AN NOOR அறக்கட்டளை, நாகப்பட்டினம்

  • Home
  • India
  • Nagapattinam
  • AN NOOR அறக்கட்டளை, நாகப்பட்டினம்

AN NOOR அறக்கட்டளை, நாகப்பட்டினம் நாகை மாவட்ட ஏழை மக்களுக்கு உதவும் நோக்கில் ஏப்ரல் 2022-ல் ஆரம்பிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

03/04/2026

அந்-நூர் அறக்கட்டளை திருமண உதவி திட்டம் விளக்க காணொளி...

01/04/2026
ஏழை மக்களுக்கு ஓர் நற்செய்தி 🎉🎉🎉
01/04/2026

ஏழை மக்களுக்கு ஓர் நற்செய்தி 🎉🎉🎉

*السلام عليكم و رحمة الله و بركاته.....💐💐💐* அன்பிற்குரிய இஸ்லாமிய உறவுகளே!!! *ரமழான் கிட் 2️⃣0️⃣2️⃣6️⃣💐💐💐* கடந்த 2023, 2...
01/02/2026

*السلام عليكم و رحمة الله و بركاته.....💐💐💐*

அன்பிற்குரிய இஸ்லாமிய உறவுகளே!!!

*ரமழான் கிட் 2️⃣0️⃣2️⃣6️⃣💐💐💐*

கடந்த 2023, 2024 மற்றும் 2025 ஆகிய மூன்று வருடங்களிலும் ரமழானுக்கு மளிகை கிட் வழங்கியதை போல இன்ஷாஅல்லாஹ் இந்த வருடமும் ரமழானுக்கு *100 ஏழை குடும்பங்களுக்கு ₹2,500 ரூபாய் மதிப்புள்ள மளிகை கிட் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நன்மையில் தங்களையும் இணைத்துக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நமது அந்- நூர் அறக்கட்டளையின் பைத்துல்மால் பிரிவை தொடர்பு கொண்டு தங்களின் பங்களிப்பை தெரிவிக்கவும்...* இன்ஷாஅல்லாஹ்....🥰

குறிப்பு : *gpay, phonepe மற்றும் paytm மூலம் அனுப்புபவர்கள் ரமலான் கிட் 2026 என்று குறிப்பிட்டு அனுப்பவும்... இன்ஷா அல்லாஹ்...*

*அந்-நூர் அறக்கட்டளை நிர்வாகிகள் தொடர்புக்கு :*

*1️⃣V.I. அபூபக்கர்*
📞8489661661

*2️⃣செய்யது முபாரக்*
📞9092020923

*3️⃣நூருல் ஆமீன்*
📞9842564899

*4️⃣அப்துல்லாஹ் இப்னு ரஃபீக்*
📞9788259235

*5️⃣அர்ஷத்*
📞9003087478

*6️⃣ஹபீப் முஹம்மது (துபாய்)*

*7️⃣அஹ்மத் கபீர் (துபாய்)*

---------------------------------------------------------------------

*🎉🎉🎉அழகிய கடன்....*

اِنْ تُقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا يُّضٰعِفْهُ لَـكُمْ وَيَغْفِرْ لَـكُمْ‌ وَاللّٰهُ شَكُوْرٌ حَلِيْمٌۙ‏

🫵🏻🫵🏻🫵🏻 நீங்கள் *அல்லாஹ்வுக்கு அழகிய கடனாகக் கடன் கொடுத்தால்* ,

*அதை அவன் உங்களுக்காக இரட்டிப்பாக்குவான்;*

அன்றியும் அவன் *உங்களை மன்னிப்பான்* -

அல்லாஹ்வோ நன்றியை ஏற்பவன்; சகிப்பவன்.
(அல்குர்ஆன் : 64:17)

*((( குறிப்பு* : நாம் அல்லாஹ்வின் பாதையில் செலவழிக்கும் ஒரு ரூபாய் கூட *நாம் அவனுக்கு வழங்கும் கடன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்....*

