முக்குலத்தோர் எழுச்சி கழகம் - தமிழ்நாடு

  • Home
  • India
  • Madurai
  • முக்குலத்தோர் எழுச்சி கழகம் - தமிழ்நாடு

முக்குலத்தோர் எழுச்சி கழகம் - தமிழ்நாடு This is an official page of 𝙈𝙪𝙠𝙠𝙪𝙡𝙖𝙩𝙝𝙤𝙧 𝙀𝙯𝙝𝙪𝙘𝙝𝙞 𝙆𝙖𝙯𝙝𝙖𝙜𝙖𝙢 (𝙈𝙀𝙆)

வீரமிகு சொந்தங்களே,

தலைவர்கள் துதிபாட, அரசியல் கட்சிகளுக்கு பலம் சேர்க்க, உன்னை காட்டி விலை பேசுவோர்க்கு உன்னை அறியாமல் உதவ பல களங்களை நீ சந்தித்துள்ளாய், இப்போது உனக்காக மானத்தோடும், மரியாதையோடும் நீயும் உன் சந்ததிகளும் வாழ்வதற்கு உனக்கு ஏற்பட்ட இந்த நிலை உன் சந்ததிகளுக்கும் ஏற்படாமல் தடுத்து நிறுத்துவது நமது கடமை,நாம் அனுபவித்த புறக்கணிப்பு நம் சந்ததிகளு

க்கு விட்டு செல்லமாட்டோம் என்று உறுதிமொழி ஏற்போம். 60 ஆண்டுகளாக நாம் ஏமாந்தது போதும் இனியும் ஏமாற மாட்டோம் என்று நம்மை வைத்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளுக்கு உணர வைப்போம். தேசிய மற்றும் திராவிட கட்சிகள் நம்மையும் நம் இன மக்களையும் பயன்படுத்தி அதில் ஆதாயம் அடைகிறார்கள். அதற்கு நம் இனத்தை சார்ந்தவர்களும் துணை நிற்கிறார்கள்.இந்த அவல நிலை நம்மோடு போகட்டும்.நம் இனத்திற்கான ஒரு அரசியல் அதிகாரத்தை நோக்கி பயணிப்போம். நமக்கான உரிமையை பெற நாம் தான் போராட வேண்டும்.
நம் இன மக்களின் முன்னேற்றத்திற்காக நீ தினமும் ஒரு 2 மணிநேரம் ஒதுக்கு. இந்த நாட்டின் விடுதலையாக இருக்கட்டும், நாட்டின் வளர்ச்சி பாதையாக இருக்கட்டும் இன்னும் பல போராட்ட களங்களை சொல்லிக்கொண்டே போகலாம். எல்லா கால கட்டங்களிலும் நம் இன மக்கள் இல்லாத போராட்டங்களே இல்லை. உன் வருங்கால சந்ததி தெருவில் நின்று கையேந்தாமல் இருக்க நீ இப்பொழுது இருந்தே நம் இனத்திற்கான உரிமையை மீட்டெடுக்க புறப்படு. தவறான பல தகவல்களை கூறி நம் இனத்தை மற்ற சமுதாய மக்களிடம் இந்த நாட்டை தேசிய மற்றும் திராவிட கட்சிகளும் நம்மை எதிரியாக மற்ற சமுதாய மக்களிடம் பதிவு செய்கின்றன.
நாட்டின் விடுதலைக்காக கல்வியையும் வேலை வாய்ப்பையும் தியாகம் செய்த நம்மை தவிர மற்ற அனைத்து சமுதாயத்தினரும் எல்லா வகையிலும் நம்மை பின்னுக்கு தள்ளிவிட்டு மேன்மையான நிலைக்கு சென்று விட்டார்கள். அதை பற்றி நீங்கள் ஒரு முறையாவது சிந்தீத்தீர்களா?.
கட்டிட தொழிலாளியாக, சுமை தூக்குவோராக, நடைபாதை வியாபாரம் செய்பவராக, குறைந்த ஊதியத்தில் கடைகளில் வேலை செய்பவராக,ஹோட்டல்களில் கடைநிலை ஊழியராக, கைவண்டி இழுக்கும் தொழிலாளியாக,ஆட்டோ ஓட்டுனராக, சித்தாளாக, வீட்டு வேலை செய்பவராக, சமையல் வேலை செய்பவராக, மற்றும் நிரந்தரம் இல்லாத தொழிலாளியாக, இதுபோன்று ஒப்பந்தத்தின் அடிப்படையில் நம் இனத்தை சார்ந்த இளம் பெண்கள் குறைந்த ஊதியத்தில் திருப்பூர்,கோவை,ஈரோடு, மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் வருட கூலியாக ஓய்வின்றி உழைக்கும் அவலநிலையில் உள்ளனர். இந்த நாட்டின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட இந்த இனம் இன்று சொந்த நாட்டில் வேலை இல்லாமல் அல்லது மறுக்கப்பட்டு வெளிநாடுகளில் வேலை பார்க்கின்றனர்.அவர்கள் தங்கள் குடும்ப உறவுகளை பிரிந்து அங்கே அடிமைகளாக வேலை பார்க்கின்றனர்.
இந்த நிலைமையை மாற்ற சீரிய முயற்சியில் நீயும் பங்கு கொண்டு நமக்கான உரிமையை நாமே வென்றெடுப்போம்!

