29/05/2025
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி வட்டம் 1434-ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம்(ஜமாபந்தி) வருவாய் தீர்வாய அலுவலர் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் தலைமையில் முசிறி வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் குடிகள் மாநாடு நடைப்பெற்றது...
இதில் சமூக ஆர்வலர்கள் சார்பாக கலந்துகொண்டு மக்களின் பல்வேறு அடிப்படை பிரச்னைகளை சரிசெய்து தீர்வுகான வேண்டுமென்று வலியுறுத்தி பேசினேன்...
கோரிக்கைகள்
1,திருத்திமலை ஏரிக்கு அய்யாற்றிலிருந்து புதிய வாய்க்கால்
எடுத்து தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2, கோமங்கலம் ஏரி தூர்வாருதல்
3, த.புத்தூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் அமைக்க கோரி
4,முசிறி சேலம் சாலையில் இருபுறமும் உள்ள இரண்டு அரசு மது கடைகளையும் இடமாற்றம் செய்ய என பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.