*நிச்சயம் அவன் வாக்கு மீறாதவன்...😇😇😇*

*நாம் அவனுக்கு வழங்கிய கடனை இரட்டிப்பாக அல்லது பன்மடங்காக மாற்றி அடைப்பான்....❤️❤️❤️)))*

*எப்படி இரட்டிப்பாக, பன்மடங்காக ஆக்குவான்...🤔🤔🤔*

مَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِىْ كُلِّ سُنْبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ‌ وَاللّٰهُ يُضٰعِفُ لِمَنْ يَّشَآءُ‌ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏
*அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது:*

ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை🌾🌾🌾 முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; *அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;* இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.

(அல்குர்ஆன் : 2:261)

இப்படிக்கு,
*அந்-நூர் அறக்கட்டளை நிர்வாகம்,*
*நாகப்பட்டினம்.*

﷽நமது அந்நூர் அறக்கட்டளை (பைத்துல்மால் பிரிவு) ஏப்ரல் 2022-ல் ரமலான் மாதம் துவங்கப்பட்டு கடந்த 4️⃣ ஆண்டுகளாக வட்டி இல்லா...
29/01/2026



நமது அந்நூர் அறக்கட்டளை (பைத்துல்மால் பிரிவு) ஏப்ரல் 2022-ல் ரமலான் மாதம் துவங்கப்பட்டு கடந்த 4️⃣ ஆண்டுகளாக வட்டி இல்லா கடன் உதவித் திட்டம், ஜகாத் விநியோகம், மாதந்திர மருத்துவ உதவி, அவசர மருத்துவ உதவி, கல்வி உதவி, மாதாந்திர மளிகை பொருட்கள் மற்றும் ரமழான் மளிகை பொருட்கள் போன்ற பணிகளை நாகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் ஏழை எளிய மக்களுக்காக செய்து வருகிறது என்பதை தாங்கள் அறிவீர்கள்...

இதுவரை நமது அறக்கட்டளை மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்து இருக்கின்றனர்....

அல்ஹம்துலில்லாஹ்....

*நமது திட்டங்கள் உங்கள் கவனத்திற்கு....*

*⚪️வட்டியில்லா கடன் உதவி திட்டம்...🫱🏻‍🫲🏻🫱🏻‍🫲🏻🫱🏻‍🫲🏻*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வட்டி இல்லா கடன் உதவி திட்டத்தில் சுழற்சி முறையில் இதுவரை 100-ற்கும் மேற்பட்ட நபர்கள் பயனடைந்திருக்கின்றனர்.

*⚪️ஜகாத் விநியோக திட்டம்...💰💰💰*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நீங்கள் வழங்கும் ஜகாத் நிதிகளை ஜகாத் பெற தகுதியுடைய மக்களை மிக கவனமாக கண்டறிந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஜகாத் விநியோக திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 40 க்கும் மேற்பட்ட நபர்கள் வரை பயனடைந்து இருக்கின்றனர். வட்டியிலிருந்து முழுமையாக மீள்வதற்காக ஜகாத்தை கொண்டு ஒரே ஒரு குடும்பத்திற்கு மட்டும் இதுவரை உதவி செய்திருக்கிறோம் என்பதை மீண்டும் நினைவுப்படுத்துகிறோம்.

தங்களின் ஜகாத் நிதிகளை தாராளமாக நமது அறக்கட்டளையின் பைத்துல்மால் பிரிவிற்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அதன் மூலம் ஜகாத் பெற தகுதியுடைய ஏழை மக்கள் பலர் பயனடைவார்கள் என்பதோடு வட்டியில் சிக்கி மனம் திருந்தி அதிலிருந்து மீள நினைக்கும் மக்களும் முடிந்த அளவு மீட்கப்படுவார்கள் என்பதையும் தெரியப்படுத்துகிறோம் இன்ஷா அல்லாஹ்...

