Kolathur Mani கொளத்தூர் மணி

Kolathur Mani கொளத்தூர் மணி President of Dravidar Viduthalai Kazhagam

05/12/2025

கழகத் தலைவர் தோழர் "கொளத்தூர் மணி" அவர்களின் அறிக்கை !

மதுரை திருப்பரங்குன்றத்தில் கலவரம் செய்ய முயற்சிக்கும் பாஜக இந்து முன்னணி அமைப்புகளை வன்மையாக கண்டிக்கிறோம் !

தமிழ்நாட்டின் பொது அமைதியை குலைத்து வன்முறைக் காடாக்கி அதில் அரசியல் லாபம் அடைய முயற்சிக்கும் மத தீவிரவாத கூட்டத்தை அனுமதியோம் !

இந்துத்துவ அமைப்புகளின் கலவரம் உருவாக்கும் சூழ்ச்சியை தக்க சமயத்தில் முறியடித்து அமைதியை நிலை நாட்டிக்கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசின் முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டுகிறோம் !

மதவாத சக்திகளுக்கு எதிரான முதல்வரின் நடவடிக்கைகளுக்கு என்றும் துணை நிற்போம் !

"மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு பல நூறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக முருகன் கோயில் கருவறைக்கு நேர் மேலே இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகில் இருக்கும் தீபத்தூணில் ஏற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இதனை திருமலை நாயக்கர் காலத்து கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன மேலும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தலைமை அர்ச்சகர் ராஜா பட்டர், அர்ச்சகர்கள் மற்றும் ஸ்தானிகர்களின் கருத்தும் இதுதான்.

இந்நிலையில் இந்து தமிழர் கட்சி எனும் அரசியல் கட்சியின் நிறுவனர் தலைவர் ராம.ரவிக்குமார் என்பவர் இந்த வருடம் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றக்கூடாது, தர்கா அருகில் உள்ள மலை உச்சியில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று அரசியல் உள்நோக்கத்துடன் கோயில் நிர்வாகத்திடம் மனு அளித்தார் அதனை பரிசீலித்த கோயில் நிர்வாகம் பல நூறு ஆண்டுகளாக தீபம் ஏற்றும் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீபத்தூணில் தான் தீபம் ஏற்றுவோம் இதுதான் கோயிலின் பழக்கவழக்கம் என்று கோயில் ஸ்தானியர்கள் அறிவித்து விட்டனர்.

இதனை ஏற்காமல் ராம ரவிக்குமார் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கோயிலின் பழக்கவழக்கங்கள், கல்வெட்டு ஆதாரங்கள், முந்தைய நீதிமன்ற தீர்ப்புகள் எதனையும் கணக்கில் கொள்ளாமல் எதிர்தரப்புகள் தங்கள் தரப்பு வாதங்களை வைக்கக்கூடிய கால அவகாசத்தையும் வழங்காமல், வழக்கமான இடத்தில் தீபத்தை ஏற்றாமல் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்கா அருகில் உள்ள தூணின் மீது தீபத்தை ஏற்ற வேண்டும் என்று அவசர அவசரமாக ஒரு உத்தரவை பிறப்பிக்கிறார்.
இந்த உத்தரவு சமூகப் பதற்றத்தையும், சட்ட நெருக்கடியையும் ஏற்படுத்தி விட்டது.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பல வழக்குகள் பிரிட்டிஷார் ஆட்சி காலத்திலும் அதன் பிறகும் பல நேரங்களில் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு தீர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

2014 ல் W.P(MD)No.19422 of 2014 மேல் முறையீடு WA(MD)No.1524 of 2014 படி சுப்பிரமணியன் என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், பவானி சுப்பராயன் அமர்வு தற்போதுள்ள வழமையான இடத்தில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று 07.12.2017 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதன்படி தற்போது வரை அங்கு உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.

தற்போது நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் தீபம் ஏற்றும் படி உத்தரவிட்டுள்ள தர்கா அருகில் உள்ள தூண் தீபத் தூண் அல்ல. அது Geological Survey of India வால் நிறுவப்பட்ட எல்லைக் கல் ஆகும்.

இங்கு சென்று தீபம் ஏற்ற தர்காவின் படிக்கட்டுகளை பயன்படுத்தி ஏறலாம் என்று நீதிபதி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு கொடுத்த தீர்ப்பை ஒரு நீதிபதி அளித்த தீர்ப்பு கட்டுப்படுத்தாது என்று சட்ட வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

இப்படி எதனையும் கணக்கில் கொள்ளாமல் தீர்ப்பை வழங்கியதோடு மட்டுமல்லாமல் அதனை தொடர்ந்து நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் டிசம்பர் 3 அன்று மாலை 06.00 மணிக்கு தான் சொன்ன இடத்தில் தீபம் ஏற்றாவிட்டால் 06.05 க்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் கடும் நடவடிக்கையும் எடுப்பேன் என்றும் கூறினார்.

மேலும் நீதிமன்ற பாதுகாப்புக்கு மட்டுமே அதுவும் நீதிமன்ற வளாகத்திற்குள் மட்டுமே செயல்பட வேண்டிய மத்திய பாதுகாப்பு படையை அரசியல் கட்சித் தலைவர் ராம.ரவிக்குமாருடன் அனுப்பி தீபம் ஏற்றலாம் என்று நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் கூறியிருக்கிறார்.
இந்தக் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது.இது மாநில உரிமைகளில் தலையிடுவதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடும் செயல் ஆகும்.

இந்த அளவிற்கு மக்களின் மத நம்பிக்கையை அரசியல் காரணங்களுக்காக தவறாக பயன்படுத்தி கலவரத்தை உருவாக்கி அதன் மூலம் அரசியல் லாபம் அடைய நினைக்கும் மதவாத சக்திகளை நாம் மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம்.

நீதிமன்ற தீர்ப்புகள்,அவர்களே சொல்லும் பழக்க வழக்கங்கள், அவர்களே சொல்லும் ஆகம விதிகள், கல்வெட்டு வரலாற்று ஆதாரங்கள் எதிர்த்தரப்பு வாதங்களுக்கு வாய்ப்பு இவற்றை எதையும் கணக்கில் கொள்ளாமல் சமூகப் பதற்றத்தை உருவாக்கும் விதமாக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பு அமைந்திருக்கிறது.

இது மட்டுமல்ல எச்சில் இலையில் உருளுவது சரி என்று தீர்ப்பளித்தார் இதே ஜி ஆர் சாமிநாதன் அதுவும் மேல்முறையீடு செய்யப்பட்டு அந்த தீர்ப்பை நீதிமன்றம் ரத்து செய்தது.

