மேலவளவு, மதுரை.

மேலவளவு, மதுரை. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மேலவளவு, மதுரை., Public & Government Service, Melavalavu, Madurai.

மதுரை அருகே ராஜராஜ சோழன் காலத்து அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு! INSCRIPTION FOUND IN SOMAGIRI HILLSமதுரை: கி.பி 11ஆம் ந...
06/04/2025

மதுரை அருகே ராஜராஜ சோழன் காலத்து அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

INSCRIPTION FOUND IN SOMAGIRI HILLS

மதுரை: கி.பி 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜராஜ சோழனின் அரிய வகை கல்வெட்டு மதுரை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. சோமகிரி என்ற மலையின் உச்சிக்குச் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜராஜ சோழன் பாண்டிய நாட்டை கி.பி 988ஆம் ஆண்டில் வெற்றி கண்டான். அன்றிலிருந்து மூன்றாம் குலோத்துங்கன் காலம் வரை (கி.பி 1218) பாண்டியநாடு சோழர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. யானைமலை யோக நரசிங்க பெருமாள் கோயிலில் இருக்கும் பாறையில் கி.பி 940ஆம் ஆண்டைச் சேர்ந்த முதலாம் பாராந்தக சோழன் கல்வெட்டு, திருவாதவூர் மடைத் தூணில் கி.பி 1195ஆம் ஆண்டைச் சேர்ந்த மூன்றாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டு, பனங்காடியில் கி.பி 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்களால் எடுப்பிக்கப்பட்ட விஷ்ணு கோயில்.

மேலும், ஆனையூர் ஐராவதேஸ்வரர் கோயிலில் முதலாம் இராசராச சோழன், முதலாம் இராஜேந்திர சோழன் கல்வெட்டுகள், மேலத் திருமணிக்கம் சிவன் கோயிலில் கி.பி 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் இராஜேந்திரனின் மெய்க் கீர்த்தி கல்வெட்டும், உறப்பனூர் கண்மாய் கலுங்கில் முதலாம் ராஜராஜ சோழனின் மெய்க் கீர்த்தி கொண்ட வட்டெழுத்து கல்வெட்டு, திருமோகூர் காளமேக பெருமாள் கோயில் தெப்பக்குளம் மைய மண்டபத்தில் முதலாம் குலோத்துங்க சோழனின் மெய்கீர்த்தி கல்வெட்டுகளும் மதுரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு கல்வெட்டு:

இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டத்தில் மேலும் ஒரு சோழர் கால கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் மேலவளவு ஊராட்சியில் அமைந்துள்ள சோமகிரி மலையின் உச்சியில் இராஜராஜ சோழன் கல்வெட்டு மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையைச் சேர்ந்த தமிழ்தாசன் சிற்பத்துறை ஆய்வாளர் தேவி அறிவுச்செல்வம் ஆகியோர் தங்களது களப்பயணத்தின் போது கண்டறிந்துள்ளனர். கண்மாய்ப்பட்டியைச் சேர்ந்த பாலா இந்த கல்வெட்டை கண்டறிய உதவியுள்ளார்.

இக்கல்வெட்டில்
"ராஜராஜ மும்முடிச்சோழனின் படைத்தலைவன் வீரநாராணப்பல்லவரையன் என்பவன் குறிப்பிடப்படுகிறான். அவன் படை எடுத்து வெற்றி கொண்ட மலையப்ப சம்பு என்பவன் சோமகிரி மலையில் உள்ள கல் படிக்கட்டுகளை வெட்டுவித்தான்"
என்ற செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது. கி.பி 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு மதுரை பகுதியில் கிடைக்கும் ராஜராஜ சோழனின் அரிதான கல்வெட்டாகும்.

முதலாம் ராஜராஜனுக்கு மும்முடிச்சோழன் என்ற பட்டப்பெயர் உண்டு. அப்பெயரோடு சேர்த்து இங்கு ராஜராஜன் குறிப்பிடப்படுகிறான். பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள் ரா.உதயகுமார் மற்றும் தி.முத்துப்பாண்டி ஆகியோர் இக்கல்வெட்டை மைப்படி எடுத்தனர்.

