20/04/2024
மிக குறுகிய காலத்தில் சமூக ஊடகத்தில் சிறப்பான பணியாற்றி மயிலாடுதுறை வெற்றி வேட்பாளர் அண்ணன் ம.க.ஸ்டாலின் அவர்களுக்கு பெருவாரியான வாக்குகளை பெற்றுத்தந்த பாட்டாளி சமூக ஊடக பேரவை பொறுப்பாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
நம்மில் அனைவருமே தத்தம் வேலை, தொழில், கல்வி, குடும்பம் என்று நிறைய வேலைபலுவுக்கு இடையில் தான் பரப்புரை செய்தோம் என்றாலும் உங்கள் பணி தலைமை வரை கவனிக்கும்படியாக சிறப்பாக அமைந்தது.
அயலகத்தில் இருந்தும் ஓய்வின்றி உழைத்த நண்பர்களுக்கு சிறப்பு பாராட்டுகள்!
படங்கள், வீடியோக்கள், பதிவுகள் தயாரித்து வெளியிட்ட படைப்பாளிகளுக்கும் நன்றிகள்!
களத்தில் வரும் செய்திகள் ம.க.ஸ்டாலின் அண்ணன் மாபெரும் வெற்றி பெறுவார் என்பதை உறுதி செய்கிறது.
ஆனால் நாம் இத்துடன் ஓய்ந்து விடாமல், அன்புமணி அண்ணன் சொன்னது போல 2026ல் பாமகவுக்கு ஒரு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என்பதை உணர்ந்து,
சட்டமன்ற தேர்தலை நோக்கி இங்கிருந்து தொடர் பரப்புரையை விடாமல் எடுத்து செல்ல வேண்டும்.
ஊடக பேரவையை
1. அமைப்பு ரீதியாக வலுவாக்குதல்*
2. உள்ளடக்கங்கள் தயாரிப்பு பயிற்சிகள்
3. பரவலாக்கல் முறைகள்
4. பேச்சாளர் பயிற்சி
5. சமூக ஊடகத்துக்கான உட்கட்டமைப்பு வசதிகள்
6. சிறப்பான பணி செய்தவர்களை அங்கீகரித்தல்
போன்ற பணிகளை அதிகமாக்கி
கட்சியின் தலைவர் அவர்கள் சொன்னதை போல, 2026 சட்டமன்ற தேர்தல் பாமக தலைமையிலான கூட்டணி ஆட்சியை அமைக்கும் வரலாற்று சிறப்புமிக்க தேர்தலாக இருக்கும்.
அதில் சமூக ஊடகம் தான் மிகப்பெரிய பங்காற்றப்போகிறது.
எனவே 2024க்கு பாடுபட்ட அனைத்து பாட்டாளி சமூக ஊடக பொறுப்பாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து,
2026ஐ நோக்கி அதே வேகத்தோடு தொடர தாழ்மையான வேண்டுகோளையும் முன்வைக்கிறேன்.
நன்றி 🙏