தேவரின பாதுகாப்பு பேரவை

  • Home
  • India
  • Melur
  • தேவரின பாதுகாப்பு பேரவை

தேவரின பாதுகாப்பு பேரவை தேவரின பாதுகாப்பு பேரவை அமைப்பால் அங

இந்தியாவின் முதல் விடுதலை போராட்ட வீரர் மன்னர் பூலித்தேவரின் பிறந்த நாள் இன்று.பூலித்தேவன் (1715–1767) நெற்கட்டான்செவ்வல...
01/09/2022

இந்தியாவின் முதல் விடுதலை போராட்ட வீரர் மன்னர் பூலித்தேவரின் பிறந்த நாள் இன்று.

பூலித்தேவன் (1715–1767) நெற்கட்டான்
செவ்வலைத் தலைமையிடமாகக்
கொண்டு ஆண்டு வந்த
பாளையக்காரராவார். இந்திய
விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே
வெளியேறு’ என்று முதன் முதலாக 1751
ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர்.

1755-ம் ஆண்டு, கப்பம் வசூல் செய்ய வந்த
ஆங்கிலத் தளபதி அலெக்சாண்டர்
ஹெரானோடு யுத்தத்தில் வெற்றி
பெற்றார்.

இந்திய விடுதலைப் போரின் முதல்
வெற்றியும் இதுவே. ஆனால் இந்தப் போர்
இத்துடன் முடியாமல் தொடர்ந்து 12
ஆண்டுகள் நடந்தது. விடுதலைப் போராட்ட
வரலாற்றிலேயே இத்தனை நீண்ட போரோ,
அல்லது முதல் கூட்டணியை அமைத்தோ
யாரும் போர் தொடுத்ததாய் இல்லை. இவரே
முதலில் அத்தகைய சாதனை புரிந்தார்.
போரில் பூலித் தேவனை வெற்றி கொள்ள
முடியாத கும்பினியார், தங்கள் சார்பாகப்
பூலித் தேவனுடன் சண்டை போட
கான்சாகிபு (மருத நாயகம்) என்னும்
தமிழனை அனுப்பி வைத்தனர். மூன்று
ஆண்டுகள் கான்சாகிபு, பூலித் தேவனுடன்
சண்டை போட்டார். தொடர்ந்து வெற்றி
பெற்ற பூலித் தேவன் இறுதியில் 1761-ல்
கான் சாகிபிடம் தோல்வி அடைந்தார்.

இதனால் இந்தியாவின் முதல்
விடுதலைப்போர் எனக் கருதப்படும்
சிப்பாய்க்கலகத்திற்கும் (1857)
முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

சுதந்திரத்திற்கான விதையை போட்டவர் தமிழன் என்று பெருமைகொள்வோம். (y)

09/07/2022
நான்காம் தமிழ்ச் சங்கம் கண்ட தமிழ்மறவன் பாண்டித்துரை தேவர் நினைவு நாள் இன்று ( 02-12-1911)."இனியுமோர் தமிழ்ச் சங்கம் காண...
02/12/2020

நான்காம் தமிழ்ச் சங்கம் கண்ட தமிழ்மறவன் பாண்டித்துரை தேவர் நினைவு நாள் இன்று ( 02-12-1911).

"இனியுமோர் தமிழ்ச் சங்கம் காண்பேன் இருந்த முதலிடை கடைச் சங்கம் போலவே
எனச் சொன்ன பாண்டித் துரைத்தேவன் சொல்லை
இவ்வையம் அந்நாளில் நம்பவே இல்லை.
வியந்தது வையம் சென்றநாள் சிலவே விரிந்தது மதுரைத் தமிழ்ச்சங்க நிலவே
அயர்ந்த தமிழரின் ஆடலும் பாடலும் அறிவின் செயலும் மிளிர்ந்தன பலவே
புலவர் வகுப்பு மூன்று படைத்தான்
புன்மையின் மடமையின் என்பை உடைத்தான்
பல தமிழிலக்கிய மாசு துடைத்தான்
பாண்டித் துரைத் தேவன் புகழ்க்கொடி எடுத்தான் "
- பாவேந்தர் பாரதிதாசன்

மதுரை மாநகரிலே பாண்டித்துரைத் தேவரின் தமிழ்ச்சொற்பொழிவு கேட்க தமிழன்பர்கள் விருப்பப்பட்டனர். இராமநாதபுரத்திலிருந்து மதுரைக்கு வந்து சேர்ந்த அவருக்கு திருக்குறள் நூலும், கம்பராமாயணம் நூலும் தேவைப்பட்டது. கூட்டம் நடத்துபவர்களிடம் கேட்டுப் பார்த்தார். எவரும் தம்மிடம் இல்லையென்றே கை விரித்தனர். பிறகு அருகில் உள்ள நூல் அங்காடியான புது மண்டபத்தில் விலைக்கு வாங்கி உரையாற்றினார். ஆனாலும் அவரின் உள்ளம் மகிழ்ச்சி கொள்ள வில்லை.

செந்தமிழ் பிறந்த மதுரையிலே தமிழுக்கு தாழ்வு நிலை கண்டு மனம் வருந்தினார். அது முதல் பாண்டிய மன்னர்கள் எந்த மண்ணில் சங்கம் உருவாக்கினார்களோ அதே மண்ணில் தமிழுக்கென்று சங்கம் அமைக்க உறுதி பூண்டார். அவர் வேறு யாருமல்ல, நான்காம் தமிழ்ச்சங்கம் (1901) நிறுவிய தமிழ் வள்ளல் என்று போற்றப்படும் பாண்டித்துரை தேவர் ஆவார்.

இவர் சேது நாட்டு அமைச்சர் பொன்னுச்சாமி தேவர்- முத்து வீராயி நாச்சியார் இணையருக்கு மூன்றாவது மகனாக 21.3.1867இல் பிறந்தார். இவரின் பெற்றோர் கடைச்சங்க காலத்தில் இறுதியாக ஆண்ட மன்னன் உக்கிரப் பெருவழுதிப் பாண்டியன் நினைவாக அப்பெயரையே பாண்டித்துரைக்குச் சூட்டினர்.

சிறுவயதில் தனது தந்தையை இழந்த பாண்டித்துரைதேவர் முகவர் சேசாத்திரி என்பவரின் பொறுப்பில் வளர்ந்தார். அழகர் ராசு என்ற புலவரிடம் தமிழறிவை வளர்த்துக் கொண்டவர் இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் துரை உயர்தர பள்ளியில் படித்து ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்றார்.

