுநாள் மீன் வயிற்றிலே இருக்க நேரிட்டது.

அப்படிப்பட்டதான நெருக்கத்திலே யோனா, தன் தவறை உணர்ந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் உத்தரவு அருளினார். கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட, அது யோனாவைக் கரையிலே கக்கிப்போட்டது. இவ்விதமாக அவன் விடுவிக்கப்பட்டான்.

நம் வாழ்வில், நாம் அனுபவிக்கும் நெருக்கங்கள் கர்த்தரால் அனுமதிக்கப்பட்டதாகவோ அல்லது நமது மீறுதல்களினிமித்தமாகவோ வந்திருக்குமானால், நாம் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவோம். அவர் நமக்கு செவிகொடுத்து, நம்மை நிச்சயமாய் விடுவிப்பார்.

ஆம், சங்கீதக்காரன்,“நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்” என்று சங்கீதம் 118:5-ல் கூறியுள்ளார்.

எனவே பிரியமானவர்களே,
நமது நெருக்கத்தின் வேளையிலே, கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவோம். அவர் நமக்கு விடுதலையைக் கட்டளையிடுவார்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, எங்களுடைய நெருக்கத்தின் வேளைகளில் நாங்கள் கர்த்தராகிய உம்மை நோக்கிக் கூப்பிட்டால், நீர் உத்தரவு அருளுவீர் என்பதை விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே....ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7 - 9967228488.
WhatsApp- 74004 72200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India.

🟢⚪🟢2016-வது நாளின் காலைத்தியானம் 23/06/2026 !!!இந்த காலைவேளையில்,  “உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும்" .… "YOUR H...
22/06/2026

🟢⚪🟢2016-வது நாளின் காலைத்தியானம் 23/06/2026 !!!

இந்த காலைவேளையில், “உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும்" .… "YOUR HEALING SHALL SPRING FORTH SPEEDILY”என்று (ISAIAH) ஏசாயா 58:08-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

‘சுகவாழ்வு’ என்பது சரீரம், மனம் மற்றும் ஆன்மீக ரீதியாக ஒருவரின் வாழ்க்கையில் திருப்தி மற்றும் மகிழ்ச்சியை அடைவதாகும். இந்தநாளிலும் நமது சரீரத்தில் சுகம், உள்ளத்தில் ஆனந்தம், ஆவியில் களிகூருதல் என நிச்சயமாகவே நம்முடைய சுக வாழ்வு துளிர்க்கப் போகிறது.

வேதத்திலே, 12 வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ, தனக்குண்டான எல்லாவற்றையும் செலவழித்தும் சற்றும் குணமடையாத நிலையில், இயேசு கிறிஸ்துவைக் குறித்து கேள்விப்பட்டாள். இயேசு கிறிஸ்துவின் வஸ்திரத்தைத் தொட்டால் நான் சுகமாவேன் என்ற விசுவாசத்தோடு அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். உடனே அவள் அற்புத சுகம் பெற்றாள்.

இயேசு கிறிஸ்துவோ, தன்னிடம் இருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்து, அவளைப் பார்த்து: “மகளே உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடே போய், உன் வேதனை நீங்கி சுகமாயிரு என்றார்" என்பதாக மாற்கு 5:34-ல் பார்க்கிறோம். அந்த ஸ்திரி சுகத்தை மட்டுமல்ல, இரட்சிப்பு, சமாதானம் இன்னும் நல்வாழ்வையும் பெற்றுக் கொண்டாள்.

நம் வாழ்விலும், ஆரோக்கியம் மற்றும் பெலனை இழந்து காணப்படுவோமானால், மீண்டும் பெற்றுக்கொள்ள போகிறோம். உடைந்திருக்கிற நம் குடும்பங்கள் ஒன்றாய் இணைந்து அங்கே சுகவாழ்வு ஆரம்பிக்கப் போகிறது.

எனவே பிரியமானவர்களே, கர்த்தர் எல்லாவற்றையும் புதிதாக்கி நமது சுக வாழ்வைச் செழிக்கச் செய்ய வல்லவராயிருக்கிறார் என்பதை விசுவாசிப்போம். அதைப் பெற்று, மகிழ்ச்சியோடு வாழுவோம்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, எங்களுடைய சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும் என்பதை விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே....ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7 - 99672 28488.
WhatsApp- 74004 72200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India.

