10/03/2026
#எல்லா_புகழும்_இறைவனுக்கே
நாகப்பட்டினம் மாவட்டம் தமுமுக ஏனங்குடி கிளையில் நடைபெற்ற இஃப்தார் மற்றும் ரமழான் அன்பளிப்பு நிகழ்ச்சி...
09/03/2025 அன்று தமுமுக மகளிர் பேரவை சார்பாக ஏனங்குடி கிளையில் தமுமுகவின் #முன்னாள் #மாவட்டசெயலாளர் #ஏனங்குடி_முஜிபுர்_ரஹ்மான் தலைமையில் இரண்டாம் வருடமாக இஃப்தார் மற்றும் ரமழான் அன்பளிப்பு நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.
மகளிர் அணி நிர்வாகிகள் ஏற்பாட்டில் நடைபெற்ற
இந்நிகழ்ச்சியில் 300 மேற்பட்ட பெண்கள் கலந்துக் கொண்டனர். கேதாரிமங்களம் பள்ளிவாசல் இமாம் அ.சாகுல் ஹமீது உலவி அவர்கள் சுவர்கத்து பெண்கள் எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார் அதனைத் தொடர்ந்து ஆதலையூர் அரபிக் கல்லூரி ஆசிரியர் ரமழானின் சிறப்புகள் பற்றியும், சகோதரி சுமையா தமுமுக மகளிர் அணியின் அவசியம் பற்றியும் விளக்கி பேசினர். மேலும் இந்த நிகழ்வில் ஆதலையூர் கரைப்பாக்கம் ஜமாஅத் நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், மமக தலைமை பிரதிநிதி நாகூர் ஜபருல்லாஹ், மமக மாநில மீனவரணி பொருளாளர் கல்லார் ரபீக், தஞ்சை மண்டல ஐடி விங் செயலாளர் நாகை நிஜாம், நாகை ஒன்றிய செயலாளர் ஆழியூர் ஜலால், முன்னாள் தமுமுக மாவட்ட செயலாளர் வடகரை பரகத் அலி, முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் சுலைமான், முன்னாள் மாவட்ட பொருளாளர் வேட்டை-இஸ்மாயில், ஐடி விங் முன்னாள் மாவட்ட செயலாளர் நாகூர் கமருதீன், திருமருகல் ஒன்றிய பொருளாளர் ஆதலையூர் சித்திக் மற்றும் தமுமுக ஏனங்குடி கிளை நிர்வாகிகள், அமமுக ஒன்றிய செயலாளர் செல்லராஜா மற்றும் ஆதலையூர் ஜமாஅத் தார்கள் என பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக சுமார் ரூ 30,000 மதிப்புள்ள புடவை,கைலி,டி-சேர்ட், வழங்கப்பட்டது.
இதற்காக உதவிய உழைத்த,பங்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் இறைவன் உடல் ஆரோக்கியத்தையும்,பரக்கத்தையும் வழங்குவானாக ஆமீன்...
தமுமுக, மமக
தகவல் தொழில்நுட்ப அணி
த.மு.மு.க ஏனங்குடி கிளை
நாகப்பட்டினம் மாவட்டம்