தனது பதினெட்டாவது வயதில் பாலவனத்தம் சமீன்தாராகப் பொறுப்பேற்றார். இராமசாமிப் பிள்ளை என்பாரிடமிருந்து சைவ தத்துவத்தை கற்றுக் கொண்டார். மதுரை சோமசுந்தர கடவுள் மீது மிகுந்த பக்தி கொண்ட காரணத்தால் இராமநாதபுரத்தில் தாம் கட்டிய மாளிகைக்கு 'சோமசுந்தர விலாசம்' என்றும் பெயர் சூட்டினார். இசைத்தமிழ் மீது மிகுந்த ஆர்வமுடையவராகி தமது இருபத்திரண்டாம் வயதில் இசைத்தமிழ் மாநாட்டை ஏழு நாட்கள் நடத்தி புகழும் அடைந்தார்.

அந்நாளில் ஸ்காட்துரை என்ற பரங்கியர் திருக்குறளை எதுகை மோனையோடு திருத்தி வெளியிட்டார். "சுகாத்தியரால் திருத்தியும் பதுக்கியும்.பதிப்பிக்கப்பட்ட குறள்" என்ற தலைப்பில் வெளியான அந்த நூலை பாண்டித்துரைதேவரும் வாங்கிப் படித்தார். முதல் பாடலே முற்றும் கோணலாய் இருந்தது. அப்பாடலில்,

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"

-என்பதற்குப் பதிலாக

"அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி உகர முதற்றே உலகு"

-என்று அச்சிடப்பட்டிருந்தது.

இதைக் கண்டு கோபமடைந்த பாண்டித்துரை தேவர் அந்த வெள்ளைப் பரங்கியரின் அறியாமைக்கும், செருக்குத்தனத்திற்கும் பாடம் புகட்ட விரும்பினார். அதன்படி மொத்தம் அச்சடித்த ஐநூறு பிரதிகளுள் விற்பனை செய்தது போக மீதமுள்ள முந்நூறு பிரதிகளை பணம் கொடுத்து வாங்கினார். பின்னர் ஆழக்குழி தோண்டி அந்தப்பிரதிகள் அனைத்தையும் போட்டு எரிக்கும்படி ஆணையிட்டார்.

இதைப் பாராட்டி பண்டிதர் அ.முத்துசாமிப் பிள்ளை என்பவர் பாடல் தீட்டினார். அது வருமாறு:

"வள்ளுவர் அருளிய மாண்புறு குறளைத் திருத்திய
வெள்ளையன் செய்கையை அறிந்து
வருத்தமுற் றதனை வாங்கித் தீக்கிரை ஆக்கியல் வெள்ளையற்(கு) அரும்பொருள் கொடுத்துப்
போக்கிய புண்ணியன் புவிபுகழ் கண்ணியன்"

1900ஆம் ஆண்டு திருப்பாதிரிப் புலியூரில் உள்ள தவத்திரு ஞானியார் அடிகளை பாண்டித்துரைதேவர் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அன்று மாலை சொற்பொழிவு நிகழ்த்திய ஞானியார் அடிகள், "பாண்டித்துரை தேவரும் பிற செல்வந்தர்களும் சேர்ந்து மீண்டும் ஒரு தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவி தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடவேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஏற்கெனவே, தமிழுக்கு நேர்ந்த இழிநிலை குறித்து வருத்தம் கொண்டிருந்த பாண்டித்துரைதேவருக்கு ஞானியார் அடிகளின் பேச்சு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

அவரின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கும் வகையில், உடனடியாக தனது சகோதரர் பாசுகர சேதுபதியிடம் கலந்து பேசி மதுரையில் 1901ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் நாள் நான்காவது தமிழ்ச் சங்கம் நிறுவப்படும் என்று அறிவித்தார். முதல் தமிழ்ச் சங்கத்தை காய்சினவழுதிப் பாண்டியன் என்பாரும், இரண்டாம் தமிழ்ச் சங்கத்தை வெண்டேர்ச் செழியன் என்பாரும், மூன்றாம் தமிழ்ச் சங்கத்தை முடத்திருமாறன் என்ற உக்கிரப் பாண்டியன் என்பாரும் தோற்றுவித்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மதுரை சேதுபதி உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்ற நான்காம் தமிழ்ச் சங்க தொடக்கவிழாவில், உ.வே.சாமிநாதைய்யர், ரா.இராகவைய்யங்கார், வை.மு.சடகோப ராமாநுஜாசாரியார், வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரியார், சோழவந்தான் அரசஞ் சண்முகனார், பின்னத்தூர் நாராயண சாமி ஐயர், திருமயிலை சண்முகம் பிள்ளை போன்ற தமிழறிஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

தமிழேடுகள், அச்சிடப்பட்ட தமிழ்நூல்கள் ஆகியவற்றை தேடியெடுத்து பிறருக்கு பயன்படுமாறு தொகுக்கப்பெறுவதும், வெளிவராத அரிய பல தமிழ் நூல்களை அச்சிலேற்றி பரவச் செய்வதும், வடமொழி, ஆங்கிலம் முதலிய பிறமொழிகளில் உள்ள அரிய நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுவதும், தமிழைப் பரப்பும் ஏடு தொடங்குவதும், தமிழறிஞர்கள் சொற்பொழிவு நிகழ்த்துவதும், நல்லறிஞர்களால் எழுதப்பெற்ற நூல் உரையை வெளிக்கொண்டு வருவதும் நான்காம் தமிழ்ச் சங்கத்தின் நோக்கங்களாக அறிவிக்கப்பட்டன.

மேற்படி நோக்கங்களை நிறைவேற்றிட வித்துவான் கழகம், சேதுபதி செந்தமிழ்கலாசாலை, பாண்டியன் புத்தக சாலை, தமிழ்ச் சங்க முத்திரா சாலை ஆகிய நான்கும் தமிழ்ச் சங்கத்தை தாங்கி நிற்கும் தூண்களாக பாண்டித்துரைதேவர் அவர்களால் நிறுவப்பட்டன.

தமிழறிஞர்களுக்காக உருவாக்கப்பட்ட வித்துவான் கழகமானது கடல் கடந்து வாழும் தமிழறிஞர்களையும் தன்பால் ஈர்த்தது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அ.குமாரசுவாமிப்பிள்ளை, ஆ.முத்துத்தம்பி பிள்ளை, நா.கதிரைவேற்பிள்ளை, கு.கதிரைவேற்பிள்ளை மற்றும் பிரெஞ்சு நாட்டு அறிஞர் பேராசிரியர் ஜீலியன்வில்சன், மலேசியா காரை.சிவசிதம்பரை அவர்களும் மதுரைத் தமிழ்ச்சங்கத்தின்உ றுப்பினர்களாக இருந்து தமிழ்ச்சங்கம் அடுத்தக் கட்ட வளர்ச்சி நோக்கிச் செல்வதற்கு தேவையான திட்டங்களை வகுத்துக் கொடுத்தனர்.

