Kallar Nadu

Kallar Nadu ஏழைகளும் கோழைகளும் இல்லாத நாட்டினை உருவாக்குவோம் 🚩
🔥பசும்பொன்-தேவர்

😥பிறப்பதற்கும் முன்பே தந்தையை இழந்த குழந்தை… பிறந்த பிறகு தந்தையின் குடும்பத்தாரிடமிருந்து பிரிக்கப்பட்டது… இறுதியில் தன...
02/06/2026

😥
பிறப்பதற்கும் முன்பே தந்தையை இழந்த குழந்தை… பிறந்த பிறகு தந்தையின் குடும்பத்தாரிடமிருந்து பிரிக்கப்பட்டது… இறுதியில் தன்னைக் காப்பாற்ற வேண்டியவர்களின் கைகளில் கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்தது.

நெடுமங்காட்டைச் சேர்ந்த ஒன்றரை வயது சிறுவன் அர்ஷித்தின் கதை வெளிவரும் ஒவ்வொரு நாளும் மனதை இன்னும் கனக்கச் செய்கிறது.

குழந்தையின் பிறப்பு பற்றிய தகவல்கூட அவன் தாத்தா சுனிலுக்கு தெரியாது. பேரனின் புகைப்படங்களையும் தகவல்களையும் அவர் சமூக வலைதளங்களின் மூலமே அறிந்திருந்தார். தனது மகனின் ஒரே வாரிசை ஒருமுறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் அவருக்கு நிறைவேறவில்லை. குழந்தை உயிரிழந்த பிறகுதான் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் தனது பேரனை முதன்முறையாக நேரில் பார்த்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் யாருடைய கண்களையும் கலங்க வைக்கும்.

அர்ஷித்தின் தந்தை அகில் உயிரிழந்தபோது, அகிலா மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார். பின்னர் அவர் அஷ்கருடன் வாழத் தொடங்கினார். அதன் பின்னர்தான் குழந்தையின் வாழ்க்கை துயரங்களால் நிரம்பியது என உறவினர்கள் கூறுகின்றனர்.

அகிலா நடன நிகழ்ச்சிகளுக்காக பல இடங்களுக்கு செல்லும் போது, குழந்தையை அடிக்கடி ஒரு நடன ஆசிரியரிடம் விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. அஷ்கர் குழந்தையை விரும்பவில்லை என்றும், அடிக்கடி துன்புறுத்துவதாகவும் அந்த ஆசிரியர் தாத்தா சுனிலிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

குழந்தையைத் துறக்க முயன்றதாகவும் தகவல் கிடைத்தபோது, தனது பேரனின் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த சுனில், அவனை காப்பாற்ற பல முயற்சிகள் மேற்கொண்டார். குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். இறுதியில் அர்ஷித்தை தந்தையின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க ஒப்புதல் கிடைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த ஒப்படைப்பு நடைபெற சில நாட்களே இருக்கும் நிலையில், அந்த சிறுவனின் வாழ்க்கை துயரமாக முடிந்தது.

குழந்தை அனுபவித்ததாக கூறப்படும் கொடுமைகள் வெளிவரும்போது மனித மனசாட்சியே உறைந்து போகும். உடலின் பல பகுதிகளில் காயங்கள், தீக்காயங்கள் மற்றும் பழைய தாக்குதல்களின் அடையாளங்கள் இருந்ததாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு குழந்தை பசித்தாலும் அழும், தூக்கம் வந்தாலும் அழும், உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் அழும். ஆனால் அர்ஷித்தின் அழுகையை கேட்க யாரும் இல்லை. அவன் வலியை உணர யாரும் இல்லை. அவன் பயத்தை புரிந்து கொள்ள யாரும் இல்லை.

மிகவும் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், அவனை அன்புடன் வளர்க்கத் தயாராக இருந்த ஒரு தாத்தா உயிருடன் இருந்தார். அந்த தாத்தாவின் கைகளுக்கு அவன் சென்றிருந்தால் இன்று உயிருடன் இருந்திருப்பானோ என்ற கேள்வி பலரின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்.

இன்று அர்ஷித் இல்லை. ஆனால் அவன் அனுபவித்த வேதனைகளும், அவனை காப்பாற்ற போராடிய தாத்தாவின் கண்ணீரும் சமூகத்தின் நினைவில் நிலைத்திருக்க வேண்டும்.