*⚪️மருத்துவ உதவி மற்றும் கல்வி உதவி திட்டம்...🎓🚑🛡️🩺*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தேவையுடைய மக்களுக்கு மருத்துவ உதவித் தொகையும், கல்வி உதவித் தொகையும் அறக்கட்டளையின் பைத்துல்மால் நிதி மூலமும், சில சமயம் பொதுமக்களிடம் வசூல் செய்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை ₹3,00,000 லட்சங்களுக்கும் மேலாக இந்த உதவிகள் செய்யப்பட்டுள்ளன.

*⚪️மாதாந்திர மளிகை பொருட்கள் திட்டம்...🛒🛒🛒*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மாதம் மாதம் 25 ஏழை குடும்பங்களுக்கு ₹1200 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அறக்கட்டளை ஆரம்பித்த முதல் வருடம் மாதம் 3 குடும்பங்களுக்கு மட்டுமே மாதாந்திர மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் பேருதவியால் நான்கு ஆண்டுகளில் 25 குடும்பங்களுக்கு மாதாந்திர மளிகை பொருட்கள் வழங்கும் சக்தியை வல்ல அல்லாஹ் உங்களைப் போன்ற கொடையுள்ளம் கொண்ட மக்கள் மூலம் ஏற்படுத்தி இருக்கிறான். மேலும், இந்த திட்டத்தை இன்னும் விரிவுபடுத்த உங்களது ஆதரவையும் துஆவையும் எதிர்பார்க்கிறோம். இன்ஷா அல்லாஹ்...

*⚪️வட்டியில் இருந்து மீட்கும் திட்டம்...↩️↩️↩️*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இத்திட்டத்தில் ஆரம்பமாக ₹25,000 ரூபாய்க்குள் வங்கியில் வட்டிக்கு வைக்கப்பட்டிருக்கும் நகைகளை மீட்டு அதை நமது அறக்கட்டளையின் பைத்துல்மால் பிரிவில் வட்டியில்லா கடனுதவி திட்டத்தின் கீழ் கொண்டு வந்து அக்கடனை நம் பைத்துல்மாலில் வட்டியில்லாமல் அடைத்து நகையை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்...

*⚪️திருமணம் முடிக்க வசதி இல்லாத ஏழை குடும்பங்களுக்கான திருமண உதவி...💍🎊🪄🎀*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அல்லாஹ்வின் பேருதவியால் இந்த வருடம் 2026 முதல் திருமணம் முடிக்க சக்தி இல்லாமல் மற்றும் போதுமான வசதி இல்லாமல் வாழும் ஏழை குடும்பங்களை கண்டறிந்து அவர்களின் திருமணத்திற்கு தேவையான உதவிகளை நமது சக்திக்கு உட்பட்டு செய்து கொடுப்போம் என்று அறக்கட்டளையால் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு 5 குடும்பங்கள் என தேர்வு செய்து உதவிகள் வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்....