சேதுபதி செந்தமிழ் கலாசாலையில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம் ஆகிய மொழிப்பாடங்களோடு தேவாரமும், திருவாய்மொழியும் சேர்த்து கற்றுத் தரப்பட்டது. அம்மாணவர்களுக்கு பாண்டித்துரைத்தேவர் தம் சொந்த செலவில் இலவய உணவும், உடையும் வழங்கியதோடு, நன்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசுப் பணமும், பதக்கங்களும் அளித்துச் சிறப்பித்தார்.

தமிழ்ச்சங்க முத்திராசாலையில் நிறுவப்பட்ட அச்சகத்தில் பல அரிய தமிழ்நூல்கள் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் பதிப்புப் பணிக்கு பாண்டித்துரைத்தேவர் உறுதுணையாக விளங்கினார். புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை, மணிமேகலை ஆகியவை பாண்டித்துரைத் தேவரின் பொருளுதவியோடு வெளிவந்தன.

ஞானாமிர்தம், சைவ மஞ்சரி, ஐந்திணையைம்பதுரை, இனியவை நாற்பதுரை, விவசாய ரசாயன சாஸ்திர சுருக்கம், யாப்பு அணியிலக்கணங்கள், வைத்தியசார சங்கிரகம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் முத்திராசாலையில் அச்சடிக்கப்பட்டு வெளிவந்தன. தமிழர் மரபாகிய சித்த மருத்துவத்தை மீட்டெடுக்கும் வகையில் பாண்டித்துரைத்தேவர் அவர்களே வைத்தியசார சங்கிரகம் நூலுக்கு அணிந்துரை வழங்கியது போற்றத்தக்க ஒன்றாகும்.

1902ஆம்ஆண்டு டிசம்பர் 7ஆம் நாளில் இரா.இராகவையங்காரை ஆசிரியராகக் கொண்டு."செந்தமிழ் " இதழ் தொடங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து மு.இராகவையங்கார் இதழின் பொறுப்பாசிரியராக நீண்டகாலம் பணியாற்றி வந்தார். அவ்விதழில் தமிழின் பூர்வ வரலாற்றை எடுத்துரைக்கும் பல ஆய்வு கட்டுரைகள் நுண்மான் நுழைபுலம் மிக்க அறிஞர்களால் எழுதப்பட்டு வந்தன. முதல் இதழிலேயே "உயர்தனிச்செம்மொழி " எனும் தலைப்பில் சூரிய நாராயண சாஸ்திரி கட்டுரை எழுதி தமிழுக்குப் பெருமை சேர்த்தார்.

அவருக்குப் பின் மறைமலையடிகளாரின் பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை, இரா.இராகவையங்காரின் சேது நாடும் தமிழும், சோமசுந்தர பாரதியாரின் தமிழ் நூல்களும் தமிழகமும், சேரர் பேரூர், மு.இராகவையங்காரின் வேளிர் வரலாறு, சாசனத் தமிழ்க்கவி சரிதம், தமிழரும், ஆந்திரரும் ஆகிய கட்டுரைகள் செந்தமிழ் ஏட்டை அலங்கரித்தன.

பாண்டித்துரைத்தேவர் தோற்றுவித்த மதுரைத் தமிழ்ச்சங்கத்திலும் தொல்காப்பியரை பிராமணர் என்றும், வடமொழி உயர்ந்ததென்றும், ஆரிய நாகரிகமே சிறந்தது என்றும் வைதீக பிராமணப் புலவர்கள் பேசி வந்தனர். இக்கருத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த பாண்டித்துரைத்தேவர் மறைமலையடிகள் மூலம் பதிலடி தர விரும்பினார்.

25.5.1905இல், "மதுரைத் தமிழ்ச்சங்க நான்காம் ஆண்டு விழாவும் -தமிழர் நாகரிகப் போராட்டக் கொடி ஏற்றமும்" என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில் உரையாற்றிய மறைமலையடிகள் ஆரிய நாகரிகத்திற்கும், பிராமணர்களுக்கும் தமிழர் கடமை பட்டிருக்கவில்லை என்றும், ஆரியர்களால் தான் தமிழும், தமிழரும் பாழ்பட நேர்ந்தது என்பதை ஆதாரங்களோடு எடுத்துக்காட்டிப் பிராமணர்களின் வாயடைத்தார். அப்போது அதைக் கேட்டு வெகுவாக இரசித்த பாண்டித்துரைத்தேவர் மறைமலையடிகளுக்குப் பாராட்டுரை வழங்கினார்.

1906இல் வ.உ.சிதம்பரனார் பரங்கியருக்கு எதிராக சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கினார். அப்போது ஒரு இலட்சம் ருபாயை தனது பங்குத் தொகையாகப் பாண்டித்துரைத்தேவர் வ.உ.சி.க்கு அளித்தார். இதன் மூலம் அவரின் தமிழினப் பற்றும், இந்திய விடுதலைப் பற்றும் ஒரு சேர வெளிப்படுவதை உணரலாம்.

தமிழுக்குத் தீங்கு நேரும் போதெல்லாம் பாண்டித்துரைத்தேவர் குரல்கொடுக்கவும் தயங்கவில்லை. சென்னை பல்கலை.யில் பாடப்புத்தகத்திலிருந்து தமிழ்ப்பாடத்தை நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை தடுத்துநிறுத்துவதற்கு சூரிய நாராயண சாஸ்திரியும், பூரணலிங்கம் பிள்ளை அவர்களும் பாண்டித்துரைத்தேவரை நேரில் சந்தித்து உதவி வேண்டினர்.

உடனடியாக மதுரைத் தமிழ்ச்சங்கத்தைக் கூட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றி தனது எதிர்ப்பைக்.காட்டினார் பாண்டித்துரைத் தேவர். மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் எதிர்ப்பினை புரிந்து கொண்ட சென்னைப் பல்கலை. தமிழை நீக்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தது.