வெளியீடு:
விஆர்கே.கவிக்குமார்
பொதுச்செயலாளர்
முக்குலத்தோர் எழுச்சி கழகம்
தலைமை அலுவலகம்
#21-A, சிவகங்கை சாலை, ஆவின் பால் பண்ணை எதிரில்,
மதுரை-625020.
தொலைபேசி: 97511 50009, 98421 77066

25/05/2026
அதிமுக ஆட்சியில் அரங்கேறிய கொடூரம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி போராடிய அப்பாவி தமிழர்கள் கொடூரமா...
22/05/2026

அதிமுக ஆட்சியில் அரங்கேறிய கொடூரம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி போராடிய அப்பாவி தமிழர்கள் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட நாள். திராவிடர்களின் சிஸ்டம் என்பதே தமிழினத்தை சிதைப்பது, அழிப்பது என்பதாகும்.

உயிர் நீத்த 13 தமிழர்களுக்கு முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் சார்பாக நினைவு அஞ்சலி செலுத்துகிறோம்.

முக்குலத்தோர் எழுச்சி கழகம் - தமிழ்நாடு

| | | | | | | | | | | | | | |

திராவிட ஆட்சியாளர்களால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்கிற பெயர் அரசு போக்குவரத்து கழகம் என மாற்றப்பட்டது.அரசு போக...
13/05/2026

திராவிட ஆட்சியாளர்களால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்கிற பெயர் அரசு போக்குவரத்து கழகம் என மாற்றப்பட்டது.

அரசு போக்குவரத்து கழகம் என்கிற பெயரை மீண்டும் #தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என பெயர் மாற்றுமா? ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தவெக அரசு.

முக்குலத்தோர் எழுச்சி கழகம் - தமிழ்நாடு

| | | | | | | | | | | | | | |

02/05/2026

அரியலூர் குழவடையானில் கோகிலாம்பாள் கல்வி நிறுவனம் மற்றும்
மீன்சுருட்டி இராஜா வணிக நிறுவனங்களின் இளையவரான திரு.இராஜா.அன்பழகன் அவர்களால்

மாமன்னர் #ராஜேந்திரசோழனின் முதல் வெண்கல சிலை திறப்பு.

#தமிழ்_பேரினத்தின்_தனி_அடையாளம்

முக்குலத்தோர் எழுச்சி கழகம் - தமிழ்நாடு

செங்குருதியை வியர்வையாக்கி உழைப்பையே மூச்சாக சுவாசித்து நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக திகழும் தொழிலாளர்கள் அனைவருக...
01/05/2026

செங்குருதியை வியர்வையாக்கி உழைப்பையே மூச்சாக சுவாசித்து நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக திகழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

முக்குலத்தோர் எழுச்சி கழகம் - தமிழ்நாடு

| | | | | | | | | | | | | |

 #நீதிவென்றது2012 தேவர்ஜெயந்திக்கு சென்று திரும்பியஅப்பாவிகள் 7பேர் மீது பெட்ரோல் குண்டுவீசி கொடூரமாக கொன்ற வழக்கில் குற...
21/04/2026

#நீதிவென்றது

2012 தேவர்ஜெயந்திக்கு சென்று திரும்பிய
அப்பாவிகள் 7பேர் மீது பெட்ரோல் குண்டுவீசி கொடூரமாக கொன்ற வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் #ஆயுள்தண்டனை வழங்கியது கரூர் நீதிமன்றம்.

அண்ணன் #விஆர்கே_கவிக்குமார் அவர்களின் தொடர் சட்டப்போராட்டம், இதற்கு உறுதுணையாக இருந்த பசும்பொன் வழக்கறிஞர் சங்கம் பொறுப்பாளர் ாமர் மற்றும் வழக்கறிஞர் குழுவிற்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

முக்குலத்தோர் எழுச்சி கழகம் - தமிழ்நாடு

வாக்கு என்னும்  #ஆயுதம்உங்கள் வாக்குகளை விற்காதீர்கள். 5ஆண்டுக்கு ஒரு முறை வரும் சட்டமன்ற தேர்தலில் உங்கள் தொகுதிக்கான ந...
21/04/2026

வாக்கு என்னும் #ஆயுதம்

உங்கள் வாக்குகளை விற்காதீர்கள். 5ஆண்டுக்கு ஒரு முறை வரும் சட்டமன்ற தேர்தலில் உங்கள் தொகுதிக்கான நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுங்கள்...

மக்கள் மீது அதிகாரம் செலுத்துவதில்லை அரசியல், மக்கள் பணி செய்வதே அரசியல்... #பசும்பொன்_முத்துராமலிங்கத்தேவர்



முக்குலத்தோர் எழுச்சி கழகம் - தமிழ்நாடு

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வாளெடுத்த வீரத்தமிழன் சிவகங்கை சீமையின்  #மாமன்னர்_சின்னமருதுபாண்டியர் பிறந்த தினம்....
20/04/2026

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வாளெடுத்த வீரத்தமிழன்
சிவகங்கை சீமையின் #மாமன்னர்_சின்னமருதுபாண்டியர் பிறந்த தினம்.

தேச விடுதலைக்காக போரிட்டு, உயிர்நீத்த சின்ன மருதுபாண்டியர் அவர்களின் வீரத்தையும், தியாகத்தை போற்றி வணங்குவோம்.

முக்குலத்தோர் எழுச்சி கழகம் - தமிழ்நாடு

| | | | | | | | | | | | | |

 #களப்போராளியேமுக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் மதுரை மாநகர் மாவட்டச்செயலாளர் கே. ஆர். செல்வம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள...
18/04/2026

#களப்போராளியே

முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் மதுரை மாநகர் மாவட்டச்செயலாளர் கே. ஆர். செல்வம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

முக்குலத்தோர் எழுச்சி கழகம் - தமிழ்நாடு

| | | | | | | | | | | | | |

Address

21/1A, Sivagangai Road, Near City Hospital
Madurai
625020

Alerts

Be the first to know and let us send you an email when முக்குலத்தோர் எழுச்சி கழகம் - தமிழ்நாடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to முக்குலத்தோர் எழுச்சி கழகம் - தமிழ்நாடு:

Share