24/03/2026
திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்/ திரு மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் /திரு போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கனிவான கவனத்திற்கு அண்மையில் திறக்கப்பட்ட மயிலாடுதுறை மணக்குடி பேருந்து நிலையம் திறக்கப்பட்டதால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்ற நிலையில் தற்போது நகரில் முன்பை விட இப்போது போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக உள்ளது காரணம் மயிலாடுதுறை நகரில் ஒரு வழிப்பாதை என அடையாளம் காண முடியவில்லை தினம்தோறும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஏதாவது ஒரு வகையில் கடும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள் இதற்கு ஒரே தீர்வு மயிலாடுதுறை நகரத்தில் ஒரு வழி பாதையை நகரின் பிரதான சந்திப்புகளில் தானியங்கி சிக்னல் அமைத்து கடுமையாக போக்குவரத்து விதிகளை நிறைவேற்ற வேண்டும் 1 ,ஜெமினி காபி பார் எதிரில் இருந்து பெரிய கடைத்தெரு செல்ல அனுமதிக்க வேண்டும் எதிர் திசையில் மார்க்கெட்டில் இருந்து ஜெமினி வரை எந்த ஒரு இருசக்கர நான்கு சக்கர வாகனங்களை கண்டிப்பாக செல்ல அனுமதிக்க கூடாது அந்த அந்த பழைய ஸ்டேட் பேங்க் ரோடை கண்டிப்பாக ஒரு வழி பாதையாக ஆக்க வேண்டும் 2 ,பெரிய கடைத்தெருவில் இருந்து வரும் வாகனங்களை மகாதான தெரு வழியாக நாராயண பிள்ளை தெரு வழியாக மணிக்கூண்டு சொல்ல அனுமதிக்கலாம் 3, மயிலாடுதுறை பஸ் நிலையத்திலிருந்து வரும் இரு சக்கர நான்கு சக்கர கனரகன வாகனங்களை கண்டிப்பாக. வலது பக்கம் வாகனங்கள் செல்ல அனுமதிக்க கூடாது மேலும் பஸ் நிலையத்திலிருந்து வரும் வாகனங்களை பட்டமங்கல தெரு இடது பக்கம் திரும்பி பெரிய கடை தெரு வழியாக செல்ல அனுமதிக்க வேண்டும் 4 புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளையும் பழைய ஸ்டேட் பாங்க் ரோடு விஜயா தியேட்டர் சாலை வழியாக பழைய பேருந்து நிலையத்தில் உள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் பழைய ஸ்டேட் பேங்க் ரோட்டில் இருந்து ஜெமினி நோக்கி செல்ல அனுமதிக்க கூடாது கண்டிப்பாக ஒரு வழி பாதை பின்பற்றினால் விஜயா தியேட்டர் சாலை இரு வழியாக மாற்ற வேண்டும் வாகனங்கள் எளிதாக சென்று வர சாலையின் நடுவே சென்டர் மீடியன் அமைத்து இருவழியாக மாற்ற வேண்டும் 5 கச்சேரி சாலை கும்பகோணம் சாலையில் இருந்து வரும் பேருந்துகளை பழைய பேருந்து நிலையம் சென்று அரசு மருத்துவமனை வழியாக. புதிய பேருந்து நிலையம் செல்ல வழிவகை செய்ய வேண்டும் 6, இதுபோல் கச்சேரி சாலையின் நடுவே சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் வாகனங்கள் எதிரும் புதிருமாக நிறுத்துவதாலும் நான்கு சக்கர வாகனங்களை நடுவழியில் நிறுத்துவதாலும்
வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகவும் ஆளாகிறார்கள் நகரின் தடையற்ற போக்குவரத்துக்கு அனைத்து பிரதான சாலைகளிலும் ரோட்டில் இருபுறமும் இருசக்கர வாகனங்களுக்கு நிறுத்த வழி விட்டுவிட்டு அனைத்து முக்கிய சாலைகளிலும் சென்டர் மீடியன் அமைத்து போக்குவரத்தை சீர் செய்தால் தான் நகரில் போக்குவரத்து சிக்கலை தடுக்க முடியும் இதை செயல்படுத்த காவலர் எண்ணிக்கை அதிகளவில் நியமிக்க வேண்டும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் N C C மாணவர்கள் தொண்டு நிறுவன. உறுப்பினர்களைக் கொண்டு செயல்படுத்தலாம் இதை கண்டிப்பாக பின்பற்றினால் மயிலாடுதுறை நகரத்தில் போக்குவரத்தை எளிதாக சமாளிக்க உதவும் என்பதை இதன் மூலம் தங்களின் பார்வைக்கு தாழ்மையுடன் கொண்டு வருகிறேன் நன்றி