ஆரியர் தமிழரை அழைத்த 'திராவிடர்' என்ற சொல்லுக்கு 'ஓடுதல்' என்றபொருளும் உண்டு என்பதை தாம் எழுதிய 'தமிழ்ப் பழஞ்சரிதம்' நூலில் பாண்டித்துரைத்தேவர் குறிப்பிட்டார். இதனை தொடர் கட்டுரையாக தமது 'செந்தமிழ்' ஏட்டிலே எழுதினார். அது பின்வருமாறு:

"தமிழணங்கு ஆந்திரம், கன்னடம், முதலிய சேய்களைப் பிறப்பியாது தனியிளமை பெற்று விளங்கிய காலத்திலே, அந்நங்கை தனக்கு ஆடலரங்கமாகக் கொண்ட பிரதேசம் வடவேங்கடந் தென்குமரியாயிடை யன்று.வடவியந்தென்குமரியாயிடையே அவ்வாறிளமை பெற்றிருந்த தமிழ் பின்பு ஆரியர் படையெடுப்புகளால் அலைப்புண்டு, தன் ஆடலரங்கைச் சுருக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. அன்றியும் அவ்வந்நியரது.கூட்டுறவை வெறுத்து அத்தமிழ் நங்கையோடி யொளியுமிடங்கள் பலவற்றில், தான்பெற்ற சேய்களை அங்கங்கே விட்டுப் பிரியவும் நேர்ந்தது. இவ்வாறு தமிழணங்கு தம்மையஞ்சியோடி ஒளிவது கண்ட ஆரியர் அந்நங்கைக்குத் 'திராவிடம்' என்னுங் காரணப்பெயரை வழங்கலாயினர்.
(திராவிடம் என்னும் மொழிக்கு வடமொழியில் ஓடுதலையுடையதென்பது பொருள்).

தமிழ்ப்பணியே தம் வாழ்நாள் பணியாக மேற்கொண்டிருந்த பாண்டித்துரைத்தேவர் ஒருநாள் தம் மாளிகையில் பலருடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று மயக்கமுற்று கீழ விழுந்தார். அப்போது நினைவிழந்தவர் மறுபடியும் மீள வில்லை. அவர் 2.12.1911இல் தமிழ் மண்ணை விட்டு உயிர் நீத்தார். அப்போது அவருக்கு அகவை நாற்பத்தி நான்கு. அந்த அகவைக்குள் அவர் செய்த தமிழ்ப்பணிகள் நம்மை மலைக்க வைக்கிறது. மனம் சில்லிடவே செய்கிறது.

அந்நாளில் அவர் தமிழ்ச் சங்கத்தை தொடங்கிய போது , சங்கம் வைத்த பாண்டியருக்கு ஒப்ப இவரால் தமிழ்ச் சங்கத்தை செலுத்த இயலாது என்று பலரும் ஏகடியம் செய்தனர். அவற்றையெல்லாம் புறந்தள்ளி புகழ்க்கொடி நாட்டினார் பாண்டித்துரைத்தேவர்.

1921ஆம் ஆண்டு ஆம்பூர் உயர் நிலைப்பள்ளியில் பணியாற்றிய போது தமிழாசிரியர் தகுதி பெற மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தேர்வெழுதி தகுதி பெற்றேன். அப்போது எழுந்த தமிழ்வெறியினால் ஆங்கிலத்தை அறவே புறக்கணித்து தமிழராய்ச்சியில் ஆழ முழுகித் தமிழின் அடிமட்டத்தைக் கண்டதாக மொழிஞாயிறு பாவாணர் குறிப்பிடுவார்.
பாண்டித்துரைத்தேவர் உருவாக்கிய தமிழ்ச்சங்கம் இல்லையெனில் மொழி ஞாயிறு இல்லையென்பார் செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார்.

பாவணரும் தனது 'பாண்டித்துரை பதிகம்' பாடலின் மூலம் பாண்டித்துரைத் தேவரைப் போற்றி வணங்கத் தவறவில்லை. அவர் கூறியதையே இந்நாளில் நாமும் கூறிடுவோம்.

"தென்மதுரைப்பாண்டியன் தெய்வத் தமிழ்வாழி
நன்மதுரை நாலாஞ்சங் கம் வாழி -
சொன்மதுரப் பாலவ நத்தம் வேள் பாண்டித் துரைத்தேவன்
போலிமை யற்ற புகழ்!"

(பாண்டித்துரைத்தேவரின் திருவுருவச்சிலை மதுரைத் தமிழ்ச்சங்கம் சாலையில்
நிறுவப்பட்டுள்ளது)

தேவர் ஜெயந்தியை வைத்து செய்யப்படும் அரசியல் சூழலில் சிக்கிக்கொள்ளாதே..!உடனடியாக எதிர்வினை ஆற்ற தூண்டப்படுவாய். அப்படி எண...
30/10/2020

தேவர் ஜெயந்தியை வைத்து செய்யப்படும் அரசியல் சூழலில் சிக்கிக்கொள்ளாதே..!

உடனடியாக எதிர்வினை ஆற்ற தூண்டப்படுவாய். அப்படி எண்ணாதே..!

உன்னை நசுக்குகிறார்கள் என்பது உனக்கு புரியுமேயானால்..

உன் வேகத்தை, விவேகத்தை வேறு வழிகளில் காட்டு..
இல்லை காட்ட தயாராகு..!

படி...
அதிகாரத்தில் அமர்..
உத்தரவிடும் இடத்திற்கு உயர்..!
பொருளாதார நிலையில் தன்னிறைவு பெறு..!

அதுவே உன் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யும்..

அதை விடுத்து
எவனது அரசியல் சூழ்ச்சிக்கும் பலி ஆடு ஆகிவிடாதே..!

படி, பண்படு, பணம் சேர்..
மற்றவை தானே வரும்..!

தேவர் ஐயாவின் ஆசையும் அதுவே..!

மற்றவர்கள் மாநிலம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் நடத்துகிறார்கள்..

உன்னால் புதிதாக கல்வி நிலையங்களை உருவாக்க இயலவில்லை என்ற போதும். ஏற்கனவே உள்ள மூன்று கல்லூரிகளை காக்கவே போராடி வருகிறாய்..!

வேலை வாய்ப்பில், இட ஓதுக்கீட்டில் உனது வாய்ப்புகளை மற்றவர்கள் தட்டி செல்ல அனுமதித்து விட்டு இன்னமும் மூடை தூக்குகிறாய் இல்லை அரிவாள் தூக்குகிறாய்..!

கல்வி கற்கிறாய் உன்னை குறை சொல்லவில்லை, ஆனால் அதன் பயனை அறுவடை செய்கிறாயா ?

