We The Leaders - Mudukulathur

We The Leaders - Mudukulathur அறம் செய்ய விரும்பு.

முதுகுளத்தூர் சட்டமன்ற மக்களின் மாற்றத்திற்கான தளம்.

17/07/2026
15/07/2026
15/07/2026

எளிமையே அடையாளமாகவும், மக்கள் சேவையே அரசியலாகவும் வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த தினம் இன்று.

அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன், ஆயிரக்கணக்கான பள்ளிகளை உருவாக்கி, மதிய உணவுத் திட்டத்தின் மூலம் ஏழை குழந்தைகளின் கல்விப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்த அவரது தொலைநோக்கு பார்வை, பல தலைமுறைகளின் வாழ்க்கையை மாற்றியமைத்தது.

பதவியை விட மக்கள் நலனையே பெரிதாகக் கருதிச் செயலாற்றி, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், விவசாய வளர்ச்சிக்கும், வலுவான அடித்தளத்தை அமைத்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் புகழ், என்றும் நிலைத்திருக்கும்.

கமுதி பேருந்து நிலையம் அருகில் இன்று முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியின் தன்னார்வளர்களால் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெ...
14/07/2026

கமுதி பேருந்து நிலையம் அருகில் இன்று முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியின் தன்னார்வளர்களால் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கமுதி சுற்றுவட்டார பகுதியின் இளைஞர்கள் முதல் பெரியோர்கள் வரை தங்களை உறுப்பினர் ஆக பதிவுசெய்து கொண்டனர்.

K.Annamalai We The Leaders Foundation Dharani R Murugesan We The Leaders Ramanathapuram

 #உறுப்பினர்_சேர்க்கை_முகாம். முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கமுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம். நாள்: 14/07/...
13/07/2026

#உறுப்பினர்_சேர்க்கை_முகாம்.

முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கமுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்.

நாள்: 14/07/2026 (செவ்வாய்)
இடம்: கமுதி பேருந்து நிலையம்.
நேரம் : மாலை 03:00மணி

அனைத்து தன்னார்வளர்களும் கலந்து கொண்டு ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறோம்

K.Annamalai || We The Leaders Foundation || Dharani R Murugesan || We The Leaders Ramanathapuram

13/07/2026

சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளரும், கரிசல் மண்ணின் வாழ்வியலையும் மக்களின் உணர்வுகளையும், தனது படைப்புகளின் மூலம் காலத்தால் அழியாத இலக்கியமாகப் பதிவு செய்தவருமான, எழுத்தாளர் திரு. பூமணி அவர்களின் இறப்புச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது மறைவு, இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் சாந்தி!

12/07/2026

Address

Mudukulathur

Website

Alerts

Be the first to know and let us send you an email when We The Leaders - Mudukulathur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category