Kalaignar Centenary Library

Kalaignar Centenary Library page of Kalaignar Centenary Library, Madurai.

*இந்நிகழ்ச்சியின் புகைப்பட தொகுப்புhttps://www.facebook.com/share/p/14ekyVYe3ZU/அனைவருக்கும் வணக்கம் !பொதுநூலக இயக்ககம்,...
30/05/2026

*இந்நிகழ்ச்சியின் புகைப்பட தொகுப்பு
https://www.facebook.com/share/p/14ekyVYe3ZU/

அனைவருக்கும் வணக்கம் !

பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில், குழந்தைகள் கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்கும் வகையில் *”கோடைக்கொண்டாட்டம் -2026”* என்ற நிகழ்வு இன்று *(30.05.2026) காலை 11 மணிக்கு* இனிதே துவங்கியது. இதில் *திரு. T.R. ஜோதிலிங்கம், திரு. பாலசுப்ரமணியன்* அவர்களின் *"வேடிக்கை கணக்குகள் மற்றும் சிந்தனை விளையாட்டுகள் (Fun mathematics & mind Games) "* என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் *விரல்களின் உதவியுடன் கூட்டல் மற்றும் பெருக்கல் கணக்குகளை துல்லியமாகக் கணக்கிடும் முறைகள் குறித்து செய்முறை விளக்கங்கள்* அளிக்கப்பட்டன. மேலும், *எண்களை ஒழுங்குபடுத்தி Magic Square உருவாக்குவது, கவனச்சிதறல் இல்லாமல் துல்லியமாகக் கணக்கிடும் முறைகள், நினைவாற்றலை வளர்க்கும் மனக்கணக்குப் பயிற்சிகள், எண் புதிர்கள் மற்றும் சிந்தனை விளையாட்டுகள் போன்ற பல்வேறு செயல்பாடுகள்* கற்றுக்கொடுக்கப்பட்டன. இந்நிகழ்வில், குழந்தைகளே நேரடியாகப் பங்கேற்று கணக்குகளைச் செய்து பார்த்ததுடன், கேள்விகளுக்குப் பதிலளித்து தங்களது திறமைகளையும் வெளிப்படுத்தினர்.

ஒவ்வொரு செயல்பாடும் *குழந்தைகளின் தர்க்கரீதியான சிந்தனை, கணக்கிடும் திறன், கவன ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் வகையில்* அமைந்திருந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் செயல்பாடுகளில் பங்கேற்று பயனடைந்தனர்.

இந்த நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி.

அனைவருக்கும் வணக்கம்! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெற்றுவரும்  "சிகரம் தொடு" எனும் வார...
30/05/2026

அனைவருக்கும் வணக்கம்!

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெற்றுவரும் "சிகரம் தொடு" எனும் வாராந்திர தொடர் நிகழ்வின் வரிசையில் இன்று ( 30.05.2026 ) சனிக்கிழமை காலை 10.30 முதல் 1.00 மணி வரை திருமிகு. G.Baranisubash (Career guidance faculty ) அவர்களின் " Introduction to Indian economy and Finance commission "என்னும் நிகழ்வானது சிறப்புடன் நடைபெற்றது . இந்நிகழ்வில் திருமிகு. G.Baranisubash அவர்கள், சுதந்திரத்திற்குப் பிந்தைய பொருளாதார நிலை ,முக்கிய நிகழ்வுகள் , முக்கிய கொள்கை, ஐந்தாண்டு திட்டங்கள், முக்கிய சீர்திருத்தங்கள் ,டிஜிட்டல் பொருளாதாரம் ,குறித்து விளக்கக்காட்சி மூலமாக பயிற்சி அளித்தார் .மேலும் போட்டித்தேர்வுமாணவர்களின் கேள்விகளுக்கு சிறந்த முறையில் விளக்கம் அளித்தார் .இந்நிகழ்வில் ஏராளமான போட்டித்தேர்வுமாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர் , பங்குபெற்ற அனைவருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்திக்கொள்கின்றோம் .

