நம்ம முத்தூர்

நம்ம முத்தூர் முத்தூர் is a panchayat town in Kangeyam taluk in Tirupur district,
(3)

மிருகங்கள் கூட தன்னோட குழந்தைக்கு ஆபத்துனா தான் உயிர குடுத்து தன்னோட குட்டிக்கு மறு உயிர் குடுக்கும்டா ஆனா இந்த மனித ந...
01/06/2026

மிருகங்கள் கூட தன்னோட குழந்தைக்கு ஆபத்துனா தான் உயிர குடுத்து தன்னோட குட்டிக்கு மறு உயிர் குடுக்கும்டா

ஆனா இந்த மனித நா**ய்ங்க ஒரு பச்ச குழந்தைய ஒரு அல்ப சுகத்துக்காக கொடுமை படுத்தி கொ**ன்னுருக்காய்ங்க
அந்த இரண்டு

நா**ய்ங்களையும் கல்ல விட்டுஅடிச்சே
கொ**ல்லுங்க தயவு செய்து

இனி இந்த நஞ்சு கலந்த பூமியில் பிறக்காதே செல்லமே
உனக்கான உலகம் மேலே உள்ளது அங்கேயே இருந்து விடு தங்கமே 😭




 இரண்டு கைகளும் உடைந்த நிலையில் இருந்தும், அந்தக் குழந்தையின் முகபாவனையைப் பாருங்கள். சில நேரங்களில் அதுவே கடவுள் போலத் ...
01/06/2026


இரண்டு கைகளும் உடைந்த நிலையில் இருந்தும், அந்தக் குழந்தையின் முகபாவனையைப் பாருங்கள். சில நேரங்களில் அதுவே கடவுள் போலத் தோன்றுகிறது. இல்லையெனில், உண்மையிலேயே ஒரு கடவுள் இருந்திருந்தால் இப்படிப்பட்ட கொடுமை நடந்திருக்குமா என்ற கேள்வி மனதை வதைக்கிறது.

குற்றம் சாட்டப்பட்ட அஷ்கர் அந்தக் குழந்தையை கொலை செய்ததாக கூறப்படுகிறது. அஷ்கருடன் தொடர்புடைய மற்றொரு பெண்ணின் மரணமும் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பின்னர் அவர் திருமணம் செய்த பெண் 13 மாதங்கள் கோமா நிலையில் இருந்ததாகவும், தற்போது மறுவாழ்வு மையத்தில் வாழ்க்கைக்காக போராடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொடூரமான தாக்குதல்களுக்கு ஆளான அந்தப் பெண் ஆறு முறை நெடுமங்காடு காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்திருந்தும், ஒரு எஃப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுவது மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயமாகும். இந்தப் புகார்கள் அளிக்கப்பட்ட காலங்களில் இருந்த அனைத்து காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடுகளும் விசாரிக்கப்பட்டு, தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுகிறது.

இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும், இரண்டு கைகளும் உடைந்த நிலையில் இருக்கும் ஒரு தேவதைக் குழந்தையைத்தான் காண முடிகிறது. வெறும் ஒன்றரை வயது குழந்தை மீது நடத்தப்பட்ட இந்த ஒப்பிட முடியாத கொடுமை மனதை நொறுக்குகிறது. மனிதர்களால் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்ள முடியுமா என்ற கேள்வியே நம்மை உலுக்குகிறது.

01/06/2026

சாமியாட்டம்!!

பிறப்பதற்கும் முன்பே தந்தையை இழந்த குழந்தை… பிறந்த பிறகு தந்தையின் குடும்பத்தாரிடமிருந்து பிரிக்கப்பட்டது… இறுதியில் தன்...
01/06/2026

பிறப்பதற்கும் முன்பே தந்தையை இழந்த குழந்தை… பிறந்த பிறகு தந்தையின் குடும்பத்தாரிடமிருந்து பிரிக்கப்பட்டது… இறுதியில் தன்னைக் காப்பாற்ற வேண்டியவர்களின் கைகளில் கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்தது.

நெடுமங்காட்டைச் சேர்ந்த ஒன்றரை வயது சிறுவன் அர்ஷித்தின் கதை வெளிவரும் ஒவ்வொரு நாளும் மனதை இன்னும் கனக்கச் செய்கிறது.

