தமிழ்நாடு இளைஞர் நற்பணி இயக்கம்

  • Home
  • India
  • Nagercoil
  • தமிழ்நாடு இளைஞர் நற்பணி இயக்கம்

தமிழ்நாடு இளைஞர் நற்பணி இயக்கம் Social Welfare Association TAMILNADU ILAIGNAR NARPANI IYAKKAM(TNINI) is one of the welfare association in Nagercoil which is located in Kanyakumari Dist.

The main aim of "TNINI" is to help poor students to reach higher position in their careers. We are organised an executive council to handle those jobs perfectly. We also did, does & will do lot of welfare activities such as donating blood, planting trees, donating stationaries, donating food etc. We pledged these are our short term goals. Our main goal is to give free education to deserved students who are all discontinued their studies because of poverty.

'நம்பிக்கையை இழந்துவிடாதே! பாதை கடினமானதுதான், என்றாலும் விழி, எழு, மனம் தளராதே! உனது குறிக்கோளைக் கண்டுபிடி!'என்று நம்ப...
11/01/2014

'நம்பிக்கையை இழந்துவிடாதே! பாதை கடினமானதுதான், என்றாலும் விழி, எழு, மனம் தளராதே! உனது குறிக்கோளைக் கண்டுபிடி!'

என்று நம்பிக்கையூட்டிய சுவாமி விவேகானந்தரின் 151 பிறந்த தினம் நாளை...

நண்பர்கள் கவனத்திற்கு,சுவாமி விவேகானந்தரின் பிறந்ததினத்தை முன்னிட்டு  வருகிற ஜனவரி 12, 2014(ஞாயிற்றுகிழமை), நாகர்கோவில் ...
28/12/2013

நண்பர்கள் கவனத்திற்கு,

சுவாமி விவேகானந்தரின் பிறந்ததினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 12, 2014(ஞாயிற்றுகிழமை), நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் அமைந்துள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் சிறப்புக்குழந்தைகள் காப்பகங்களுக்கு கடந்த வருடங்கள் போல இந்த வருடமும் மதிய உணவும், இரவு உணவும் வழங்க "தமிழ்நாடு இளைஞர் நற்பணி இயக்கம்" முடிவு செய்துள்ளது. எங்களின் இந்த முயற்சிக்கு உங்கள் பங்களிப்பையும், அன்பளிப்பையும் தந்து உதவுமாறு தமிழ்நாடு இளைஞர் நற்பணி இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். அன்பளிப்பு(நன்கொடை) அளிக்க விரும்புபவர்கள் எங்கள் இயக்க உறுப்பினர்களை தொடர்புகொள்ளவும். அன்பளிப்பை நேரில் தர விரும்புகிறவர்கள் மற்றும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் கீழ்க்காணும் முகவரிக்கு வரவும். அன்பளிப்புகளையும் மற்றும் நீங்கள் கலந்துகொள்ள விரும்பும் தகவல்களையும் ஜனவரி 5, 2014க்குள் அளிக்கவும்.

(உறுப்பினர்கள் அனைவரும் இந்நிகழ்வில் தவறாது கலந்துகொள்ளவும்)

--
தமிழ்நாடு இளைஞர் நற்பணி இயக்கம்,
பதிவு எண் : 5/2012
இரவிவர்மன் புதுத்தெரு,
வடசேரி, நாகர்கோவில் - 629001.
தொடர்பு எண் : +91-9443181040

01/11/2013

நவம்பர் 1, கன்னியாகுமரி மாவட்டம் தாய்த்தமிழகத்துடன் இணைந்த இந்நன்னாளில், தமிழ்நாடு இளைஞர் நற்பணி இயக்கம் வெற்றிகரமாக தனது ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தமிழ்நாடு இளைஞர் நற்பணி இயக்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். அனைவருக்கும் தமிழ்நாடு இளைஞர் நற்பணி இயக்கத்தின் ஏழாம் ஆண்டுவிழா நல்வாழ்த்துக்கள் மற்றும் குமரி மாவட்டதின நல்வாழ்த்துக்கள்...

26/10/2013
11/10/2013

உலகில் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கட்டாயம் கல்வி வழங்க, முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இந்த தினத்தை கொண்டாட ஐ.நா.சபை வலியுறுத்தியுள்ளது.

Thanks to Mr.Naveen(Sree's Manu) & his friends for donating food...
02/10/2013

Thanks to Mr.Naveen(Sree's Manu) & his friends for donating food...

மாணவ-மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை:தொழிலாளர் நல வாரியத்தில் தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் கல்வி பயிலும் க...
01/10/2013

மாணவ-மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை:

தொழிலாளர் நல வாரியத்தில் தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு (மாணவ-மாணவிகள்) கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

"தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கீழ் குறிப்பட்டுள்ளவாறு கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புத்தகங்கள் வாங்குவதற்கு 11-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் வரை பயிலும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பாடநூல் நிதி உதவி அளித்தல்.

பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம், பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகிய கல்விகளின் பட்ட மேற்படிப்பு மற்றும் பட்ட படிப்புகளுக்கான கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை.

