Aisa Madurai

Aisa Madurai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aisa Madurai, Political organisation, indira nagar 2nd Street, Ramanaayakanpatti, vadipatti, Madurai.

The All India Students' Association (AISA), founded in 1990, is the student wing of CPI(ML) Liberation, advocating for accessible education, anti-privatization, caste/gender justice, and anti-fascism.

07/09/2026
01/09/2026

மருத்துவக் கனவு பறிக்கப்பட்டு மரணத்தைத் தழுவிய ஒற்றைப் பெண்ணின் வலி, இன்று ஆயிரக்கணக்கான மாணவர்களின் போர்க் குரலாக எதிரொலிக்கிறது.

18/08/2026
02/08/2026

13/07/2026


12/06/2026

#அரசுப்_பள்ளிகளில்_வேளாண்_தொழிற்கல்விப்_பாடப்பிரிவுகளை_முடக்கும்_கல்வித்துறையின்_நடவடிக்கைக்கு #அகில_இந்திய_மாணவர்_கழகம் ( ) #வண்மையாக_கண்டனம்_செய்கிறது!

மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்நிலை பள்ளிகளில் குறிப்பாக மேலூர் வட்டம் மற்றும் அலங்காநல்லூர் பள்ளிகளில், பல ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்த வேளாண்மைத் தொழிற்கல்விப் பாடப்பிரிவுகளை நீக்க கல்வித்துறை எடுத்துள்ள நடவடிக்கை, கிராமப்புற மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் சமூக அநீதியாகும். அதேபோல அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இப்பாடப்பிரிவை முடக்கும் முயற்சிக்கு, அகில இந்திய மாணவர் கழகம் (AISA) கண்டனத்தைப் பதிவு செய்கிறது.

வேளாண்மையை வாழ்வாதாரமாகக் கொண்ட மதுரையில், குறிப்பாக மேலூர், அலங்காநல்லூர், கொட்டாம்பட்டி, கோட்டநத்தம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இப்பாடப்பிரிவு ஒரு முதுகெலும்பாக உள்ளது. அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த நவீன விவசாயத்தை நோக்கி இந்தியா நகர வேண்டிய சூழலில், அதற்கான அடிப்படை அறிவை வழங்கும் இப்பாடப்பிரிவை முடக்குவது, எதிர்காலத் தலைமுறையினரைத் தற்கால வேளாண்மை வாய்ப்புகளில் இருந்து அந்நியப்படுத்தும் செயலாகும்.

ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதைக் காரணம்காட்டி, இப்பாடப்பிரிவுகளை முடக்குவது கல்வித்துறையின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. ஏற்கனவே அப்பகுதியில் பல பள்ளிகளில் இப்பாடப்பிரிவுகள் முடக்கப்பட்ட நிலையில், தற்போது அ.வல்லாளபட்டியிலும் இதே நிலை நீடிப்பது, திட்டமிட்ட ரீதியில் வேளாண் தொழிற்கல்வியை ஒழிக்கும் சதியாகவே நாங்கள் கருதுகிறோம். மாணவர்களின் விருப்பங்களையும், கிராமப்புற பொருளாதாரத் தேவைகளையும் புறக்கணிக்கும் இத்தகைய போக்கை ஒருபோதும் ஏற்க முடியாது.

எனவே

*1) மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் வேளாண்மை ஆசிரியர் பணியிடங்களை, போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும்*.

*2)அ.வல்லாளபட்டி, அலங்காநல்லூர் மற்றும் மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வேளாண் தொழிற்கல்விப் பாடப்பிரிவுகள் எவ்விதத் தடங்கலுமின்றித் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.*

*3) கிராமப்புற மாணவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமையைப் பறிக்கும் இத்தகையப் பின்னடைவான கொள்கை முடிவுகளை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.*

*அகில இந்திய மாணவர் கழகம் (AISA)*,
*மதுரை மாவட்டம்*.
*9360534813, 8870696304*

தி.மு.க ஆட்சியில் நடந்தகட்டணக் கொள்ளைத.வெ.க ஆட்சியிலும் தொடரும் அவலம்!
05/06/2026

தி.மு.க ஆட்சியில் நடந்த
கட்டணக் கொள்ளை
த.வெ.க ஆட்சியிலும் தொடரும் அவலம்!

Address

Indira Nagar 2nd Street, Ramanaayakanpatti, Vadipatti
Madurai
625018

Alerts

Be the first to know and let us send you an email when Aisa Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share