Thingalnager

Thingalnager Thingalnager (MondayMarket)
Neyyoor PO
629802
Nagercoil
Kanyakumari Dist
Tamilnadu

17/04/2026

எங்கள் வாக்கு - எங்கள் உரிமை —விழிப்புணர்வு அடைந்த மண்டைக்காடு புதூர் மக்கள். இது ஒரு எதிர்ப்பல்ல, இது ஒரு ஜனநாயக விழிப்பு.
பொதுவாக தேர்தல் காலம் என்றாலே யாருக்கு சிறப்போ இல்லையோ மத குருமார்களுக்கு மிக சிறப்பு தான். பொதுவாக அனைத்து கட்சியினரும் மரியாதை நிமித்தமாக சந்திப்பதில் துவங்கி அரசியல் சார்ந்த முக்கிய இரகசிய கூட்டங்கள் வரை அனைத்து நாட்களும் திருவிழா நாட்கள் போன்றது தான். என்ன தான் ஆயர் பேரவை மூலம் குறிப்பிட்ட கட்சியினர் பல கோடிகளை கொடுத்து தமக்கான ஆதரவை திட்டினாலும் அதனை தமக்கெனறும் தமது குடும்பத்தினருக்கென்றும் சுருட்டிக்கொள்ளும் ஆயர் மற்றும் அவரை சுற்றி இருக்கும் சில நபர்களால் பலருக்கு பங்கு கிடைக்கவில்லையாம். இதில் தற்போது ஒரு அரசியல் கட்சி ரூ8000 கூப்பண் அறிவித்துள்ள நிலையில் இந்த கூப்பண் முறை இந்த பாதிரிகளுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டதாம். சில ஆண்டுகளுக்கு முன்பு போகும் இடமெல்லாம் அடிதடிக்கு நடத்துவதில் புகழ் பெற்ற பாதிரி ஒருவர் மறைமாவட்டத்தை எதிர்த்து மாற்று கட்சிக்கு ஆதரவு திரட்டி ஒரு கார் வாங்கினார் என்பது பலரும் அறிந்த ஒன்று. சிலர் பல இலச்சம் மதிப்பீட்டில் தமக்கென தமது குடும்பத்தினர் பெயர்களில் நிலங்கள் வாங்கியும் உள்ளனர். இது தவிர சமீபத்தில் பியூஸ் புடுங்கப்பட்ட அரசியல்வாதி ஏற்பாட்டில் மாம்பழத்தாறு ஆணை அருகே உள்ள கெஸ்ட் ஹவுஸ் மற்றும் சில இரகசிய இடங்களில் நடக்கும் சிறப்பு விருந்துகளில் பங்கெடுப்பதும் வளக்கம்.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் கனிமவள கடத்தல் லாரிகளால் ஏற்படும் விபத்துகள். வெப்பநிலை அதிகரிப்பு எங்கும் எதிலும் லஞ்சமும் ஊழலும் அதிகரித்து மாணவர்களிடயே போதை கலாசாரமும் பாலியல் அத்துமீறல்களும் அதிகரித்துள்ள நிலையில் இதில் எந்தவித பாதிப்புக்குள்ளாகாமல் மக்கள் பணத்தில் ஒய்யாரமாக வாழும் பாதிரியார்கள் அவர்களின் சுயலாபத்துக்காக மக்களின் வாக்குகளை அடமானம் வைத்து குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க கூறியது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் குழித்துறை மாவட்டத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இந்த தேர்தலிலும் இதே நிலை தொடர்வதால் அவர்கள் திருந்தாத பட்சத்தில் சில பாதிரியார்களின் லீலைகளின் வீடியேக்களை வெளியிடவும் அவர்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கும் பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள்.