தொழிற்பயிற்சி கல்வி மற்றும் மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை.

10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மூன்று மாணவர்களுக்கு (முதல்,2-ம், 3-ம் இடம்) ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இத்திட்டங்கள் தொழிலாளர் நல நிதி செலுத்துபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

31-ந் தேதி கடைசி நாள்

மேற்படி கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31-10-2013 ஆகும். நலத்திட்டங்கள் குறித்தான விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களுக்கு,

செயலாளர்,
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம்,
தபால் பெட்டி எண் 718,
சென்னை-6

என்ற முகவரிக்கு சுயவிலாசமிட்ட தபால் தலை ஒட்டப்பட்ட உறையுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது."

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

---
என்றும் மக்கள் சேவையில்,
"தமிழ்நாடு இளைஞர் நற்பணி இயக்கம்",
"இயன்றதை செய்வதே எங்கள் லட்சியம்"
(பதிவு எண் : 5 / 2012)
இரவிவர்மன் புதுத்தெரு,
வடசேரி , நாகர்கோவில் - 629001

இன்று அக்டோபர் 01 - தேசிய தன்னார்வ இரத்ததான நாள்.இரத்தம் மற்றும் இரத்ததானம் பற்றிய சில தகவல்கள்:பரிசோதனைக்குழாய்க் குழந்...
01/10/2013

இன்று அக்டோபர் 01 - தேசிய தன்னார்வ இரத்ததான நாள்.

இரத்தம் மற்றும் இரத்ததானம் பற்றிய சில தகவல்கள்:

பரிசோதனைக்குழாய்க் குழந்தையை சாத்தியமாக்கிய மருத்துவ முன்னேற்றத்தால்கூட செயற்கை இரத்தத்தைத் தயாரிக்க இன்றளவும் இயலவில்லை. இரத்த இழப்பை இரத்தத்தால் மட்டுமே ஈடு செய்ய முடியும்.

18 முதல் 60 வயது வரையுள்ள எல்லா ஆண்களும் பெண்களும் இரத்த தானம் செய்யலாம்.

இரத்த தானம் செய்பவரின் எடை குறைந்தபட்சம் 45 கிலோ இருக்க வேண்டும்.

மூன்று மாததிற்கு ஒருமுறை இரத்ததானம் செய்யலாம்.

இரத்ததானம் செய்ய அதிகபட்சம் 20 நிமிடங்களே ஆகும். இரத்ததானம் செய்தவுடன் வழக்கம்போல் அன்றாட வேலைகள் மேற்கொள்ளலாம்.

ஒவ்வொருடைய உடலிலும் தோராயமாக 5 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்ததானத்தின்போது எடுக்கப்படும் இரத்தம் 350 மில்லி லிட்டர் மட்டுமே. அதுவும் 24 மணி நேரத்துக்குள்ளாக உடலால் மீண்டும் ஈடுசெய்யப்படும்.

கருவுற்றிருக்கும்போதும்,தாய்ப்பால் ஊட்டும்போதும் இரத்ததானம் செய்ய வேண்டாம்.

பெரிய அறுவை சிகிச்சை செய்த 6 மாதங்களுக்கும், சிறிய அறுவைசிகிச்சை செய்துகொண்ட 3 மாதங்களுக்கும் தானம் செய்வதைத் தவிர்க்கலாம்.

மலேரியா சிகிச்சை பெற்ற 3 மாதங்களுக்கும், மஞ்சள் காமாலை சிகிச்சை பெற்ற 6 மாதங்களுக்கும் தானம் செய்வதைத் தவிர்க்கவும்.

பால்வினை/ எச்.ஐ.வி. நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தானம் செய்யலாகாது.

மேற்கு வங்காளத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு, இரத்ததான தன்னார்வலர் பட்டியலில் இரண்டாவது இடம் வகிக்கிறது... உயிர் காக்கும் உன்னதப்பணியில் உங்களையும் இணைத்துக் கொள்ள இரத்த தானம் செய்யுங்கள். கீழ்க்காணும் அரசு இணையதளத்தில் இரத்தக் கொடையாளராய்ப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

http://www.tngovbloodbank.in/frm_donorregistrationindividual_entry.aspx

#மனித நேயத்தை வார்த்தைகளால் அல்ல
ரத்த தானத்தால் வெளிப்படுத்துவோம்...

---
என்றும் மக்கள் சேவையில்,
"தமிழ்நாடு இளைஞர் நற்பணி இயக்கம்",
"இயன்றதை செய்வதே எங்கள் லட்சியம்"
(பதிவு எண் : 5 / 2012)
இரவிவர்மன் புதுத்தெரு,
வடசேரி , நாகர்கோவில் - 629001

இன்று சர்வதேச முதியோர் தினம்... மூத்த குடிமக்களை மதிப்போம்...---என்றும் மக்கள் சேவையில்,"தமிழ்நாடு இளைஞர் நற்பணி இயக்கம்...
01/10/2013

இன்று சர்வதேச முதியோர் தினம்... மூத்த குடிமக்களை மதிப்போம்...
---
என்றும் மக்கள் சேவையில்,
"தமிழ்நாடு இளைஞர் நற்பணி இயக்கம்",
"இயன்றதை செய்வதே எங்கள் லட்சியம்"
(பதிவு எண் : 5 / 2012)
இரவிவர்மன் புதுத்தெரு,
வடசேரி , நாகர்கோவில் - 629001

30/09/2013

Kindly, share this valuable information wherever possible.

