05/06/2026
பண்டித நேருவை மிஞ்சிய பச்சைத் தமிழன்!!!
சுதந்திர போராட்ட வீரர் மதுரை சிதம்பர பாரதி சேர்வை அவர்களின் 121வது பிறந்த தினம் இன்று 🙏🙏🙏
பாரத மணித்திருநாடு சுதந்திரம் பெற வேண்டி ஆயிரக்கணக்கான தியாகிகள் சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.ஆனால் அவர்களில் வெகு சிலரை மட்டுமே நமக்கு பாடப்புத்தகங்கள் அறிமுகப்படுத்தி உள்ளது.பலரின் பெயர் கூட நமக்கு தெரிவதில்லை,அதனாலேயே அவர்களின் தியாகத்தை நாம் உணர்வதில்லை.அப்படி நாம் கொண்டாட மறந்த ஒரு மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் தான் அரசாண்ட அகமுடையார் பேரினத்தில் உதித்த மதுரை சிதம்பர பாரதி சேர்வை எனும் மாவீரர்.
பொதுவாக நேருவை தான் அதிக ஆண்டுகள் சிறை வாசம் செய்தவர் என்று நமக்கு தெரியும்,"பண்ணெண்டு வருடம் சிறையினிலே,பண்டித நேரு இருந்தாரே" எனும் பாடல் வரிகள் நேரு அவர்களின் சிறைவாசம் குறித்து நினைவுபடுத்துகின்றன.ஆனால் அவரை காட்டிலும் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் அதாவது 1922 முதல் 1942 இடைப்பட்ட இருபது ஆண்டுகளில் ஏறத்தாழ பதினான்கு ஆண்டுகள் தனது வாழ்வை சிறையினிலே கழித்தவர் தான் நமது பெரு மதிப்பிற்குரிய மதுரை சிதம்பர பாரதி சேர்வை அவர்கள்.
ஆனால் சிதம்பர பாரதி சேர்வைக்கு எந்த நினைவு சின்னமும் கிடையாது,அரசு விழாவும் கிடையாது,பாடப் புத்தகங்களில் எந்த பக்கத்திலும் இவருக்கு இடமில்லை.இப்படி ஒரு மாபெரும் போராளி வாழ்வதற்கான எந்த குறிப்புகளும் தற்போது வரை அரசு சார்பில் இல்லை.அதற்காக நாமும் இவரை நினைவுபடுத்தாமல் கடந்து செல்ல கூடாது.
வாழ்க சிதம்பர பாரதி சேர்வையின் புகழ்!
வளர்க்க அவர் கண்ட புதிய பாரதம்!!
வந்தே மாதரம்!!!
#அகமுடையார்_பேரினம்
#மாமன்னர்_மருது_பாண்டியர்கள்
#கொடை_வள்ளல்_பச்சையப்ப_முதலியார்
#துளுவ_வேளாளர்
#போர்க்குடி_அகம்படியர்
#போர்க்குடி_அகமுடையார்