Olirum Madurai - ஒளிரும் மதுரை

Olirum Madurai - ஒளிரும் மதுரை Our aim to create green madurai

மதுரை கூடல்நகர் புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் மற்றும் இலக்கிய மன்ற துவக்க விழா நடைபெற...
15/07/2022

மதுரை கூடல்நகர் புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் மற்றும் இலக்கிய மன்ற துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒளிரும் மதுரை ஒருங்கிணைப்பாளர் துரை விஜயபாண்டியன் தலைமை வகித்தார்.1982 அண்ணாமலை பல்கலைக்கழக பொறியாளர் குழும உறுப்பினர் சி.பி.ரவி.முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பனையோலை மணிவண்ணன் காந்தி கலந்து கொண்டார்.பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் நீதிமணி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் ,ஊடகவழி கல்வி சிறந்ததா ,வகுப்பறை கல்வி சிறந்ததா என்ற பட்டிமன்றம் நடந்தது.1982 அண்ணாமலை பல்கலைக்கழக குழுமத்தை சேர்ந்த சி.பி.ரவி , திருமேனி ,அழகப்பன்,பழனியப்பன் ஆகியோர் ஆறாம் வகுப்பு மாணவிகள் அறுபத்தி ஐந்து பேருக்கு சீருடைகள் வழங்கினார்கள்.இறுதியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஹெப்சி ஆண்டனி மஸ்கீரின் அவர்கள் கடந்த கல்வியாண்டில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடத்தில் வந்த மாணவிகள் மற்றும் பாடவாரியாக 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பரிசளித்து பாராட்டினார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொண்டார்கள்.

பசுமை முதன்மையாளர் விருது பெற்றமரம்.துரைராஜ் அவர்களுக்கு  #ஒளிரும்‌_மதுரை சார்பாக  வாழ்த்துக்கள். மரம்.துரைராஜ்‌ பசுமை வ...
07/06/2022

பசுமை முதன்மையாளர் விருது பெற்ற
மரம்.துரைராஜ் அவர்களுக்கு #ஒளிரும்‌_மதுரை சார்பாக வாழ்த்துக்கள்.

மரம்.துரைராஜ்‌ பசுமை விருட்சம்

உலக பொதுமறை தந்த ஆசானே...முக்காலமும் உணர்ந்த‌ ஞானியேஉலகம் இயங்கும் வரை‌‌ உன் புகழ்நிலைத்திருக்கும்.... ஐயாதினைத்துணை நன்...
15/01/2022

உலக பொதுமறை தந்த ஆசானே...
முக்காலமும் உணர்ந்த‌ ஞானியே
உலகம் இயங்கும் வரை‌‌ உன் புகழ்
நிலைத்திருக்கும்.... ஐயா

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
- திருவள்ளுவர்

இன்று உத்ரா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ மந்த்ராலயம் குருகுலம் இணைந்து நடத்திய மார்கழியில் முப்பெரும் விழாவில் திரு ஹரி உத்ரா...
06/01/2022

இன்று உத்ரா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ மந்த்ராலயம் குருகுலம் இணைந்து நடத்திய மார்கழியில் முப்பெரும் விழாவில் திரு ஹரி உத்ரா அவர்கள் மற்றும் உளவியல் மருத்துவர் புவனா சரவணன் அவர்கள் இணைந்து @ஒளிரும்மதுரை ஒருங்கிணைப்பாளரில் ஒருவரான அடியேனின் சமூக சேவையை பாராட்டி சிறந்த மக்கள் சேவகர் விருதினை வழங்கி கௌரவித்தார்கள்.நமது சமூக சேவைக்கு வழிகாட்டுதலாக அனைத்து நண்பர்கள் ,உறவினர்கள் ,மற்றும் எனது குடும்பத்தாருக்கு இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.எனது நீண்ட கால நட்பில் உள்ள சிறந்த கவிஞர் திருமதி ரேவதி அழகர்சாமி அவர்களின் கவிதை தொகுப்பு நூலினை அன்பு பரிசாக வழங்கினார்கள்,மேலும் திருமங்கலம் ஊக்குவிக்கும் கலாம் வல்லரசு கார்த்திக் அவர்கள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை பரிசாக வழங்கினார்கள்.நன்றிகள் அனைவருக்கும்.

