26/04/2024
நடித்த மொத்த படங்கள் - 306
கதாநாயகனாக நடித்த
தமிழ் படங்கள் - 262
கதாநாயகனாக நடித்த
பிறமொழி படங்கள் - 14
கெளரவ வேடத்தில் நடித்த
தமிழ் படங்கள் - 19
கெளரவ வேடத்தில் நடித்த
பிறமொழி படங்கள் - 11
#நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெற்ற #விருதுகள்
1960 இல் கெய்ரோவில் நடந்த ஆசிய, ஆப்பிரிக்க பட விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை சிவாஜி கணேசனுக்கு "வீரபாண்டிய கட்டபொம்மன்' படம் பெற்று தந்தது.
1966 இல் பத்மஸ்ரீ விருது பெற்றார்.
1969 இல் தமிழக அரசு வழங்கிய சிறந்த நடிகர் விருது பெற்றார்.
1969 இல் தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருது பெற்றார்.
1984 இல் பத்மபூஷன் விருது பெற்றார்.
1986 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளித்தது.
நடிகர் திலகம், சிம்மக் குரலோன், கலைக் குரிசில் - என்ற பட்டப் பெயர்களாலும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
இந்திய அஞ்சல் துறையானது, இவரின் படம் பதித்த 4 ரூபாய்க்கான அஞ்சல் தலையை வெளியிட்டு நடிகர் திலகத்தை கெளரவம் செய்தது.
"கப்பலோட்டிய தமிழன்' படத்திற்கு, அரசு வரிவிலக்கு அளித்து, வ. உ.சி அவர்களையும், நடிகர் திலகம் அவர்களையும் கெளரவ செய்தது.
1995 இல் பிரான்ஸ் நாட்டில் வழங்கப் பட்ட செவாலியே விருது பெற்றார்.
1996 இல் குடியரசுத் தலைவரிடம் தாதாசாகிப் பால்கே விருது பெற்றார்.
இத்தகைய பெருமை கொண்ட தேவர்மனுக்கு பிறந்த நாளான இன்று வீர வணக்கம் செலுத்துகிறோம்.....