DYFI Mayiladuthurai

DYFI Mayiladuthurai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DYFI Mayiladuthurai, Political organisation, kamarajar Street, Mayiladuthurai.

இரத்த கொடையாளருக்கு வாழ்த்துகள்!DYFI இரத்ததான கழகம் சார்பில்இன்று 27.05.2026 மயிலாடுதுறையில் அவசர சிகிச்சைக்காக தோழர் வி...
27/05/2026

இரத்த கொடையாளருக்கு வாழ்த்துகள்!

DYFI இரத்ததான கழகம் சார்பில்
இன்று 27.05.2026 மயிலாடுதுறையில்
அவசர சிகிச்சைக்காக தோழர் விபின்குமார் அவர்கள்
இரத்தானம் செய்தார்.

தோழருக்கு வாழ்த்துகள்!

#மயிலாடுதுறை

இரத்த கொடையாளருக்கு வாழ்த்துகள்!DYFI இரத்ததான கழகம் சார்பில்இன்று 22.5.2026 மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் அவ...
22/05/2026

இரத்த கொடையாளருக்கு வாழ்த்துகள்!

DYFI இரத்ததான கழகம் சார்பில்
இன்று 22.5.2026 மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில்
அவசர சிகிச்சைக்காக DYFI குத்தாலம் மேற்கு ஒன்றிய தலைவர் தோழர் தோழர் சத்யராஜ் அவர்கள் இரத்தானம் செய்தார்.

தோழருக்கு வாழ்த்துகள்!

#மயிலாடுதுறை

மோசடி செய்வதற்கும்  லட்சம் லட்சமாக கொள்ளையடிப்பதற்கும் இந்தியாவில் ஒரு தேர்வு அரசே நடத்துகிறது என்றால் அது நீட் தேர்வு த...
19/05/2026

மோசடி செய்வதற்கும் லட்சம் லட்சமாக கொள்ளையடிப்பதற்கும் இந்தியாவில் ஒரு தேர்வு அரசே நடத்துகிறது என்றால் அது நீட் தேர்வு தான்

மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை சிதைக்கும் ஊழல் நிறைந்த
நீட் தேர்வை ரத்து செய்!

மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் NEET தேர்வை ரத்த செய்திடவும்!  தேசிய தேர்வு முகமையை NTAகலைக்ககோரியும்!! DYFI - SFI ...
19/05/2026

மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் NEET தேர்வை ரத்த செய்திடவும்!
தேசிய தேர்வு முகமையை NTAகலைக்ககோரியும்!!
DYFI - SFI - AIYF - AISF சார்பில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. SFI மாவட்ட தலைவர் தோழர் அமுல்காஸ்ட்ரோ AISF மாவட்ட தலைவர் கலைச்செல்வன் ஆகியோர் தலைமை வகித்தனர். DYFI மாவட்ட தலைவர் தோழர் கவியரசன்,SFI மாவட்ட செயலாளர் தோழர் அவினாஷ் ஆகிய தோழர்கள் கண்டன உரையாற்றினர்.DYFI மாவட்ட செயலாளர் தோழர் எம் ஐயப்பன் போராட்டதை நிறைவு செய்து கண்டன உரையாற்றினர். போராட்டத்தில்
DYFI மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் ஆனந்தி,மாவட்ட பொருளாளர் தோழர் மு.குமரேசன், மாவட்ட நிர்வாகிகள் ஸ்டாலின்,கார்த்திகேசன்,கபிலன்,வெற்றிசங்கர், தவசி, SFI மாநிலக்குழு உறுப்பினர் திபியா, நிர்வாகிகள் பிரவீன்,அபிலாஷ் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

19/05/2026
14/05/2026

நீட் தேர்வை ரத்து செய்திடவும், தேசிய தேர்வு முகமையை கலைக்க கோரியும் இடதுசாரி மாணவர் – இளைஞர் அமைப்புகள் போராட்ட அறைகூவல்!

ஒன்றிய பாஜக அரசாங்கம் 2016-ம் ஆண்டில் இருந்து அனைத்து விதமான மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வாக நீட் தேர்வு முறையினை அறிமுகப்படுத்தியது. மையப்படுத்தப்பட்ட இந்த தேர்வானது ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை சிதைக்கும் வகையிலேயே அமைந்திருக்கின்றது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமானால் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து தனியார் பயிற்சி நிறுவனங்களில் படிக்க வேண்டிய கட்டாய சூழலை அரசாங்கமே ஏற்படுத்தி இருக்கிறது.

