இளம் புரட்சியாளர் டாக்டர்.வை.தினகரன்

  • Home
  • India
  • Nagercoil
  • இளம் புரட்சியாளர் டாக்டர்.வை.தினகரன்

இளம் புரட்சியாளர் டாக்டர்.வை.தினகரன் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from இளம் புரட்சியாளர் டாக்டர்.வை.தினகரன், Political organisation, Nagercoil.

சேலம் மாவட்டம், ஒதியத்தூரில் சட்டம்-ஒழுங்கைப் பேணவும், சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டவும் தவெக அரசை தமிழ்நாடு தலித் உரிமைக...
17/07/2026

சேலம் மாவட்டம், ஒதியத்தூரில் சட்டம்-ஒழுங்கைப் பேணவும், சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டவும் தவெக அரசை தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்!

சேலம் மாவட்டம், கெங்கவல்லிக்கு அருகில் உள்ள ஒதியத்தூர் பகுதியில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி, ஒடுக்கப்பட்ட மக்களின் குரல், மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையைத் திறப்பதில் நிலவும் தேவையற்ற எதிர்ப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து அங்கு நீடிக்கும் பதற்றமான சூழல் மிகுந்த வேதனையளிக்கிறது.

அண்ணல் அம்பேத்கர் சிலை கால் மேல் கால் வைத்து அமர்ந்து இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத அபத்தமான எதிர்ப்புகள், சமூகத்தில் நிலவும் அறியாமையின் வெளிப்பாடே தவிர வேறில்லை.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமானவர் அல்ல; அவர் ஒட்டுமொத்த இந்திய சமூகத்தின் சமத்துவத்திற்கும், நீதிக்கும், உரிமைகளுக்கும் போராடிய உலகப் புகழ்பெற்ற அறிவாசான்.

தொழிலாளர்களின் உரிமைகள், பெண்களின் மேன்மை, பிற்படுத்தப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் முன்னேற்றம் என அவர் ஆற்றிய பணிகள் காலத்தால் அழியாதவை.

அண்ணல் சட்ட அமைச்சராக இருந்தபோது, சமூக நீதி சார்ந்த சீர்திருத்தங்களை முன்னெடுத்த விதம், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அவர் குரல் கொடுத்த வீரம் ஆகியவை அவரை ஒட்டுமொத்த மனிதகுலத்தின் அடையாளமாக உயர்த்தியுள்ளது.

அத்தகைய மாமேதையின் சிலையை, தரம் தாழ்ந்த சாதிய நோக்கில் அணுகுவதும், அதனைத் திறக்க எதிர்ப்புத் தெரிவிப்பதும் ஜனநாயகத்திற்கு விடுக்கப்படும் சவாலாகும்.

கொள்கை ரீதியாக அண்ணல் அம்பேத்கர் அவர்களை முன்னிறுத்தும் தவெக அரசு, தற்போதைய சமூகப் பதற்றத்தைத் தணித்து, சட்டப்படி சிலையைத் திறக்க உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறியிருப்பது பெரும் கண்டனத்திற்குரியது.

சட்டம்-ஒழுங்கைப் பேணிக்காப்பதும், சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்வதும் ஒரு மக்களாட்சி அரசின் முதன்மைக் கடமையாகும்.

சாதியவாத சக்திகளின் மிரட்டலுக்கு அடிபணியாமல், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளைக் காக்க அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்.

சேலம், ஒதியத்தூர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையை எவ்விதத் தடையுமின்றி, காவல்துறை பாதுகாப்போடு உடனடியாகத் திறக்க வேண்டும்.

அண்ணல் சிலையைத் திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் மற்றும் சமூக அமைதியைக் குலைக்க முயலும் நபர்கள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த குற்றத்தின் கீழ் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாதிய ரீதியாக மக்களைப் பிரித்தாளும் சக்திகளைக் கட்டுப்படுத்தி, இப்பகுதியில் நிலவும் பதற்றத்தைத் தணித்து, சமூக ஒற்றுமையை நிலைநாட்ட மாவட்ட நிர்வாகம் உரிய அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும்.

