25/12/2025
*🚨முதல் முறையே மறுப்போம்; போதை பாதையை தவிர்ப்போம்*
1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல்.... இருவர் கைது.... சிறையில் அடைப்பு.
டிசம்பர் 25 2025,
♦️ கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *டாக்டர்.R.ஸ்டாலின் IPS* அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
♦️அதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சிவசங்கரன் அவர்கள் மேற்பார்வையில் கோட்டார் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் அவர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்
▫️ கோட்டார் கலைநகர் பகுதியைச் சேர்ந்த சுந்தர் சிங் என்பவரது மகன் சுதன் @ நண்டு சுதன்(33)
▫️ அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த உமர் அலி என்பவரது மகன் ஜோனாப் அலி (46)
என்பவர்களிடம் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1 கிலோ 250 கிராம் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.