 #சமூக_சேவை_விருது  #ஒளிரும்_மதுரைவத்தலகுண்டு விருவீடு நேதாஜி மக்கள் அறக்கட்டளையின் சார்பில் ஒளிரும் மதுரையின்  சமூக சேவ...
27/12/2021

#சமூக_சேவை_விருது #ஒளிரும்_மதுரை
வத்தலகுண்டு விருவீடு நேதாஜி மக்கள் அறக்கட்டளையின் சார்பில் ஒளிரும் மதுரையின் சமூக சேவையினை பாராட்டி சிறந்த சமூக சேவை விருது வழங்கி கௌரவ படுத்தினார்கள். அறக்கட்டளை நண்பர்களுக்கு #ஒளிரும்_மதுரை சார்பில் நன்றிகள்.

இந்தியாவின் தண்ணீர் மனிதர்.இராஜேந்திர சிங் கலந்து கொள்ளும்வைகை ஆறு வள மீட்பு ஆலோசனை கூட்டம், நாள் - 7.11.21, இடம் - காந்...
06/11/2021

இந்தியாவின் தண்ணீர் மனிதர்.இராஜேந்திர சிங் கலந்து கொள்ளும்
வைகை ஆறு வள மீட்பு ஆலோசனை கூட்டம், நாள் - 7.11.21, இடம் - காந்தி மியூசியம், மதுரை.
விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

ஒருங்கிணைப்பு - ஒளிரும் மதுரை

மதுரை கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன வளாகத்தில் மரக்காடுகள் உருவாக்கும் விதத்தில் எங்களின் வழிகாட்...
10/10/2021

மதுரை கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன வளாகத்தில் மரக்காடுகள் உருவாக்கும் விதத்தில் எங்களின் வழிகாட்டி அண்ணாமலை பல்கலைக்கழக 1982 பொறியாளர் குழும மதுரை ஒருங்கிணைப்பாளரும் ஒளிரும் மதுரையின் நிறுவுனர்களில் ஒருவருமான திரு சி.பி ரவி அவர்களின் நண்பரும் சென்னை இந்தியன் ஆயில் நிறுவன ஓய்வு பெற்ற உயர் அலுவலருமான திரு மூர்த்தி அவர்களின் ஆலோசனைப்படி 5000 ஐந்தாயிரம் மரக்கன்றுகள் நட்டு மரக்காடுகள் உருவாக்குதற்கு சென்னை உயர் அலுவலர்கள் கணேஷ் மற்றும் கைலாஷ் மேலும் மதுரை உயர் அலுவலர் ஹரி மற்றும் இன்னும் பிற உயர் அலுவலர்களோடு கலந்துரையாடி அதன் முதற்கட்டமாக 10 மரக்கன்றுகள் நட்டு மேலும் அந்த இடத்திலே ஒரு வண்ணத்து பூச்சி பூங்கா அமைக்க முடிவு செய்ய பட்டு அதற்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்க பட்டது.கூடிய விரைவில் 5000 மரக்கன்றுகள் நடப்பட்டு நல்லதொரு அடர்வனத்தோடு கூடிய மரக்காடுகள் உருவாக்கபடும்.1982 அண்ணாமலை பொறியாளர் குழுமத்தோடு இணைந்து ஒளிரும் மதுரை பயணித்து பசுமை சூழலை உருவாக்க வாய்ப்பளித்த 1982 அண்ணாமலை பொறியாளர் குழுமத்திற்கு ஒளிரும் மதுரை சார்பில் நன்றிகள்.