வருடம் தோறும் விதைத்து விட்டு மகசூல் எடுக்காத விவசாயி போல படித்து விட்டு சும்மா தெரிகிறாய்.
அதை விடுத்து அரசுப்பணிகளில் சேர கவனம் கொள்..

வியாபாரம் செய்..
உணவு பொருட்களை உற்பத்தி செய்ய தெரிந்த உனக்கு.
வியாபாரம் செய்யவா தெரியாமல் போய்விடும்..

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் எல்லாம் காலம் காலமாக வியாபாரிகளாக இருக்கும் போது உனக்கு மட்டும் தெரியாதா என்ன ?

உன்ன சுற்றி இருப்பவர்கள் உன்னை சுரண்டி பிழைப்பதை முதலில் தடு..
பின் தானே அனைத்தும் வந்து சேரும்.

காவல்துறை மட்டுமே அரசுப்பணியல்ல..

அரசியல்வாதிகளுகே உத்தரவிடும் அநேக பணிகள் இங்குள்ளன. அவற்றை கைப்பற்ற போராடு..!

அவர் சொன்ன இரு வார்த்தைகளிலேயே உனக்கு பதில் சொல்கிறேன் கேள்..!

வீரமும், விவேகமும் கொள்.

தேசியமும், தெய்வீகம் கொள்..!

பசும்பொன் ஐயா சித்தர் என நீ நம்புவது உண்மையானால் அவர் நம்மை என்றும் வழி நடத்துவார்..!

# Share

தேவர் ஜெயந்தி வாழ்த்துக்கள் 😍🎉💐
29/10/2020

தேவர் ஜெயந்தி வாழ்த்துக்கள் 😍🎉💐

மருதிருவரோடு தூக்கிலிடப்பட்ட 543. பேருக்கும்  வீரவணக்கம்!மறைக்கப்படும் மருது பாண்டியர் வரலாறு!--------------------------...
24/10/2020

மருதிருவரோடு தூக்கிலிடப்பட்ட
543. பேருக்கும் வீரவணக்கம்!

மறைக்கப்படும்
மருது பாண்டியர் வரலாறு!
---------------------------------------------

1857 ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட வல்லாதிக்க எதிர்ப்புப் போர் தான் "முதல் இந்திய விடுதலைப் போர்" என்று தில்லி அரசு தமிழர்கள் மீது திணித்து வருகிறது. இந்து இசுலாமிய மதச் சாயலோடு வெளிப்பட்ட போரில் பல்வேறு பகுதிகளின் கூட்டு ஒருங்கிணைவோ, அடித்தட்டு மக்களின் பங்களிப்போ இருந்ததில்லை . தொடக்கத்தில் புரட்சிக்கான எல்லாக் கூறுகளையும் கொண்டிருந்த போதிலும் இறுதியில் குறுகிய மதவாதச் சேற்றில் மூழ்கி தோற்றுப்போனது.

ஆனால் தென்னிந்தியாவில் இந்தப் போருக்கு முன்னர் நடத்தப்படட பல்வேறு பிரித்தானிய எதிர்ப்புப் போர்கள் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. சாதி, மத, மொழிகளைக் கடந்து பூலித்தேவன், ஹைதர்அலி, திப்புசுல்தான், மருது பாண்டியர்கள், தீரன் சின்னமலை ஆகியோர் போராடி வந்துள்ளனர்.

குறிப்பாக . மருது பாண்டியர்கள் நடத்திய போராட்டம் தென்னிந்தியாவில் நடந்த விடுதலைப் போரில் முதன்மையானதும், திருப்புமுனையும் கொண்டதாகும். மருது பாண்டியர் தளபதியாகவும், ஆட்சிப் பொறுப்பிலும் இருந்த ஆண்டுகள் 1780 முதல் 1801 வரை.

இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் வட திசையின் மீது மனச்சாய்வு கொண்டவர்களாக இருப்பதால் இந்திய விடுதலை வரலாற்றை தென் திசையிலிருந்து தொடங்குவதில்லை. இந்திய விடுதலை வரலாற்றை கால வரிசைப்படியும் எழுத மறுக்கின்றனர் .

ஆங்கிலேயர்கள் தென்பகுதியில் தான் காலடி வைத்து தங்கள் ஆதிக்கத்தை முதன்முதலாக நிறுவினர். அதன் பிறகே வடபுலம் நோக்கி நகர்ந்து , விரிந்த வணிகச் சந்தையை உருவாக்கினர்,

ஆங்கிலேயர்கள் தென் மண்ணில் நிலை பெற்று ஆதிக்கம் செலுத்திய போது பல்வேறு சிற்றரசுகள் ( பாளையப்பட்டுகள்) வரி வசூலிக்கும் முகவாண்மையாக செயல் பட்டன. பின்பு வரி வசூலிக்கும் உரிமையை தானே எடுத்துக் கொண்டு சிற்றரசுகளின் அதிகாரத்தை ஆங்கிலேயர் பறித்துக் கொண்டனர். அப்போதுதான் சிற்றரசுகள் சில விழித்துக் கொண்டு பொது எதிரி எனும் அடிப்படையில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து ஒன்று படுகின்றன . இந்த ஒன்று படுத்துதல் முயற்சிக்கு முதலில் அடித்தளமிட்டவர்கள் பெரிய மருது, சின்ன மருது என்று அழைக்கப்படும் மருது பாண்டியர்கள் ஆவார்கள்.

தூந்தாஜி வாக் (வட கன்னடம்), கேரளவர்மா (மலபார்), தீரன்சின்னமலை (கோவை), கோபால நாயக்கர் (திண்டுக்கல்), கிருஷ்ணப்பா நாயக்கர் (மைசூர்), ஊமைத்துரை (நெல்லை), மயிலப்பன், முத்துக்கருப்பர் (இராமநாதபுரம்). ஞானமுத்து (தஞ்சை ) ஆகியோரோடு இணைந்து "தென்பகுதி கூட்டமைப்பை" முதன் முதலில் உருவாக்கி ஆங்கிலேயப் படையினரை நிலைகுலையச் செய்த பெருமை மருது பாண்டியர்களையேச் சாரும்.