1. If you see children Begging anywhere in INDIA , please contact:
"RED SOCIETY" at 9940217816. They will help the children for their studies.

2. Where you can search for any BLOOD GROUP, you will get thousand's of donor address.www.friendstosupport.org

3. Engineering Students can register in www.campuscouncil. com to attend Off Campus for 40 Companies.

4. Free Education and Free hostel for Handicapped/Physically Challenged children.
Contact:- 09842062501 09894067506.

5. If anyone met with fire accident or people born with problems in their ear, nose and mouth can get free PLASTIC SURGERY done by Kodaikanal PASAM Hospital .Everything is free. Contact : 045420-240668,245732
"Helping Hands are Better than Praying Lips"

6. If you find any important documents like Driving license, Ration card, Passport, Bank Pass Book, etc., missed by someone, simply put them into any near by Post Boxes. They will automatically reach the owner and Fine will be collected from them.

7. By the next 10 months, our earth will become 4 degrees hotter than what it is now. Our Himalayan glaciers are melting at rapid rate. So let all of us lend our hands to fight GLOBAL WARMING.
-Plant more Trees.
-Don't waste Water Electricity.
-Don't use or burn Plastics

8. It costs 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth.
"TREES DO IT FOR FREE"
"Respect them and Save them"

9. Special phone number for Eye bank and Eye donation:04428281919 and 04428271616(Sankara Nethralaya Eye Bank). For More information about how to donate eyes plz visit these sites.http://ruraleye.org/

10. Heart Surgery free of cost for children (0-10 yr) Sri Valli Baba Institute Banglore.
Contact : 09916737471

11. Medicine for Blood Cancer!!!!
'Imitinef Mercilet' is a medicine which cures blood cancer. It is available free of cost at "Adyar Cancer Institute in Chennai". Create Awareness. It might help someone.
Cancer Institute in Adyar, Chennai
Category: Cancer
Address:
East Canal Bank Road , Gandhi Nagar
Adyar
Chennai -600020
Landmark: Near Michael School
Phone: 044-24910754 044-24910754 , 044-24911526 044-24911526 , 044-22350241 044-22350241

12. Please CHECK WASTAGE OF FOOD
If you have a function/party at your home in India and food gets wasted, don't hesitate to call 1098 (only in India ) - Its not a Joke, This is the number of Child helpline.
They will come and collect the food. Please circulate this message which can help feed many children.
AND LETS TRY TO HELP INDIA BE A BETTER PLACE TO LIVE IN
Please Save Our Mother Nature for
"OUR FUTURE GENERATIONS"

With Regards,
TAMILNADU ILAIGNAR NARPANI IYAKKAM (Reg. No: 5/2012)

நேற்று(26 ஆகஸ்ட் 2013) அன்னை தெரசா அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு, நாகர்கோவில் பொன்னப்பநாடார் காலனியில் அமைந்துள்ள அ...
27/08/2013

நேற்று(26 ஆகஸ்ட் 2013) அன்னை தெரசா அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு, நாகர்கோவில் பொன்னப்பநாடார் காலனியில் அமைந்துள்ள அன்பு இல்லம் குழந்தைகளுக்கு தமிழ்நாடு இளைஞர் நற்பணி இயக்கத்தின் சார்பில் ஒருவேளை(இரவு) உணவு வழங்கப்பட்டது... இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் தமிழ்நாடு இளைஞர் நற்பணி இயக்கத்தின் நெஞ்சார்ந்த நன்றிகள்...

--
என்றும் மக்கள் சேவையில்,
"தமிழ்நாடு இளைஞர் நற்பணி இயக்கம்",
"இயன்றதை செய்வதே எங்கள் லட்சியம்"
(பதிவு எண் : 5 / 2012)
இரவிவர்மன் புதுத்தெரு,
வடசேரி , நாகர்கோவில் - 629001
Email : [email protected]

இன்று - ஆகஸ்டு 26 (1910) ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் தாயாக இருந்து பணி செய்த, அன்னை தெரசா பிறந்தநாள்...---என்றும் மக்கள...
26/08/2013

இன்று - ஆகஸ்டு 26 (1910) ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் தாயாக இருந்து பணி செய்த, அன்னை தெரசா பிறந்தநாள்...

---
என்றும் மக்கள் சேவையில்,
"தமிழ்நாடு இளைஞர் நற்பணி இயக்கம்",
"இயன்றதை செய்வதே எங்கள் லட்சியம்"
(பதிவு எண் : 5 / 2012)
இரவிவர்மன் புதுத்தெரு,
வடசேரி , நாகர்கோவில் - 629001

Address

Nagercoil

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு இளைஞர் நற்பணி இயக்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தமிழ்நாடு இளைஞர் நற்பணி இயக்கம்:

Share

Category