அரசியல் சட்ட சாசனப்படி மதச்சார்பற்ற தன்மையோடு நடந்து கொள்ள வேண்டிய,எந்த சார்பு தன்மையும் இன்றி நடுநிலையோடு தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிபதியாக இருந்து கொண்டு பாஜக,ஆர் எஸ் எஸ் சங்பரிவார் அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இந்துத்துவ சனாதன கருத்துக்களை பொது மேடைகளில் பேசிக்கொண்டு இதுபோன்ற தீர்ப்புகளை வழங்கி வரும் ஜி.ஆர்.சுவாமிநாதன் தொடர்ந்து நீதிபதியாக செயல்படுவதற்கு அடிப்படை தகுதியை இழந்தவராக இருக்கிறார்.

மதவாத சக்திகளின் கலவர முயற்சியை தடுக்கும் வகையில் எந்தவித தயக்கமும் இன்றி துணிச்சலுடன் நடவடிக்கை எடுத்து வரும் திராவிட மாடல் அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டும் அதே நேரத்தில் தமிழ்நாட்டில் சமூக பதற்றத்தை உருவாக்கும் வகையில் நடந்து கொண்டிருக்கும் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களை நீதிபதி பதவியில் இருந்து நீக்கவோ அல்லது பிற மாநிலத்திற்கு மாற்றுவதற்கோ தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.

இந்த மதவாத கும்பல்களின் கலவர முயற்சிகளை மக்கள் மன்றத்தின் முன் தொடர்ந்து அம்பலப்படுத்தி பரப்புரைகளை முன்னெடுப்போம் !"

- "கொளத்தூர் மணி,"
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
05.12.2025

ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (5) - கொளத்தூர் மணி “ஈரோட்டுப் பாதை சரியா?” நூலில் ஜீவா அவர்கள் பெரியார் மீது வைத்துள்...
01/12/2025

ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (5) - கொளத்தூர் மணி

“ஈரோட்டுப் பாதை சரியா?” நூலில் ஜீவா அவர்கள் பெரியார் மீது வைத்துள்ள விமர்சனங்களைப் பார்ப்போம்.

தமிழர் இயக்கம் உருவானதன் பின்னணி !

ஈரோட்டுப் பாதையின் 20 ஆண்டுகள் என்ற தலைப்பில், “இன்று ஈரோட்டுப் பாதை திராவிடர் கழகம் என்று அழைக்கப்படுகிறது. ஆரம்பித்த பொழுது இதற்கு இந்தப் பெயர் இல்லை; கூடு விட்டு கூடு பாய்வதைப் பாய்வது போல பல பெயர்களைத் தாங்கி ஈரோட்டுப் பாதை 20 ஆண்டுகளைக் கழித்து இருக்கிறது. பார்ப்பனரல்லாதார் இயக்கம், சமூகச் சீர்திருத்த இயக்கம், சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவு இயக்கம், சமதர்ம நாஸ்திக இயக்கம், தமிழர் இயக்கம், திராவிடர் இயக்கம் என்ற பல பெயர்களோடு பாதை காட்டி வந்திருக்கிறார் தன்னைப் பின்பற்றிய தமிழ் மக்களுக்கு ஈரோட்டுப் பெரியார்" என்று எழுதியுள்ளார் ஜீவா.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது மார்க்சியர்கள் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு சொற்றொடர் ஆகும். வரலாற்றின் தொடக்கத்தில் கிரேக்க தத்துவஞானி ஹிராகிளிடஸ் சொல்லியிருந்தாலும், நவீன வரலாற்றில் பேராசான் மார்க்சும் இதனைச் சொல்லி உள்ளார்.

ஆனால் ஜீவாவோ கூடுவிட்டு கூடு பாய்வது போல பல பெயர்களைத் தாங்கி ஈரோட்டுப்பாதை 20 ஆண்டுகளைக் கழித்து இருக்கிறது என்று பெரியாரை விமர்சிக்கிறார். ஆனால் தானும் சுயமரியாதை இயக்கம், காங்கிரஸ், சுயமரியாதை சமதர்மக் கட்சி, காங்கிரஸ் சோஷலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய பெயர்களைத் தாங்கி இருந்திருக்கிறோம் என்பதை எப்படியோ மறந்துவிட்டு இதனை எழுதி இருக்கிறார்.
ஈ.வெ.ரா. இந்தி எதிர்ப்பில் சிறைசென்றபோதும் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் "சுயமரியாதை இயக்கமும் தமிழர் இயக்கமும், இந்தி எதிர்ப்பு கிளர்ச்சியும், ஜஸ்டிஸ் இயக்கமும்" ஒன்று என்றே குறிப்பிடுகின்றார் என்று அதே நூலில் எள்ளல் தொனியிலும் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த வாய்ப்பிலாவது சில வரலாற்றுச் செய்திகளைக் குறிப்பிடுவது தேவை என எண்ணுகிறோம்.

சேரன்மாதேவியில் நடந்தது என்ன?

பெரியார் காங்கிரஸ்காரராக இருந்தபோதே வைக்கம் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அப்போது பெரியார் விளங்கினார். பெரியார் காஞ்சிபுரம் மாநாட்டில் இருந்து வெளியேறியது 22.11.1925 ஆகும். அதற்கும் ஏழு நாட்களுக்குப் பின்னர் 29.11.1925-இல் வைக்கத்தில் நடைபெற்ற வைக்கம் வெற்றி விழாக் கூட்டத்துக்குத் தலைமை ஏற்று நடத்தியுள்ளார்.
சேரன்மாதேவி குருகுலப்பள்ளி பெரிதும் ‘பரத்வாஜர் ஆசிரமப் பள்ளி’யாக பலராலும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அக்குருகுலப்பள்ளி ‘தமிழ்க் குருகுல வித்தியாலயம்’ என்றுதான் பெயரிடப்பட்டிருந்தது.

பார்ப்பன - பார்ப்பனரல்லாத மாணவர்களை தனித்தனியே அமர வைத்து உணவு பரிமாறப்படுகிறது; கடவுள் வணக்கம் கூட பார்ப்பன மாணவர்கள் சமஸ்கிருத ஸ்லோகங்களையும் பார்ப்பனரல்லாத மாணவர்கள் தேவாரம் திருவாசகம் போன்ற தமிழ்ப் பாடல்களையும் பாடுவது போன்ற பாகுபாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன என்ற செய்திகளே போராட்டத்திற்கு மூலக் காரணமாகியது.