சின்ன மருது வெளியிட்ட "ஜம்புத்தீவு பிரகடன" அறிக்கைக்கு இணையாக வடநாட்டில் எந்த மன்னனும் வெளியிட்டதில்லை. அதில், "ஐரோப்பிய ஈனர்களுக்கு தொண்டு செய்பவனுக்கு மோட்சம் கிடையாது. அவன் வைத்திருக்கும் மீசை எனது அடிமயிருக்குச் சமம். அவன் பெற்ற பிள்ளைகள் தன் மனைவியை ஐரோப்பிய ஈனப் பிறவிக்கு கூட்டிக் கொடுத்துப் பெற்ற பிள்ளைகள். ஐரோப்பிய குருதி ஒடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!" என்று அறைகூவல் விடுக்கப்பட்டது.

"ஜம்புத்தீவு ( நாவலந்தீவு என்பது தமிழ்ப் பெயர்) புரட்சிப் பிரகடன அறிக்கை" திருச்சி மலைக்கோட்டையிலும், திருவரங்கக் கோயில் வாசற்கதவிலும் ஒட்டப்பட்டது.

இதைப் படித்து ஆத்திரமுற்ற ஆங்கிலேய அரசு மருது பாண்டியர்களின் உற்றார், உறவினர் ,மகன்கள், பேரன்கள் ஆகியோரை சிறை பிடித்து தூக்கிலிட ஆணை பிறப்பித்தது.அதன் பிறகு மருது பாண்டியர் உள்ளிட்ட 500 பேர் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்.

மருது பாண்டியர்களும், ஏனையோரும் தூக்கிலிடப் படுவதற்கு முன்பு நடந்த நிகழ்வுகளை கோர்லே (Gourley )எனும் ஸ்காட்லாந்துகாரர் ஒரு இராணுவ அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாகக் கூறுகிறார்:

"மருதுவின் அறிக்கை கீழ்த்தரமான பழிவாங்கும் எண்ணத்தை உசுப்பி விட்டது. இதன் காரணமாக அவரது சீமைக்குத் தீ வைத்து அழிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரது குடும்பத்தில் இருந்த ஆண், பெண் அனைவரையும் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. பிடி பட்ட அனைவரையும் இராணுவ விசாரணை எதுவுமின்றி தூக்கிலிட ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஆணைகள் சிறிது கூட மாற்றமின்றி கால தாமதமின்றி நிறைவேற்றப்பட்டன. மருது இராணுவ மன்றத்திடம், 'தனக்கு தயை எதுவும் காட்ட வேண்டாம்' என்று சொன்னார். நான் என் நாட்டைக் காப்பாற்றுவதற்காகப் போரிட்டு தோற்கடிக்கப் பட்டுள்ளேன். என்னுடைய உயிரைப் பறிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். நான் அது பற்றி ஒன்றும் சொல்ல விரும்ப வில்லை. ஆனால் இந்தச் சிறுவர்கள்? இவர்கள் என்ன தவறு செய்தனர்? இவர்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தார்களா? இவர்களைப் பாருங்கள்! இவர்களால் ஆயுதம் எடுக்க முடியுமா?"

(கோர்லே எழுதிய நூலின் பெயர் : "Mahradu- An indian story of the begining of the ninteeth century- 1813, London)

மேற்கண்ட மருதுவின் இறுதி உரையினைப் படிப்பவருக்கு அண்மையில் நடந்த முள்ளிவாய்க்கால் போர் தான் நினைவுக்கு வரும். அதில் குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தோர் என்று வேறுபாடின்றி கொடுங்கோலன் இராசபக்சே அரசால் கொன்று குவிக்கப் பட்டதையும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனது குடும்பம் பூண்டோடு அழிக்கப்பட்டதையும் நெஞ்சில் ஈரங்கொண்டோரால் எப்படி மறக்க முடியும்?

ஆயுதமென்றால் என்னவென்று தெரியாத பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனை கொல்ல உங்களுக்கு மனம் எப்படி வந்தது? என்று நாம் சிங்கள ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்பதைப் போலத்தான் அன்றைக்கு இராணுவத்திடம் பிடிபட்ட மருதுவும் கேட்டுள்ளார்.

24.10.1801இல் மருதுபாண்டியர்கள் உள்ளிட்ட அனைவரையும் தூக்கிலிடப்பட்ட பிறகும் ஆங்கிலேய அரசின் பழிவாங்கும் இரத்தவெறி அடங்கவீல்லை.

மருதுவின் எஞ்சிய வாரிசாகிய 15 வயதுடைய துரைச்சாமி உள்பட 73 பேரை மலேசியாவின் பினாங்கு தீவிற்கு (prince of wales island) 11.02.1802இல் நாடு கடத்த உத்தரவிட்டது.

1818இல் பினாங்கு சென்ற இராணுவத் தளபதி வேல்ஷ் என்பவர் துரைச்சாமியை பார்த்துள்ளார். அது குறித்து 'எனது நினைவுகள்' நூலில் பின் வருமாறு கூறுகிறார்: "உடல் நலம் குன்றிய தோற்றத்தோடு துரைச்சாமியை காண நேரிட்டது. இதைப் பார்த்த பொழுதில் என் இதயத்தில் கத்தி சொருகியதைப் போல உணர்ந்தேன்."

சிவகங்கையை ஆண்ட மருது பாண்டியர்கள் அரசப்பரம்பரையினர் அல்ல. சிவகங்கையை சேதுபதி மன்னர் வழியாக ஆட்சி செய்தவர்கள் முத்து வடுக நாதரும், அவரது மனைவி வேலு நாச்சியாருமே. ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் வேலு நாச்சியார் விருப்பத்தின் பேரில் படைத் தளபதிகளாக பொறுப்பு வகித்த மருது பாண்டியர்கள் வசம் ஆட்சி நிர்வாகம் ஒப்படைக்கப்படுகிறது.

1800ஆம் ஆண்டுகளில் விவசாயிகளை கொடுமைப் படுத்திய மன்னர்கள் நிறையவே உண்டு. இதற்கு விதி விலக்காக மருது பாண்டிய மன்னர்கள் விளங்கினர். மருது பாண்டியர்களின் அரசு மக்கள் அரசாக குறிப்பாக விவசாயிகள் விரும்பிய அரசாக விளங்கியது. அதற்குக் காரணம் அவர்கள் விவசாயிகளுக்கு பல அரசு உதவிகளை (சலுகையாகவோ, மானியமாகவோ) வழங்கிடும் நிர்வாக சீர்திருத்தங்களைச் செய்தனர். அடித்தள மக்களின் ஆதரவாளர்களாக மருது பாண்டியர்கள் விளங்கியதை பேரா.கதிர்வேலின் "history of Maravas" நூலில் நரிக்குடி சத்திரச் செப்பேட்டில் காணப்படும் செய்தியை தந்துள்ளார்.