சாதி கடந்த சமத்துவ சமுதாயத்தைப் படைக்க உறுதி பூண்டுள்ள நாம், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலையைத் திறப்பதன் மூலம் சமூக நீதியை உரக்கச் சொல்வோம்.

தவெக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல், ஜனநாயகக் கடமையாற்றி அண்ணலின் சிலையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுத்து சமூக நீதிக்கு மதிப்பளிக்க வேண்டுமெனத் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்

ஜூலை -15சனாதன ஏற்ற தாழ்வுகளை தகர்த்தெறிந்து சாதிகளற்ற சமுதாயம் அமைத்திட இருவிழிகளாய் வழிகாட்டிய....எங்கள் முன்னோடிகளே!நா...
15/07/2026

ஜூலை -15
சனாதன ஏற்ற தாழ்வுகளை தகர்த்தெறிந்து சாதிகளற்ற சமுதாயம் அமைத்திட இருவிழிகளாய் வழிகாட்டிய....
எங்கள் முன்னோடிகளே!

நாம் எல்லோரும் சமம் என்ற உங்கள் சமநீதி தத்துவத்தை உலகிற்கு உணர்த்திட உங்கள் சமத்துவ அறிவாற்றலில் கொஞ்சத்தை எங்களுக்கு இரவலாக தந்திட வேண்டுகிறோம்...

பேராசைகளற்ற...
பெருந்தலைவரே!
உங்கள் பிறந்தநாளில் போற்றி வணங்கி பெருமை கொள்கிறது...

தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்

கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சபரி வர்மன், நாகர்கோவில் கிளை சிறையில் மர்மமான முறைய...
14/07/2026

கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சபரி வர்மன், நாகர்கோவில் கிளை சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது.

ஒரு குடிமகன் அரசுப் பாதுகாப்பில் இருக்கும் சிறைச்சாலையிலேயே உயிரிழந்திருப்பது, சிறை நிர்வாகத்தின் பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வின் மீது கடுமையான சந்தேகங்களை எழுப்புகிறது.

மாற்றுத்திறனாளியான ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சூழலில், அவரது உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது சிறைத்துறையின் தலையாய கடமையாகும்.

ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள இந்த உயிரிழப்பு, சிறைச்சாலைகளில் கைதிகளின் பாதுகாப்பு எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதை உணர்த்துகிறது.

உயிரிழந்த சபரி வர்மனின் மரணத்தில் உள்ள மர்மத்தை நீக்க, பாரபட்சமற்ற, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உறுதி அளித்தது போல, பிரேத பரிசோதனை அறிக்கை உடனே வெளியிடப்பட வேண்டும். அதில் ஏதேனும் காயங்களோ அல்லது சந்தேகத்திற்குரிய காரணங்களோ கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

உயிரிழந்தவரின் குடும்பத்திற்குத் தகுந்த இழப்பீடு வழங்கப்படுவதோடு, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஒருவர் புகையிலை பொருட்கள் விற்றதாகக் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் உயிரிழப்புக்குள்ளானது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

தமிழக அரசும், குமரி மாவட்டகாவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் உண்மையை மறைக்காமல், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முழுமையான நீதியை பெற்றுத்தர வேண்டும் என தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

சிறைச்சாலைகள் சீர்திருத்த இடங்களாக இருக்க வேண்டுமே தவிர, மனித உரிமை மீறல்களின் மையங்களாக மாறக்கூடாது தமிழக அரசு இதில் தலையிட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்.

வைகை ஆற்றுத் தூய்மைப் பணியைத் தடுத்து நிறுத்திய காவல்துறை பொதுப்பணித்துறையின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு கடும் கண்டனம்!மத...
09/07/2026

வைகை ஆற்றுத் தூய்மைப் பணியைத் தடுத்து நிறுத்திய காவல்துறை பொதுப்பணித்துறையின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு கடும் கண்டனம்!