வரதராஜுலு நாயுடுவின் எதிர்ப்பு!
‘லட்சுமி’ எனும் இதழின் 1924 அக்டோபர் மாத இதழில் “காந்தியின் சத்தியாகிரக ஆசிரமம், சிரத்தானந்தாவின் காங்கிரி குருகுலம், ரவீந்திர நாதரின் சாந்தி நிகேதனம் போல வித்தியாசம் இன்றி குருகுலம் நடத்த வேண்டும். சமபந்தி போஜனம், சமமான கல்வி முதலியவை கொடுத்து சம திருஷ்டியுடன் நடத்தத் தயாராக இருப்பதாக ஐயர் அறிவித்தாலன்றி குருகுலத்திற்குப் பொருள் உதவி செய்யக்கூடாது என்று பிராமணர் அல்லாதவரை கேட்டுக்கொள்கிறேன்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் வரதராஜுலு நாயுடு அவர்களின் அறிக்கை குருகுலப் போராட்டத்தின் தொடக்கம் ஆயிற்று.
சேரன்மாதேவி குருகுலம் ஏற்படுத்தத் தேவையான 30 ஏக்கர் நிலத்தை வாங்கிக் கொடுத்தவரும், பின்னாளில் சுயமரியாதை இயக்கத்தின் பொருளாளராக இருந்தவருமான வை.சு. சண்முகம் அவர்கள் குருகுலம் சென்று வ.வே.சு ஐயரிடம் பேசிய பின்னர் 17.12.1924 அன்று ‘குமரன்’ இதழில் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில் “பெல்காமில் கூடவிருக்கிற அகில இந்திய காங்கிரஸ் மகாசபை கூட்டத்திற்கு இரண்டு மாதங்களுக்குள் குருகுலத்தில் பேதமற்ற நடைமுறைகளையும் நிர்வாக சம்பந்தமான கூட்டம் முதலிய சீர்திருத்தங்களையும் ஏற்படுத்தி விடுதல் கூடும் என ஐயர் அவர்கள் சொன்னார்கள்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது
காந்தியாரும் கலந்து கொண்ட ஒரு சமாதானக் கூட்டத்தில் “புரவலர்களின் விருப்பப்படி நீங்கள் நடக்க மறுத்தால் அவர்களுடைய பணத்தைத் திருப்பி கொடுத்துவிடுவது ஒழுங்கு” என்று காந்தியார் பேச்சுவார்த்தையின் இறுதியில் குறிப்பிட்டார். இக்கருத்தை வ.வே.சு ஐயர் ஒப்புக்கொள்ளவில்லை.
தமிழ் குருகுல விஷயமாக காந்தியுடன் இருதரப்பாரும் கலந்து பேசியும் ஒரு முடிவுக்கு வர முடியாததாலும், இனி தமிழர்கள் சமத்துவமாக நடத்தப் பெறுவார்கள் என்று நம்புவதற்கு இடம் இல்லை என்று கருதியதாலும் காந்தியுடன் பேசிய 1925 மார்ச் 24 அன்று மாலையே சென்னையில் வரதராஜுலு நாயுடு அவர்களின் ‘தமிழ்நாடு’ இதழ் அலுவலகத்தில் வை.சு.சண்முகம் தலைமையில் ‘தமிழர் கூட்டம்’ கூடியது. இதில் பிரச்சனையின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்தனர்.

இக்கூட்டத்திற்குப் பிறகு பார்ப்பனரல்லாதார், பிராமணரல்லாதார் என்று சொல்லாட்சிகள் கைவிடப்பெற்று ‘தமிழர்’ என்ற பதமே பத்திரிகைகளில் இடம் பெறலாயிற்று என்கிறார் ஆய்வாளர் பழ.அதியமான்.
“தமிழர் கூட்டம்” கூடிய பிறகும் நிலைமை சீர்படவில்லை. பணம் கொடுத்தோர் அதைத் திருப்பக் கோரிய கோரிக்கைகள் பயனற்றுப் போயின. இந்நிலையில் வராராஜுலு கடுமையான நடவடிக்கை ஒன்றை எடுத்தார். “காங்கிரஸ் கமிட்டியிடம் இருந்து பெற்ற பணத்தை 1925 ஏப்ரல் மாதம் முடிவுக்குள் திருப்பிக் கொடுக்காவிட்டால் மே மாத தொடக்கத்தில் குருகுலம் முன்னால் சத்தியாகிரகம் நடைபெறும் என்றும், வேறு ஒரு தமிழ்க் குருகுலம் ஆரம்பிக்கப்படும்” எனவும் அறிவித்தார். இந்த செய்திகள் “குமரன், தி இந்து” நாளேடுகளில் வெளிவந்திருக்கின்றன.
அதற்கு எதிர்வினையாக வ.வே.சு. அய்யர் “தமிழ்க் குருகுல சொத்துக்கள் என்னுடையவாக இருந்தால் பணத்தைத் திருப்பி கொடுத்து விட நான் சற்றும் தயங்க மாட்டேன். பொது ஸ்தாபனமாகிய குருகுலத்தின் தர்மகர்த்தா என்ற முறையில் அது முடியாது” என்று 15.4.1925-இல் பதில் அளித்தார்

அடுத்த நாளே வரதராஜுலு “பணத்தைத் திருப்பிக் கொடுக்க மறுப்பது பிடிவாதமான துராக்கிரகமாகும். குருகுல சொத்து அவர் (வ.வே.சு. அய்யர்) பெயரிலேயே இருக்கிறது; டிரஸ்டிகள் பெயரால் இல்லை” என்று பதில் அறிக்கையை கொடுக்கிறார். இந்து முன்னணியின் நிறுவனர் வீரத்(?)துறவி இராமகோபாலன் இந்து முன்னணியின் நிதியை தன்னுடன் மனைவி, பிள்ளைகளைச் சேர்த்து அறக்கட்டளை உருவாக்கி இந்து முன்னணியின் நிதிகள் அறக்கட்டளையாக உள்ளது என்றாராமே, அதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது.

தமிழர் இயக்கத்தின் தொடக்கம்!
1925 மார்ச்சில் உருவான தமிழர் கூட்டங்கள் தொடர்ந்து ஏப்ரல், மே, ஜூன், நவம்பர் மாதங்களில் கூடிய விவரங்கள் அப்போதைய ஏடுகளில் காணக் கிடைக்கின்றன. “இக்கூட்டம் தமிழர் இயக்கமாக மாறி தமிழ்நாட்டிற்கு தொண்டாற்ற வேண்டும்” என்று ‘குமரன்’ இதழும் ‘லட்சுமி’ இதழும் வரவேற்றுப் பாராட்டி எழுதின.

‘லட்சுமி’ இதழ் பல யோசனைகளையும் குறிப்பிட்டு எழுதியது; தமிழர் இயக்கத்துக்கு சென்னையைத் தலைமையிடமாகக் கொள்வது, கிராமங்கள் தோறும் அதன் கிளைகளை நிறுவுவது, திரு.வி.க.வைத் துணைக்கு வைத்துக் கொள்வது, ஜஸ்டிஸ் கட்சியை இதனோடு இணைத்து விடுவது என்பது ஒன்று.

அடுத்ததாக தமிழர் ஒற்றுமை, பிராமணரையும் சகோதரராகப் பாவிப்பது, சர்வ சமய ஒற்றுமை, கோயில் நுழைவு போன்ற அடிப்படையான வேலைகளைத் திட்டமிட்டு நடத்துவது என்பதான யோசனைகளை எழுதியுள்ளது.

