SDPI இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்

  • Home
  • India
  • Mudukulathur
  • SDPI இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்

SDPI இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் பசியிலிருந்து விடுதலை ! பயத்திலிருந்து விடுதலை !!

வாழ்த்துக்கள் !************************பாரம்பரியமும் வரலாற்றுச் சிறப்பும் மிகுந்த நமது இராமநாதபுரம் மாவட்டத்தின்புதிய மா...
31/05/2026

வாழ்த்துக்கள் !
************************

பாரம்பரியமும் வரலாற்றுச் சிறப்பும் மிகுந்த நமது இராமநாதபுரம் மாவட்டத்தின்
புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்கும்... உயர்திரு. ிவகுரு_பிரபாகரன்_IAS
அவர்களுக்கு,

SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் !

வெளிப்படையான நிர்வாகம் , சமூக நீதி மற்றும் சிறுபான்மையினர் நலன் ஆகியவற்றை முன்னிறுத்தி , மக்களின் அடிப்படை தேவைகள், வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் பொதுநலப் பிரச்சினைகளில் தனிக்கவனம் செலுத்தி, நமது இராமநாதபுரம் மாவட்டத்தை முன்மாதிரி மாவட்டமாக உருவாக்கிட நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !

வாழ்த்துக்களுடன்
J.நூருல் அமீன் B.E.,
மாவட்ட தலைவர்
SDPI கட்சி
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தெற்கு நரிப்பையூர் கடற்கரைச் சாலை!விரைவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்!!*****...
30/05/2026

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தெற்கு நரிப்பையூர் கடற்கரைச் சாலை!

விரைவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்!!

**************************************************
இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியம், நரிப்பையூர் ஊராட்சியில் அமைந்துள்ள தெற்கு நரிப்பையூர் கடற்கரைச் சாலையானது மிகவும் சேதமடைந்து பொதுமக்கள் பயணிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஒரு வழிச்சாலையாக இருந்த இச்சாலை, தற்போது ஒருவரிச் சாலையாக மாறி, நாளுக்கு நாள் உயிர்ப்பலி ஏற்படுத்தக்கூடிய அபாயச் சாலையாக மாறியுள்ளது.

இச்சாலையை சீரமைக்க வேண்டி SDPI கட்சி சார்பில் கடந்த ஓராண்டாக ஊராட்சி மன்ற அலுவலகம், கடலாடி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து நிர்வாக அலுவலகங்களிலும் தொடர் மனுக்கள் அளிக்கப்பட்டதுடன் பல்வேறு ஜனநாயக போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இதுவரை எந்தவித உரிய நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப் போக்கை தொடர்ந்து வருகிறது .

புதிய அரசு அமைந்துள்ளது என்ற காரணத்தை முன்வைத்து இனியும் காலதாமதம் செய்யாமல், தெற்கு நரிப்பையூர் கடற்கரைச் சாலையை உடனடியாக சீரமைக்க தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .

தவறும் பட்சத்தில், SDPI கட்சி சார்பில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெறும்

சாயல்குடி- அருப்புக்கோட்டை சாலையில் (ஆராய்ச்சி நகர்) நடைபெற்ற  துயரம் !கட்டிட வேலை பார்த்துக்கொண்டிருந்த அப்பாவி பெண்கள்...
29/05/2026

சாயல்குடி- அருப்புக்கோட்டை சாலையில் (ஆராய்ச்சி நகர்) நடைபெற்ற துயரம் !

கட்டிட வேலை பார்த்துக்கொண்டிருந்த அப்பாவி பெண்கள் இருவர் கார் மோதி அகால மரணம் !

SDPI கட்சி ஆழ்ந்த இரங்கல் !!

**********************************
இது தொடர்பாக SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் J.பாஞ்சுபீர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

சாயல்குடி – அருப்புக்கோட்டை சாலையில் உள்ள ஆராய்ச்சி நகரில் நடைபெற்ற கோர விபத்தில், கட்டிட வேலை பார்த்துக்கொண்டிருந்த கே. கரிசல்குளத்தைச் சேர்ந்த திருமதி வி. பஞ்சவர்ணம் (45) மற்றும் கே. கருங்குளத்தைச் சேர்ந்த திருமதி ஜி. ஜெயமணி (55) ஆகிய இரு பெண்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

தங்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக உழைத்துக் கொண்டிருந்த இரண்டு அப்பாவி பெண்களின் உயிரை, மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிய ஒருவரின் பொறுப்பற்ற செயல் பறித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மேலும், விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கிருந்து தப்பிச் சென்றிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், சட்டம்-ஒழுங்கு மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கும் செயலாகவே இதை பார்க்க வேண்டியுள்ளது.