அப்போது, அவர்களுடன் மேலவளவு கோபால், சிவன், நித்தின் ஆகியோர் உடனிருந்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த ஆய்வு மையத்தின் செயலர் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் இக்கல்வெட்டைப் படித்துப் பொருள் கூறியுள்ளார்.

கண்ணீர் அஞ்சலி🌑🌑🌑😭😭😭மேலவளவச் சேர்ந்த விமல்ராஜ், திலகராஜ் அவர்களின் தகப்பனாருமான  *திரு.பவுன்ராஜ்* அவர்கள் இயற்கை மரணம் அ...
10/02/2025

கண்ணீர் அஞ்சலி🌑🌑🌑😭😭😭

மேலவளவச் சேர்ந்த விமல்ராஜ், திலகராஜ் அவர்களின் தகப்பனாருமான *திரு.பவுன்ராஜ்* அவர்கள் இயற்கை மரணம் அடைந்தார் என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.. 😥

07/02/2025
*சோமகிரி பறம்புக் கண்மாய்* - பண்பாட்டுச் சூழல் நடைமுன்பதிவு லிங்க்: https://forms.gle/gPwUZWTvvmaw1otFA  நாள்: 09.02.202...
31/01/2025

*சோமகிரி பறம்புக் கண்மாய்* - பண்பாட்டுச் சூழல் நடை

முன்பதிவு லிங்க்: https://forms.gle/gPwUZWTvvmaw1otFA
நாள்: 09.02.2025, ஞாயிறு
நேரம்: காலை 6.30 மணி
தொடர்பு எண்: 8903241263, 9940832133

கூடுமிடம்: சோமகிரி கருப்பு கோயில், மேலவளவு, மேலூர், மதுரை
Google Map Location: https://maps.app.goo.gl/AGwxGkhUnFNTHvEg8

மதுரை நகரிலிருந்து சோமகிரி பறம்புக் கண்மாய் சுமார் 40 கி.மீ தூரம் இருக்கும்.

திணை: முல்லை

குறிப்பு:
தாமதமின்றி குறிப்பிட்ட நேரத்திற்குள் கூடுமிடத்திற்கு வந்துவிடுங்கள். மலையேற்றம் இருக்கலாம். நிகழ்வு காலை 09.00 மணிக்கு நிறைவடையும். குடிநீர் கொண்டு வாருங்கள். காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வில் பங்குபெற கட்டணமில்லை. வருகையை முன்பதிவு செய்யுங்கள். மேலும் விபரங்களுக்கு மேலுள்ள தொடர்பு எண்ணில் அழைத்து பேசுங்கள்.

ஒருங்கிணைப்பு:
மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF)
தமிழ்நாடு சுற்றுலாத்துறை

டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு பொங்கல் வாழ்த்துகள்.. நன்றி- தோழர் தமிழ்தாசன் மற்றும் தினமலர் பத்திரிக்கை.
14/01/2025

டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு பொங்கல் வாழ்த்துகள்..

நன்றி- தோழர் தமிழ்தாசன் மற்றும் தினமலர் பத்திரிக்கை.

04/01/2025
மேலவளவு V.S. நகரம் பலசரக்கு கடை உரிமையாளர் சோணைக்காளை மகன் பாண்டியராஜன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் 😢😭
12/09/2024

மேலவளவு V.S. நகரம் பலசரக்கு கடை உரிமையாளர் சோணைக்காளை மகன் பாண்டியராஜன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் 😢😭

🙏🙏
20/08/2024

🙏🙏

😢😢
25/04/2024

😢😢

👏💐
16/04/2024

👏💐

ஆழ்ந்த இரங்கல் 😥
16/01/2024

ஆழ்ந்த இரங்கல் 😥

Address

Melavalavu
Madurai
625105

Website

Alerts

Be the first to know and let us send you an email when மேலவளவு, மதுரை. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share