Madurai City Traffic Police

Madurai City Traffic Police Post your Grievances, Suggestions, Feedback and Participation interest in various initiatives of Mad

Online Social platform of Madurai City Traffic Police on Facebook. Post your Grievances, Suggestions, Feedback and Participation interest in various initiatives of Madurai City Traffic Police. Officially Launched - 8-Jan-2013 & adage Crime Prevention Cell, Madurai City.

11/03/2022
Road safety is the prevention and protection of road accidents by using all the road safety measures. It is to secure pe...
11/03/2022

Road safety is the prevention and protection of road accidents by using all the road safety measures. It is to secure people while travelling on the roads. It is to make safe all the road users such as pedestrians, two-wheelers, four-wheelers, multi-wheelers, and other transport vehicle users

10/02/2019

மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப. அவர்களால் 30வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு 09.02.2019 ஆம் தேதி அழகர் கோவில் ரோட்டில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கட்டுரை போட்டி;-
7 மற்றும் 8 பிப்ரவரி 2019ஆம் தேதிகளில் இந்த கட்டுரை போட்டியானது நடத்தப்பட்டது. இப்போட்டியானது இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, முதல் பிரிவானது 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலும் , இரண்டாம் பிரிவானது 9 ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் பங்கு கொள்ளும் வகையில் நடத்தப்பட்டது . இந்த கட்டுரை போட்டியில் மொத்தம் 677 மாணவ மாணவிகள் 19 பள்ளிகளிலிருந்து இருந்து பங்குபெற்றனர். இந்த கட்டுரை போட்டியில் போட்டியானது முதல் கட்டமாக அந்த அந்த பள்ளிகளில் நடத்தப்பட்டு சிறந்த 5 கட்டுரைகள் தேர்வுசெய்யப்பட்டு அவைகள் நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளால் பெறப்பட்டு முனைவர்.பாலகிருஷ்ணன், அமெரிக்கன் கல்லூரி விரிவுரையாளர் அவர்களால் திருத்தம் செய்து பரிசுகளுக்கு மாணவர்கள் தேர்வுசெய்யப்பட்டனர்.அதில் நேரு வித்தியாசாலை பள்ளி மாணவி செல்வி.கன்யா பாரதி க்கு முதல் பரிசு ரூ. 2500 மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசாக S.B.O.A CBSE பள்ளியை சேர்ந்த மாணவி செல்வி. P . ஜேபி அவர்களுக்கு ரூ. 1500 மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசாக மாசத்தியர் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி செல்வி.S. ஸ்வாதி க்கு ரூ.1000 மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இரண்டாம் பிரிவில் சௌராஷ்டிர பள்ளி மானவை செல்வி.K .N . ஸ்னேகா ஸ்ரீ க்கு முதல் பரிசு ரூ. 2500 மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசாக நாவலர் சோம சுந்தர பாரதியார் பெண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவி செல்வி. P.காயத்ரி அவர்களுக்கு ரூ. 1500 மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசாக செயின்ட். ஜோசெப் பள்ளியை சேர்ந்த மாணவி செல்வி.P. ஷிஃபா க்கு ரூ.1000 மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
வினாடி வினா :-
வினாடி வினா போட்டியானது 8.02.2019 ஆம் நாள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் டாக்டர். D.சுந்தர்நாதன், Funda Factory, Madurai Quiz Society அவர்களின் மேற்பார்வையில் நடத்தப்பட்டது. இதில் மதுரை மாநகரத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளிலிருந்து 22 குழுக்கள் ( குழுவிற்கு 2 நபர்கள் ) பங்கேற்றனர். முதல் சுற்றில் 6 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிச்சுற்றில் மூன்று குழுக்கள் தேர்வுசெய்யப்பட்டன. முதல் பரிசகா ரூ.5000 மற்றும் சான்றிதழ், மகாத்மா பாபா பில்டிங் பள்ளி மாணவர்கள் A . சதீஸ் கார்த்திக் மற்றும் S.S நவீன் ராஜன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசாக ரூ. 3000 மற்றும் சான்றிதழ்கள், மகாத்மா கே.கே. நகர் பள்ளியைச் சேர்ந்த T.G . அஸ்வின் குமார், P.K.ஜெகஜீத் புட்டா அவர்களுக்கு வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் சான்றிதழ்கள், S.B.O.A CBSE பள்ளி மாணவர்கள் O. ரூபியுஸ் ஜோன்ஸ், K.S. ஹரிஷ் கார்த்திக் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
ஆறுதல் பரிசாக மூன்று குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.1000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன அவர்கள் நேரு வித்யாலய பள்ளி மாணவர்கள் N.M. அருண் கார்த்திக் மற்றும் கௌசிக் குமார், மகாத்மா Global Gateway பள்ளி மாணவர்கள் B.B.விகாஸ் மற்றும் s.கண்ணன், மகாத்மா அழகர் கோவில் பள்ளியை சேர்ந்த ஸ்ரீ லக்ஷ்மண பாண்டியன் மற்றும் கோகுல் ராஜ்.
சாலை பாதுகாப்பிற்கான தன்னார்வலர்களுக்கான வாழ்த்துக்கள்:-

