20/06/2020
மதுரை கிழக்கு மாவட்டம், மேலூர் நகர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவர் மோகனசுந்தரம், மேலூர் நகர் மாவட்ட பிரதிநிதி ராணி பாலு, தங்கச்சாமி ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ கா.தமிழரசன், மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி ஆகியோர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் மேலூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் சாகுல் ஹமீது, அக்ரோ கூட்டுறவு சங்க தலைவர் கயஸ்முகமது, முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர்கள் சரவணக்குமார், சாய் கிருஷ்ணகுமார், பரமசிவம், ஷாஜகான், காதர்மைதீன், சக்கரவர்த்தி, நகர் மாவட்ட பிரதிநிதிகள் தவபாண்டி, சீனிவாசன், வட்ட கழக செயலாளர்கள் வீரையா, கந்தசாமி, இளைஞர் பாசறை துணைச்செயலாளர் சிவகுரு, காமாட்சி ஆகியோர் உள்ளனர்.