Sdpi வடகரை-அரங்கை கிளை"

Sdpi வடகரை-அரங்கை கிளை" பசியிலிருந்து விடுதலை பயத்திலிருந்து விடுதலை

தீய போதையை ஒழிப்போம்!புதிய பாதையை படைப்போம்!!ஜூன் 26, சர்வதேச போதை ஒழிப்பு தினம்.போதையை ஒழிப்போம்!அதிகரித்து வரும் போதை ...
26/06/2024

தீய போதையை ஒழிப்போம்!
புதிய பாதையை படைப்போம்!!
ஜூன் 26, சர்வதேச போதை ஒழிப்பு தினம்.

போதையை ஒழிப்போம்!
அதிகரித்து வரும் போதை பொருள்கள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க சபதமெடுப்போம்.

"பசியிலிருந்து விடுதலை பயத்திலிருந்து விடுதலை"இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகளுக்கு  எடுத்துக்காட்டாக செயல்பட்டு வரும் ...
21/06/2024

"பசியிலிருந்து விடுதலை பயத்திலிருந்து விடுதலை"

இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகளுக்கு எடுத்துக்காட்டாக செயல்பட்டு வரும் SDPI கட்சி ஜூன் 21 இன்று 16வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை கொண்டாடும் விதமாக SDPI கட்சியின் வடகரை,அரங்கை கிளை சார்பாக கிளைத் தலைவர்
(A.சையது அலி)அவர்கள் கொடியேற்றினார் பின்னர் இனிப்புகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் பூம்புகார் தொகுதி தலைவர் வடகரை
(M.K சம்சுதீன்),வடகரை அரங்கை கிளையின் செயலாளர்(RB.சாகுல்), கிளை துணைத் தலைவர்
(A.நஜீர் அகமது), கிளை துணை செயலாளர் (H.பஷீர் முகமது),கிளை பொருளாளர்(A.அப்துல் கலாம்) மற்றும் கிளை உறுப்பினர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

வெளியீடு:-

SDPI-கட்சி
வடகரை- அரங்கை கிளை மயிலாடுதுறை மாவட்டம்

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தேசிய தலைவர் அண்ணன் எஸ்.எம்.பாக்கர் அவர்கள் இறைவனின்பால் மீட்கப்பட்டு விட்ட  செய்தி அறிந்து மிக...
20/06/2024

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தேசிய தலைவர் அண்ணன் எஸ்.எம்.பாக்கர் அவர்கள் இறைவனின்பால் மீட்கப்பட்டு விட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அண்ணன் அவர்கள், உடல் நலம் பெற்று மீண்டும் சமுதாயப் பணிக்கு திரும்புவார்கள் என்று எண்ணியிருந்த வேளையில் இறைவன் தன்பால் அழைத்துக் கொண்டுள்ளான். இறைவனின் நாட்டப்படி இந்த மரணம் நிகழ்ந்தாலும் அன்னாரின் மரணம் சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.

சமுதாயத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்காக முன்னின்று குரல் கொடுத்தும், போராடியும் வந்தவர் அண்ணன் எஸ்.எம்.பாக்கர் அவர்கள். தனது கருத்துக்களை துணிந்து முன் வைப்பதிலும், மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் படைத்தவர். எஸ்டிபிஐ கட்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்.

அன்னாரின் மறைவால் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல இறைவன் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.

அன்னாரின் பிழைகளைப் பொறுத்து, நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, நற்பணிகளை அங்கீகரித்து உயர்ந்த சொர்க்கத்தை வல்ல இறைவன் வழங்கிடுவானாக என பிரார்த்திக்கிறேன்.

*நெல்லை முபாரக்*
*மாநிலத் தலைவர்*
*SDPI கட்சி தமிழ்நாடு*

19/06/2024
"பசியிலிருந்து விடுதலை பயத்திலிருந்து விடுதலை"இன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு வடகரை பள்ளிவாசல் எதிர்ப்புறம் பலஸ்தீன் மக்கள...
31/05/2024

"பசியிலிருந்து விடுதலை பயத்திலிருந்து விடுதலை"

இன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு வடகரை பள்ளிவாசல் எதிர்ப்புறம் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக பூம்புகார் தொகுதி தலைவர் வடகரை (M.k.சம்சுதீன்) அவர்கள் தலைமையில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் கிளை செயலாளர்( RB சாகுல்), கிளை துணைத் தலைவர் (A.நஜீர் அஹமது), கிளை துணைச் செயலாளர் (H.பஷீர்)மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு;-

SDPI-கட்சி
வடகரை,அரங்கை கிளை மயிலாடுதுறை மாவட்டம்

ஐ.நாவே பாலஸ்தீன் மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடு
31/05/2024

ஐ.நாவே பாலஸ்தீன் மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடு

இந்திய அரசே இனவெறி இஸ்ரேலுடனான உறவை முறி....!*ALL EYES ON RAFAH*
31/05/2024

இந்திய அரசே இனவெறி
இஸ்ரேலுடனான உறவை முறி....!

*ALL EYES ON RAFAH*

ஐ.நாவே போர்க்குற்றவாளி இஸ்ரேல் மீது தடை விதி *ALL EYES ON RAFAH*
31/05/2024

ஐ.நாவே போர்க்குற்றவாளி இஸ்ரேல் மீது தடை விதி

*ALL EYES ON RAFAH*

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார  நலனை பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால  நடவடிக்கை எடுக்க வேண்டும்!- எஸ்டி...
18/05/2024

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார நலனை பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்!

- எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில், பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (பிபிடிசிஎல்) 99 ஆண்டு குத்தகை காலம் 2028ல் முடிவடைய உள்ளதால், நான்கு தலைமுறை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அங்குள்ள குடியிருப்பாளர்கள் மலைப்பகுதியில் இருந்து விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன. மாஞ்சோலை தோட்டத்தில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி என 5 தேயிலை தோட்டங்கள் உள்ளன. மொத்தமாக இங்கு சுமார் 700 குடும்பங்கள் வரை வசிக்கின்றன. இந்த குடும்பங்களில் பெரும்பாலானோருக்கு தேயிலை தோட்டத் தொழிலே வாழ்வாதாரமாக உள்ளன. தற்போது சுமார் 2,150 பேர் தேயிலை தோட்டத் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

மாஞ்சோலையில் பிபிடிசிஎல் தனியார் நிறுவனத்தின் 99 ஆண்டு குத்தகைக் காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் அந்நிறுவனம் மாஞ்சோலையில் இருந்து தனது தொழிலை முடித்துக்கொள்ளும் பணியை துவங்கியுள்ளது. இதனால் மாஞ்சோலை தோட்ட பகுதியில் உள்ள தொழிலாளர்களும் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மாஞ்சோலை பகுதி தமிழ்நாடு வனத்துறை சட்டம் 1882 பிரிவு 16 இன் கீழ் காப்பு காடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாஞ்சோலை தோட்ட பகுதி மக்களின் வாழ்வாதாரமும், இருப்பிடமும் கேள்விக்குறியாகி உள்ளது.

பிபிடிசிஎல் நிறுவனத்தின் குத்தகை காலம் முடிவடைந்த பிறகு, அங்குள்ள தொழிலாளர்களின் நலனை காக்கும் வகையில், தேயிலைத் தோட்டத்தை மாநில அரசு கையகப்படுத்தி, தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என்பதே தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

ஆகவே, தமிழக அரசு, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், வால்பாறை தேயிலை தோட்டங்களை போன்று மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை கையகப்படுத்தி, தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகம் (டான் டீ) மூலமாக தொடர்ந்து தேயிலை உற்பத்தியை மேற்கொண்டு நான்கு தலைமுறை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். தொழிலாளர்களுக்காக கூட்டுறவு சங்கம் உருவாக்கி, அவர்களின் வேலைக்கேற்ப ஊதியத்தை மாநில அரசே வழங்க வேண்டும். அனைத்து உரிமைகளும், பணப்பலன்களும் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

காப்புக் காடுகளுக்காக மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை மூடும் பட்சத்தில், தற்போதுள்ள மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்வதோடு, வெளியூர்களில் அவர்களுக்கு இலவச பட்டா நிலம் வழங்கி அவர்களுக்கான இருப்பிடத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார நலனை பாதுகாக்க எஸ்டிபிஐ கட்சி குரல் கொடுப்பதோடு, அவர்களோடு இணைந்து களத்தில் போராடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#மாஞ்சோலை Mohamed Mubarak

ஒகேனக்கல் வனப்பகுதியில் பூர்வகுடி மக்களின் வீடுகளை தகர்த்த வனத்துறையினர்..!- எஸ்டிபிஐ கட்சி கண்டனம் இதுதொடர்பாக எஸ்டிபி ...
18/05/2024

ஒகேனக்கல் வனப்பகுதியில் பூர்வகுடி மக்களின் வீடுகளை தகர்த்த வனத்துறையினர்..!

- எஸ்டிபிஐ கட்சி கண்டனம்

இதுதொடர்பாக எஸ்டிபி கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே, எடத்திட்டு, வேப்பமரத்து கோம்பு ஆகிய வனப்பகுதியில் வசித்துவந்த பூர்வகுடி மக்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு எனக் கூறி காவல்துறையினர் உதவியுடன் வனத்துறையினர் தகர்த்துள்ளது கண்டனத்திற்குரியது.

ஐந்து தலைமுறைகளாக கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழில் செய்து அப்பகுதியில் வசித்து வந்த மக்களை, பூர்வகுடி மக்கள் இல்லை எனக்கூறி மிகவும் அராஜகமான முறையில் பெண்கள், குழந்தைகளிடம் நடந்துகொண்டதோடு, அந்த எளிய மக்களின் வீட்டு மேற்கூரைகளை வனத்துறையினர் தகர்த்துள்ளனர். இதனால் வீடுகளை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து செய்வதறியாமல் சொந்த இடத்திலேயே அகதிகள் போல் அம்மக்கள் நிற்கவைக்கப்பட்டுள்ளனர்.

மனிதாபிமானம் சிறிதுமின்றி ஏழை எளிய மக்களிடம் இதுபோன்ற அடக்குமுறைகளை கையாளும் வனத்துறை மற்றும் காவல்துறையினரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட பூர்வகுடி மக்களுக்கு அதே இடத்தில் மீண்டும் வீடுகளை கட்டிக் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#ஒகேனக்கல் Mohamed Mubarak | Chief Minister of Tamil Nadu | M. K. Stalin

Address

Vadakarai
Mayiladuthurai
609314

Alerts

Be the first to know and let us send you an email when Sdpi வடகரை-அரங்கை கிளை" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sdpi வடகரை-அரங்கை கிளை":

Share