06/03/2023
*நத்தம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் குறித்து நத்தம் காவல் துறை அறிவிப்பு.*🔊🔊
*திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை நடைபெற இருப்பதால் இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.*
*திண்டுக்கல்லில் இருந்து காரைக்குடி நோக்கி வரும் வாகனங்கள் சேர்வீடு பைபாஸ் மேம்பாலம் வழியே புதுப்பட்டி, பாப்பாபட்டி பிரிவு, ஆவிச்சிபட்டி, சிறுகுடி, பூசாரிபட்டி, சமுத்திராப்பட்டி வந்து நேராக கொட்டாம்பட்டி வழியாக காரைக்குடி செல்லலாம்.*
*மதுரையில் இருந்து நத்தம் நோக்கி வரும் பேருந்துகள் பள்ளபட்டி பைபாஸ் மேம்பாலத்தில் சென்று சேர்வீடு பிரிவு வழியாக நத்தம் பேருந்து நிலையம் வரலாம்.*
_*போக்குவரத்து தடை செய்யப்பட்ட பகுதிகள் விபரம்.*_🚘
*நத்தம் ரவுண்டானா முதல் அம்மன் குளம் வரை*
*நத்தம் ரவுண்டானா முதல் பாப்பாபட்டி பிரிவு வரை*
*நத்தம் ரவுண்டானா முதல் கோவில்பட்டி வழி பள்ளபட்டி பிரிவு வரை*
*என்றும் மக்கள் பணியில்... நத்தம் காவல்துறை*🙏