எனவே தமிழக அரசையும், இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையையும் SDPI கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாவது....

👉மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டி இரண்டு பெண்களின் உயிரிழப்புக்கு காரணமான ஓட்டுநர் வி.இளவரசன் மீது கொலைக்குற்ற வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.

👉கருணை அடிப்படையில் உயிரிழந்த திருமதி வி. பஞ்சவர்ணம் மற்றும் திருமதி ஜி. ஜெயமணி ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

👉பொதுமக்களின் பாதுகாப்பை புறக்கணித்து, சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டிட வேலை மேற்கொண்ட கட்டிட உரிமையாளர் மீது உரிய குற்ற வழக்கு பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரு உழைக்கும் பெண்களின் உயிரைப் பறித்த இந்த துயரச் சம்பவத்திற்கு நீதி கிடைக்கவும், இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நிகழாத வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவும் SDPI கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.

"உழைக்கும் மக்களின் உயிருக்கு மதிப்பளிக்காத அலட்சியப் போக்கை SDPI கட்சி ஒருபோதும் ஏற்காது. உயிரிழந்த குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் வரை எங்களது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்."

தகவல் தொழில்நுட்ப அணி
SDPI கட்சி
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்

அனைவருக்கும் இனிய  #தியாகத்திருநாள்_வாழ்த்துக்கள்
27/05/2026

அனைவருக்கும் இனிய #தியாகத்திருநாள்_வாழ்த்துக்கள்

 #ஜூன்_27_2026ல்_முதுகுளத்தூரில்_SDPI_கட்சி_அனைத்து_ஆற்றல்மிகு_அடலேறுகள்_அணிதிரளும்_அரங்கக்_கூட்டம்மாவட்ட தலைவர் J.நூருல...
26/05/2026

#ஜூன்_27_2026ல்_முதுகுளத்தூரில்_SDPI_கட்சி_அனைத்து_ஆற்றல்மிகு_அடலேறுகள்_அணிதிரளும்_அரங்கக்_கூட்டம்

மாவட்ட தலைவர் J.நூருல் அமீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் !!!

**************************************

கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மிகுந்த உற்சாகத்துடன் 25-05-2026 அன்று மாலை 4:00 மணியளவில் முதுகுளத்தூர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் ூருல்_அமீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட பொதுச்செயலாளர் ாஞ்சுபீர், மாவட்ட துணைத் தலைவர் மௌலவி ீரான்_முஹைதீன்_மன்பஈ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் ெய்யது_இப்றாகிம் அவர்கள் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.

மாவட்ட செயலாளர் ்சுல்_மஹரிபா அவர்கள் வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பான இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் S .காஜா முஹைதீன் R.ராஜா முஹம்மது மாவட்ட பொருளாளர் M.செய்யது சதக்கத்துல்லா , முதுகுளத்தூர் தொகுதி தலைவர் S.முஹம்மது ரபீக் , உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொன்டு சிறப்பித்தனர்.

கட்சியின் சார்பில் பல்வேறு மக்கள் நல பணிகளை முன்னெடுக்கும் நோக்கில், செயற்குழு கூட்டத்தின் நிறைவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

#தீர்மானம்_1
அனைத்து ஆற்றல்மிகு அடலேறுகள் அணி திரளும் அரங்கக்கூட்டம்!!
******************************************
SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் சார்பில், வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய அடுத்தகட்ட அரசியல் மற்றும் மக்கள் பணிச் செயல்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில், மாவட்டத்தின் அனைத்து செயல்வீரர்கள், நிர்வாகிகள் மற்றும் அடலேறுகளை ஒருங்கிணைக்கும் வகையில், வருகின்ற ஜூன் 27 அன்று மாபெரும் அரங்கக்கூட்டம் நடத்துவது என மாவட்ட செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர், ஆற்றல்மிகு தலைவர் S. அகமது நவவி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற அழைப்பு விடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