‘குமரன்’ இதழோ “இதுகாலை இருந்து வருகிற பிராமணரல்லாத இயக்கமானது முறுகி எழுவதற்கு காலம் சமீபித்து விட்டது என்பதற்கு குருகுல சம்பந்தமான நிகழ்ச்சிகள் சான்று கூறுகின்றன. ஆனால் இவ்வியக்கம் தமிழ் மொழியை ஆதாரமாகக் கொண்டு நிகழ்தல் வேண்டும்; தமிழர் இயக்கம் என்ற பெயர் கொண்டு திகழ்தலே உண்மையான பயனை அளிக்கும்; இவ்வியக்கமானது உரம் பெற்று வளர்வதற்கு பல வகை இயக்கங்களில் தலைப்பட்டு இருக்கிற எல்லாத் தமிழரும் ஒன்றாக கலந்து வேலை செய்ய முயல வேண்டுவது இன்றியமையாததாகும்” என்று எழுதியுள்ளது.

இதனிடையில் சேலம் விக்டோரியா மார்க்கெட்டில் ஆதிநாராயண செட்டியார் தலைமையில் பொதுக்கூட்டம் ஒன்று 1925 ஏப்ரல் 13 அன்று நடைபெற்றது. வரதராஜுலு, பெரியார், எம்.ஜி. நடேசன் செட்டியார் ஆகியோர் பேசினர்.

பிராமணர் பிரச்சனைக்குத் தீர்வு வேண்டும் !

பெரியார், “வரதராஜுலுவுடன் அரசியல் விவகாரங்களில் பல கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இந்த குருகுல விஷயத்தில் நாங்கள் ஒன்றாகவே இருக்கிறோம். பிரிட்டிஷ் அரசு இங்கு இருக்கும்போதே பிராமணர் பிரச்சனைக்குத் தீர்வு கண்டாக வேண்டும். இல்லையெனில் பிராமண நாயகத்தின் (Brahmanocracy) பெருந்துன்பத்தில் அல்லல்படுவோம்” என்று பேசியது இந்த கூட்டத்தில்தான்.

[ “E.V.Ramasamy Naicker said “they must settle the Brahmin question even while the British supremacy lasted, otherwise they would have to suffer under the tyranny of what he called ‘Brahmanocracy’ - The Hindu 15.4.1925]

இந்நிலையில் வ.வே.சு. ஐயர் 1925-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் தேதி அருவிச் சுழலில் சிக்கி தன் மகள் சுபத்ராவோடு மரணம் அடைந்தார். 15 நாட்கள் கழித்து 1925 ஜூன் 18-ஆம் நாள் கானாடுகாத்தானில் தமிழர் நிர்வாகக் கமிட்டி கூட்டம் வை.சு. சண்முகம் அவர்கள் வீட்டில் நடக்கிறது. அக்கூட்டத்தில் ஆர்.கே. சண்முகம் செட்டியார் தவிர மற்ற உறுப்பினர்கள் பெரியார், எஸ் ராமநாதன், சுரேந்திரநாத் ஆரியா என யாவரும் கலந்து கொண்டனர்.

அதில் பல தீர்மானங்கள்கள் இயற்றப்பட்டன.

அவற்றில் ஐந்தாவது தீர்மானம்: பிறவியினால் உயர்வு தாழ்வு இல்லை என்பதை துண்டு பிரசுரங்கள் மூலம் தேசமெங்கும் பிரசங்கம் நடத்துவது; சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் போன்ற உணர்ச்சிகளை வளர்க்க ரூ.5000 செலவிடுவது

ஆறாவது தீர்மானம்: எல்லா கட்சியாரும் சேர்ந்த பிராமணரல்லாதார் மாநாடு ஒன்றை விரைவில் கூட்டி குருகுல விவாதத்தினால் நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைமையைப் பரிசீலனை செய்து மேலே நடக்க வேண்டியதை முடிவு செய்வது. இதற்கு எஸ்.இராமநாதன் செயலாளர்.

ஐந்தாவது தீர்மானத்தின்படி ஏற்பட்ட சமத்துவ பிரச்சார நிதிக்கு பெரியார், வரதராஜுலு, வை.சு.சண்முகம் ஆகியோர் தலைக்கு ரூபாய் 100; காசி விஸ்வநாதன், ராய சொக்கலிங்கம் ஆகியோர் தலைக்கு ரூபாய் 50-ஆம் சொ.முருகப்பா ரூபாய் 25 அளித்துள்ளனர். இவ்வாறு தான் தமிழர் இயக்கம் என்ற பெயரில் ஒரு இயக்கம் உருவாகியுள்ளது.

தொடரும்......

01/12/2025

"ஜீவா இந்தியை எதிர்த்தாரா?"

- தோழர் கொளத்தூர் மணி.

"ஜீவா இந்தியை ஆதரித்தார் என்று குறிப்பிட்டதற்கு பல பேர் கொதித்தெழுந்து ஆதாரத்தைக் கேட்கத் தொடங்கினார்கள். அது குறித்தும் சில செய்திகளைப் பார்ப்போம்.

பெரியார் காங்கிரசில் இயங்கியபோது 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்தியார் பெரியாரின் இல்லத்துக்கு வந்து தங்கி இருந்திருக்கிறார். அப்போது அன்னியத் துணிகள் பகிஷ்கரிப்பு என்ற பெயரால் வெளிநாட்டுத் துணிகள் எரிக்கப்பட்டு இருக்கின்றன. அடுத்ததாக 1922-ஆம் ஆண்டில் ஈரோடு பெரியார் இல்லத்திற்கு மோதிலால் நேருவும், டாக்டர் அன்சாரியும் வந்ததன் நினைவாக ஈரோடு வெங்கட்ட நாயக்கர் சத்திரத்தில், ஒரு இந்தி மொழி கற்பிக்கும் பள்ளியை, ஒரு பாதி காங்கிரஸ் செலவிலும், மறுபாதி தமது செலவிலும் நடக்கும் வகையில் தொடங்கியுள்ளார். ஆனால் அதே ஆண்டு இறுதியில் திருப்பூரில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநாட்டின் பொதுக்கூட்டத்தில் “இந்தியைப் பரப்புவது என்று கூறிக்கொண்டு இந்தியில் உள்ள துளசிதாஸ் இராமாயணத்தை பரப்புவதைக் கண்டித்தும், வருணத்தையும் தீண்டாமையும் காப்பாற்றும் இராமாயணத்தையும் மனுசாஸ்திரத்தையும் எரிக்க வேண்டும்” என்றும் பேசியுள்ளார்.

1922 நவம்பரில் கயாவில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டு நிகழ்ச்சிகளில் இந்திக்கு முதலிடம் கொடுத்து வட நாட்டினர் அனைவரும் இந்தியிலே பேசியதால் மனம் நொந்த இந்திய தேசிய காங்கிரஸின் செயலாளராக இருந்த ஆந்திர ரத்னா கோபாலகிருஷ்ணய்யா “காங்கிரசில் எல்லோரும் ஹிந்தியில் தான் உரையாற்றுகிறார்கள், உரையாற்றினார்கள்; ஆனால் இந்திக்கு முதலிடம் அளிப்பது நமது அடிமைத்தனத்தை வேறொரு உருவத்தில் நிலைநாட்டுவதாக முடியும்” என்று தொடங்கிய உரையை “ஆகவே இந்தியை பொது மொழியாக்குவது பற்றி மிக மிக விழிப்பாக இருக்க வேண்டுமென்றும் நமது அரசியல்வாதிகளை எச்சரிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது” என்றும் முடித்துள்ளார்.

