TN COOP DEPT Madurai

TN COOP DEPT Madurai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TN COOP DEPT Madurai, Government Organization, Madurai.

கூட்டுறவுத்துறையின் உடனடி நடவடிக்கை : மதுரை அனுப்பானடி, ஆதிமூலம் பிள்ளை சந்து என்ற முகவரியில் வசிக்கும் 85 வயது முதியவர்...
10/12/2025

கூட்டுறவுத்துறையின் உடனடி நடவடிக்கை :

மதுரை அனுப்பானடி, ஆதிமூலம் பிள்ளை சந்து என்ற முகவரியில் வசிக்கும் 85 வயது முதியவர் திருமதி.கருப்பாயி அம்மாள் என்பவரது கைரேகை விழாததாலும் கருவிழி ஸ்கேன் ஆகாத காரணத்தாலும் அனுப்பானடி வடக்கு தெரு நியாய விலைக் கடையில் குடிமைப் பொருட்கள் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டதால், விற்பனையாளர், மேற்படி அம்மையாரிடம் அவருக்கு பதிலாக வேறொருவரை, நி.வி.கடையில் பொருட்கள் பெற பிரதிநிதியாக சேர்த்திடக் கோரி அருகில் உள்ள பொதுச் சேவை மையத்தை அனுகுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அம்மையாரின் வீட்டின் அருகில் வசிக்கும் வேறு சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வேறுசில காரணங்களுக்காக 08-12-2025 அன்று செல்லுகையில் அவர்களுடன் இவரையும் அழைத்துச் சென்றுள்ளனர், அங்கு மதுரை கிழக்கு குடிமைப் பொருள் சரக அலுவலகத்தில் இவரது கோரிக்கையின்படி திருமதி.குஞ்சரம் என்பவரை பிரதிநிதியாக சேர்க்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வடக்கு தெரு நி.வி.கடையில் பிரதிநிதியாக சேர்க்கப்பட்டவரின் கைரேகை பெற்று திருமதி.கருப்பாயி அம்மாள் அவர்களுக்கு அரிசி, சர்க்கரை, துவரம்பருப்பு, பாமாயில் ஆகிய குடிமைப் பொருட்கள் 08-12-2025 பிற்பகல் 1.04 மணியளவில் வழங்கப்பட்டுள்ளது.

அவர் குடிமைப் பொருட்களை முழுமையாக பெற்றுக் கொண்டது தொடர்பாக அவரது வீட்டிற்கு சென்று நேரில் அவரிடம் விசாரித்து உறுதி செய்யப்பட்டது.

மேலும் அவரிடம் ஒவ்வொரு மாதமும் அவரது வீட்டிற்கு வந்து குடிமைப் பொருட்கள் வழங்கப்படும் என்றும் அவர் கடைக்கு வரத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அம்மையார் நன்றி தெரிவித்தார். என்றென்றும் மக்களின் சேவையில் கூட்டுறவுத்துறை.

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025-26  #எல்லாக்கும்_எல்லாம்
14/03/2025