மதுரை வைகை ஆற்றை தூய்மைப்படுத்தப் பாடுபட்டு வரும் 'நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் தன்னார்வப் பணியை, காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய செயல், மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. இதனை 'தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்' வன்மையாகக் கண்டிக்கிறது.

கடந்த 3 ஆண்டுகளாகச் சொந்த நிதியிலும், தன்னார்வக் குழுக்களின் ஒத்துழைப்போடும் வைகை ஆற்றைச் சுத்தம் செய்து வரும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையினர், 08-07-2026 அன்று 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்ததால், அந்த மாணவர்கள் வைகை ஆற்றுக்குச் செல்ல முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக உழைக்கும் அமைப்புகளை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக, அமைச்சர்கள் வருகை மற்றும் பாதுகாப்பு என்ற பெயரில் பணிகளை முடக்குவது என்பது அதிகார வர்க்கத்தின் ஆணவப்போக்காகும்.

வைகை ஆறு அழுகிக் கிடப்பதை வேடிக்கை பார்க்கும் நிர்வாகம், அதைச் சுத்தம் செய்ய முன்வரும் சமூக ஆர்வலர்களைத் தடுப்பது என்பது மக்களின் பொதுச் சொத்து மற்றும் சுற்றுச்சூழலுக்கு இழைக்கும் துரோகம் ஆகும்.

வைகை ஆற்றில் தூர்வாரும் மற்றும் தூய்மைப் பணிகளைச் செய்ய நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளைக்கும், தன்னார்வலர்களுக்கும் உடனடியாகத் தடையின்றி அனுமதி வழங்க வேண்டும்.
இத்தகைய சமூகப் பணிகளில் ஈடுபடுபவர்களைக் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அச்சுறுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இனி வரும் காலங்களில் இது போன்ற சமூகப் பணிகளுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் முட்டுக்கட்டை போடுவதை அரசு நிறுத்த வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. அந்தக் கடமையைச் செய்ய முன்வருபவர்களுக்குத் தடையாக இருப்பதை விட்டுவிட்டு, அவர்களோடு கைகோர்க்குமாறு தமிழக அரசையும், மதுரை மாவட்ட நிர்வாகத்தையும் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்.

சமத்துவம், சமநீதி, சகோதரத்துவத்தை நிலைநிறுத்த உறுதியேற்போம்!இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த மொஹரம் திருநா...
26/06/2026

சமத்துவம், சமநீதி, சகோதரத்துவத்தை நிலைநிறுத்த உறுதியேற்போம்!

இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த மொஹரம் திருநாள் நல்வாழ்த்துகள்!

தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 136-ஆவது பிறந்த நாள் விழா 14-04-2026  செவ்வாய்க்கிழமை அன்று சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவ...
13/04/2026

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 136-ஆவது பிறந்த நாள் விழா 14-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் விழாவாக இறச்சகுளம், அருள்ஞானபுரத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் முழுவுருவ சிலைக்கு சாதி, மத, பேதமின்றி, கட்சி பாகுபாடின்றி அனைவரும் பங்கேற்று சிறப்பிக்கும் அண்ணல் அம்பேத்கர் அகவை திருநாள் சமத்துவ சங்கமம் நிகழ்ச்சியை தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைத்து நடத்துகிறது.

சமத்துவ சங்கமம் நிகழ்ச்சி சிறப்பாக நடந்திட அனைத்து அன்பு உள்ளங்களையும் அன்போடு அழைக்கிறது...

தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்...

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி, வடிவீஸ்வரம், பறக்கின்கால்வாய் அருகில் பழையாற்று ஓரத்தில் அன்னை சத்யா நினை...
06/11/2025

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி, வடிவீஸ்வரம், பறக்கின்கால்வாய் அருகில் பழையாற்று ஓரத்தில் அன்னை சத்யா நினைவு அரசு பெண் குழந்தைகள் காப்பகம் அமைந்துள்ளது.