குழந்தையின் பிறப்பு பற்றிய தகவல்கூட அவன் தாத்தா சுனிலுக்கு தெரியாது. பேரனின் புகைப்படங்களையும் தகவல்களையும் அவர் சமூக வலைதளங்களின் மூலமே அறிந்திருந்தார். தனது மகனின் ஒரே வாரிசை ஒருமுறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் அவருக்கு நிறைவேறவில்லை. குழந்தை உயிரிழந்த பிறகுதான் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் தனது பேரனை முதன்முறையாக நேரில் பார்த்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் யாருடைய கண்களையும் கலங்க வைக்கும்.

அர்ஷித்தின் தந்தை அகில் உயிரிழந்தபோது, அகிலா மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார். பின்னர் அவர் அஷ்கருடன் வாழத் தொடங்கினார். அதன் பின்னர்தான் குழந்தையின் வாழ்க்கை துயரங்களால் நிரம்பியது என உறவினர்கள் கூறுகின்றனர்.

அகிலா நடன நிகழ்ச்சிகளுக்காக பல இடங்களுக்கு செல்லும் போது, குழந்தையை அடிக்கடி ஒரு நடன ஆசிரியரிடம் விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. அஷ்கர் குழந்தையை விரும்பவில்லை என்றும், அடிக்கடி துன்புறுத்துவதாகவும் அந்த ஆசிரியர் தாத்தா சுனிலிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

குழந்தையைத் துறக்க முயன்றதாகவும் தகவல் கிடைத்தபோது, தனது பேரனின் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த சுனில், அவனை காப்பாற்ற பல முயற்சிகள் மேற்கொண்டார். குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். இறுதியில் அர்ஷித்தை தந்தையின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க ஒப்புதல் கிடைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த ஒப்படைப்பு நடைபெற சில நாட்களே இருக்கும் நிலையில், அந்த சிறுவனின் வாழ்க்கை துயரமாக முடிந்தது.

குழந்தை அனுபவித்ததாக கூறப்படும் கொடுமைகள் வெளிவரும்போது மனித மனசாட்சியே உறைந்து போகும். உடலின் பல பகுதிகளில் காயங்கள், தீக்காயங்கள் மற்றும் பழைய தாக்குதல்களின் அடையாளங்கள் இருந்ததாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு குழந்தை பசித்தாலும் அழும், தூக்கம் வந்தாலும் அழும், உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் அழும். ஆனால் அர்ஷித்தின் அழுகையை கேட்க யாரும் இல்லை. அவன் வலியை உணர யாரும் இல்லை. அவன் பயத்தை புரிந்து கொள்ள யாரும் இல்லை.

மிகவும் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், அவனை அன்புடன் வளர்க்கத் தயாராக இருந்த ஒரு தாத்தா உயிருடன் இருந்தார். அந்த தாத்தாவின் கைகளுக்கு அவன் சென்றிருந்தால் இன்று உயிருடன் இருந்திருப்பானோ என்ற கேள்வி பலரின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்.

இன்று அர்ஷித் இல்லை. ஆனால் அவன் அனுபவித்த வேதனைகளும், அவனை காப்பாற்ற போராடிய தாத்தாவின் கண்ணீரும் சமூகத்தின் நினைவில் நிலைத்திருக்க வேண்டும்.

பேரனை உயிருடன் ஒருமுறையாவது பார்க்க முடியாமல் போன தாத்தாவின் வேதனையும், அன்பும் பாதுகாப்பும் தேடி அமைதியாக காத்திருந்த அர்ஷித்தின் வாழ்க்கையும் மக்களின் மனசாட்சியில் அழியாத காயமாகவே இருக்கும்.

🕯️ அர்ஷித்துக்கு நீதி கிடைக்கட்டும். 💔



see 1st comment

01/06/2026

கொடுமுடி அருகே 70cent இடம் விற்பனைக்கு!!

01/06/2026

மடாமேடு பழனி ஆண்டவர் காவடி குழு!!

இரு மரணங்கள் – சமூகத்தின் இருவித நிலைப்பாடுகள்!நடிகரும், கலை உலக மேதாவியுமான சத்யேந்திராவின் மறைவு. பிரபல நடிகர் அஜித்தி...
30/05/2026

இரு மரணங்கள் – சமூகத்தின் இருவித நிலைப்பாடுகள்!

நடிகரும், கலை உலக மேதாவியுமான சத்யேந்திராவின் மறைவு. பிரபல நடிகர் அஜித்தின் தயார் மோகினியின் மறைவு.