இன்று தமிழக ஆறுகள் மீட்பு குழுவின் சார்பிலும் ,மதுரை மாவட்ட நீர் மேலாண்மை அமைப்பின் சார்பிலும் தமிழ்நாடு ஹோட்டலில் மதுரை...
23/09/2021

இன்று தமிழக ஆறுகள் மீட்பு குழுவின் சார்பிலும் ,மதுரை மாவட்ட நீர் மேலாண்மை அமைப்பின் சார்பிலும் தமிழ்நாடு ஹோட்டலில் மதுரை மாவட்ட நீர் நிலைகளை மேம்படுத்துவது மேலும் ,நீர் ஆதாரங்களை பாதுகாப்பது சம்பந்தமாக கலந்துரையாடபட்டது. இந்த நிகழ்வில் இந்தியாவின் தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.மேலும் சாத்தியார் அணை பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் ஒளிரும் மதுரை அமைப்பு இணைந்து பதிமூன்று வருடங்கள் கழித்து அணைகட்டிற்கு நீரினை கொண்டு வந்த நிகழ்விற்கு பாராட்டினை கூறினார். தமிழக ஆறுகள் மீட்பு குழு குருசாமி அவர்கள் தலைமை தாங்கினார். நீர் மேலாண்மை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சி பி ரவி அவர்கள் முன்னிலை வகித்தார்.மேலும் மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் ஒளிரும் மதுரையின் சார்பில் நன்றி தெரிவிக்கபட்டது.இந்த நிகழ்வில் ஒளிரும் மதுரையின் சி.பி ரவி ,துரை விஜயபாண்டியன் ,மணிவண்ணன் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு மதுரை நீர்நிலைகள் சார்ந்து ஒரு சில முடிவுகள் எடுக்கபட்டது.

மதுரை மாவட்ட ஆட்சியர்.அவர்களின் வழிகாட்டுதல் படி மதுரை மாவட்டத்திற்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற இலக்கில் ...
15/09/2021

மதுரை மாவட்ட ஆட்சியர்.அவர்களின் வழிகாட்டுதல் படி மதுரை மாவட்டத்திற்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற இலக்கில் அண்ணாமலை பல்கலைக்கழக 1982 வருடத்திய பொறியாளர் குழுமம் மற்றும் ஒளிரும் மதுரை அமைப்பின் நிறுவுனர்களில் ஒருவரும் அண்ணாமலை பல்கலையில் 1982 வருடம் பயின்றவருமான சி.பி ரவி அவர்கள்,மேலும் துரை விஜயபாண்டியன், மணிவண்ணன் காந்தி ஆகியோரின் ஒருங்கிணைப்போடும்,ரோட்டரி சங்கத்தினரோடும் இணைந்து முதலில் 10000 மரக்கன்றுகள் நடுவதற்கும்.மேலும் போன மாதம் நமது ஒளிரும் மதுரை அமைப்பினர் மதுரையில் உள்ள 357 சத்துணவு கூடங்களுக்கு வழங்கிய 12 வகையான விதைகள் விதைக்க பட்டு அதன் இன்றைய வளர்ச்சியையும் காண்பித்து நன்றி கூறப்பட்டது. மாவட்ட ஆட்சியர் நமது ஒளிரும் மதுரை அமைப்பினருக்கு வாழ்த்துக்களை கூறினார்.மேலும் உசிலம்பட்டியின் முன்னாள் வருவாய் அலுவலரும் தற்சமயம் மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து எங்களது முந்தைய சமூக பணிகளை எடுத்து கூறினோம்.மிகவும் வாஞ்சையோடு கேட்டறிந்து நல் வாழ்த்துக்களை கூறினார் உசிலையை பசுமையாய் மாற்றியதில் அவருக்கு முக்கிய பங்குண்டு. இனி வரும் காலங்களில் எங்களது மதுரை மாவட்ட பசுமை பணிகளில் அவருக்கும் ,மாவட்ட ஆட்சியருக்கும் முக்கிய பங்கிருக்கும் என்பதில் ஐயமில்லை.நன்றிகள்.@துரை விஜயபாண்டியன்

படத்தில் இருக்கும் மரம்தான்  #கருங்காலி_மரம் 🌳🌿 இந்த மரம் மிகவும் அபூர்வமான மரங்களில் ஒன்று. இந்த மரத்தின் ஆற்றல் சக்திய...
09/08/2021

படத்தில் இருக்கும் மரம்தான் #கருங்காலி_மரம் 🌳🌿 இந்த மரம்
மிகவும் அபூர்வமான மரங்களில் ஒன்று.