அரசு குழந்தைகள் காப்பத்திற்கு வரக்கூடிய குழந்தைகள் அங்கு தங்கி பயிலும் குழந்தைகள் ஏழ்மையான சூழலில் வசதி வாய்ப்பு இல்லாத பெண் குழந்தைகள், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு பாதுகாப்பு கருதி வரும் பெண் குழந்தைகள், அப்பா, அம்மா இல்லாத ஆதரவற்ற குழந்தைகள் தனது பாதுகாப்பு கருதியும், கல்வி மேல்படிப்பிற்காகவும் குடும்பத்தினர் கவனிக்க இயலாத சூழ்நிலையில் மேற்படி அரசு பெண் குழந்தைகள் காப்பகத்திற்கு பெண் குழந்தைகளை மாவட்ட CHILD WELFARE CENTRE மூலம் தேர்ந்தெடுத்து மேற்படி குழந்தைகள் காப்பகம் மூலமாக படிக்க வைத்து பராமரித்து வருகின்றனர்.

மேற்படி குழந்தைகள் காப்பகம் சுற்றிலும் சுடுகாடு, இடுகாடு அமைந்துள்ள பகுதியில் ஆள் அரவமில்லாத ஒதுக்குப்புறமாக அரசு அமைத்துள்ளது.

அரசும், அரசு அதிகாரிகளும் நாகர்கோவில் மாநகரில் பல இடங்களில் அரசு புறம்போக்கு இடம் இருந்தும் சுடுகாடு மற்றும் இடுகாடுகளுக்கு நடுவில் பெண் அரசு குழந்தைகள் காப்பகத்தை அமைக்க வேண்டிய அவசியம் என்ன?

சுடுகாடு, இடுகாடு என்றால் வயது முதிர்ந்தவர்களே பயந்து நடுங்கும் சூழலில் குழந்தைகள் காப்பகத்தை சுடுகாடு, இடுகாடு பகுதியில் அரசே அமைத்துள்ளது நியாயமா?

தினமும் சுடுகாடு, இடுகாடு பகுதியில் பயணம் செய்து பள்ளிக்கு சென்று வரும் பெண் குழந்தைகள் மேற்படி காப்பகத்தில் அச்சத்தோடு தான் தங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளனர். ஆதரவற்ற குழந்தைகளின் அச்ச உணர்வு எப்போது தடுத்து நிறுத்தப்படும்..? நல்ல சுதந்திரமான சூழலில் எப்போது அரசு பெண் குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படும்....?

நாமோ, நமது உறவினர்களோ, அரசு அதிகாரிகளோ, கல்வி ரீதியாக தங்கி பயலும் நமது பிள்ளைகளை சுடுகாட்டு அருகில், இடுகாட்டு அருகில் உள்ள விடுதியில் நமது குழந்தைகளை தங்க வைப்போமா..? அப்படி இருக்கின்ற சூழலில் ஆதரவற்ற ஏழை பெண் குழந்தைகளை அச்சத்தோடு குழந்தைகள் காப்பகத்தில் அரசே தங்க வைப்பது எந்த விதத்தில் நியாயம்..?

சுடுகாடு, இடுகாடு பகுதியில் அமைந்துள்ள அரசு பெண் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி இருக்கின்ற பெண் குழந்தைகள் தினமும் அச்சத்தோடு தூங்க செல்வதால் அவர்களால் அவர்களது கல்வியில் கவனம் செலுத்த முடியுமா...?
*இதுபோன்ற அச்சத்தில் வாழும் பெண் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகாதா...?

சுடுகாடு, இடுகாடு பகுதியில் அமைந்துள்ள அரசு பெண் குழந்தைகள் அச்சத்தில் இருப்பதால் தனது கல்வியில் கவனம் செலுத்தாமல் ஏற்கனவே பாதிக்கப்பட்ட குழந்தைகளை வாழ்க்கை முழுவதும் அரசு பெண் குழந்தைகள் காப்பகம் பாதிப்புக்கு உள்ளாக்க வேண்டுமா...?

இதுபோன்ற அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்கி பயலுகின்ற மாணவிகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட மாட்டார்களா...?

எதிர்கால நலன் கருதி அரசு காப்பகத்திற்கு வருகின்ற குழந்தைகள் இதுபோன்ற சூழல்களில் தங்கி பயின்று வந்தால் அவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகாதா...?