இந்த நிலையில் எங்கள் வாக்கு - எங்கள் உரிமை —என்ற விழிப்புணர்வுடன் மீனவ மக்கள் எழுந்துள்ளனர். குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்க சொல்லி கோட்டார் மறை மாவட்ட ஆயரும் அருள் பணியாளரும் வாக்கு சேகரித்ததை மக்கள் எதிர்த்து எங்கள் ஓட்டு எங்கள் உரிமை என்று போராடினார்கள்
இந்த உணர்வு ஒவ்வொரு கிராமத்திலும் பரவ வேண்டும்; ஒவ்வொரு வாக்காளரும் தன் சுயமரியாதையை பாதுகாக்க வேண்டும். இந்த புரட்சியை ஏற்படுத்திய மண்டைக்காடு புதூர் கிராமத்தை சேர்ந்த மீனவ சொந்தங்களுக்கு பாராட்டுக்கள் புரட்சியின் தொடக்கம் குமரி மாவட்டம் புதூர் ஊரிலிருந்து துவங்குகிறது 🔥 #நாம்தமிழர்

வாகனம் ஓட்டும் அனைவருக்கும் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்!!1. இந்த பூமியில் மீண்டும் பிறக்க நம் தாயின் வய...
16/04/2026

வாகனம் ஓட்டும் அனைவருக்கும் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்!!

1. இந்த பூமியில் மீண்டும் பிறக்க நம் தாயின் வயிற்றில் 9 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

2. நடக்க 2 ஆண்டுகள்.

3. பள்ளிக்குச் செல்ல 3 ஆண்டுகள்,

4. வாக்களிக்க 18 ஆண்டுகள்,

5. வேலை கிடைக்க 25 ஆண்டுகள்,

6. திருமணம் செய்து கொள்ள 25 முதல் 30 ஆண்டுகள்...
பல சந்தர்ப்பங்களில் நாம் காத்திருக்கிறோம் (காத்திருக்கிறோம்).

ஆனால்....

வாகனங்களை முந்திச் செல்லும்போது... வாகனம் ஓட்டும்போது, ​​30 வினாடிகள் கூட நிறுத்த முடியாது.

நாம் தவறு செய்து விபத்தில் சிக்கினால், மணிக்கணக்கில், நாட்கள், வாரங்கள், மாதங்கள், தேவைப்பட்டால் ஆண்டுகள் மருத்துவமனையில் இருப்போம்.

சில வினாடிகள் கவனக்குறைவால் ஏற்படும் பயங்கரமான விளைவுகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.

முன்னால் இருப்பவர்கள் செல்லட்டும்... பின்னால் இருப்பவர்கள் வசதியாக செல்லட்டும்....

போக்குவரத்து விதிகளை சரியான வேகத்தில், சரியான திசையில் பின்பற்றுங்கள்... தலைக்கவசம் அணியுங்கள்... வாகனங்களை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். மேலும் உங்கள் இலக்கை பாதுகாப்பாக அடையுங்கள்.

உங்கள் குடும்ப உறுப்பினர்களும் குழந்தைகளும் உங்களுக்காக உங்கள் வீட்டில் காத்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்......

கவனமாக இருங்கள்... இனிய பயணம்
❤️💜💜🙏🏻🙏🙏 Arappor - அறப்போர் இயக்கம் Collector Kanniyakumari The Times of India Vikatan EMagazine Polimer News Behindwoods News18 India Today NDTV

இதில் நீங்கள் யார்?உங்கள் விலை என்ன?நீங்கள் விலை போகிறீர்களா இல்லை பிறர் உங்களை விலை பேச உடன்படுகிறீர்களா? Chief Ministe...
15/04/2026

இதில் நீங்கள் யார்?
உங்கள் விலை என்ன?
நீங்கள் விலை போகிறீர்களா இல்லை பிறர் உங்களை விலை பேச உடன்படுகிறீர்களா? Chief Minister of Tamil Nadu DMK - Dravida Munnetra Kazhagam Arappor - அறப்போர் இயக்கம் Collector Kanniyakumari Amit Shah Behindwoods Vikatan EMagazine News7Tamil

ஊரை ஏமாற்றி உலையில் போடுவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கு பல ஊர் மக்களை ஏமாற்றி உலையில் போட்டிருக்கிறார்கள் கல்லுக்...
07/04/2026

ஊரை ஏமாற்றி உலையில் போடுவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கு பல ஊர் மக்களை ஏமாற்றி உலையில் போட்டிருக்கிறார்கள் கல்லுக்கூட்டம் தூய பாத்திமா அன்னை ஆலய நிர்வாகத்தினர்.