அதுபோலவே 1925 ஆம் ஆண்டு பெல்காமில் அகில இந்திய காங்கிரஸ் நடந்து முடிந்ததும் இந்தி முயற்சியினைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரே தனது ‘வாணி ஒப்பாரி’ என்ற அரிய பாடல் தொகுப்பில் “இந்தியை புகுத்துவதன் மூலம் காந்திஜி என்னை வனவாசம் செய்ய அனுப்புகிறார்” என்று தெலுங்கு மொழி அன்னை மனம் உருகி அழுவதாக பாடலும் எழுதி இருக்கிறார்.

1925 ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநாட்டில் இருந்து வெளியேறிய பெரியார் 14.3.1926 குடி அரசில் ‘தமிழிற்குத் துரோகமும் ஹிந்தி பாஷையின் ரகசியமும்’ என்று எழுதிய ஒரு கட்டுரையில் “இம்மாதிரி பலன் தரத்தக்க இந்திக்கு நாம் பாடுபட்ட முட்டாள்தனத்திற்கும், நாம் பணம் கொடுத்த பைத்தியக்காரத்தனத்திற்கும் வெட்கப்படாமலும் இருக்க முடியவில்லை” என்றும் “பிராமணர் அல்லாதவருக்கு ஏற்பட்ட பல ஆபத்துகளில் இதுவும் ஒன்றாய் முடியும் போலிருக்கிறது; பொதுவாய் இந்தி என்பது வெளி மாநிலங்களில் பிராமணப் பிரச்சாரம் செய்ய கற்பித்துச் செய்யும் ஒரு வித்தை ஆகிவிட்டது” என்றும் கண்டித்து எழுதுகிறார்.

பெரியார் 1925 காஞ்சிபுரம் மாநாட்டில் இருந்து வெளியேறிய பின்னர் மாநாட்டுத் தலைவரான தமிழ்த் தென்றல் திரு.வி.க “ தமிழக இளைஞர்கள் இந்தி சேவா தளத்தில் இணைய வேண்டும்; சேவா தளத்தின் கிளைகள் ஒவ்வொரு நகரத்திலும் தாலுகாக்களிலும் அமைக்கப்பட வேண்டும்; இந்தியைப் பரப்புவதில் ஆர்வம் குறைந்துள்ளது. அதை மாற்றி தமிழர்கள் இந்தியை விரைவாகவும் நன்றாகவும் பயில வேண்டும்” என்ற தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியுள்ளார்.

அதே திரு.வி.க வங்காளத்தைச் சார்ந்த புகழ்பெற்ற தேச பக்தரும் ‘மாடன் ரிவ்யூ’ இதழின் ஆசிரியருமான ராமானந்த சட்டர்ஜி “இந்தியைப் புகுத்த செய்யப்படும் முயற்சி தீங்கானது” என்பதை மிக விளக்கமாக 1931 மே மாதம் தனது இதழ் எழுதியிருந்த நீண்ட கட்டுரையை தனது ‘நவசக்தி’ ஏட்டில் 25.5.1931 அன்று மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

பெரியாரும் 2.1.1929 குடிஅரசு ஏட்டில் ‘இந்தி புரட்சி’ என்ற தலைப்பில் தலையங்கமும், 10.5.1931இல் குடிஅரசில் ‘கதரும் இந்தியும்’ என்ற தலைப்பில் கட்டுரையும், 17.1.1932 இதழில் ‘சமஸ்கிருத சனியன்’ என்றும் தொடர்ச்சியாக எழுதி வந்துள்ளார். 14.06.1931 நன்னிலம் சுயமரியாதை மாநாட்டிலும், 18/19.06.1932 மன்னார்குடி மாநாட்டிலும், 13.01.1936 சென்னை பச்சையப்பன் கல்லூரி ‘தமிழ்த் திருநாள் விழா’விலும் தொடர்ச்சியாக இந்தி எதிர்ப்பு குறித்து பேசி வந்துள்ளார்.

இவற்றையெல்லாம் சொல்வதற்குக் காரணம் 1929 செங்கல்பட்டு மாகாண சுயமரியாதை மாநாட்டிலும், 1930 ஈரோடு மாகாண சுயமரியாதை மாநாட்டிலும், 1931 விருதுநகர் மாகாண சுயமரியாதை மாநாட்டிலும் கலந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ள ஜீவா நிச்சயமாக இந்தி எதிர்ப்புக் கொள்கையை அறிந்தவராகவும் ஏற்றவராகவும் தானே இருந்திருக்க முடியும்? மேலும் 1926இல் சிராவயல் ஆசிரமத்தில் இருந்தபோது காந்தியாரிடம் வர்ணாசிரமம் குறித்து வாதிட்டதாகச் சொல்லப்படும் ஜீவா வருணாசிரம, பார்ப்பன மேலாதிக்கம் ஆகியவற்றின் எதிர்ப்பாளராகத்தானே இருந்திருக்க முடியும்?

ஆனால் 1936இல் பெரியாரிடம் இருந்து விலகிப்போன ஜீவா ‘ஜனசக்தி’ ஏட்டின் ஆசிரியராக இருந்த ஜீவா 11.06.1938 இதழில் ‘ஹிந்தி அவசியமா?’ என்ற தலைப்பில் நீண்டதொரு தலையங்கத்தை எழுதியுள்ளார்.தலையங்கத்தின் ல வரிகளைப் பார்ப்போம
“ஆயிரம் மடங்கு தமிழனுக்குத் தொண்டு செய்து இருக்கிற, தொண்டு செய்து வருகிற ஒரு தமிழனை (இராஜாஜி) பிரதமராகக் கொண்டிருக்கிற மந்திரி சபையார் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைப் போல் சுயலாப நோக்கோடு பலாத்காரத்தால் அல்ல; தமிழர்கள் இந்தியைத் தேசிய பொது பாஷையாக கற்றுத் தீர வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு அன்பால் வற்புறுத்துவது, தமிழைக் கொலை செய்துவிடும் என்று கூச்சலிடுவார்களேயானால் அவர்கள் தமிழர்களா? தமிழ் அபிமானம் உடையவர்களா? தமிழின் ஜீவ சக்தியில் நம்பிக்கை உடையவர்களா?” என்ற கோபம் கொந்தளிக்கும் கேள்விகளை முன்வைத்தது பெரியார் மீது மட்டுமல்ல; இந்தி எதிர்ப்பு வாரியத்தின் தலைவர்களான அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை தலைவராக இருந்த நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள், அவரது மகள் நீலாம்பிகை அம்மையார், கி.ஆ.பெ.விசுவநாதம், பண்டிதை நாராயணி அம்மையார் ஆகியோரையும் நோக்கித்தான்!ரி, தொடர்ந்து தலையங்க வரிகளை பார்ப்போம்
“முதலில் எதிர்ப்பு வீரர்களை எடுத்துக் கொள்வோம். கே.வி.ரெட்டி நாயுடுகார் சர் பட்ட அலங்காரி; மாஜி கவர்னர். பெரியார் ஈ.வெ.ரா எந்த சாக்கிலும் காங்கிரசைத் திட்டி திட்டியே சாவதென்ற தீர்க்கமான தீர்மானத்திற்கு வந்து அந்த ‘புனித’ கைங்கரியத்திலே தனது ‘பொன்னான’ நேரத்தைப் போக்கிக் கொண்டிருப்பவர். ஸ்ரீ சி.டி. நாயகமோ ஜஸ்டிஸ் கட்சியின் கீழ் வளர்ந்த கடுமையான வகுப்புவாதி. மேற்சொன்ன அத்தனை பேரும் ஏகாதிபத்தியத்தின் தாஸானுதாசர்கள். ஏகாதிபத்திய எஜமானர்களின் மேஜைகளிலிருந்து விழும் ரொட்டித் துண்டுக்கு நாக்கில் ஜலம் ஊற அண்ணாந்து நிற்கும் அரசியல் பிற்போக்காளர்கள்.”