🟣⚪🟣2015-வது நாளின் காலைத்தியானம் 22/06/2026இந்த காலைவேளையில்,  “தேவனாகிய கர்த்தாவே…. வாக்குத்தத்தம்பண்ணின கிருபைகளை நினை...
21/06/2026

🟣⚪🟣2015-வது நாளின் காலைத்தியானம் 22/06/2026

இந்த காலைவேளையில், “தேவனாகிய கர்த்தாவே…. வாக்குத்தத்தம்பண்ணின கிருபைகளை நினைத்தருளும்" .… "REMEMBER THE MERCIES YOU HAVE PROMISED”என்று (2 CHRONICLES) 2 நாளாகமம் 6:42-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

சாலொமோன் ராஜா, தேவனுடைய ஆலயத்தைக கட்டி முடித்து, அர்ப்பணிக்கும் போது ஏறெடுத்த ஜெபத்தின் ஒரு பகுதியாக இந்தநாளின் தியானபகுதி அமைகிறது.

தாவீதுக்கு தேவன் செய்த நன்மைகளையும், கொடுத்த வாக்குறுதிகளையும் நினைவுகூர்ந்து, அதே கிருபையை தனக்கும், தனது மக்களுக்கும் செய்யுமாறு சாலொமோன் மன்றாடுகிறார்.

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிற கர்த்தர், நமக்கு கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் மாறாதவை. அவைகளை மறவாமல், நினைவில் வைத்திருக்கிறார்.

யாத்திராகமம் 2:24,25-ல் "தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, தாம் ஆபிரகாமோடும், ஈசாக்கோடும், யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார். தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்" என்று பார்க்கிறோம்.

நம் வாழ்வின் கஷ்டத்திலும், வேதனையிலும் தாங்கமுடியாமல் விடும் பெருமூச்சை கர்த்தர் கவனித்து, நமது நிலையை புரிந்து, தாவீதுக்கு அருளின அனைத்து ஆசீர்வாதங்களையும் நமக்குத் தந்து, நம்மையும், நம் தலைமுறைகளையும் ஆசீர்வதிக்கிறார்.

எனவே பிரியமானவர்களே, கர்த்தருடைய வாக்குறுதிகளை உறுதியாய் பற்றிக்கொள்வோம். நிச்சயமாகவே கர்த்தர் நம்மை நினைத்தருளி ஆசீர்வதிப்பார்.*

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, தேவனாகிய கர்த்தாவே… உம்முடைய தாசனாகிய தாவீதுக்கு வாக்குத்தத்தம் பண்ணின கிருபைகளை நினைத்து, அதின்படியே எங்களையும் ஆசீர்வதித்து வழிநடத்தும்படி ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே....ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7 - 9967228488.
WhatsApp- 74004 72200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India.

21/06/2026

⚫⚪⚫ 2014- வது நாளின் காலைத்தியானம் 21/06/2026 !!!இந்த  ஓய்வுநாளின் காலைவேளையில், "உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும்,...
20/06/2026

⚫⚪⚫ 2014- வது நாளின் காலைத்தியானம் 21/06/2026 !!!

இந்த ஓய்வுநாளின் காலைவேளையில், "உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், …. நித்திய பேரின்பமும் உண்டு" ...... "YOU WILL FILL ME WITH JOY IN YOUR PRESENCE,…. WITH ETERNAL PLEASURES” என்று (PSALM) சங்கீதம் 16:11-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

உலக ஆஸ்தியோ மற்றும் மனித உறவுகளோ தரும் சந்தோஷம் தற்காலிகமானது. ஆனால், கர்த்தருடைய சமுகத்தில் வரும்போது, அவைகளுக்கு அப்பாற்பட்ட விதத்திலே, பரிபூரண ஆனந்தமும், நித்தியபேரின்பமும் நம் உள்ளத்தில் உருவாகிறது.

‘பரிபூரண ஆனந்தம்' என்பது கர்த்தரின் பிரசன்னத்தில் கிடைக்கும் உண்மையான, எந்தவித குறையுமில்லாத நூறு சதவீதம் முழுமையான மகிழ்ச்சியாகும்.

‘நித்திய பேரின்பம்’ என்பது அவருடைய வலது பாரிசத்தில் கிடைக்கும் முடிவில்லாத என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் பேரின்பமாகும்.

அனுதினமும் வேதம் வாசித்து, அவர் சமுகத்தில் அமர்ந்து ஜெபித்து, நித்தியத்திற்குரிய மேலானவைகளைத் தேடும்போது, உலக கவலை, பயம் மற்றும் துக்கம் மறைந்து போகிறது. ஆறுதல், பாதுகாப்பு மற்றும் சந்தோஷம் உண்டாகிறது.