கல்லுக்கூட்டம் தூய பாத்திமா அன்னை ஆலய நிர்வாகத்தினர் அரசையும் பொதுமக்களையும் ஏமாற்றி செய்து வரும் முறைகேடுகள் குறித்து சமீப காலமாக நாம் வெளிக்கொண்டு வந்துள்ளோம். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ளது. அரசு அனுமதிக்கு மீறி கட்டப்பட்டு வரும் ஆலயத்திற்கு நிதி திரட்டுவது என்ற பெயரில் குலுக்கல் நடத்தத் திட்டமிட்டு, அதில் முக்கிய பரிசுகளாக கார், புல்லட் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் என அறிவித்து, ஒரு புத்தகத்திற்கு பத்தாயிரம் ரூபாய் என்ற அளவில் ஆயிரக்கணக்கான புத்தகங்களை அச்சிட்டு, குமரி மாவட்டம் மட்டுமின்றி சில வெளி மாவட்டங்களிலும் வெளி நாடுகளிலும் விற்பனை செய்து ஆலய நிர்வாகத்தினர் கோடிகளைத் திரட்டியுள்ளார்கள்.

இதில் சிலர் கார் பரிசு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பல லட்சங்களுக்கு சீட்டு வாங்கி இன்று தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு இருப்பவர்களும் உண்டு. இப்படி இருக்கையில் வினோதம் என்னவென்றால், முக்கிய மூன்று பரிசுகளும் பங்கு பேரவை நிர்வாகத்தினரைச் சார்ந்த நபர்களுக்கு கிடைத்திருப்பது தான் பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது பங்கு பேரவை நிர்வாகத்தினர் மீது உள்ள நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதைப் பற்றி ஏமாற்றப்பட்ட மக்களிடம் பேசுகையில், “எங்களை ஏமாற்றி பிழைப்பதற்கு ஒரு காரோ பைக்கோ வேண்டும் என்று கேட்டிருந்தால் நாங்கள் பணம் திரட்டி வாங்கிக் கொடுத்திருப்போமே! இப்படி ஏமாற்றி பிழைக்க வேண்டுமா?” என்று சிலர் கூறுகின்றனர்.
“இந்த நபர்கள் செய்யும் தவறுகளுக்கு தூய பாத்திமா அன்னை தக்க சன்மானம் கொடுப்பார்கள்” என்று சிலரும்,
வேறு சிலர் “பிறரை ஏமாற்றுபவர்கள் குறித்து அல்வா கொடுப்பதாக பேச்சு வழக்கில் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இங்கு எங்களுக்கு அல்வா துண்டு ஒன்றாவது வாங்கிக் கொடுத்திருக்கலாம்” என்றும் கூறுகின்றனர்.

09/03/2026

திங்கள் நகரை அடுத்த கல்லுக்கூட்டம் தூய பாத்திமா அன்னை ஆலய இடிப்பு சர்ச்சை: புனித சின்னங்களுக்கு அவமதிப்பு – மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டதா?