29/05/2026

*📌 கோடைக்கொண்டாட்டம் நிறைவு நாள் விழா குறித்து..*
கோடைக்கொண்டாட்டம் *நிறைவு நாள் விழா 31.05.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு* நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நிகழ்வில்,

*பயிற்சி பட்டறைகளில் பங்கேற்று குறைந்தபட்சம் 80% வருகை பெற்ற குழந்தைகளுக்கு* கீழ்க்கண்ட பயிற்சிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

*அபாகஸ் பயிற்சி*
*திரைக்கதை எழுதுதல் (Script Writing) பயிற்சி*
*போகோ ஆர்ட் மற்றும் களிமண் ஓவியம்*
*சதுரங்க பயிற்சி (ஆரம்பநிலை & இடைநிலை)*
*Open Chess Tournament – வெற்றி பெற்றவர்கள்*
*Open Chess Tournament – பங்கேற்றவர்கள்*
*ஓவிய பயிற்சி*
*ஜும்பா நடனம்*
எனவே, இதில் கலந்துகொண்ட குழந்தைகள் *காலை 9.30 மணிக்குள்* தவறாமல் வருகை புரிந்து தங்களுக்குரிய சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

*இடம்: மாநாட்டுக் கூடம், தரைத்தளம்*

*இந்நிகழ்ச்சியின் புகைப்பட தொகுப்பு https://www.facebook.com/share/p/18e5ruNmbW/அனைவருக்கும் வணக்கம் !பொதுநூலக இயக்ககம்,...
29/05/2026

*இந்நிகழ்ச்சியின் புகைப்பட தொகுப்பு

https://www.facebook.com/share/p/18e5ruNmbW/

அனைவருக்கும் வணக்கம் !

பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்கும் வகையில் *” கோடைக்கொண்டாட்டம் -2026”* என்ற நிகழ்வு இன்று *(29.05.2026) காலை 11 மணிக்கு* இனிதே துவங்கியது. இதில் *திரு M. அசோக்குமார்* அவர்களின் *"குழந்தைகள் அனிமேஷன்"* என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், அனிமேஷன் உருவாக்கத்தின் அடிப்படை கருத்துகள் மிகவும் எளிமையாகவும், நடைமுறை உதாரணங்களுடனுன் விளக்கப்பட்டன. தொடர்ந்து, *குழந்தைகள் தாங்களே படம் வரைதல், அந்தப் படங்களை தொடர்ந்து மாற்றி நகர்த்துதல் (frame by frame animation), ரெட்டிப்பாக்குதல் (duplication and transformation techniques) போன்ற அடிப்படை நுட்பங்கள்* கற்றுத்தரப்பட்டு, செய்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதில் குழந்தைகள் *நிலையான படங்கள் எவ்வாறு இயக்கப்படுகின்றன என்பதையும், ஒரு கதாபாத்திரம் எப்படி உயிரோட்டம் பெறுகிறது என்பதையும்* அவர்கள் நேரடியாகப் புரிந்துகொண்டனர்.
மேலும், அ *னிமேஷன் உலகில் விலங்குகள் மற்றும் கதாபாத்திரங்களை பேச வைப்பது, நடக்க வைப்பது, ஓட வைப்பது போன்ற காட்சிகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதையும்* சுவாரஸ்யமான விளக்கங்களுடன் கூறினார். தொழில்நுட்பம் மற்றும் கற்பனை இணைந்து எப்படி திரைப்படம் மற்றும் கார்ட்டூன் உருவாக்கத்திற்கு உதவுகிறது என்பதையும் குழந்தைகள் அறிந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி.

*இந்நிகழ்ச்சியின் புகைப்பட தொகுப்பு :*https://www.facebook.com/share/1Eb6RngPJH/அனைவருக்கும் வணக்கம் !பொதுநூலக இயக்ககம்,...
29/05/2026

*இந்நிகழ்ச்சியின் புகைப்பட தொகுப்பு :*

https://www.facebook.com/share/1Eb6RngPJH/

அனைவருக்கும் வணக்கம் !

பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்கும் வகையில் *”கோடைக்கொண்டாட்டம் -2026”* என்ற நிகழ்வு இன்று *(28.05.2026) காலை 11 மணிக்கு* இனிதே துவங்கியது. இதில் திரு. *அ.அமலராஜன்* அவர்களின் *"காகிதத்தில் கலைவண்ணம் (Origami)"* என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் *பல வண்ண காகிதங்களைப் பயன்படுத்தி தோரணம், சுழலும் விளையாட்டுப் பொருள் (Rolling Toy), காகிதப் பை (Paper Bag), கீரிடம் (Crown) உள்ளிட்ட பல்வேறு கலைப்பொருட்களை உருவாக்கும் முறைகளை* ஆர்வமுடன் கற்றுக்கொண்டனர். மேலும், காகிதக் கலை வடிவங்களின் மூலம் கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த அடிப்படைக் கருத்துக்களையும் செயல்முறை விளக்கங்களுடன் குழந்தைகளுக்கு செய்து காட்டினார்.
குறிப்பாக, *காகித மடிப்பு முறைகள் மூலம் வடிவியல் (Geometry) சார்ந்த கருத்துகள், சமநிலை மற்றும் இயக்கம் போன்ற அறிவியல் அடிப்படைகள்* குழந்தைகளுக்கு எளிமையாக விளக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள் தங்களது படைப்பாற்றல் மற்றும் கற்பனைத் திறனை வெளிப்படுத்தி மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் செயல்பாடுகளில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி.

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 27.05.2026 புதன்கிழமை மாலை 3.00 மணி அளவில்  "கலைப்பட்டறை" நிகழ்ச்சியில்  திருமதி.  சே.தேன்ம...
29/05/2026

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 27.05.2026 புதன்கிழமை மாலை 3.00 மணி அளவில் "கலைப்பட்டறை" நிகழ்ச்சியில் திருமதி. சே.தேன்மொழி அவர்கள் "TRIBAL ART " குறித்த பயிற்சியை அளித்தார். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் மற்றும் இளையோர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின்சார்பாக நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறோம்.

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மூன்று நாட்கள் பயிற்சி பட்டறை  **கேன்வாஸில் புடைப்புச் சிற்ப ஓவியம்  (workshop on embossed ...
29/05/2026

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மூன்று நாட்கள் பயிற்சி பட்டறை **கேன்வாஸில் புடைப்புச் சிற்ப ஓவியம் (workshop on embossed painting on canvas) ** நிகழ்ச்சி 28.05.2026 அன்று இனிதே தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் மற்றும் இளையோர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்!

அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும்  *"வேர்கள்" - அனுபவப் பகிர்வு* எனும் த...
29/05/2026

அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும்
*"வேர்கள்" - அனுபவப் பகிர்வு* எனும் தொடர் நிகழ்வின் ஒரு பகுதியாக, வரும் சனிக்கிழமை, *30.05.2026 அன்று காலை 11.00* மணிக்கு *"முதுமையில் ஆரோக்கியம்’’ - நலமே மகிழ்ச்சி கலந்துரையாடல்* என்ற தலைப்பில், மருத்துவர் G.பாஸ்கர ராஜன் அவர்கள்(Director ,Maxi vision eye hospital)
சிறப்புரையாற்றவுள்ளார் . இந்நிகழ்வானது தரைத்தளத்தில் அமைந்துள்ள மாநாட்டுக்கூடம் அரங்கத்தில் நடைபெற இருப்பதால் மூத்த குடிமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம். நன்றி! அனுமதி இலவசம்!.

இந்நிகழ்ச்சியின் புகைப்பட தொகுப்பு :https://m.facebook.com/story.php?story_fbid=pfbid027NFNxdx9HKFbKSxzEZ5adSNWMsk5VXdna...
27/05/2026

இந்நிகழ்ச்சியின் புகைப்பட தொகுப்பு :

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid027NFNxdx9HKFbKSxzEZ5adSNWMsk5VXdnaN8p4w8CwGnbej66YJgvUHcdTcJQhLAwl&id=61571778167818&mibextid=Nif5oz

அனைவருக்கும் வணக்கம் !

பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்கும் வகையில் ”கோடைக்கொண்டாட்டம் -2026” என்ற நிகழ்வு இன்று (27.05.2026) காலை 11 மணிக்கு இனிதே துவங்கியது. இதில் திருமதி.ச.பாத்திமா பர்ஹானா அவர்களின் "வண்ண வண்ண பூக்கள் செய்வோம்" நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் வண்ணக் காகிதங்களை பயன்படுத்தி பல்வேறு அழகிய மலர்களை உருவாக்கும் முறைகளை கற்றுக்கொண்டனர். குறிப்பாக, காகிதத்தை சரியாக வெட்டும் நுட்பங்கள், தொடர்ச்சிக் கைவினையில் மனித வடிவ கைவினை (Human shaped craft), மலர் வடிவங்கள் மற்றும் பூக்கொத்து (bunch of flower) ஆகிய பல்வேறு கைவினை வடிவங்கள் குறித்து அவர் செயல்முறை விளக்கத்துடன் செய்து காட்டினார். இதைத் தொடர்ந்து, குழந்தைகளும் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து, தாங்களும் அதேபோல் முயன்று அழகிய வண்ண மலர்களை உருவாக்கினர். இந்நிகழ்ச்சி குழந்தைகளின் படைப்பாற்றல் திறனை வளர்க்கும் வகையில் அமைந்ததுடன், அவர்களிடையே கவனக்கூர்மை, கலைநயம் மற்றும் தன்னம்பிக்கையையும் ஊக்குவிக்கும் விதமாக அமைந்தது.

இந்த நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி.

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் *பெண்களுக்கான கோடைக்கால பயிற்சி பட்டறையின் கீழ் அழகுக் கலைப் பயிற்சி 17-05-2026 முதல் 26-05...
27/05/2026

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் *பெண்களுக்கான கோடைக்கால பயிற்சி பட்டறையின் கீழ் அழகுக் கலைப் பயிற்சி 17-05-2026 முதல் 26-05-2026* வரை சிறப்பாக நடைபெற்றது.
பயிற்றுநர் திருமதி P. தேவப்பிரியா அவர்கள் அழகுக் கலை முறைகளான
Hair style மற்றும் bridal make-up போன்ற பல்வேறு அழகுக் கலை முறைகளை எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கினார். பயிற்சியில் கலந்து கொண்டு சிறப்பாக பயிற்சி பெற்ற அனைவருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் சார்பாக வாழ்த்துகளும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்கிறோம்.

*இந்நிகழ்ச்சியின் புகைப்படத் தொகுப்பு https://www.facebook.com/share/p/1Ci9tfkEMF/அனைவருக்கும் வணக்கம் !பொதுநூலக இயக்ககம...
26/05/2026

*இந்நிகழ்ச்சியின் புகைப்படத் தொகுப்பு
https://www.facebook.com/share/p/1Ci9tfkEMF/

அனைவருக்கும் வணக்கம் !

பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில், குழந்தைகள் கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்கும் வகையில் *”கோடைக்கொண்டாட்டம் -2026”* என்ற நிகழ்வு இன்று *(26.05.2026) காலை 11 மணிக்கு* இனிதே துவங்கியது. இதன் தினசரி நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, *திரு. N. சங்கர்* நடத்தும் “ *எண்ணங்களின் உலகை வண்ணமயமாக்குவோம்”* நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் *Paper collage எனப்படும் காகித ஒட்டுக்கலையின் நுணுக்கங்கள்* குழந்தைகளுக்கு எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் *காகிதங்களை வெட்டி, ஒட்டி, பல்வேறு வடிவங்களில் அழகிய படைப்புகளை உருவாக்கும் முறைகளை* அவர் குழந்தைகளுக்கு விளக்கிக் காட்டினார்.
இந்நிகழ்வில் பங்கேற்ற *குழந்தைகள் காய்கள், பழங்கள், விலங்குகள், கடல்வாழ் உயிரினங்கள், பறவைகள், பூக்கள், வீடுகள் மற்றும் சிறுவர்கள் விரும்பும் தின்பண்டங்கள் போன்ற பல்வேறு கலைப்படைப்புகளை காகிதங்களின் மூலம் கண்கவரும் வகையில் உருவாக்கினர்.* ஒவ்வொரு படைப்பும் குழந்தைகளின் கற்பனை திறனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. குழந்தைகள் இதில் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலைப் பணிகளை செய்து மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி.

Address

Puthu Natham Road, Reserve Line
Madurai
625002

Opening Hours

Monday 8am - 8pm
Tuesday 8am - 8pm
Wednesday 8am - 8pm
Thursday 8am - 8pm
Friday 8am - 8pm
Saturday 8am - 8pm
Sunday 8am - 8pm

Alerts

Be the first to know and let us send you an email when Kalaignar Centenary Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kalaignar Centenary Library:

Share