இந்த மரத்தின் ஆற்றல் சக்தியானது ஓரு கிலோமீட்டர் சுற்றளவு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த மரத்திற்கு மின்காந்த ஆற்றலை சேமிக்கும் திறன் அதிகம், இந்த மரத்துண்டுகளை #கோவில்_குடமுழுக்கின் போது கலசத்தினுள் போடுவார்கள்...

இந்த மரத்திற்கு அழிக்கும் ஆற்றல் உள்ளது, அதனாலே இந்த மரத்தல் ஆனா #சிற்பங்கள் செய்து வீட்டுக்குள் வைப்பார்கள், அக்காலத்தில் பெரும் செல்வந்தர்கள் கருங்காலி மரத்தால் ஆனது, கெட்ட ஆத்மா தன்னை பித்தொடராமல் இருக்க. தானியங்கள் குத்தும் உலக்கையும் இந்த மரத்தால் மட்டுமே செய்யவேண்டும்,

குழந்தைகள் பல் வளரும் பருவத்தில் இந்த மரத்தால் ஆனா கட்டையில் தான் மரப்பாச்சி பொம்மைகள் செய்வார்கள் 1. காற்று, கருப்பு அண்டாமல் இருக்க, 2. குழந்தைக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்க.

இந்த மரம் செவ்வாய் கிரகத்தின் நற்குணங்களை மற்றும் பெற்றவை, இந்த மரத்தின் நிழலில் அமர்வதே நன்மை தரும்.

மரங்களிடம் இருந்தே மனிதன் ஆற்றலை பெறுகிறான், அதை ஏனோ மனிதன் உணருவது இல்லை,

நாட்டு மரங்களை தேடி தேடி விதையுங்கள், அது உன்னினத்தை காக்கும். இங்கு அபூர்வமான நாட்டு மரங்கள் அழிக்கப்படுவதும், உனக்கு சம்மந்தமே இல்லாத மரங்கள் திணிக்கப்படுவதிற்கு பின்னால் உள்ள மர்மத்தை உணருங்கள்.
~``~``~`` 🌳🌿 📖🎑 🌳🌿 ``~``~``~
(மனிதனை விட மேலானவைகள் மரங்கள்)

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மதுரை மாவட்டத்தில் உள்ள 357 சத்துணவு பள்ளிகளில் உள்ள இடங்களில்  மாணவர்களுக்கு ஊட்டச்சத்து அளிக்...
09/08/2021

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மதுரை மாவட்டத்தில் உள்ள 357 சத்துணவு பள்ளிகளில் உள்ள இடங்களில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் வகையில் கீரை,காய்கறி,பழங்கள் 12வகை விதைகள் கொண்ட தொகுப்பு பைகள் வழங்கப்பட்டது. இன்றைய தினம் அனைத்து சத்துணவு மையங்களிலும் விதைக்கபட்டது.இன்றைய மாணவ செல்வங்கள் நாளைய நம் சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள். அவர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அரசோடு இணைந்து இந்த நிகழ்வில் நம் ஒளிரும் மதுரை அமைப்பின் மூலம் இந்த விதை பைகள் வழங்கப்பட்டது. நம்மோடு இணைந்து இது போன்ற மக்கள் சேவையாற்றிட விரும்பும் நண்பர்கள் இன்பாக்ஸில் தங்களின் எண்ணை பதிவிடவும்.நன்றிகள்.

இயற்கையின் அற்புதம்
07/08/2021

இயற்கையின் அற்புதம்

Address

Madurai
625001

Telephone

+917373556333

Website

Alerts

Be the first to know and let us send you an email when Olirum Madurai - ஒளிரும் மதுரை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category