Thangam Thenarasu

Directions Website

Thangam Thenarasu Member of the Legislative Assembly - Tiruchuli | Belongs to the Dravidian stock

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் - திருச்சுழி சட்டமன்ற தொகுதி

24/09/2026

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திருமிகு. S.சுகன்யா அவர்களுக்கு ஆதரவாக வீடு வீடாகப் பரப்புரை மேற்கொண்டபோது, மக்கள் அளித்த ஏகோபித்த ஆதரவு உதயசூரியனின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது.

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திருமிகு. சுகன்யா அவர்களை ஆதரித்து அல...
23/09/2026

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திருமிகு. சுகன்யா அவர்களை ஆதரித்து அலங்கியம் ஊராட்சியில், விருதுநகர் தெற்கு கழக மாவட்டச் செயலாளர் அண்ணன் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்களுடன் இணைந்து வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளோம்.
வெற்றி சின்னமாம் உதயசூரியனை தாராபுரத்தில் உதிக்க வைப்போம்.

23/09/2026

நேற்று தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு அலங்கியத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றிய போது...

தாராபுரம் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் திருமிகு. சுகன்யா அவர்களின் வெற்றியை உறுதி செய்...
22/09/2026

தாராபுரம் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் திருமிகு. சுகன்யா அவர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், இன்று தாராபுரம் மேற்கு ஒன்றியம், அலங்கியம் ஊராட்சியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில், விருதுநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றோம். கழகத் தோழர்களின் எழுச்சி தாராபுரத்தில் வெற்றிக்கான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து களப்பணியாற்றி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்வோம்!

இந்நிகழ்வில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. கடற்கரை ராஜ், ராஜபாளையம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. தங்கபாண்டியன், தாராபுரம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. செந்தில் குமார், விருது நகர் வடக்கு மற்றும் விருது நகர் தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், அலங்கியம் ஊராட்சிக் கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள், தோழமைக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

22/09/2026

Union Minister Thiru. Gajendra Singh Shekhawat’s attempt to question the DMK Government’s handling of the Keezhadi report and cast doubts on its archaeological findings is nothing but a politically motivated attempt to undermine Tamil Nadu’s history and scientific evidence.

Keezhadi is not built on political claims. Its antiquity is backed by archaeological and scientific evidence, including stratigraphic analysis, material culture studies and AMS carbon dating, as well as independent radiocarbon analysis by the US-based Beta Analytic laboratory. More than 15,000 artefacts have been unearthed by the Tamil Nadu Archaeology Department, providing compelling evidence of an ancient urban settlement.

The BJP’s hostility towards Keezhadi increasingly appears to stem from a deeper discomfort with what this evidence represents. Once the scientifically established history of Keezhadi is placed on the table, many of the myths and irrational claims being pushed in the name of Indian history cannot stand scrutiny.

At the same time, the present TVK government must do much more to assert the historical importance of Keezhadi and strongly defend the scientific findings of its own Archaeology Department. Tamil Nadu cannot afford silence when its history and archaeological evidence are being questioned.

If the Union BJP Government believes Keezhadi’s antiquity has not been scientifically established, let it produce evidence to disprove the findings instead of attacking archaeologists and delaying the report.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவராகவும், முன்னாள் ஒன்றிய அமைச்சராகவும் பொறுப்பு வகித்து, திராவிட முன்னேற்றக் கழகத...
21/09/2026

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவராகவும், முன்னாள் ஒன்றிய அமைச்சராகவும் பொறுப்பு வகித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியிலும், திராவிட இயக்கத்தின் பயணத்திலும் தனது பெரும்பங்களிப்பை ஆற்றிய மதிப்பிற்குரிய அண்ணன் திரு. சேடபட்டி முத்தையா அவர்களின் நினைவு நாள் இன்று.

மதுரை மக்களால் அன்புடன் “சேடப்பட்டியார்” என்று அழைக்கப்பட்ட அவரது அரசியல் பணியும், மக்களுக்காக அவர் ஆற்றிய சேவையும் என்றும் நினைவுகூரத்தக்கவை. அன்னாரின் நினைவு நாளில், அவரது மக்கள் பணியை நினைவுகூர்ந்து என் இதயமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன்.

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, கழகத் தலைவர் அண்ணன் தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல...
18/09/2026

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, கழகத் தலைவர் அண்ணன் தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடு, கழக முதன்மைச் செயலாளர் அண்ணன் திரு. கே என்.நேரு அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பொறுப்பாளர்கள் துணைப் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் மற்றும் மாவட்டச் செயலாளர் திரு. இல. பத்மனாபன் அவர்கள் உள்ளிட்ட கழக முன்னணியினருடன் பங்கேற்றோம்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளர் திருமிகு. சுகன்யா அவர்களின் வெற்றியை உறுதி செய்ய, களத்தில் அயராது உழைப்போம்!

M.K.Stalin K.N.NEHRU

சாதி ஒழிப்பு எனும் சமூக சீர்திருத்தத்தின் முன்னோடி, விளிம்புநிலை மக்களின் விடிவெள்ளி திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்...
18/09/2026

சாதி ஒழிப்பு எனும் சமூக சீர்திருத்தத்தின் முன்னோடி, விளிம்புநிலை மக்களின் விடிவெள்ளி திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாள் இன்று.

சாதியத்தின் பிணியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகச் சட்டமன்றத்தில் சமத்துவக் குரலாய் ஓங்கி ஒலித்து, பல்வேறு முயற்சிகளின் வாயிலாக, ஒடுக்கப்பட்டோருக்கு அசாத்தியங்களாக திகழ்ந்த கல்வி - வேலைவாய்ப்பு - அரசியல் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை சாத்தியப்படுத்தியவர். அவரின் சமூக அர்ப்பணிப்பை போற்றி வணங்கி, சாதியற்ற சமத்துவ சமுதாயம் படைத்திட உறுதியேற்போம்!

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான திரு. சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் மறைவெய்த...
17/09/2026

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான திரு. சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் மறைவெய்திய செய்தி வருத்தமளிக்கிறது. சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும், ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சராகவும் அவர் ஆற்றிய பணிகள் நினைவுகூரத்தக்கவை.

அவரது மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக மானுட விடுதலைக்கு வித்திட்டு அறிவுச்சூரியனாகச் சுட்டெரிக்கும் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான...
17/09/2026

உலக மானுட விடுதலைக்கு வித்திட்டு அறிவுச்சூரியனாகச் சுட்டெரிக்கும் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான இன்று, கழகத் தலைவர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி, சமூகநீதி நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனையொட்டி , இன்று மல்லாங்கிணற்றில்உள்ள அலுவலகத்தில் பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி,மாலை அணிவித்து, மரியாதை செலுத்திக் கழகத் தோழர்கள்களுடன் இணைந்து சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டோம்.

M.K.Stalin

Address

மல்லாங்கிணர்
Madurai
626109

Alerts

Be the first to know and let us send you an email when Thangam Thenarasu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share