விவசாயிகளின் நல்லெண்ணத்தை அவர்கள் ஈட்டியிருந்ததால் தான் அவர்கள் விடுதலைப் போரை நடத்திய போது சிவகங்கை சீமைக்கு வெளியிலும் விவசாயிகளின் ஆதரவு பெருகியது . மருதிருவர் படை தஞ்சை நோக்கிச் சென்ற போது அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் அவர்களுடன் இணைந்து கொண்டனர் என மார்க்சிய அறிஞர் கோ.கேசவன் அர்கள் "சமூகமூம் கதைப்பாடலும்" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மருது பாண்டியர்களின் மாண்பினை உயர்த்தும் வரலாற்றுச் சான்றுகள் எண்ணிலடங்கா. பல சான்றாவணங்களை எடுத்துக் கூறியும் கூட, தில்லி அரசின் கட்டுப்பாட்டில் இயங்கங்கூடிய இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழுவானது (ICHR) மருது பாண்டியர்களின் வீரஞ்செறிந்த விடுதலைப் போரை முதல் சுதந்திரப் போராக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இது தமிழினத்தின் மீதான பகையுணர்ச்சியை வெளிப்படுத்தும் செயலாகும்.

தென்னாட்டுக் கிளர்ச்சிகள்
(South indian rebellion- The first independance 1800-1801) எனும் நூலின் மூலமாக அதன் ஆசிரியர் இராஜய்யன் என்பவர் முதல் சுதந்திரப் போராக இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழு (ICHR) மருது பாண்டியர் நடத்திய போரை அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

"வட இந்தியத் தலைவர்கள் வான்புகழ் பெறுகின்றனர். தமிழ்நாட்டுத் தலைவர்கள் ஏற்ற அறிவும், ஆற்றலும் பெற்றிருந்தும் அவ்வாறு உயர்ந்து விளங்குதல் அரிதாக உள்ளது. காரணம் தமிழர் தம்மவர்களின் சிறப்புகளை உணராமையும், உணர்ந்தாலும் போற்றாமையும் ஆகும்" என்று பேரா.ந.சஞ்சீவி எழுதிய "மானம் காத்த மருதிருவர்" நூலின் அணிந்துரையில் மு.வரதராசனார் குறிப்பிடுவார்.

மு.வ.வின் கூற்று முற்றிலும் உண்மை தானே? தமிழர்களே! நம் வரலாற்றை உணரப் போவது எப்போது?

(இன்று மருது பாண்டியர் தூக்கிலிட்ட நாள்
24.10.1801)

@ "மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள்" நூலிலிருந்து.

தேவரின பாதுகாப்பு பேரவை நிறுவுனர்செ. கதிரேசன் அய்யா நினைவு நாள் இன்று 🙏தேவரின் நினைவிடத்தில் கோவில் போன்று எழுப்ப காரணமா...
22/09/2020

தேவரின பாதுகாப்பு பேரவை நிறுவுனர்
செ. கதிரேசன் அய்யா நினைவு நாள் இன்று 🙏

தேவரின் நினைவிடத்தில் கோவில் போன்று எழுப்ப காரணமாக இருந்தவர்களில் ஒருவர் கதிரேசன் அய்யா.

 #இந்து_தமிழ்_இசை நாளிதழில் நேற்று வெளிவந்த கட்டுரை.நாடு கடத்தப்பட்ட முதல் அரசன் வேங்கை பெருஉடையணத் தேவன்நேற்று 218 ஆவது...
22/09/2020

#இந்து_தமிழ்_இசை நாளிதழில் நேற்று வெளிவந்த கட்டுரை.

நாடு கடத்தப்பட்ட முதல் அரசன் வேங்கை பெருஉடையணத் தேவன்
நேற்று 218 ஆவது நினைவு நாள்:-

1801 ஆம் ஆண்டு ஏறக்குறைய ஆறு மாதங்கள் காளையார்கோயில் காட்டில் நடந்த போர், 1857 ஆம் ஆண்டு நடந்த டெல்லி சிப்பாய்க் கலகம் போன்று, சொந்தப் பிரச்சனைக்காக அல்லாது, பொதுப் பிரச்சனைக்காக நடந்த போர்.

வெள்ளைய அதிகாரத்தை எதிர்த்த முதல் பெரும் போர். பெருந்திரளான போராளிகளுடன் தென்னிந்தியாவின் மிக நீண்ட நிலப்பரப்பில், பூனாவிலிருந்து நாங்குநேரி வரையிலான 1100 கிமீ தூரத்தை இணைத்து மக்களால் முன்னெடுக்கப்பட்டப் போர்.

அதனால்தான் மீரட்டின் சிப்பாய் கலகம் நடப்பதற்கு ஐம்பத்தி ஆறு ஆண்டுக்கு முன்பே சின்ன மருதுபாண்டியர் தலைமையில் நடந்த காளையார்கோயில் போரை இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்று வரலாற்றாசிரியர் ராஜய்யன் தன் ஆய்வின் வழியாக அறுதியிட்டுக் கூறுகிறார்.

மக்களுக்குப் போராட வேண்டும் என்ற எண்ணமே எழக்கூடாது என்பதற்காக, கிழக்கிந்தியக் கம்பெனி முதன்முறையாக அவர்களை நாடுகடத்த முடிவெடுத்தது. சொந்தத் தேசத்திலிருந்து நாடு கடத்தி, முகம் தெரியாத பினாங்குத் தீவில் இறக்கி விட்டது.

அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த முறைதான் ‘காலா பாணி’ எனும் கருப்புத் தண்ணீர். இந்த காலா பாணியை ’தீவாந்திர தண்டனை’ என்றும் சொல்லுவார்கள். மரண தண்டனை ஒரு வகையில் நிம்மதி.

ஆனால், இக் காலாபாணி, மரண தண்டனையை விடக் கொடுமையானது. கண்காணாத தேசத்தில், அதுவும் இருநூறு வருடங்களுக்கு முன்னால், நினைத்துப் பார்க்கவே முடியாத துயரம்.

இந்த துயரத்திற்கு உள்ளான முதல் அரசராக சிவகங்கையின் வேங்கை பெரிய உடையணத் தேவன் இருக்கிறார். அவருடன் 72 கூட்டாளிகளையும் கிழந்தியக் கம்பெனி நாடு கடத்தியது. தூத்துக்குடித் துறைமுகத்தில் இருந்து பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டவர்களின் வாழ்க்கை மிகவும் துயரமானது.