பாய்ஸ் கிளப்:- 21 நபர்களை கொண்ட அண்ணாநகர் பாய்ஸ் கிளப் உறுப்பினர்களான ஆண்கள் மற்றும் பெண்கள் , மதுரை காவல் துறையினருக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கு தேவையான உதவிகளை கடந்த இரண்டு மாதங்களாக செய்துள்ளனர். அவர்களுக்கு பாராட்டுக்கள், சான்றிதழ்கள் மற்றும் கை கடிகாரங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
டிராபிக் வார்டன்:-
டிராபிக் வார்டன்கள் மற்றும் சில தன்னார்வலர்களுடன் எமதர்மராஜா வேடமிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். திரு. பாலகிருஷ்ணன் Chief Traffic Warden அவர்களின் தலைமையின் கீழ் திரு. தவமணி மற்றும் அவரது குழுவினர்களுக்கு வாழ்த்துககாள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

மண்ணின் மைந்தன் குழு:-
மண்ணின் மைந்தன் கூத்துப்பட்டறை அமமைப்பை சேர்ந்த முகமது செரீப் அவர்கள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வு குறும்படங்களை தயார் செய்தார். அவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

காவல் துறை ஆணையர் அவர்கள் கலந்துகொண்ட பள்ளிகள் மற்றும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் நன்றிகள் மற்றும் வாழ்த்துகளை தெரிவித்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த தகவல்களை மற்ற மாணவர்ளுக்கு கொண்டுசெல்ல அறிவுறுத்தினார்.

10/02/2019

Prizes

The following prizes were given by the Commissioner of Police Tr. Davidson Devasirvatham on 9th February 2019 at Conference Hall, CPO, Alagar Koil road to the following winners of various competitions held in connection with the 30th National Road Safety Week celebrations.

Road safety essay competition was conducted on 7th and 8th February 2019. This competition was divided into two categories, Category I constituted students of 6th to 8th std and category II constituted students from 9th to 12th std. A total of 677 students from 19 schools participated in the competition. The competition, at the first stage was conducted in the respective schools and best five essays of each school was selected. These essays were evaluated by Dr.S Balakrishnan of American College and three each were selected from both categories for prizes. In category I, M. Kanya Bharathi of 7th standard of Nehru Vidhyalaya High School won the first prize of Rs.2500 and certificate, P. Jebi of 7th standard of S B O A High school won second prize of Rs. 1500 & certificate, S Swathy 8th standard of Masathiyar Corporation High School won third prize of Rs. 1000 & certificate.
In category II, K N Snegha Sree, 12th standard, of Sourastra Girls High school won the first prize of Rs 2500 & certificate, P Gayathri, 9th standard of Navalar Somadundara Bharathiyar Girls High School won second prize of Rs. 1500 & certificate, P. Shifa, 11th standard, of St. Joseph Matric High school won third prize of Rs.1000 & certificate.