பேரனை உயிருடன் ஒருமுறையாவது பார்க்க முடியாமல் போன தாத்தாவின் வேதனையும், அன்பும் பாதுகாப்பும் தேடி அமைதியாக காத்திருந்த அர்ஷித்தின் வாழ்க்கையும் மக்களின் மனசாட்சியில் அழியாத காயமாகவே இருக்கும்.

🕯️ அர்ஷித்துக்கு நீதி கிடைக்கட்டும். 💔

இந்திய அரசியல் கட்சிகள் பெரும்பாலும் சித்தாந்தங்களின் அடிப்படையில்  #வலதுசாரி #இடதுசாரி  #மையவாத (Center) கட்சிகளாக வகைப...
19/05/2026

இந்திய அரசியல் கட்சிகள் பெரும்பாலும் சித்தாந்தங்களின் அடிப்படையில்
#வலதுசாரி
#இடதுசாரி
#மையவாத (Center) கட்சிகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

பாஜக வலதுசாரியாகவும், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடதுசாரியாகவும், காங்கிரஸ் போன்ற கட்சிகள் மையவாதப் போக்குடனும் செயல்படுகின்றன.

#வலதுசாரி கட்சிகள் (Right-Wing):
பாரதிய ஜனதா கட்சி (BJP): கலாச்சார தேசியவாதம், இந்துத்துவா, தடையற்ற சந்தை, பழமைவாதம் மற்றும் வலுவான பாதுகாப்பு கொள்கைகளை ஆதரிக்கிறது.

சிவ சேனா (Shinde), அதிமுக (AIADMK) போன்ற கட்சிகள்:
இவை பெரும்பாலும் பிராந்தியவாதத்துடன் வலதுசாரி கொள்கைகளை பின்பற்றுகின்றன.

#இடதுசாரி கட்சிகள் (Left-Wing):
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (CPI) & மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M): தொழிலாளர் உரிமைகள், சமூக சமத்துவம், பொதுத்துறை மற்றும் சோசலிச சித்தாந்தத்தை வலியுறுத்துகின்றன.
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (CPI-ML): தீவிர இடதுசாரி கொள்கைகளைக் கொண்டது.

#மையவாத / தாராளமய கட்சிகள் (Center / Centre-Left):
இந்திய தேசிய காங்கிரஸ் (INC): மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் பொருளாதார தாராளமயமாக்கல் ஆகியவற்றின் கலவையான மையவாத நிலைப்பாடு.
ஆம் ஆத்மி கட்சி (AAP): நலத்திட்டங்கள் மற்றும் மதச்சார்பின்மையை வலியுறுத்தும் மையவாத போக்கு.
பகுஜன் சமாஜ் கட்சி (BSP): சமூக சமத்துவத்தை வலியுறுத்துகிறது

பல்கலை பேராசிரியர் பணியை நிறைவு செய்து சமூகப்பணி நோக்கி  பாராட்டு விழாவில்  #கள்ளர்_நாடு_அறக்கட்டளை தன்னார்வலர்கள் சார்ப...
18/05/2026

பல்கலை பேராசிரியர் பணியை நிறைவு செய்து சமூகப்பணி நோக்கி பாராட்டு விழாவில் #கள்ளர்_நாடு_அறக்கட்டளை தன்னார்வலர்கள் சார்பாக கலந்துகொண்டு
#டாக்டர்_குபேந்திரன் அவர்களுக்கு மரியாதை செய்தபோது

திருமதி சசிகலா அவர்களின் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் 29தொகுதிகளில் போட்டியிட்டு  வா...
06/05/2026

திருமதி சசிகலா அவர்களின் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் 29தொகுதிகளில் போட்டியிட்டு வாங்கிய வாக்குகள் மொத்தம் 1,08,122 . புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி 56 தொகுதிகளில் போட்டியிட்டு வாங்கிய 93,669 வாக்குகளை விட அதிகம்.