ஆகவேதான் "… அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்" என்று சங்கீதம் 105:4-ல் மூலமாக அறிவுறுத்தப்படுகிறோம்.

எனவே பிரியமானவர்களே, இந்த ஓய்வுநாளிலும் "மகிழ்ச்சியோடு கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்த சத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்" என்று சங்கீதம் 100:2-ல் கூறப்பட்டபடி பரிசுத்த ஆலயத்திற்கு கடந்து சென்று, உண்மையாய் கர்த்தரை ஆராதிப்போம். நிச்சயமாகவே அளவில்லாத நித்திய மகிழ்ச்சி நம் உள்ளத்தில் உண்டாகும்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, கர்த்தராகிய உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், நித்திய பேரின்பமும் உண்டு என்பதை விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே.... ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7-9967228488
WhatsApp 7400472200.

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

🟤⚪🟤 2013-வது நாளின் காலைத்தியானம் 20/06/2026 !!!இந்த காலைவேளையில், “உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்க...
19/06/2026

🟤⚪🟤 2013-வது நாளின் காலைத்தியானம் 20/06/2026 !!!

இந்த காலைவேளையில், “உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்” ..... "YOUR BASKET AND YOUR KNEADING BOWL WILL BE BLESSED" என்று (DEUTERONOMY) உபாகமம் 28:5-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

இங்கு 'கூடை' என்பது, இஸ்ரவேல் ஜனங்கள் அறுவடை செய்வதற்கு சுமந்து செல்லும் கலத்தைக் குறிக்கிறது. 'தொட்டி' என்பது அப்பம் செய்வதற்கு மாவு, தண்ணீர், எண்ணெய் ஆகியவற்றை கலந்திடும் கலத்தைக் குறிக்கிறது.

அதாவது, நமது அன்றாட உழைப்பால் சேர்க்கப்படும் செல்வத்தையும், வருமானத்தையும் மட்டுமல்ல, நமது அன்றாட உணவையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார். அப்போது, நம் வீட்டில் எந்தவொரு குறையும் இல்லாமல் மனநிறைவு காணப்படும்.

"உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்” என்று நீதிமொழிகள் 3:10-ல் பார்க்கிறோம்.

இயேசு உலகத்தில் ஊழியஞ்செய்த நாட்களில், ஒரு சிறுவனிடம் இருந்த ஐந்து வாற்கோதுமை அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு, ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஜனங்களை போஷித்தார் என்றும், மீதியான துணிக்கைகளினாலே பன்னிரண்டு கூடைகளை நிரப்பினார்கள் என்றும் யோவான் 6:5 முதல் 14 வரை பார்க்கிறோம்.

அந்தச் சிறிய உணவு எப்படி அனைவருக்கும் போதுமானதாக இருந்ததோ, அப்படியே நமது திறமைகள் அல்லது வளங்கள் குறைவாக இருந்தாலும், அதைக்கொண்டு கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.

எனவே பிரியமானவர்களே, நம்மிடம் உள்ள கொஞ்சத்தை கர்த்தர் கரத்தில் ஒப்படைப்போம். நாம் திருப்தியடைவது மட்டுமல்ல, மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து, அதிலிருந்து மீதமெடுக்கவும் கர்த்தர் உதவி செய்வார்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே,
இந்த நாளின் வார்த்தையின்படியே, எங்கள் கூடையும், மாப்பிசைகிற எங்கள் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் என்பதை விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப்பிதாவே….
ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7-9967228488
WhatsApp 7400472200.

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

🔵⚪🔵 2012-வது நாளின் காலைத்தியானம் 19/06/2026 !!!இந்த காலைவேளையில், “ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்...
18/06/2026

🔵⚪🔵 2012-வது நாளின் காலைத்தியானம் 19/06/2026 !!!

இந்த காலைவேளையில், “ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்” ..... "WHOEVER IS KIND TO THE POOR LENDS TO THE LORD” என்று (PROVERBS) நீதிமொழிகள் 19:17-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

வானத்தையும் பூமியையும், சகல உலகத்தையும் படைத்த சர்வவல்ல தேவன், யாரிடமும் கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், நாம் ஒரு ஏழைக்குச் செய்யும் உதவியை, நேரடியாக அவரே பெற்றுக்கொண்டதாகக் கருதி, அதை நம் கணக்கில் வைத்து, அதை நமக்கு திரும்பக் கொடுப்பார்.