*⚪️ரமழான் கிட் 🌙...*
~~~~~~~~~~~~~~~~~~

கடந்த 2023, 2024 மற்றும் 2025 ஆகிய மூன்று ஆண்டுகளும் ரமலான் மாதத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு ₹2,500 ரூபாய் மதிப்புள்ள ரமலானுக்கு தேவையான மளிகை பொருட்கள் நிறைந்த கிட் வழங்கப்பட்டது. இது ஒவ்வொரு வருட ரமலானிலும் தொடர்ச்சியாக நடைபெறும் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். அல்ஹம்துலில்லாஹ்...

இப்பணிகளை ஆரம்பத்தில் நம் நாகப்பட்டினம் மக்களை மட்டுமே கவனத்தில் கொண்டு செய்து வந்தோம். ஆனால், பிந்தைய வருடங்களில் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு நாகப்பட்டினம் மக்கள் மட்டும் எனும் இந்த வட்டத்தை கொஞ்சம் விரிவு படுத்தலாம் என்கிற அடிப்படையில் வடக்கே நாகூர் வரையிலும், தெற்கே வேளாங்கண்ணி வரையிலும், மேற்கே ஆலியூர் வரையிலும் வட்டத்தை விரிவுப்படுத்தி இருக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்...

*இந்த பணிகள் அனைத்தும் நல்லுள்ளம் கொண்ட உங்களை போன்ற மக்களின் ஜகாத், சந்தாக்கள் மற்றும் நன்கொடைகளை வைத்தே செய்யப்படுகின்றன.*

மேலும், இப்பணிகள் தொடர்ச்சியாகவும் சிறப்பாகவும் நடைபெற தங்களின் ஜகாத்தையும், சந்தாக்களையும் மற்றும் நன்கொடைகளையும் வாரி வழங்கி எங்களுக்கு உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உங்களின் ஜகாத், நன்கொடைகள் மற்றும் சந்தாக்கள் மறுமையின் சேமிப்பாக மாறவும், உங்களின் தர்மம் தர்மங்களிலேயே மகத்தான தர்மமாக மாறவும் அல்லாஹ் அருள் செய்வானாக.... ஆமீன்...

*மகத்தான தர்மம்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! மகத்தான தர்மம் எது?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் உடல் நலமுள்ளவராகவும், பணத்தேவை உள்ளவராகவும், வறுமையை அஞ்சி, செல்வத்தை எதிர்பார்த்தவராகவும் இருக்கும்போது நீங்கள் செய்யும் தர்மமமே (மகத்தான தர்மம் ஆகும்). உயிர் தொண்டைக்குழியை அடைந்துவிட்டிருக்க, இன்ன மனிதருக்கு இவ்வளவு (கொடுங்கள்); இன்ன மனிதருக்கு இவ்வளவு (கொடுங்கள்)" என்று சொல்லும் (நேரம் வரும்)வரை தர்மம் செய்வதைத் தள்ளிப்போடாதீர்கள்! ஏனெனில், அப்போது உங்கள் செல்வம் (வாரிசாகிய) இன்ன மனிதருக்கு உரியதாகிவிட்டிருக்கும்" என்று பதிலளித்தார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம் : 1870)

*நிர்வாகிகள் தொடர்புக்கு

*1️⃣V.I. அபூபக்கர்*
📞8489661661

*2️⃣செய்யது முபாரக்*
📞9092020923

*3️⃣நூருல் ஆமீன்*
📞9842564899

*4️⃣அப்துல்லாஹ் இப்னு ரஃபீக்*
📞9788259235

*5️⃣அர்ஷத்*
📞90030 87478

*6️⃣ஹபீப் முஹம்மது (துபாய்)*

*7️⃣அஹ்மது கபீர் (துபாய்)*

*நமது பணிகளை அறிய இணைந்திருங்கள் இன்ஷாஅல்லாஹ் 👇🏻👇🏻👇🏻*

*🪀நமது புதிய வாட்ஸ்ஆப் channel - ல் இணைய 👇🏻👇🏻👇🏻*

https://whatsapp.com/channel/0029Va4eCjM9cDDgPBA9Tq2j

*🪀வாட்ஸ்ஆப்பில் குழுமத்தில் இணைய 👇🏻👇🏻👇🏻*

https://chat.whatsapp.com/JUUYgAbMGqZCDmRMKif94v

*🌎முகநூல் (facebook) பக்கத்தில் இணைய:👇🏻👇🏻👇🏻*