#தீர்மானம்_2
முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்
*************"******************
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், இராமநாதபுரம் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி ஆகிய இரு தொகுதிகளிலும் SDPI கட்சியின் ஆதரவு பெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர்களான உயர்திரு. R.S. இராஜகண்ணப்பன் மற்றும் உயர்திரு. K.K. கதிரவன் ஆகியோர் மகத்தான வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு SDPI கட்சி தனது புரட்சிகரமான வாழ்த்துகளையும் மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
மேலும், மக்களின் அடிப்படை உரிமைகள், சமூக நீதி, வளர்ச்சி மற்றும் மக்கள் நலப் பணிகளை முன்னெடுத்து செல்லும் அவர்களின் பொதுச்சேவைகளுக்கு SDPI கட்சி தோளோடு தோள் நின்று என்றும் உறுதுணையாக செயல்படும் என்பதை இம்மாவட்ட செயற்குழு தெரிவித்துக்கொள்கிறது.

#தீர்மானம்_3
தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தெற்கு நரிப்பையூர் கடற்கரைச் சாலை!
விரைவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்!!
**********************************

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியம், நரிப்பையூர் ஊராட்சியில் அமைந்துள்ள தெற்கு நரிப்பையூர் கடற்கரைச் சாலையானது மிகவும் சேதமடைந்து பொதுமக்கள் பயணிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஒரு வழிச்சாலையாக இருந்த இச்சாலை, தற்போது ஒருவரிச் சாலையாக மாறி, நாளுக்கு நாள் உயிர்ப்பலி ஏற்படுத்தக்கூடிய அபாயச் சாலையாக மாறியுள்ளது.
இச்சாலையை சீரமைக்க வேண்டி SDPI கட்சி சார்பில் கடந்த ஓராண்டாக ஊராட்சி மன்ற அலுவலகம், கடலாடி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து நிர்வாக அலுவலகங்களிலும் தொடர் மனுக்கள் அளிக்கப்பட்டதுடன் பல்வேறு ஜனநாயக போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இதுவரை எந்தவித உரிய நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப் போக்கை தொடர்ந்து வருகிறது என்பதை இம்மாவட்ட செயற்குழு கடுமையாக கண்டிக்கிறது.
புதிய அரசு அமைந்துள்ளது என்ற காரணத்தை முன்வைத்து இனியும் காலதாமதம் செய்யாமல், தெற்கு நரிப்பையூர் கடற்கரைச் சாலையை உடனடியாக சீரமைக்க தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாவட்ட செயற்குழு வலியுறுத்துகிறது.
தவறும் பட்சத்தில், SDPI கட்சி சார்பில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டனப் போராட்டம் நடத்துவது என இம்மாவட்ட செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்ப அணி
SDPI கட்சி
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்

23/05/2026

முஸ்லிம் அமைச்சர்களுக்கு முக்கியத் துறைகளை வழங்கிடுக! – தமிழக முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தவெக தலைமையிலான தமிழக அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில், கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகான் அவர்களுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திண்டிவனம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசு அவர்களுக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளதை எஸ்டிபிஐ கட்சி வரவேற்கிறது.

அதேவேளையில், சமூக நீதியின் அடிப்படையில் இந்த அமைச்சரவை விரிவாக்கத்தை உற்றுநோக்கும்போது சில நியாயமான ஆதங்கங்களை முன்வைக்க வேண்டியது அவசியமாகிறது. அனைத்துச் சமூகங்களுக்கும் சமூகநீதி அடிப்படையில் அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விடக் கூடுதல் இடங்கள் இந்த தவெக அரசில் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம் மிகக் குறைவாகவே உள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அனைத்து சமூகத்தின் பங்களிப்பையும் உரிய பிரதிநிதித்துவத்தையும் உறுதிபடுத்த வேண்டியது இந்த அரசின் கடமையாகும்.