குழித்துறை மறைமாவட்டத்திற்கு உட்பட்ட கல்லுக்கூட்டம் தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் பழைய ஆலயக் கட்டடத்தை இடித்து புதிய ஆலயம் கட்டும் பணி நடைபெற்றபோது, **திருச்சிலுவை** மற்றும் **ஆலய மணி** ஆகிய புனித சின்னங்கள் கீழே விழுந்து சிதறிய வகையில் அவமதிக்கப்பட்டதாக பங்குத்தந்தை மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இச்சம்பவம் கிறிஸ்தவ விசுவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பங்குத்தந்தை அருட்திரு. சுனில் கனகராஜ் அவர்களும், பங்கு பேரவை நிர்வாகிகளும் இந்த இடிப்புப் பணியை மேற்பார்வையிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விசுவாசிகளின் கூற்றுப்படி, பழைய கோபுரத்தின் உச்சியில் இருந்த திருச்சிலுவையும் ஆலய மணியும் முறையாகக் கழற்றி பாதுகாக்கப்படாமல், முழு கட்டடமும் மிருகத்தனமாக இடிக்கப்பட்டதால் அவை கீழே விழுந்து சேதமடைந்தன. மேலும், இச்சம்பவத்தை சில அருட்பணியாளர்கள் உள்ளிட்ட நபர்கள் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்ததுடன், இதற்காக சிறப்பு விருந்துகள் நடத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

கிறிஸ்தவ மரபில் திருச்சிலுவை என்பது இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மீட்பு மற்றும் வெற்றியின் உச்சகட்ட சின்னமாகும். திருவிவிலியத்தில் “சிலுவைப் பற்றிய செய்தி... நமக்கோ அது கடவுளின் ஆற்றல்” (1 கொரிந்தியர் 1:18) என்று கூறப்பட்டுள்ளது. புனித பவுல் “நான் சிலுவையில் அறையப்பட்ட என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறெதிலும் பெருமை கொள்ள மாட்டேன்” (கலாத்தியர் 6:14) என்று அறிவித்தார். புனிதர்களான புனித பிரான்சிஸ் அசிசி, புனித ஜான் ஆஃப் தி கிராஸ் போன்றோர் சிலுவையை ஆன்மீக வாழ்வின் மையமாகக் கொண்டனர்.

ஆலய மணி இறைவனின் அழைப்பு, திருப்பலி அறிவிப்பு, ஆறுதல் மற்றும் எச்சரிப்பின் சின்னமாக விளங்குகிறது. இவ்விரு சின்னங்களும் நூற்றாண்டுகளாக விசுவாச சமூகத்தின் இதயத் துடிப்பாக இருந்து வந்துள்ளன.

இதேபோல், இந்து மதத்தில் கோயில் கோபுரத்தில் உள்ள சிகரம் அல்லது கலசம் புனிதமானது; அதை அவமதிப்பது பெரும் பாவமாகக் கருதப்படுகிறது. இஸ்லாம் மதத்தில் மசூதியின் மினாரிலிருந்து அழான் ஒலிக்கும் புனிதத்தை அவமதிப்பது மிகக் கடுமையான குற்றமாகப் பார்க்கப்படுகிறது. பௌத்தம் மற்றும் சீக்கிய மதங்களிலும் தங்கள் வழிபாட்டுத் தலங்களின் சின்னங்கள் (ஸ்தூபி, நிசான் சாஹிப் போன்றவை) மிகுந்த மதிப்புடன் காப்பாற்றப்படுகின்றன.

இத்தகைய பின்னணியில், கிறிஸ்தவ ஆலயத்தின் மீட்பின் சின்னங்களை இவ்வாறு நடத்தியது மத உணர்வுகளைப் புண்படுத்திய செயலாகும் என்று பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “ஆலயம் புதுப்பிக்கப்படுவது தேவைதான்; ஆனால் புனித சின்னங்களை மதிக்காமல், அவற்றை சிதற வைத்து கொண்டாடுவது எந்த மத அடிப்படையிலும் ஏற்கத்தக்கதல்ல” என்று உள்ளூர் விசுவாசிகள் கோபம் தெரிவித்துள்ளனர். மேலும், “இறைநம்பிக்கையும் அடிப்படை அறிவும் பக்குவமற்ற பங்குத்தந்தை அருட்திரு. சுனில் கனகராஜ்” என்று குறிப்பிட்டு கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இச்சம்பவம் குறித்து அருட்திரு. சுனில் கனகராஜ் அல்லது பங்கு நிர்வாகத்தினரிடமிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. அவர்கள் ஆக்கிரமிப்பு செய்த தனியார் நிலங்களுக்கு போலி பட்டா, போலி பத்திரம் தயார் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணையை மறைமாவட்ட ஆயர் முன்னெடுத்து, நியாயமான முறையில் விசாரணையும் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