இவை இரண்டையும் இந்தச் சமூகம் எப்படி அணுகியது என்பது பல பட்டவர்த்தனமான உண்மைகளை நமக்கு முகத்தில் அறைந்தார் போலப் படம் பிடித்துக் காட்டுகிறது;

யேங்கப்பா! எத்தனையெத்தனை வித உருக்கமான பதிவுகள் மறைந்த கலைஞன் சத்யேந்திரா குறித்து!

உலக சினிமாக்களை கரைத்துக் குடித்தவர், சினிமா அறிவு நிரம்பப் பெற்றவர்.

பன் மொழிப் புலமையாளர், பாசாங்குத்தனமற்ற நிஜமான மனிதன், சினிமாவையே உயிர்மூச்சாகக் கருதி வாழ்ந்த ஒரு ஏழைக் கலைஞன் என்பது தான் அவர் குறித்து பலரும் வெளியிட்ட பதிவுகளின் சாராம்சம்.

ஒரு பத்திரிகையாளன் என்ற வகையில் 1988 தொடங்கி நானும் இவரை ஓரளவு அறிவேன்.

ரஷ்யன் கல்சுரல் செண்டர், மாக்ஸ்முல்லர் பவன், தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை திரையரங்கு, அமெரிக்க தூதரக நூலகம் ஆகிய இடங்களில் இவர் எனக்கு ஓரளவு பரிச்சயமானார்.

எல்லோரும் எழுதிக் குவித்து என்ன பயன்?

முக நூல்கள் முழுவதும் நிரம்பி வழிகின்ற அளவுக்கு பல பதிவுகள் வந்ததையடுத்து மெயின்ஸ்டீரீம் ஊடகங்களும் சத்யேந்திராவை பற்றி எழுதி தள்ளிவிட்டன.

ஆனால், 40 ஆண்டுகளுக்கும் மேலாக கலைத் துறையில் இயங்கிய ஒரு அறிவார்ந்த கலைஞனின் உடலை அடக்கம் செய்ய அந்தத் துறை சார்ந்த அமைப்புகளோ, தனி நபர்களோ யாரும் முன்வரவில்லை என்ற யதார்த்தம், சமூகத்தின் முகத்தில் பேயறைந்தார் போல பேரதிர்ச்சி தருகிறது.

பணம் இல்லாதவன் இறந்தால், அவன் பிணத்திற்கு என்ன மரியாதை? என்பது சத்யேந்திரா மரணத்தில் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுவிட்டது.

நடிகர் சங்கத்தில் உறுப்பினர் இல்லையாம்!

நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சுமார் ஒன்றே கால் லட்சம் கட்ட வேண்டும். அவரிடம் ஏது பணம் என்றார், சினிமா பத்திரிகையாளர் சரவணன்.

நடிகர் சங்கத்தில் உறுப்பினர் இல்லையென்றாலும், சத்யேந்திரா ஒரு நடிகர் என்பதும் சுமார் 150 படங்கள் வரை நடித்தவர் என்பதும் பொய்யாகிவிடுமா? என்ன?

ஆனால், சத்யேந்திராவை அறிவு ஜீவித்தனமான நடிகர்கள் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் இன்றைக்கு பிரபல்மாக இருக்கும் சுமார் ஒரு டஜன் நடிகர்கள் சத்யேந்திராவிடம் மணிக் கணக்கில் உலக சினிமா குறித்து உரையாடி தகவல்கள் பெற்றுள்ளனர்.

அவ்வளவு ஏன்? நடிகர் சங்கத் தலைவர் நாசர், சத்யேந்திராவை மிக நன்றாக அறிவார்.

நாசருக்கு சத்யேந்திராவுடன் பல வருட பழக்கம் உள்ளது என்பது திரையுலகில் பலருக்கும் தெரியும். ஆனாலும் நாசர் ஒரு இரங்கல் அறிக்கை கூட தந்ததாகத் தெரியவில்லை.

பிரேமலதா ஒருவர் தான் சத்யேந்திரா மறைவுக்கு அஞ்சலி அறிக்கை தந்த ஒரே பிரலபமாகும்.

ஒரு அற்புதமான அனாதைக் கலைஞனை எடுத்து நடிகர் சங்கம் அடக்கம் செய்திருக்கக் கூடாதா..? என்ற ஆதங்கம் மனதை வாட்டுகிறது.