Madurai City Police Rolling Trophy for Road Safety was given to Good Shepherd Matriculation High School , Kanagavel Colony, Madurai, where a total of 193 students participated in the essay competition.

Quiz competition was held on 8th February 2019, in the conference hall, at the commissioner of police office. Quiz master was Dr D Sundarnathan, Funda Factory, (Madurai quiz society). Totally 22 teams (each comprising of 2 students) from various schools participated. A preliminary round was conducted in which 6 teams were selected for the final rounds. A.Sathish Karthick & S.S. Naveen Rajan of Mahathma School Baba building won the first prize and were awarded with cash prize of Rs. 5000 and certificates. The second prize was won by T. G. Ashwin Kumar & P.K. Jagajeet Puttaa of Mahatma School, K.K. Nagar and were given a cash prize of Rs. 3000 and certificates. The third prize was won by O. Rufus Jones & K.S. Harish Karthick of S B O A CBSE and were awarded with a cash prize of Rs.2000 and certificates. Consolation prizes, cash awards of Rs.1000 and certificates were awarded to the remaining three teams who passed the preliminary round of Quiz. They are N.M.Arun Karthick & Kausick Kumar Of Nehru Vidhyalaya High School, B.B. Vikas & S.Kannan Of Mahatma Global Gate Way School, and Sree Lakshmaan Pandian & Gokul Raj Of Mahatma, Alagar Kovil.

Appreciation to Volunteers for Road Safety Awareness
Boys clubs:-The 21 members of Anna Nagar Boys and Girls club who were helping the City Police to create awareness during the last two months were appreciated with certificates and wrist watches.
Traffic wardens:- The traffic wardens along with some volunteers conducted awareness programs in disguise of yemadharmaraja. Mr. T Thavamani and his team under the leadership of Chief Traffic Warden Tr Balakrishnan were appreciated with certificates.
Mannin mainthan team:- Mohamed Sariff Of Manin Mainthan Koothupatrai conducted awareness programs and also created awareness videos. He was also facilitated with certificate.

Commissioner of Police congratulated all the winners and thanked all the schools for their participation. He urged students to carry forward the message of safety on roads.

07/02/2019

வினாடி- வினா போட்டி நேரடி ஒளிபரப்பு!
Road Safety Quiz Facebook Live!
Tomorrow morning 10:00 onwards!!
Stay Tuned!

05/02/2019

ஓட்டுனர்களுக்கு மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம்
******
மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் உத்தரவுப்படி காவல் துணை ஆணையர் போக்குவரத்து திரு.அருண் பாலகோபாலன்,IPS., அவர்களின் முழு முயற்சியால் 30 வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இரண்டாவது நாளான இன்று மதுரை மாநகர் தெப்பக்குளம் சந்திர குழந்தை திருமண மண்டபத்தில் அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும் விழிப்புணர்வு மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இதில் மதுரை அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் திருமதி.சுந்தரி அவர்கள் தலைமையில் ஆறு கண் மருத்துவ குழுவினர்கள் இணைந்து 400 க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். கண் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் கண் சிகிச்சை முகாமை பார்வையிட்டு, வாகன ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும் மதுரை மாநகரை விபத்தில்லா மாநகராக மாற்ற வாகன ஓட்டுனர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாடர். மேலும் இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் போக்குவரத்து, வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.சுரேஷ், மதுரை மாநகர போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்துகொண்டனர்.

Address

Alagar Kovil Main Road, K. Pudur
Madurai
625001

Alerts

Be the first to know and let us send you an email when Madurai City Traffic Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Madurai City Traffic Police:

Share