https://www.facebook.com/profile.php?id=100083564056413&mibextid=ZbWKwL

இப்படிக்கு,
*அந்-நூர் அறக்கட்டளை,*
*பைத்துல்மால் பிரிவு,*
*நாகப்பட்டினம் - 611001* .

﷽வசூல் முடிந்தது (05/01/26) *👉🏻அவர்களுக்கு தேவைப்பட்ட மொத்த தொகை : 2,00,000* *📥மூன்று நாட்களில் வசூல் ஆன தொகை – ₹79,200*...
05/01/2026



வசூல் முடிந்தது (05/01/26)

*👉🏻அவர்களுக்கு தேவைப்பட்ட மொத்த தொகை : 2,00,000*

*📥மூன்று நாட்களில் வசூல் ஆன தொகை – ₹79,200*

*💰அவர்களின் பற்றாக்குறை தொகை : ₹1,20,800*

*குறிப்பு* : நாம் சொல்லியிருந்தது போல் வசூல் நேற்றுடன் முடிக்கப்பட்டது. மேலும் உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் அறக்கட்டளையை தொடர்பு கொண்டு உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நமது பணிகளை அறிய இணைந்திருங்கள் இன்ஷாஅல்லாஹ் 👇🏻👇🏻👇🏻*

*🪀நமது புதிய வாட்ஸ்ஆப் channel - ல் இணைய 👇🏻👇🏻👇🏻*

https://whatsapp.com/channel/0029Va4eCjM9cDDgPBA9Tq2j

*🪀வாட்ஸ்ஆப்பில் குழுமத்தில் இணைய 👇🏻👇🏻👇🏻*

https://chat.whatsapp.com/JUUYgAbMGqZCDmRMKif94v

*🌎முகநூல் (facebook) பக்கத்தில் இணைய:👇🏻👇🏻👇🏻*

https://www.facebook.com/profile.php?id=100083564056413&mibextid=ZbWKwL

இப்படிக்கு,
*அந்–நூர் அறக்கட்டளை நிர்வாகம்,*
நாகப்பட்டினம்.

﷽ *💰உதவிடுங்கள்... உதவி செய்யப்படுவீர்கள்...* பதிவு நாள் மூன்று கடைசி பதிவு (04/01/26) *👉🏻மொத்தம் தேவையான தொகை : 2,00,00...
04/01/2026



*💰உதவிடுங்கள்... உதவி செய்யப்படுவீர்கள்...*

பதிவு நாள் மூன்று கடைசி பதிவு (04/01/26)

*👉🏻மொத்தம் தேவையான தொகை : 2,00,000*

*📥இதுவரை வசூல் ஆகி இருக்கும் தொகை – ₹53,600*

*💰மீதம் தேவைப்படும் தொகை : ₹1,46,400*

குறிப்பு : இன்றுடன் அவர்களுக்கான வசூல் முடிக்கப்பட்டு விடும்.

*இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:*

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். *தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான்.* *ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான்.* ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான்.

*(ஸஹீஹ் புகாரி : 2442)*

இப்படிக்கு,
*அந்–நூர் அறக்கட்டளை நிர்வாகம்,*
நாகப்பட்டினம்.

﷽ *உதவி செய்யுங்கள்...* பதிவு நாள் இரண்டு (03/01/26) *👉🏻மொத்தம் தேவையான தொகை : 2,00,000* *📥இதுவரை வசூல் ஆகி இருக்கும் தொ...
03/01/2026


*உதவி செய்யுங்கள்...*

பதிவு நாள் இரண்டு (03/01/26)

*👉🏻மொத்தம் தேவையான தொகை : 2,00,000*

*📥இதுவரை வசூல் ஆகி இருக்கும் தொகை – ₹25,440*

*💰மீதம் தேவைப்படும் தொகை : ₹1,74,560*

﷽இந்த மருத்துவ உதவிக்கான தொகைகள் மூன்று நாட்கள் மட்டுமே வசூல் செய்யப்படும். இன்ஷா அல்லாஹ்...சரியாக *04/01/26* அன்று கடைச...
02/01/2026



இந்த மருத்துவ உதவிக்கான தொகைகள் மூன்று நாட்கள் மட்டுமே வசூல் செய்யப்படும். இன்ஷா அல்லாஹ்...

சரியாக *04/01/26* அன்று கடைசி நாள் ஆகும்.