சத்யேந்திராவை அனாதைகளை அடக்கம் செய்யும் உதவும் கரங்கள் எடுத்து செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலை உருவானதை எப்படி புரிந்து கொள்வது?

இதோ நடிகர் அஜித்தின் தாயர் மறைவுக்கு போட்டி போட்டுக் கொண்டு திரையுலக அமைப்புகளும், பிரபலங்களும் வரத் தயார் ஆகிறார்கள் என்பதை அறிந்து அஜித் தன் மானேஜர் மூலம் யாரும் வர வேண்டாம் போனில் தொடர்பு கொண்ட அனைவருக்கும் ஸ்டிரிக்டாக சொல்லச் சொல்லி உள்ளார்.

தன் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே வந்தால் போதுமானது என்பது அவர் நிலைபாடாக இருந்த போதிலும் திரையுலகில் நாசர் உள்ளிட்ட பலரும், சில அரசியல்வாதிகளும் வலிந்து சென்று அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

எல்லா கட்சித் தலைவர்களும் இரங்கல் அறிக்கை தந்துள்ளனர். இந்த இரங்கலின் நோக்கம் ஒரு பிரபல நடிகரின் இறப்பில் தாங்களும் வெளிச்சம் அடைய வேண்டும் என்பது மாத்திரமல்ல, அவரது லட்சோப லட்ச ரசிகர்களின் நன் மதிப்பையும், ஆதரவையும் பெறுவது தான்.

ஊடகங்களை அஜித் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை என்றாலும் வாசலில் நின்று கொண்டு போவோர், வருவோரைக் காட்டி நேரலை செய்கின்றன, தொலிஅகாட்சி ஊடகங்கள்!

இந்த சினிமா உலகத்தின் போலித்தனமான அனுதாபங்கள் தனக்கு தேவையில்லை என உறுதியாக இப்படி ஒரு நிலைபாடு எடுக்கும் துணிச்சல் அஜித்தை தவிர யாருக்கும் வராது..என்று தான் தோன்றுகிறது.

அஜித்தின் தாயார் மோகினி தன் குடும்பத்திற்காக, தன் கணவர், தன் பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து மறைந்த எல்லா அம்மாக்களையும் போன்ற ஒரு சாதாரணக் குடும்பத் தலைவி. இது தவிர அவரை குறித்து யாருக்கும் எதுவும் தெரியாது.

ஒரு பிரபல கதையில் ஒரு செல்வக்கான அதிகாரி வளர்க்கும் அவரது செல்ல நாய் இறந்து போனதற்கு அந்த ஊரே திரண்டு சென்று சென்று வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தியதாம்.

அந்த அதிகாரி ஓய்வு பெற்ற அடுத்த நாளே இறந்து போனாராம். அப்போது எந்த ஒரு நாயும் கூட அந்த ஊரில் அவருக்கு அஞ்சலி செலுத்த போகவில்லையாம்.

இது தான் இன்றைய உலகின் யதார்த்தம் மாத்திரமல்ல, என்றைக்கும் மாறாத யதார்த்தம்.

அங்கீகாரமின்றி வாழ்ந்து மறைந்தாலும், தன்னைக் குறித்து பலரும் சிந்தித்து, வருந்தி நினைக்கத்தக்க ஒரு வாழ்க்கையை சத்தியேந்திரா வாழ்ந்துள்ளார் என்பது நிஜம்.

சாவித்திரி கண்ணன்

நன்றி: அறம் இணைய இதழ்

#நடிகர்சத்யேந்திரா #சத்யேந்திரா #அஜித் #மோகினி #இரங்கல் #அஞ்சலி #நினைவஞ்சலி #தமிழ்சினிமா #திரையுலகம் #நடிகர்சங்கம் #ஊடகங்கள் #வாழ்க்கை #அங்கீகாரம் #திரைப்படசெய்திகள் #மரியாதை #சினிமாநினைவுகள்

30/05/2026

more updates follow

admission going on!!

 #முத்தூர்
29/05/2026

#முத்தூர்




























நாச்சிமுத்து கவுண்டர் மகன் பண்ணையார் என்கிற வெங்கடேஷ் அவர்கள் இயற்கை எய்தினார் (19/05/26)
29/05/2026

நாச்சிமுத்து கவுண்டர் மகன் பண்ணையார் என்கிற வெங்கடேஷ் அவர்கள் இயற்கை எய்தினார் (19/05/26)

Address

2PWP+3MM, Muthur
Muttur
638105

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம முத்தூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share