“ஏகாதிபத்தியத்திற்கு காவடி எடுப்பதன் மூலம் விலா புடைக்க வயிறு வெடிக்கக் கொழுக்கும் சுயநல ஓநாய்களாய் இருத்தல் வேண்டும். மடையர் பேச்சையும் வஞ்சகர் வீச்சையும் ஞாய புத்தியும் நல்லெண்ணமும் படைத்த எவரும் காதறுந்த ஊசி அளவு கூட பொருட்படுத்த மாட்டார்கள்.

‘முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போல்’ மீண்டும் பொதுஜனங்களில் ஒரு சாராரையாவது வகுப்புவாத ஜுரத்திற்கு இரையாக்க முடியுமா என்கிற சூழ்ச்சி தான், ‘அக்ரஹார ஆட்சி ஒழிக!’ என்கின்ற ஜன்னிப் புலம்பல் காங்கிரஸ் நிர்வாகத்தை அக்கிராகார ஆட்சி என்று பிதற்றுவதைப் போல் உள்ள அசட்டுத்தனத்தையும் பச்சை பொய்யையும் நாம் இதுவரை கண்டதில்லை. ஹிந்தியை கட்டாய பாடமாக்க கூடாது என்று கிளர்ச்சி செய்பவர்கள் ‘காங்கிரஸ் ஒழிக’ என்று அலறுவானேன்? தமிழை அரவணைத்து ரட்சிக்க புறப்பட்ட இவர்கள் காங்கிரஸ் மந்திரி சபை ஒழிக என்று குறித்து குதித்து யோசிப்பானேன்’ ….........
என்றெல்லாம் இந்தி எதிர்ப்பு போராட்டக்காரர்களை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்துள்ளார்.

“தேசிய போராட்டத்திற்குத் தேசிய பாஷை அவசியம் என்பது கைப்புண்ணை பார்க்க கண்ணாடி காட்டுகிற மாதிரி. பல திறப்பட்ட பாஷைகள் பேசப்படும் நம் நாட்டில், தேசியப் போராட்டத்திற்குப் பொதுஜன சக்தியைத் திரட்ட வேண்டுமானால் ஒரு பொதுமொழி எவ்வளவு அவசியம் என்பதை எடுத்துக் கூற வேண்டியது இல்லை. பொது பாஷையாக இருக்க தகுதியுடைய பாஷை எது? பழம் பெருமை படைத்த பாஷையா? வண்டி வண்டியாக இலக்கணங்களும் இலக்கியங்களும் உடைய பாஷையா? ‘சிவனார் போல அடியும் அனாதியுமற்ற’ பாஷையா? எஜமானர்கள் இனிக்க இனிக்கப் பேசும் பாஷையா? இன்று பிறந்த பாஷையா? அல்லது எந்த பாஷை தேச மக்களின் பெரும்பான்மையோரால் பேச முடிகிறதும், பேசினால் அறிய முடிகிறதுமான பாஷையே புது பாஷையாக இருக்க எல்லா வகையான தகுதி உடையது. அப்படியானால் ஹிந்தி தான் இந்தியாவின் பொது பாஷையாக இருக்க முற்றிலும் தகுதி உடையது என்று அழுத்தம் திருத்தமாக அறைகிறோம். மறுப்பவர் மறுக்கட்டும்! தேசிய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு மதர்ந்து கிளர்ந்து நிற்கும் பொது ஜனங்கள், பொது பாஷையாகிய ஹிந்தியை தேசிய பாஷையாக அட்டி இல்லாமல் அங்கீகரிக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டவும் வேண்டுமோ?”

“மந்திரி சபையின் ஹிந்தித் திட்டம், தங்களுடைய ஏகாதிபத்திய எதிர்ப்புத் திட்டத்தின் ஓர் அம்சம் என்பதை பொது ஜனங்கள் நன்றாக உணரவேண்டும்!”

“இந்த பொதுஜன விரோதிகளின், இந்தி எதிர்ப்பு என்னும் வஞ்சக வலையில் ஒரு நாளும் பொது ஜனங்கள் சிக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம். முடிவாக சமீபத்தில் இவ்விஷயமாக வெளிவந்துள்ள சர்க்காரின் அறிக்கையும், ராஜாஜியின் விளக்கத்தையும் நன்றாக சிந்தித்துப் பார்த்து ஹிந்தி எதிர்ப்பு என்னும் விஷ வலையில் சிக்கி உழலும் வாலிபர்கள் திருந்துவார்களாக!

மேலே காட்டப்பட்டுள்ளதுதான் ஜீவா அவர்கள் ‘ஜனசக்தி’யில் எழுதிய தலையங்க வரிகள். இப்போது சொல்லுங்கள் ஜீவா இந்தியை ஆதரித்தாரா? எதிர்த்தாரா?

நினைவூட்ட ஒரு செய்தி. 1936 நவம்பரில் நடந்த சமதர்மக் கட்சியின் முதல் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தின்படி கட்சி கலைக்கப்பட்டு ம.சிங்காரவேலர், ஜீவா போன்ற அனைத்து சமதர்மிகளும் காங்கிரசில் சேர்ந்தனர். ஜீவா 1937-இல் வேலூரில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டர்.

சுயமரியாதை இயக்கத்தில் இருந்து விலகி காங்கிரசில் ப. ஜீவானந்தம் போன்றோரைச் சேர்த்தவர் ம. சிங்காரவேலர். அந்த சிங்காரவேலர் தனது இறுதி நாட்களில் பிற காங்கிரஸ் கம்யூனிஸ்டுகளிடமிருந்து வேறுபட்டவராக இருந்தார். சென்னை மாகாணத்தில் கட்டாய இந்தித் திணிக்கப்பட்டதையும், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டதையும் ம. சிங்காரவேலர் கண்டனம் செய்தார். பார்ப்பன இந்து மதத்திற்கு எதிராக நாத்திக கருத்துகளை வலியுறுத்தி வந்தார். ஆனால் ஜீவாவோ, கட்டாய இந்தியை ஆதரித்து ‘ஜனசக்தி’யில் எழுதிக் கொண்டிருந்தார்."