மத சுதந்திரமும் புனித சின்னங்களின் மரியாதையும் அனைத்து சமூகங்களுக்கும் அடிப்படை உரிமையாகும். இச்சம்பவம் அனைத்து மதத்தினரும் சிந்திக்க வேண்டிய பாடமாக அமைந்துள்ளது. The Times of India Polimer News Vikatan EMagazine News18 NDTV News7Tamil Behindwoods BJP Tamilnadu Amit Shah India Today

👆📍  கல்லுக்கூட்டத்தில் நடப்பது "Lock and Seal"-ஆ? அல்லது அதிகாரிகளின் நாடகமா?கல்லுக்கூட்டம் | பிப்ரவரி 27, 2026ஆலயத்தின்...
27/02/2026

👆📍 கல்லுக்கூட்டத்தில் நடப்பது "Lock and Seal"-ஆ? அல்லது அதிகாரிகளின் நாடகமா?
கல்லுக்கூட்டம் | பிப்ரவரி 27, 2026

ஆலயத்தின் முன் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகை வெறும் காகிதப் புலி என விசுவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஏன் பூட்டி முத்திரையிடவில்லை?: நீதிமன்ற உத்தரவின்படி ஒரு கட்டிடம் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டால், அதை அதிகாரிகள் பூட்டி முத்திரையிட வேண்டும். ஆனால், வெறும் பலகையை மட்டும் வைத்துவிட்டுச் சென்றது, "குற்றவாளியைத் தப்பிக்க விடுவதற்கான வழி" என மக்கள் கருதுகின்றனர்.

அதிகாரிகளின் கூட்டுச்சதி: ஒருபுறம் "சட்டவிரோதக் கட்டிடம்" எனப் பலகை வைக்கும் அதிகாரிகள், மறுபுறம் அதே கட்டிடத்திற்கு அனுமதி வழங்கச் செயலாளருக்கு (Secretary) பரிந்துரை செய்வது அப்பட்டமான நிர்வாக முறைகேடு.

நீதிமன்ற அவமதிப்பு: தடையை மீறிப் பணிகள் தொடர அனுமதிப்பது மற்றும் பூட்டி முத்திரையிடத் தவறுவது AD DTCP அதிகாரியை நீதிமன்ற அவமதிப்பு வளையத்திற்குள் கொண்டு வரும். Collector Kanniyakumari Chief Minister of Tamil Nadu Arappor - அறப்போர் இயக்கம் Amit Shah Bruno Herald Behindwoods BJP Tamilnadu DMK - Dravida Munnetra Kazhagam India Today

26/02/2026

அரசு விதிகளை மீறியது மட்டுமின்றி நடவடிக்கை எடுக்க வந்த அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தற்கொலை மிரட்டல் விடுத்து தடுத்து. தற்கொலை செய்வதற்கு ஏழு நபர்கள் தயாராக இருப்பதாக நேரடியாக கூறும் இந்த நபர்கள் மீது சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆகியும் இன்று வரை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் காவல் துறையில் எந்த புகாரும் கொடுக்காத காரணம் என்ன? யாரை காப்பாற்ற மவுனம் காக்கிறார்கள்? அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுக்கும் அதிகாரம் எது? Chief Minister of Tamil Nadu DMK - Dravida Munnetra Kazhagam NDTV News18 Polimer News News7Tamil The Times of India BJP Tamilnadu Vikatan EMagazine

திங்கள் நகரை அடுத்த கல்லுக்கூட்டத்தில் அரசு அனுமதிக்கு மீறிய கட்டுமானத்தில் அரசு அதிகாரிகள் சார்பில் வைக்கப்பட்ட அறிவிப்...
26/02/2026