73 பேர்களையும் 1802 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி தூத்துக்குடியிலிருந்து லெப்டினென்ட் ராக்கெட் தலைமையிலான படை, அட்மிரல் நெல்சன் என்ற கப்பலில் ஏற்றியது. வழியில் எங்குமே நிற்காத 66 நாட்களின் தொடர் கடற்பயணம்.

பயணத்தின்போதே மூன்று போராளிகள் இறந்துவிட்டனர். பினாங்குக் கடற்கரையில் இறக்கி விட்டவுடன் பத்துக்கு மேற்பட்டவர் மனப்பிறழ்வு ஏற்பட்டு, தீவுக்குள் ஓடிவிட்டனர்.

காலா பாணி எனும் தீவாந்திர தண்டனைப் பெற்று, பினாங்கில் கரை இறங்கி நின்ற போராளிகளை என்ன செய்வது என்று லெப்டினென்ட் கவர்னர் ஜார்ஜ் லெயித்திற்கும் தெரியவில்லை. ஏனெனில், கம்பெனி முதன்முறையாக அப்போதுதான் அங்கு அரசியல் கைதிகளை அனுப்பி வைத்திருந்தது.

அதனால் இவர்களை கோட்டை கட்டும் வேலைக்கு பயன்படுத்தலாமா? அல்லது பினாங்குக் கோட்டையில் வெறுமனே அடைத்து வைக்கலாமா? என அந்த ஆங்கிலேய கவர்னருக்கு குழப்பம் ஏற்பட்டது.

காலா பாணி கைதிகளில் சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையணத் தேவன், சின்ன மருது பாண்டியனின் மகன் துரைசாமி, நான்கு பாளையக்காரர்கள் என்று முக்கியஸ்தர்கள் இடம் பெற்றிருந்தனர். இதனால், அவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் தர வேண்டுமா? என்ற ஐயம் பினாங்கு கவர்னருக்கு எழுந்தது.

இதற்காக, கொல்கத்தாவிலிருந்த கவர்னர் ஜெனரலுக்குக் கடிதம் அனுப்பட்டது. வேங்கை பெரிய உடையணத் தேவன், துரைசாமிக்கு கூடுதல் ஓய்வூதியமும், பத்துப் பேருக்கு குறைவான ஓய்வூதியமும், மீதி போராளிகளுக்கு ஓய்வூதியம் இல்லை என்றும் ஆணை பெறப்பட்டது.

பினாங்கிற்கு வந்த ஒரு மாதத்தில் வேங்கை பெரிய உடையண தேவன் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டார்.

அங்கிருந்து இருபது நாள் கடற்பயணத்தில் சுமித்திரா தீவிலிருந்த பென்கோலன் நகருக்கு அவர் கொண்டுவரப்பட்டார்.

அங்கிருந்த மால்பரோ கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். கோட்டைக்குள் நிலவிய கடுமையான சுகாதாரக் கேடு, குறிப்பாக மலேரியாக் கொசுக்கடியின் காரணமாக வேங்கை, பென்கோலன் வந்த நான்கே மாதத்தில் இறந்த நாள் இன்று ஆகும்.

அப்போது அவருக்கு வயது 34. காலா பாணி கைதிகளாக அறிவிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட 73 பேரில் தென்னிந்தியாவின் பல்வேறுபட்ட ஜாதி, மதத்தினரும் இருந்தனர்.

மறவர்கள், பிராமணர், அரிஜனங்கள், நாடார்கள், கத்தோலிக்கர், நாயக்கர்கள், கவுண்டர்கள், பிள்ளைமார்கள், முகம்மதியர், ஒட்டர், பரதவர் என்று அனைவரின் பங்களிப்போடு முன்னெடுக்கப்பட்ட தென்னிந்தியப் புரட்சி, வெளிக்கொணரப்பட வேண்டும்.

ஆங்கிலேயே அதிகாரிகளே நம் ஆட்சியாளர்களின் வீரம், மானஉணர்ச்சி கண்டு பிரமித்த கலாபக் காலம். காளையார்கோயில் போரிலும், தூத்துக்குடியில் காலா பாணிகளைக் கப்பலில் ஏற்றிவிட்டதையும், பின்பு 20 வருடங்கள் கழித்து, பினாங்கில் துரைசாமியைச் சந்தித்ததையும் மேஜர் ஜேம்ஸ் வெல்ஷ் தனது வாழ்க்கை வரலாற்றில் பதிவு செய்துள்ளார்.

‘இவர்களது வீரம், அவர்களுக்கு ஒன்றுபட்ட மரணத்தைக் கொடுத்தது. வரலாறு அவர்களுக்கு ஒன்றுபட்டப் புகழைக் கொடுத்தது. இனிவரப் போகும் சந்ததியினர் அவர்களுக்கு ஒன்றுபட்ட நினைவுச் சின்னத்தை வழங்குவார்கள்.’ எனும் மேஜர் ஜேம்ஸ் வெல்ஷின் இந்த வார்த்தைகள் இன்று உண்மையாகி வருகிறது.

-முனைவர்.மு.ராஜேந்திரன், ஐஏஎஸ்

குறிப்பு: கட்டுரை ஆசிரியரான முனைவர்.மு.ராஜேந்திரன்.ஐஏஎஸ் இந்த வீர வரலாற்றை ’காலா பாணி’ எனும் பெயரில் நாவலாக பதிவு செய்துள்ளார். இன்று வெளியாகி உள்ள இந்நாவலுக்காக அவர் பினாங்கிற்கும், சுமத்திரா தீவிற்கும், அனைத்து இடங்களுக்கும் நேரில் சென்றுள்ளார்..❤️

மேற்கு பாளையங்களுங்கு தலைமை ஏற்று ஆங்கிலேயருக்கு எதிரான  முதல் போரில் ஆங்கிலேய படைகளை ஓட ஓட விரட்டிய மன்னர் புலித்தேவன் ...
01/09/2020

மேற்கு பாளையங்களுங்கு தலைமை ஏற்று ஆங்கிலேயருக்கு எதிரான முதல் போரில் ஆங்கிலேய படைகளை ஓட ஓட விரட்டிய மன்னர் புலித்தேவன் பிறந்த தினம் இன்று 🙏🏻

Share and Keep Supporting 🙏🏻👍🏻
07/08/2020

Share and Keep Supporting 🙏🏻👍🏻

வரவேற்கிறோம் 🙏
04/04/2019

வரவேற்கிறோம் 🙏

Address

Melur

Alerts

Be the first to know and let us send you an email when தேவரின பாதுகாப்பு பேரவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share