எனவே, ஆளுங்கட்சியான தவெக-விலிருந்தும் வெற்றிபெற்றுள்ள கூடுதலான முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் இடங்களை ஒதுக்கீடு செய்திட வேண்டும். வார்த்தைக்கு வார்த்தை சமூகநீதியை காக்கும் அரசு என கூறும் இந்த அரசில் தமிழக அமைச்சரவையில் குறைந்தது ஐந்து முஸ்லிம் அமைச்சர்களாவது இடம்பெறுவதை மாண்புமிகு முதல்வர் அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், முஸ்லிம் பெயர் என்பதற்காக சிறுபான்மையினர் நலத்துறை என்ற வழக்கமான, சுருக்கப்பட்ட எல்லைகளுக்குள் மட்டும் முஸ்லிம் அமைச்சர்களை முடக்கிவிடக் கூடாது. அடையாள அரசியலுக்காக வெறும் பெயரளவு துறைகளை மட்டும் ஒதுக்காமல்; அண்டை மாநிலமான கேரளாவில் கூட்டணி கட்சியாக இருந்தாலும் முஸ்லிம் லீக் அமைச்சர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் கல்வி, தொழில், வருவாய் உள்ளிட்ட அரசின் கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கும் முக்கியத் துறைகளையும் முஸ்லிம் அமைச்சர்களுக்கு வழங்கிட முன்வர வேண்டும். அதிகாரப் பகிர்வும், சமத்துவமான துறை ஒதுக்கீடும் மட்டுமே உண்மையான சமூக நீதியை நிலைநாட்டும் என்பதால், பரந்துபட்ட பார்வையில் இக்கோரிக்கையைப் பரிசீலித்து, அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்திற்கான உரிய பங்கீட்டை முதல்வர் அவர்கள் உரிய பொறுப்புகளை வழங்கிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

23/05/2026

சென்னையில் தொடரும் மின்வெட்டால் மக்கள் அவதி! தடையில்லா மின்சாரம் வழங்க போர்க்கால அடிப்படையில் தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! - SDPI கட்சி வலியுறுத்தல்*

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தலைநகர் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக, பல மணி நேரம் நீடித்து வரும் கடுமையான மின்வெட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியுள்ளது பெரும் கவலையளிக்கிறது. கோடைக்கால வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், அறிவிக்கப்படாத இந்த மின்தடை பொதுமக்களை பெரும் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக நள்ளிரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்வெட்டு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.

கடந்த ஆட்சியின்போது, கோடைக் காலத்திலும் கூட தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வந்த சூழலில், புதிய அரசு அமைந்த சில நாட்களிலேயே, அதுவும் தலைநகர் சென்னையிலேயே மக்கள் மின்வெட்டைக் கண்டித்து வீதிக்கு வந்து போராடும் அவல நிலை ஏற்பட்டிருப்பது கவலையளிக்கிறது.

கோடைக் காலத்தில் மின்சாரத் தேவை வழக்கத்தை விட பல மடங்கு அதிகரிக்கும் என்பதை நன்கு அறிந்திருந்தும் அரசும், மின்வாரியமும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், போதிய திட்டமிடலையும் செய்யத் தவறியது ஏன் என்கிற கேள்வி எழுகிறது.

மின்தடை குறித்துப் பொதுமக்கள் மின்வாரிய அலுவலகங்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்க முயன்றால், முறையான பதில்கள் அதிகாரிகளிடம் இருந்து கிடைப்பதில்லை என்றும், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்படுவதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, முதலமைச்சர் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, தடையில்லா மின்சாரம் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடைக் கால மின்சுமையைத் தாங்கக் கூடிய வகையில் மின்மாற்றிகள் மற்றும் துணை மின் நிலையங்களை உடனடியாகப் பராமரிப்புச் செய்ய வேண்டும்.

புதிய அரசு என்பது மக்களுக்கு நிம்மதியான வாழ்வைத் தர வேண்டும்.அவர்களின் தூக்கம் கெடுக்கும் சூழலை ஏற்படுத்தக் கூடாது. மக்களின் அடிப்படைத் தேவையை நிறைவு செய்யும் அரசாகச் செயல்பட்டு, இந்த மின்வெட்டுப் பிரச்னைக்கு தவெக அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Address

2-307 Main Road
Mudukulathur

Alerts

Be the first to know and let us send you an email when SDPI இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SDPI இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்:

Share