இதுபோன்ற மனசாட்சியற்ற, மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு எப்போதுதான் தீர்வு கிடைக்கும்..?
ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவாக எப்போதுதான் அரசு முடிவெடுக்கும்....?

உடனடியாக மேற்படி சுடுகாடு, இடுகாடு பகுதியில் அமைந்துள்ள அரசு பெண் குழந்தைகள் காப்பகத்தை மாற்று இடத்தில் உடனடியாக அமைக்க கோரியும் மேற்படி குழந்தைகள் காப்பகத்தில் தங்கி பயிலுகின்ற பெண் குழந்தைகளுக்கு கவுன்சிலிங் வழங்க கோரியும் அதன் அடிப்படையில் அவர்களது உளவியல் பிரச்சனைகளை தீர்க்க உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க கோரியும் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் மேற்படி அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க கோரி... 10-11-2025 முதல் தீர்வு கிடைக்கும் வரை சுடுகாட்டிற்குள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.

தீர்வு கிடைக்கும் வரை சுடுகாட்டிற்குள்...
தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்

டாக்டர்.வை.தினகரன் தொழிலாளர் நலச்சங்கம் அரசு போக்குவரத்து கழகம் தமிழ்நாடு சார்பில் தீப ஒளி திருநாளை முன்னிட்டு தொழிற்சங்...
27/10/2025

டாக்டர்.வை.தினகரன் தொழிலாளர் நலச்சங்கம் அரசு போக்குவரத்து கழகம் தமிழ்நாடு சார்பில் தீப ஒளி திருநாளை முன்னிட்டு தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் வை.தினகரன் அவர்கள் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்து போது....

டாக்டர் வை. தினகரன் தொழிலாளர் நலச்சங்கம் அரசு போக்குவரத்து கழகம் தமிழ்நாடு.

தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்

தமிழ்நாடு டாக்டர்.வை.தினகரன் தொழிலாளர் நலச் சங்கம் (அரசு போக்குவரத்து கழகம்)தொழிற்சங்கத்திற்கு அரசு அங்கீகாரம் தமிழ்நாடு...
01/10/2025

தமிழ்நாடு டாக்டர்.வை.தினகரன் தொழிலாளர் நலச் சங்கம் (அரசு போக்குவரத்து கழகம்)
தொழிற்சங்கத்திற்கு அரசு அங்கீகாரம்

தமிழ்நாடு டாக்டர்.வை.தினகரன் தொழிலாளர் நலச் சங்கம் (அரசு போக்குவரத்து கழகம்) தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் பெற்று தொழிற்சங்க தலைவர் திரு.சந்திரன், பொதுச்செயலாளர் திரு.குமாரவேல், பொருளாளர் திரு.ஜஸ்டின் ராபர்ட், ராணித்தோட்டம் பணிமனை-2 தலைவர் திரு.நாகராஜன் ஆகியோர் தலைவர் டாக்டர்.வை.தினகரன் அவர்களிடம் கொடுத்து வாழ்த்து பெற்றனர்

தமிழ்நாடு டாக்டர்.வை. தினகரன் தொழிலாளர் நலச்சங்கம் (அரசு போக்குவரத்து கழகம்) தொழிற்சங்கத்திற்கு அரசு அங்கீகாரம் கிடைக்க அயராது உழைத்த, ஒத்துழைப்பு நல்கிய தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகிகளுக்கும், டாக்டர்.வை.தினகரன் தொழிலாளர் நலச் சங்கம் (அரசு போக்குவரத்து கழகம்) நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்.

21/09/2025

அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களின் மகத்தான மக்கள் சேவைக்கும் உழைப்பின் தியாகங்களுக்கும் சமர்ப்பணம்

டாக்டர் வை.தினகரன் தொழிலாளர் நலச்சங்கம்.
(அரசு போக்குவரத்து கழகம்)
தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்

Address

Nagercoil
629001

Alerts

Be the first to know and let us send you an email when இளம் புரட்சியாளர் டாக்டர்.வை.தினகரன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share