நாம் ஒவ்வொருவரும், எனக்கு, என் குடும்பம், என் காரியம் என்ற சுயத்தோடு வாழாதபடி ஏழைகளுக்கு இரங்குவோம். அப்பொழுது நாம் செய்வதெல்லாம் வாய்க்கும். நம் தலைமுறை ஆசீர்வாதமாக இருக்கும்.

“வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும். அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்” என்று சங்கீதம் 112:9-ல் வாசிக்கிறோம்.

ஆயக்காரருக்குத் தலைவனாயிருந்த சகேயு, இயேசுவை நோக்கி: “ஆண்டவரே என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன்”என்றான். இயேசு அவனை நோக்கி: “இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது” என்று சொல்லி சகேயு வீட்டிற்கு சென்று அவனை ஆசீர்வதித்தார்.

நம் பொருளாலும், பணத்தாலும், சரீர பிரயாசத்தினாலும் ஏழை எளியவருக்கு தாராள மனதுடன் உதவி செய்வோம். நாம் கொடுப்பது அற்பமாகத் தோன்றினாலும், கர்த்தர் நமக்கு அதை திரும்பக் கொடுக்கும்போது, பெரிதான விளைச்சலை நம் வாழ்வில் காண்போம்.

எனவே பிரியமானவர்களே, ஏழைகளுக்கு இரங்குவோம். அதற்கேற்ற பலனை கர்த்தரிடமிருந்து பல மடங்கு பெற்று வாழ்ந்திருப்போம்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, நாங்கள் ஏழைகளுக்கு இரங்கிக் கொடுத்த அனைத்தையும் உம்மிடத்திலிருந்து திரும்ப பெற்றுக்கொள்வோம் என விசுவாசிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப்பிதாவே…. ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7-9967228488
WhatsApp 7400472200.

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

🟢⚪🟢 2011-வது நாளின் காலைத்தியானம் 18/06/2026 !!!இந்த காலைவேளையில், "நீர் எனக்குத் துணையாயிருந்ததால், உமது செட்டைகளின் நி...
18/06/2026

🟢⚪🟢 2011-வது நாளின் காலைத்தியானம் 18/06/2026 !!!

இந்த காலைவேளையில், "நீர் எனக்குத் துணையாயிருந்ததால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்"...... “BECAUSE YOU ARE MY HELP, I SING IN THE SHADOW OF YOUR WINGS” என்று (PSALM) சங்கீதம் 63:7-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

தாவீது, தன் வாழ்க்கையில் நெருக்கத்தின் பாதையில்
செல்லும் போதெல்லாம், கர்த்தருடைய செட்டைகளின் நிழலை நாடினவன். கர்த்தர் அவருக்கு துணையாயிருந்ததினால், அவரது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன் என்று கூறுகிறார்.

ஒரு பறவை எப்படி தன் குஞ்சுகளை தன் சிறகுகளால் மூடி, செட்டையின் மறைவிலே வைத்து பத்திரமாக பாதுகாக்குமோ அப்படியே, நம் தேவன் நம்மையும் பாதுகாக்கிறார். அப்பொழுது நாம் அகமகிழ்ந்து களிகூருவோம்.

ஆம், சங்கீதம் 91:4-ல் “அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்” என்று வாசிக்கிறோம்.

வேதத்திலே, ரூத் சரித்திரம் 2:12-ல் “…. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக” என்று போவாஸ், ரூத்தை பார்த்து சொன்னவண்ணமாக ரூத்துடைய வாழ்விலே மறுமலர்ச்சி, களிப்பு மற்றும் செழிப்பு உண்டாயிற்று.

தாவீது "எனக்கு இரங்கும், தேவனே,… விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்” என்று விண்ணப்பம் பண்ணினதாக சங்கீதம் 57:1-ல் பார்க்கிறோம்.

எனவே பிரியமானவர்களே, தேவனுடைய செட்டைகளின் நிழலில், அதன் மறைவில் தஞ்சம் புகுந்து விடுவோம். அப்பொழுது, நம் வாழ்வில் உண்டாகும் பயம் பரவசமாகிறது, அழுகை ஆனந்தக்களிப்பாகிறது.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, கர்த்தராகிய நீர் எங்களுக்கு துணையாயிருப்பதினால், உமது செட்டைகளின் நிழலில் நாங்கள் களிகூரும்படி உதவிசெய்யும். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே.... ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

Address

Navi Mumbai

Telephone

00919967228488

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship:

Share