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025-26 #எல்லாக்கும்_எல்லாம்

முதல்வர் மருந்தகம் செயல்படும் இடங்கள் - மதுரை மாவட்டம்
13/03/2025

முதல்வர் மருந்தகம் செயல்படும் இடங்கள் - மதுரை மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்திலிருந்து  மதுரை மாவட்டத்தில் 51 முத...
24/02/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்திலிருந்து மதுரை மாவட்டத்தில் 51 முதல்வர் மருந்தகங்களை காணொலிக்காட்சி வாயிலாக இன்று (24.02.2025) திறந்து வைத்தார். மதுரை செனாய் நகரில் நடைபெற்ற காணொளி காட்சி நிகழ்ச்சியில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் மற்றும் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ. சங்கீதா இ.ஆ.ப., அவர்கள், மதுரை மாநகராட்சி ஆணையாளர் திருமதி.சித்ரா விஜயன் இ.ஆ.ப அவர்கள், மதுரை சட்டமன்ற உறுப்பினர் திரு.கோ.தளபதி அவர்கள், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.மு.பூமிநாதன் அவர்கள், மதுரை மாநகராட்சி மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த் அவர்கள், துணை மேயர் திரு.டி.நாகராஜன் அவர்கள், மாநகராட்சி மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், இந்நிகழ்வில், கூட்டுறவுத்துறை மதுரை மண்டல இணைப்பதிவாளர் திரு.சு.சதீஷ்குமார் அவர்கள், பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குநர் திரு.சு.மனேகரன் அவர்கள், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குநர் திரு.க.வாஞ்சிநாதன் அவர்கள், துணைப்பதிவாளர் பணியாளர் அலுவலர் திரு.கா.பாலசுப்ரமணியன் அவர்கள், மதுரை சரக துணைப்பதிவாளர் திருமதி.இ.காயத்ரி அவர்கள், உசிலம்பட்டி சரக துணைப்பதிவாளர் திருமதி.வீ.கண்ணம்மாள் அவர்கள், பொது விநியோகத் திட்ட துணைப்பதிவாளர் திரு.து.ஆசைத்தம்பி அவர்கள், பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய துணைப்பதிவாளர் முதல்வர் திருமதி.கே.வசந்தி அவர்கள், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப்பதிவாளர் முதன்மை வருவாய் அலுவலர் திரு.ம.கேசவன் அவர்கள், டான்பெட் துணைப்பதிவாளர் மண்டல மேலாளர் திரு.செ.பாலு அவர்கள், மற்றும் இதர அரசு அலுவலர்கள், தொழில்முனைவோர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மதுரை மண்டல இணைப்பதிவாளராக திரு.சு.சதிஷ்குமார் இணைப்பதிவாளர் அவர்கள் இன்று (25.11.2024) பணி ஏற்று கொண்டார்கள்.
25/11/2024

மதுரை மண்டல இணைப்பதிவாளராக திரு.சு.சதிஷ்குமார் இணைப்பதிவாளர் அவர்கள் இன்று (25.11.2024) பணி ஏற்று கொண்டார்கள்.

21/11/2024
இன்று (19.11.2024) மாண்புமிகு வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் ஒன்றி...
20/11/2024

இன்று (19.11.2024) மாண்புமிகு வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் ஒன்றியத்தில் உள்ள புதிய நியாயவிலைக்கடை கட்டிடங்களை துவக்கி வைத்தார்கள்.

71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மதுரை மாவட்ட கூட்டுறவு த்துறையின் கீழ் 14.11.2024 முதல் 20.11.2024 வரை நடைபெற்று ...
14/11/2024

71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மதுரை மாவட்ட கூட்டுறவு த்துறையின் கீழ் 14.11.2024 முதல் 20.11.2024 வரை நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் முதல் நாளான இன்று (14.11.2024) மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம், மதுரை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் ஆகிய இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது. இவ்விழாவை மதுரை மண்டல இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி அவர்கள்‌ கொடியேற்றி துவக்கி வைத்தார்கள். மேலும், கூட்டுறவாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி அனைவராலும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்விழாவில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் திரு.க.வாஞ்சிநாதன் அவர்கள், பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் இணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் திரு.சு.மனோகரன் அவர்கள், டான்பெட் துணைப்பதிவாளர் / மண்டல மேலாளர் திரு.ச.பார்த்திபன் அவர்கள், துணைப்பதிவாளர் / முதன்மை வருவாய் அலுவலர் செல்வி.மு.அமிரதா அவர்கள், துணைப் பதிவாளர் (பொவிதி) மதுரை திரு.து.ஆசைத்தம்பி அவர்கள், மதுரை சரக துணைப்பதிவாளர்திருமதி.கே.வசந்தி அவர்கள், துணைப் பதிவாளர் (பயிற்சி) திரு.வை.சுரேஷ் அவர்கள், மதுரை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் திரு.ம.தீனதயாளன் அவர்கள் கலந்து கொண்டனர். மேலும், பி.டி.ஆர் பொறியியல் கல்லூரியில் மரக்கன்று நடும்விழா இன்று மதுரை மண்டல இணைப்பதிவாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இன்று (21.10.2024) உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தால், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொது விநியோகத்திட்ட  வ...
21/10/2024

இன்று (21.10.2024) உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தால், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொது விநியோகத்திட்ட விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பான பயிற்சி வகுப்பு மதுரை மண்டல இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when TN COOP DEPT Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share