தொடரும்..........

உரிமை மின்னிதழில் கழகத் தலைவர் பேட்டி
26/11/2025

உரிமை மின்னிதழில் கழகத் தலைவர் பேட்டி

கொள்கைக்காக உங்களை ஒப்படைத்துக் கொள்ளுங்கள்அறிவுத் திருவிழாவில் கழகத் தலைவர் பேச்சுசென்னை வள்ளுவர் கோட்டத்தில் நவம்பர் 8...
22/11/2025

கொள்கைக்காக உங்களை ஒப்படைத்துக் கொள்ளுங்கள்

அறிவுத் திருவிழாவில் கழகத் தலைவர் பேச்சு

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நவம்பர் 8,9 ஆகிய தேதிகளில் திமுக இளைஞர் அணி நடத்திய இருவண்ணக் கொடிக்கு வயது 75 நிகழ்ச்சியில் ‘கருஞ்சட்டை கழகமும் கருப்பு சிவப்புக் கழகமும்’ என தலைப்பில் ஆற்றிய உரையின் தொடர்ச்சி.

இந்திய விடுதலையைப் பற்றி பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இரண்டு விதமான கருத்து வேறுபாடு இருந்தது. தலைவர் பெரியார் துக்கநாள் என்றார். பொதுச்செயலாளர் அண்ணா மகிழ்ச்சியான நாள் என்றார். இரண்டு எதிரிகளில் ஒருவன் போய்விட்டான், மகிழ்ச்சி என்றார் அண்ணா. வெள்ளைக்காரனை விட இப்போது ஆட்சியில் அமர்ந்திருப்பவன் மோசமானவன் என்பது பெரியாரின் நிலை. அப்படித்தான் இருந்தது நிலைமை. ஆகஸ்ட் 15 விடுதலை என்றார்கள், பார்ப்பனர்களுக்கு விடுதலையாக இருந்தது.

அப்படித்தான் தூத்துக்குடி மாநாட்டில் ஒரு தீர்மானத்தை பெரியார் 1948-இல் இயற்றினார். மற்ற மாகாணங்களில் என்னமோ செய்துவிட்டுப்போ. “ சென்னை மாகாணம் சம்பந்தப்பட்ட வரையில் இந்திய யூனியன் அரசாங்கம் சென்னை மாகாண ஜாதிவாரி பிரதிநிதித்துவ முறை சட்டத்தை தபால், தந்தி, ரயில்வே, அகில இந்திய ரேடியோ, அகில இந்திய உத்தியோகங்களில் அனுசரிக்க வேண்டும்” அம்மாநாட்டில் தீர்மானம் இயற்றினார் பெரியார். ஆனால் அப்போது முடியவில்லை. இப்போது அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்புகளில் அமல்படுத்தப்படாமல் இருந்த இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வழக்கு போட்டு நடைமுறைப்படுத்தச் செய்தது திராவிட முன்னேற்றக் கழகம். அதனால் இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பயன்பெற்றனர்.

டாக்டர் சந்திரசேகர் அவர்கள் பெரியாரை பேட்டி கண்டார். ஒன்றிய அரசினுடைய இணையமைச்சராக இருந்து குடும்ப நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் அவர். அனைத்திந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவராக இருந்தவர். சேலத்தில் பெரியார் சிலையை திறந்து சிறப்புரையாற்றியவர். அவர் சென்னை வானொலிக்காக பெரியாரை பேட்டி எடுத்தார். “அரசியல் உத்தியோகங்களில் பெண்களுக்கு 50 விழுக்காடும் ஆண்களுக்கு 50 விழுக்காடும் ஒதுக்குவது பெண்களுக்கு சம உரிமை அளிக்கும். பெண்ணடிமைத்தனத்தை ஒழிக்க உதவும்” என்று அந்த பேட்டியில் பெரியார் சொன்னார். இப்போது தி.மு.க. அரசு ஒவ்வொரு துறைகளிலும் அதைச் செய்துகொண்டு வருகிறது. குரூப் 1 பிரிவில் ஆண்களை விட பெண்கள் கூடுதலான (63 விழுக்காடு) அளவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். இதை இந்தியாவில் வேறு எங்காவது யோசித்துப் பார்க்க முடியுமா? இதற்கெல்லாம் முத்தாய்ப்பான காரணமாக இருப்பது என்பது இந்த இயக்கத்தை வழிநடத்தி, அதை ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக தொடர்ந்து செலுத்துவதற்கு வாய்ப்பாக உருவாக்கி வைத்த நமது தலைவர்கள். தங்கள் இளமைக்காலத்திலிருந்து கொள்கையை உள்வாங்கியவர்களாக அதை உட்செரித்துக் கொண்டவர்களாக, தங்கள் குருதியோடு கலந்து கொண்டவர்களாக இருந்ததுதான், இத்தனை மாற்றங்களையும் நிகழ்த்த அவர்களுக்கு உந்துதலைத் தந்தது.

வேறு எவருக்கும் வராத சிந்தனை!

ஒன்றியத்தில் மட்டும் விடுதலை நாளில் பிரதமர் கொடியேற்றுவார், குடியரசு நாளில் குடியரசுத் தலைவர் கொடியேற்றுவார். ஆனால் மாநிலங்களில் விடுதலை தினம், குடியரசு தினம் இரண்டு நாட்களிலும் ஆளுநரே கொடியேற்றுவார் என்பதுதான் வழக்கமாக இருந்தது. மாநிலத்தில் மட்டும் ஏன் இரண்டு தினங்களிலும் ஆளுநர் மட்டும் கொடியேற்ற வேண்டுமா என்று கேள்வி எழுப்புகிற சிந்தனை யாருக்கு வரும்? கலைஞர்
2 / 13
மட்டும்தான் அந்த கேள்வியை எழுப்பினார். அதன்பின்னர்தான் விடுதலை நாளில் முதலமைச்சர் கொடியேற்றும் உரிமை கிடைத்தது. அது தமிழ்நாட்டிற்கு மட்டும் கிடைத்த உரிமை அல்ல, அனைத்து மாநிலங்களுக்கும் கலைஞர் பெற்றுத்தந்த உரிமை.