திங்கள் நகரை அடுத்த கல்லுக்கூட்டத்தில் அரசு அனுமதிக்கு மீறிய கட்டுமானத்தில் அரசு அதிகாரிகள் சார்பில் வைக்கப்பட்ட அறிவிப்பு பேனரை கிளித்த விவகாரத்தில் கல்லுக்கூட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வளக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தற்போது காவல்துறை சார்பில் மாற்று அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது. Collector Kanniyakumari Chief Minister of Tamil Nadu The Times of India Arappor - அறப்போர் இயக்கம் Polimer News Bruno Herald Behindwoods Vikatan EMagazine News7Tamil

🚨 அரசு அறிவிப்பு பதாகை கிழிப்பு 🚨திங்கள் நகரை அடுத்த கல்லுக்கூட்டம் பகுதியில் அரசு அனுமதியை மீறி கட்டப்பட்டு வரும் ஆலையி...
23/02/2026

🚨 அரசு அறிவிப்பு பதாகை கிழிப்பு 🚨
திங்கள் நகரை அடுத்த கல்லுக்கூட்டம் பகுதியில் அரசு அனுமதியை மீறி கட்டப்பட்டு வரும் ஆலையின் பணியை நிறுத்த அரசு சார்பில் பல கட்டங்களாக பணி நிறுத்த அறிவிப்பாணைகள் வழங்கியிருந்தன. இதனை எள்ளளவும் பொருட்படுத்தாத பங்குதந்தை திரு. சுனில் கனகராஜ் மற்றும் பங்கு பேரவை நிர்வாகத்தினர் கட்டிடப் பணியைத் தொடர்ந்து வந்தனர்.
கட்டிடத்திற்கு சீல் வைக்க வந்த அரசு அதிகாரிகளையும் மக்களைத் திரட்டி தற்கொலை மிரட்டல் விடுத்து தடுத்தனர். சமீபத்தில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், பங்குதந்தை திரு. சுனில் கனகராஜை முக்கிய குற்றவாளியாக நீதிமன்றம் தாமாக முன்வந்து சேர்த்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் மாவட்ட நகர ஊரமைப்பு உதவி இயக்குநர் சார்பில் பணி நிறுத்த அறிவிப்பாணை பதாகை ஒன்றை இரு தினங்களுக்கு முன்பு வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு சில மர்ம நபர்களால் அந்த பதாகை கிழிக்கப்பட்டுள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Chief Minister of Tamil Nadu Collector Kanniyakumari Bruno Herald Behindwoods Polimer News The Times of India Arappor - அறப்போர் இயக்கம் News18 NDTV DMK - Dravida Munnetra Kazhagam BJP Tamilnadu

திங்கள் நகரை அடுத்த கல்லுக்கூட்டம் ஆலய கட்டுமானத்தில் பெரும் மோசடி; நீதிமன்றத்தின் பிடியில் பங்குத்தந்தை!கல்லுக்கூட்டம் ...
21/02/2026

திங்கள் நகரை அடுத்த கல்லுக்கூட்டம் ஆலய கட்டுமானத்தில் பெரும் மோசடி; நீதிமன்றத்தின் பிடியில் பங்குத்தந்தை!
கல்லுக்கூட்டம் | பிப்ரவரி 21, 2026
வழக்கறிஞர் M. சுப்பையா அவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது முறையான நடவடிக்கை மற்றும் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு சீல் வைப்பது (Lock and Seal) குறித்ததாகும்.
மேற்படி வழக்கு *மாண்புமிகு நீதியரசர்கள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் அவர்கள் அமர்வில்* நடைபெறுகிறது
​இதன் முக்கிய விவரங்கள் இதோ:

கல்லுக்கூட்டம் தூய பாத்திமா அன்னை ஆலய கட்டுமானத்தில் நடைபெற்றுள்ள நில ஆக்கிரமிப்பு, திட்டமிடப்பட்ட மோசடி மற்றும் விசுவாசிகள் மீதான தாக்குதல் குறித்து மாண்புமிகு உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
📍 முக்கியத் தகவல்கள்:
* அனுமதி மோசடி (Planning Fraud): 9,500 சதுர அடி பிரம்மாண்ட தேவாலயம் கட்டத் திட்டமிட்டுவிட்டு, சட்டத்தை ஏமாற்றும் பங்கு பணியாளர் சாலை மற்றும் இடைவெளி (Setback) விதிகளைத் தவிர்க்க, தந்திரமாக வெறும் 2,847 சதுர அடிக்கு மட்டும் அனுமதி பெற்றுள்ளனர். இது மாவட்ட நிர்வாகத்தைத் திட்டமிட்டு ஏமாற்றிய செயலாகக் கருதப்படுகிறது.
* நில அபகரிப்பு (Land Grabbing): தேவாலயத்திற்கு முறையான நில உரிமை (Clear Title) இல்லாத இடங்களையும், பொதுப் பாதையையும், கல்லறைத் தோட்ட நிலத்தையும் ஆக்கிரமித்துக் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. *முழுமையான நில உரிமை இல்லாததை மறைக்கவே இந்த "சிறிய வரைபட அனுமதி" தந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.*
* விசுவாசிகள் மீது தாக்குதல்: "சட்டப்படியான அனுமதி பெற வேண்டும்" என்று ஆலோசனை வழங்கிய ஊர் மக்களையும், ஆலயக் கட்டிடக் குழுவினரையும் "ஆலய எதிரிகள்" என முத்திரை குத்தி, அவர்கள் மீது அராஜகமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது (FIR 0343/2025). பாதுகாப்பற்ற கட்டிடத்தில் திருப்பலி நடத்த வேண்டாம் என்று கோரியவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
* அதிகாரிகளுக்கு நிர்பந்தம்: நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசு அதிகாரிகளை வற்புறுத்தி "திருத்திய அனுமதி" (Revised Approval) பெற சட்டத்திற்குப் புறம்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
* நீதிமன்ற அவமதிப்பு (Contempt): *தடையை மீறி கட்டுமானத்தைத் தொடர்ந்ததால், பங்குத்தந்தை கே. சுனில் அவர்களை மாண்புமிகு உயர் நீதிமன்றம் அவமதிப்புத் தரப்பினராக (Contemnor) சேர்த்துள்ளது.* "அனுமதி பெறுவது போல் நடித்துக் கொண்டு சட்டவிரோதப் பணிகளைத் தொடர்வது குற்றம்" என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
சட்டத்தின் பிடியில் அதிகாரிகள்:
இனிமேல் விதிமுறை மீறல்களை மறைக்க முடியாது.
மக்களின் கோரிக்கை:
"இறைவனின் இல்லம் என்பது உண்மையான நிலத்தில், பாதுகாப்பான விதிகளுடன் அமைய வேண்டும். வன்முறை மற்றும் மோசடி மூலம் கட்டப்படும் கட்டிடம் ஊருக்குப் பாதுகாப்பற்றது," என சமூக ஆர்வலர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட விசுவாசிகள் தெரிவித்துள்ளனர்.
*ஒரு சிலர் செய்யும் தனிப்பட்ட தவறால் ஒட்டுமொத்தப் பங்கு மற்றும் மக்களின் பணம் எப்படியெல்லாம் வீணாகிறது*!
Collector Kanniyakumari Chief Minister of Tamil Nadu Arappor - அறப்போர் இயக்கம் Bruno Herald News18 NDTV Behindwoods Polimer News Vikatan EMagazine News7Tamil The Times of India

22/01/2026

திருவனந்தபுரம் பிரதமரின் ரயில் தொடக்க விழா நிகழ்ச்சி பங்கேற்க சுமார் 1000 Social media influencer சுமார் 500 News reporter வருகை

Address

Nagercoil
629802

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thingalnager posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share