முதலில் மருத்துவ படிப்புக்கானதாக மட்டும் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு நாளடைவில் மருத்துவ துறையில் உள்ள அனைத்து படிப்புகளுக்குமானதாக மாற்றப்பட்டது. தற்போதைய சூழலில் மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்படிருக்கிற நிலையில், மாநில அளவில் பாரா மெடிக்கல், இளநிலை செவிலியர் போன்ற படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடைமுறைக்குள் கொண்டு வர ஒன்றிய அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

நீட் தேர்வினால் தரமான மாணவர்கள் உருவாவர்கள் என்ற கருத்துக்கள் மறைந்து தனியார் பயிற்சி நிறுவனங்களே நீட் தேர்வினால் பலனடையும் நிலைமை நாட்டில் ஏற்பட்டுள்ளது. நீண்ட கால பயிற்சி, பள்ளிக்கல்வியில் முக்கியத்துவம் குறைந்தது, வரைமுறையற்ற பயிற்சி நேரம் மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நடக்கும் மனித உரிமை அத்துமீறல்கள் என பல்வேறு விதமான அடக்குமுறைகளை மாணவர்கள் சந்தித்து வருகின்றனர். ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தின் வாழ்நாள் வருமானத்தையும், சேமிப்பையும் இந்த ஒரு நீட் தேர்வு விழுங்கி கொள்கிறது. இதனால் தனியார் நீட் பயிற்சி நிறுவனங்களின் வருவாய் 30 ஆயிரம் கோடி அளவிற்கு மலைபோல் உயர்ந்திருக்கின்றது. ஒன்றிய அரசாங்கமும், தேர்வு நடத்துகின்ற NTA அமைப்பும் இந்த பிரச்சனைகளை கணக்கில் கொள்ளாமல் பயிற்சி நிறுவனங்களுக்கு சாதகமாகவே நடந்து கொள்கின்றன.

நீட் தேர்வு முறையிலேயே இத்தனை பிரச்சனைகளை மாணவர்களும், பெற்றோர்களும் சந்தித்து வரும் நிலையில், தேர்வு நடைபெறுவதிலும் தொடர் வினாத்தாள் கசிவு, தனியார் பயிற்சி நிறுவனங்களின் குறிப்பிட்ட மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவது போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதனால் லட்சக்கணக்கான மாணவர்களும், பெற்றோர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அமைத்த ஏ.கே.ராஜன் கமிட்டி அலசி ஆராய்ந்த நீட் தேர்வினால் நடக்கின்ற அநீதிகளை கோடிட்டு காட்டியிருக்கிறது. முந்தைய அரசும் அதை கருத்தில் கொண்டு சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு சட்டம் இயற்றியும், பல ஆண்டுகளாக அவை கிடப்பில் போடப்பட்டுள்ளது. புதிதாக அமைந்துள்ள அரசு கூடுதல் கவனம் செலுத்தி அதை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு குளறுபடியால் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்று நீட் தேர்வில் தொடரும் குளறுபடிகளால் இந்த தேர்வு மாணவர்களுக்கு எதிரான தேர்வு என்பதை உறுதிபடுத்தியுள்ளது. ஆகவே மாணவர்களின் மருத்துவ கல்வியை சிதைக்கும் நீட் தேர்வினையும், முறையாக தேர்வு நடத்த இயலாத NTA -வை கலைத்திட கோரியும், மேலும் கடந்த காலங்களை போன்று பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் அனைத்து விதமான மருத்துவ படிப்பிற்கும் மாணவர் சேர்க்கையை நடத்திட வலியுறுத்தியும் இடதுசாரி மாணவர் – இளைஞர் ( AISF, AIYF,SFI, DYFI) அமைப்புகள் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை 19-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று மாநிலம் முழுவதும் நடத்தவுள்ளன. தமிழ்நாட்டு கல்வி உரிமையை வென்றெடுக்க மாணவர்கள், இளைஞர்களை அறைகூவி அழைக்கிறோம்.

இந்திய மாணவர் சங்கம் (SFI)
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI)
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF)
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF)

இரத்த கொடையாளருக்கு வாழ்த்துகள்!DYFI இரத்ததான கழகம் சார்பில்இன்று 14.05.2026 மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் அ...
14/05/2026

இரத்த கொடையாளருக்கு வாழ்த்துகள்!

DYFI இரத்ததான கழகம் சார்பில்
இன்று 14.05.2026 மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில்
அவசர சிகிச்சைக்காக தோழர் மதிவாணன் அவர்கள்
இரத்தானம் செய்தார்.

தோழருக்கு வாழ்த்துகள்!

#மயிலாடுதுறை

இரத்த கொடையாளருக்கு வாழ்த்துகள்!DYFI இரத்ததான கழகம் சார்பில்இன்று 10.05.2026 மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் அ...
10/05/2026

இரத்த கொடையாளருக்கு வாழ்த்துகள்!

DYFI இரத்ததான கழகம் சார்பில்
இன்று 10.05.2026 மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில்
அவசர சிகிச்சைக்காக தோழர் கபிலன் அவர்கள்
இரத்தானம் செய்தார்.

தோழருக்கு வாழ்த்துகள்!

#மயிலாடுதுறை

இரத்த கொடையாளருக்கு வாழ்த்துகள்!DYFI இரத்ததான கழகம் சார்பில் 28.04.2026 மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் அவசர ச...
29/04/2026

இரத்த கொடையாளருக்கு வாழ்த்துகள்!

DYFI இரத்ததான கழகம் சார்பில் 28.04.2026 மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில்
அவசர சிகிச்சைக்காக தோழர் சன்ஸி S.பாலமுருகன் அவர்கள்
15 வது முறை இரத்ததானம் செய்தார்.

தோழருக்கு வாழ்த்துகள்!

#மயிலாடுதுறை

Address

Kamarajar Street
Mayiladuthurai
609001

Telephone

+918270235753

Website

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Mayiladuthurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DYFI Mayiladuthurai:

Share