ஒவ்வொரு நிலையிலும் கூட அடித்தட்டு மக்களை சிந்திப்பவர்களாக நமது தலைவர்கள் இருந்தனர். நான் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன், தார்சாலையில் தார் ஊற்றுவனுக்கு கூட காலுக்கு ஷூ வாங்கி தர வேண்டும் என்று கலைஞர் காலத்தில்தான் சட்டம் இயற்றினார். எந்த முதலமைச்சராவது தரையை பார்த்திருப்பார்களா? வானத்தை பார்த்துக்கொண்டுதான் போவார்கள். பதவிக்கு போன பின்பும், இவர் அடித்தட்டு மக்களின் காலை அல்லவா பார்த்துக்கொண்டு பயணம் செய்திருக்கிறார். அதுவும் உழைக்கும் மக்களின் கால்கள் அவர் கண்ணுக்கு தெரிந்தது. அதனால் அப்படியொரு திட்டம் வகுக்கப்பட்டது. எனவே இந்த அடித்தட்டு மக்களை உயர்த்துவதற்காகவும், வாய்ப்பு மறுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு வாழ்கிற மக்களுக்கான வாழ்வியல் கொள்கையை உள்வாங்கியும் உருவானதுதான் திராவிடர் இயக்கம். அது இயக்கமாக இருந்தது. இயக்கத்தின் சிந்தனைகளை உள்வாங்கிய தலைவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள், நடைமுறைப்படுத்தினார்கள். அது தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கி இருக்கிறது.

சுயமரியாதைச் சாயம் போகாது!

எனவே இந்த காலகட்டத்தில் இளைஞர்களாக இருப்பவர்களும், அந்த கொள்கையை உடசெரித்துக்கொண்டு, உள்வாங்கிக் கொண்டு, குருதி ஓட்டத்தில் கலந்து கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இளைஞர் அணி இந்த அறிவுத்திருவிழாவை ஏற்பாடு செய்திருக்கிறது. இடையில் வந்து கட்சியில் சேர்ந்தவர்களுக்கு இந்த கொள்கை உணர்வு வாய்க்குமா வாய்க்காதா நமக்குத் தெரியாது. ஆனால் இளமைக்காலத்திலிருந்து உள்வாங்கிக் கொண்டிருப்பவர்கள், இளமைக்காலத்திலேயே கொள்கையை உச்சரித்துக் கொண்டிருப்பவர்கள் நினைத்தாலும் மாறிப்போக முடியாது. எங்களுடைய தலைவர் ஒருவர் சொல்லுவார் "சுயமரியாதைச் சாயம் கெட்டிச்சாயம்; துணி கிழிந்தால்தான் உண்டு; சாயம் போகாது" என்பார். நாம் கெட்டிச்சாயமான சுயமரியாதைச் சாயத்தை திராவிடர் அடையாள சாயத்தை மனதில் ஏந்திக் கொள்வோம்.

இளைஞர்களுக்கு வகுப்புகள் நடத்தி கொள்கைகளை தெளிவுபடுத்த வேண்டும் என்பதும், இளம் பேச்சாளர்களை உருவாக்க வேண்டும் என்பதும், நீங்களும் கொள்கைகளை உள்வாங்கிக் கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் என உங்களை கொள்கையாளர்களாக உருவாக்கவே இத்தகைய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. 1949-இல் திமுக உருவானபோது தலைவர் கலைஞருக்கு என்ன வயது? 25 வயதுதான். கட்சியில் வயதானவரே அண்ணாதான். அவருக்கு வயது 40. மற்ற எல்லோருமே இளைஞர்கள்தான். இளைஞர்கள் இணைந்துதான் இந்த இயக்கம் உருவானது.

18 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வரும்போதும் பலரின் வயது 40க்கு குறைவுதான். 25 வயதில் அவர்கள் உள்வாங்கிய சிந்தனையை, 40 வயதில் ஆட்சியில் அமர்ந்தபோது செயல்படுத்தினார்கள். இப்போது உங்களிடமும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். நீங்களும் இந்த இயக்கத்தின் சிந்தனைகளை உள்வாங்கி கொள்கைப்புரிதலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பின்னர் அதை செயல்படுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். அதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும்.

செயல்படுத்துமாறு உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள்; நீங்கள் அதற்கு துணை நில்லுங்கள். எங்கள் மூளைக்குள் இந்த கொள்கை ஏறியது உங்களைப்போல நாங்கள் இளைஞராக இருந்த காலத்தில்தான். நீங்களும் நல்ல இலட்சியவாதிகளாக வளர வேண்டுமென்பதற்காகத்தான் இளைஞர் அணி இந்த பணிகளை முன்னெடுக்கிறது. பழைய கட்சிக்காரர்களை நான் இப்போது எண்ணிப் பார்க்கிறேன். அவர்கள்
இளமைக்காலத்திலேயே இந்த கொள்கையில் மூழ்கியவர்கள். அவர்கள் எப்படி இருந்தார்கள் என்று நீங்களும் அறிந்துகொள்ள வேண்டும்.

இயக்கத்திற்காக உங்களை ஒப்படையுங்கள்!

1 / 13
1-ம் பக்கம்:

3 / 13
இளமைக்காலத்திலேயே இந்த கொள்கையில் மூழ்கியவர்கள். அவர்கள் எப்படி இருந்தார்கள் என்று நீங்களும் அறிந்துகொள்ள வேண்டும்.

இயக்கத்திற்காக உங்களை ஒப்படையுங்கள்!

பெரியார் நூற்றாண்டு விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எந்த இயக்கம் நிகழ்ச்சி நடத்துகிறதோ அவர்கள் நாடகம் நடிப்பார்கள், இசை நிகழ்ச்சி நடத்துவார்கள். ஆனால் பெரியார் நூற்றாண்டு விழாவில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீதிதேவன் மயக்கம் நாடகம் நடைபெற்றது. நாடகத்தில் நடித்தவர்கள் யார் தெரியுமா? ராவணனாக நடித்தவர் உத்தரமேரூர் கே.எம் ராஜகோபால். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை இருந்தவர். கம்பராக நடித்தவர் சி.வி.எம். அண்ணாமலை. அமைச்சராக இருந்தவர். நீதிதேவனாக நடித்தவர் சி.வி. சம்பந்தம். சட்ட மேலவை உறுப்பினராக இருந்தவர்.

ஒருமுறை அமைச்சராக, சட்டமன்ற உறுப்பினராக இருப்போர் மேடையேறி நடிப்பாரா என்பதே ஐயம். ஆனால் இன்னொரு இயக்கத்தின் நிகழ்ச்சியில் மேடை நாடகம் நடத்துகிறார்கள். அதுவும் முன்னாள் அமைச்சர் நடிக்கிறார்; முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் மேலவை உறுப்பினர் நடிக்கிறார். அவர்களுடைய இதயத்தில் ஏறி இருக்கிற கொள்கை அவர்களை இயங்க வைத்தது. அப்படி நீங்களும் இந்த இயக்கத்தின் கொள்கையை நெஞ்சத்தில் பதித்துக்கொள்ளுங்கள். நமக்கான கொள்கை, நம் மக்களுக்கான கொள்கை, எளிய மக்களுக்கான கொள்கை இது. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற கொள்கை இது. இந்த கொள்கைக்கு உங்களை உட்படுத்திக் கொள்ளுங்கள். உங்களை இயக்கத்திற்கு ஒப்படைத்துக் கொள்ளுங்கள். நன்றி, வணக்கம்.

Address

Kolathur
Mettur

Alerts

Be the first to know and let us send you an email when Kolathur Mani கொளத்தூர் மணி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share