சகோதரர்கள் தங்களின் தர்மங்களை தாராளமாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*💰மகத்தான தர்மம் :🪙*
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! மகத்தான தர்மம் எது?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் உடல் நலமுள்ளவராகவும், பணத்தேவை உள்ளவராகவும், வறுமையை அஞ்சி, செல்வத்தை எதிர்பார்த்தவராகவும் இருக்கும்போது நீங்கள் செய்யும் தர்மமமே (மகத்தான தர்மம் ஆகும்). உயிர் தொண்டைக்குழியை அடைந்துவிட்டிருக்க, இன்ன மனிதருக்கு இவ்வளவு (கொடுங்கள்); இன்ன மனிதருக்கு இவ்வளவு (கொடுங்கள்)" என்று சொல்லும் (நேரம் வரும்)வரை தர்மம் செய்வதைத் தள்ளிப்போடாதீர்கள்! ஏனெனில், அப்போது உங்கள் செல்வம் (வாரிசாகிய) இன்ன மனிதருக்கு உரியதாகிவிட்டிருக்கும்" என்று பதிலளித்தார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம் : 1870)

இப்படிக்கு,
*அந்-நூர் அறக்கட்டளை (பைத்துல்மால் பிரிவு)*

*بسم الله الرحمن الرحيم...💐💐💐* *பதிவு நாள் : 02.10.25* *இன்று 6 ஆவது கீமோ ஊசிக்கான தொகை செலுத்தப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...
02/10/2025

*بسم الله الرحمن الرحيم...💐💐💐*

*பதிவு நாள் : 02.10.25*

*இன்று 6 ஆவது கீமோ ஊசிக்கான தொகை செலுத்தப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...*

*மருத்துவர் பரிந்துரைத்த 6 – கீமோ ஊசிகளும் போடப்பட்டு விட்டது...*

அல்ஹம்துலில்லாஹ்...

*அவர்களுக்கு அல்லாஹ் பரிபூரண சுகத்தை வழங்குவானாக, அவர்களின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துவானாக... ஆமீன்...*

*இதற்கு வாரி வழங்கிய அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலிகளை வழங்குவானாக... வாழ்வாதாரங்களை விசாலமாக்குவானாக... ஆரோக்கியத்தையும் அபிவிருத்தையும் ஏற்படுத்துவானாக... ஆமீன்...*

இப்படிக்கு,
*அந்–நூர் அறக்கட்டளை,*
*பைத்துல்மால் பிரிவு,*
*நாகப்பட்டினம்.*

*அல்ஹம்துலில்லாஹ்...*  *5 ஆவது கீமோ ஊசிக்கான தொகை செலுத்தப்பட்டது...* (September) *அல்ஹம்துலில்லாஹ்...*  *இன்னும் மீதம் ...
06/09/2025

*அல்ஹம்துலில்லாஹ்...*

*5 ஆவது கீமோ ஊசிக்கான தொகை செலுத்தப்பட்டது...* (September)

*அல்ஹம்துலில்லாஹ்...*

*இன்னும் மீதம் 1 ஊசி உள்ளது...*

﷽ *💉💊🩺🩹🛡️மாதாந்திர மருத்துவ உதவி 💉💊🩺🩹🛡️ :* நமது அந்-நூர் பைத்துல்மால் மூலம் *2025 ஆகஸ்ட் மாதத்திற்கான மருத்துவ உதவி 6️⃣ ...
26/08/2025



*💉💊🩺🩹🛡️மாதாந்திர மருத்துவ உதவி 💉💊🩺🩹🛡️ :*

நமது அந்-நூர் பைத்துல்மால் மூலம் *2025 ஆகஸ்ட் மாதத்திற்கான மருத்துவ உதவி 6️⃣ நபர்களுக்கு* செய்யப்பட்டது.

மொத்தம் *₹8,200 ரூபாய் (₹1000 + ₹1000 + ₹1000 + ₹1200 + ₹2000 + ₹2000 ) மாதாந்திர மருத்துவ உதவி* செய்யப்படுகிறது. அல்ஹம்துலில்லாஹ்...

Address

18, புதுப்பள்ளி ரோடு
Nagapattinam
611001

Alerts

Be the first to know and let us send you an email when AN NOOR அறக்கட்டளை, நாகப்பட்டினம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category