05/09/2024
அரசுப் பள்ளியில் கஞ்சா போதை உச்சத்தில் அட்டூழியம் செய்த சமூக விரோதிகளை காவல்துறை கைது செய்திடுக, அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவோம் அதனுடைய பாதுகாப்பை உறுதி செய்யவும் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
நாமக்கல் செப்டம்பர் 05/09/2024
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்து 6வது வார்டு அம்பேத்கர் பகுதியில் அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கல்வி பயின்று வரும் நிலையில், பள்ளி போதிய பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ள நிலையில், திங்கட்கிழமை அன்று வழக்கம் போல காலை பள்ளியில் உணவு சமைப்பதற்காக பள்ளியில் உள்ள சமையல் ஊழியர் அரசு பள்ளிக்கு வருகை தந்துள்ளார். அப்பொழுது பள்ளியின் சுவற்றில் சமையலறை உள்ளிட்ட இடங்களில் மனிதக் கழிவால் ஆபாச வார்த்தைகள் எழுதப்பட்டு, பூட்டில் மனித கழிவு பூசப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் இதுகுறித்து எருமைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவமானது இங்கு படிக்கக்கூடிய மாணவர்களையும் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில்
சமூக விரோதிகளின் இந்த செயலுக்கு இந்திய மாணவர் சங்கம் நாமக்கல் மாவட்ட குழு வன்மையான கண்டனங்களை தெரிவித்துள்ளது.இப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்தும், பள்ளிக்கு காவலர்கள் இல்லாமலும் உள்ளது. எனவே காவல்துறை உடனடியாக இந்த சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும், அதேபோன்று மாவட்ட நிர்வாகமும், பள்ளி கல்வித்துறையும் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்த நிலையில் உள்ளதை உடனடியாக சரி செய்ய வேண்டும். இதற்கு மேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இந்திய மாணவர் சங்கம் நாமக்கல் மாவட்ட குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மேலும் சம்பந்தப்பட்ட பள்ளியில் இந்திய மாணவர் சங்க நாமக்கல் ஒன்றிய செயலாளர் தோழர் தனுஷ்,மாவட்டத் தலைவர் தோழர் தங்கராஜ் மற்றும் ஒன்றிய துணைத் தலைவர் தோழர் ராகுல் உள்ளிட்ட மாணவர் சங்க நிர்வாகிகள் உடன் சென்று பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். இப்பள்ளி குறித்து அருகில் உள்ள பொதுமக்களிடம் விசாரிக்கும் போது இந்த ஊர்களில் உள்ள சில இளைஞர்கள் பள்ளி விடுமுறை நாட்களிலும் பள்ளி முடிந்த இரவு நேரங்களிலும் போதை பொருட்கள் பயன்படுத்துவதற்கும் மற்றும் கஞ்சா அடிப்பதற்கும் இந்தப் பள்ளியினை பயன்படுத்தி வருகின்றனர் என கூறியுள்ளனர். இந்த எருமப்பட்டி பகுதிகளில் கஞ்சா விற்பனை சந்து கடைகள் அதிகளவு நடைமுறையில் உள்ளதை கண்டித்து ஜனநாயக அமைப்புகள் ஏற்கனவே பல போராட்டங்கள் நடத்தி உள்ளனர். இதனை அங்குள்ள காவல் துறை வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது.எனவே மாவட்ட காவல்துறை இதனை உடனடியாக சந்துக்கடைகளையும் கஞ்சா விற்பனையும் தடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இப்பள்ளியில் வட்டார தொடக்க பள்ளி கல்வி அலுவலர் அலுவலகமும் உள்ளது. பள்ளிக்கல்வி துறையின் நிர்வாக சீர்கேட்டால் இச்சம்பவம் நடைபெற்று உள்ளது. எனவே வட்டார தொடக்கப்பள்ளி கல்வி அலுவலரையும் மாவட்ட தொடக்கப்பள்ளி அலுவலரையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் நாமக்கல் மாவட்ட குழு சார்பாக இன்று மதியம் 2:30 மணி அளவில் நாமக்கல் CEO அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய தலைவர் நவீன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் தங்கராஜ், மாவட்ட செயலாளர் சரவணன், மாநிலக் குழு உறுப்பினர்கள் மற்றும் யாழினி,ஒன்றிய செயலாளர் தனுஷ் ,துணைத் தலைவர் ராகுல் மற்றும் அபு உள்ளிட்ட மாணவர் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். போராட்டத்தில் எருமப்பட்டி பகுதிகளில் போதை பொருட்கள் மற்றும் கஞ்சா பொருள்கள் ஏராளமாக நடைமுறையில் உள்ளது இதனை காவல்துறை உடனடியாக தடுத்து குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் எருமப்பட்டி காவல் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அரசு பள்ளியில் மீது முழு கவனம் செலுத்த வேண்டும் எனவும் இவர்கள் தனியார் பள்ளிகளில் பணம் பெற்றுக் கொண்டு அரசு பள்ளிகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களா என்ற கேள்வினை இந்திய மாணவர் சங்கம் சார்பாக முன்வைக்கப்படுகிறது என்று போராட்டத்தில் பேசப்பட்டது.
ஆர்ப்பாட்ட முடிந்து மாவட்ட கல்வி முதன்மை அலுவலரின் நேர்முக உதவியாளரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.