அதிகபட்சமாக முதுகுளத்தூர் தொகுதியில் 40,282 வாக்குகளும், உசிலம்பட்டி தொகுதியில் 16,620 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இரண்டு இடங்களில் அதிமுகவின் வெற்றியை தடுத்துள்ளார். முதுகுளத்தூர், உசிலம்பட்டி, தொகுதிகளில் திருமதி சசிகலா அம்மையார் அவர்களின் வேட்பாளர்கள் அதிமுகவை தோல்வியடையச் செய்துள்ளனர். அதேபோல் சாத்தூர் தொகுதியில் பிஜேபியின் மாநில தலைவர் நயினர் நாகேந்திரன் அவர்களின் வெற்றியையும் தடுத்து நிறுத்தி உள்ளார்.

1. முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் 20,502 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். அந்தத் தொகுதியில் சசிகலா அம்மையார் நிறுத்திய வேட்பாளர் பெற்ற வாக்குகள் 40,422

2. உசிலம்பட்டித் தொகுதியில் அதிமுக வேட்பாளர் 1805 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். அந்தத் தொகுதியில் சசிகலா அம்மையார் நிறுத்திய வாக்காளர் பெற்ற வாக்குகள் 16,620

3. சாத்தூர் தொகுதியில் பாசக வேட்பாளர் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 5989 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியடைந்துள்ளார். இந்த தொகுதியில் சசிகலா அம்மையார் நிறுத்திய வேட்பாளர் பெற்ற வாக்குகள் 11,602.

4. சங்கரன்கோவில் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் 6489 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியடைந்துள்ளார். இந்த தொகுதியில் சசிகலா அம்மையார் வேட்பாளர் பெற்ற வாக்குகள் 8006.

5. மன்னார்குடியில் திமுக வேட்பாளர் டி ஆர் பி ராஜா 1566 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியடைந்துள்ளார். இந்த தொகுதியில் சசிகலா அம்மையார் வேட்பாளர் பெற்ற வாக்குகள் 1949.

1 முதுகுளத்தூர் 40,422

2 உசிலம்பட்டி 16,620

3 சாத்தூர் 11,602

4 தென்காசி 7,715

5 சங்கரன்கோவில் 8,006

6 திருமங்கலம் 2,851

7 மேலூர் 2,628

8 பரமக்குடி 2,239

9 வாசுதேவநல்லூர் 2,249

10 மன்னார்குடி 1,949

11 சிவகாசி 1,729

12 ராஜபாளையம் 1,547

13 சிவகங்கை 1,186

14 அருப்புக்கோட்டை 1,147

15 நாங்குநேரி 1,048

16 போடிநாயக்கனூர் 659

17 விராலிமலை 834

18 திருப்பத்தூர் 611

19 காரைக்குடி 602

20 ஸ்ரீபெரும்புதூர் 489

21 எடப்பாடி 429

22 சீர்காழி 365

23 அரவக்குறிச்சி 290

24 லால்குடி 192

25 காட்பாடி 187

26 பல்லாவரம் 231

27 குளச்சல் 145

28 திரு.வி.க நகர் 94

29 ஆம்பூர் 93

29 தொகுதிகளிலும் பெற்ற மொத்த வாக்குகள்: 1,08,122

அடுத்து தோழர் வேல்முருகன் அவர்களின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் எவ்வளவு வாக்குகள் வாங்கி இருக்கின்றன என்று பார்க்கலாம்.

தோழமையுடன்
மருது பாண்டியன்
சோசலிச மையம்
6379240290

முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி மொத்த வாக்கு விபரம் R.S.ராஜகன்ணப்பன் திமுக 68,003B.மலர்விழி ஜெயபால் தவெக 51,405மலேசியா S...
06/05/2026

முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி மொத்த வாக்கு விபரம்

R.S.ராஜகன்ணப்பன் திமுக 68,003

B.மலர்விழி ஜெயபால் தவெக 51,405

மலேசியா S.பாண்டியன் அதிமுக 47,501

மருத்துவர் R.ராம்குமார் அஇபுதமமுக 40,422

மருத்துவர் சந்திரபிரபா ஜெயபால் நாம் தமிழர் 15112

வழக்கறிஞர் சத்தியம் C.சரவணன் கால்நடை வளர்ப்பு நலவாரியம் 2,042

M.இருளான்டி நாடாளும் மக்கள் கட்சி 1250

K.செந்தில் மள்ளர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி 1149

C.மலைச்செல்வம் புதிய தமிழகம் 993

R.மூவேந்திரன் சுயோட்சை 486

ரவி கோவிந்தன் சுயோட்சை 445

V.பாண்டி சுயோட்சை 440

G.செல்வராஜ் சுயோட்சை 339

M.பூமிநாதன் சுயோட்சை 335

SPK. முருகன் சுயோட்சை 208

K.கங்கை அமரன் சுயோட்சை 196

C.கெங்குசாமி சுயோட்சை 166

M.கருப்பசாமி சுயோட்சை 164

A.சரவணக்குமார் சுயோட்சை 148

K ராஜ்குமார் சுயோட்சை 140

நோட்டா 429

 #தாய்வழி சமூகம் வழிபாடு  #மீனாட்சி )கொற்றவை)தமிழக வரலாற்றில் குறிப்பாகச் தென் தமிழகத்தில் கள்ளர் சமூகத்தினர் மத்தியில் ...
28/04/2026

#தாய்வழி சமூகம் வழிபாடு #மீனாட்சி )கொற்றவை)

தமிழக வரலாற்றில் குறிப்பாகச் தென் தமிழகத்தில் கள்ளர் சமூகத்தினர் மத்தியில் நீண்ட காலமாகக் தாய்வழிச் சமூகத்தின் (Matrilineal) அடையாளங்கள் மற்றும் மரபுகள் நிலவி வருகின்றன.

கள்ளர், மறவர், அகமுடையர் ஆகிய மூன்று பிரிவினரும் முக்குலத்தோர் (தேவர்) என அழைக்கப்படுகின்றனர்
கள்ளர் சமூகத்தில் தாய்வழி மரபின் முக்கிய அம்சங்கள்:

பெண்வழி கிளை: சிவகங்கை போன்ற தென் மாவட்டங்களில், குறிப்பாக ஈசநாட்டுக்கள்ளர் மற்றும் பிறமலை கள்ளர் உட்பிரிவுகளில், வம்சாவளிப் பெயர்கள் அல்லது கிளைப் பெயர்கள் தாய் வழியிலேயே கணக்கிடப்படுகின்றன.

சொத்துரிமை: பாரம்பரியமாக, சொத்துரிமை பெண் வழியிலேயே அதாவது தாயிடமிருந்து மகளுக்கு அல்லது பெண் வழி வாரிசுகளுக்குச் செல்லும் முறை சில இடங்களில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

தாய்மாமன் உறவு: திருமண மற்றும் துக்க நிகழ்வுகளில், தாய்மாமனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் இவர்களின் தாய்வழி மரபைக் காட்டுகிறது.

கள்ளர்கள் பண்டைய சோழர் மற்றும் பாண்டியர் படைகளில் முக்கியப் பங்காற்றிய போர்மரபினர் ஆவர். இன்றும் கள்ளர் சமூகம் தங்களுக்குள் உள்ள "நாடு" பிரிவுகளின் அடிப்படையில் தாய்வழிச் உறவுமுறைகளைத் தக்கவைத்துக்கொண்டுள்ளனர்.
இப்பாரம்பரியம் குறித்த விரிவான ஆய்வுகள் மற்றும் ஆவணங்கள் கள்ளர் சமூகத்தின் தாய்வழி அடையாளங்களை உறுதிப்படுத்துகின்றன..

 #வல்லவனுக்கு_வல்லவன்_கவுட் 🔥"உசைன் போல்ட்டின் சாதனையைத் தகர்த்த 18 வயது மின்னல்!"
13/04/2026

#வல்லவனுக்கு_வல்லவன்_கவுட் 🔥

"உசைன் போல்ட்டின் சாதனையைத் தகர்த்த 18 வயது மின்னல்!"

12/04/2026

இன்னொருவரிடமிருந்து நீங்கள் சந்தோஷத்தை பிழிந்தெடுக்க முயற்சி செய்து, அவரும் உங்களிடமிருந்து சந்தோஷத்தை பிழிந்தெடுக்க பார்த்தால், காலப்போக்கில் அந்த உறவு வலி நிறைந்ததாக ஆகிவிடும்.

#குருவாசகம்

10/04/2026
பிஜேபி + அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடாது? ஏன்?♦    தமிழர் வரலாறு, தமிழர் பண்பாடு, தமிழ் மொழியின் தொன்மை உள்ளிட்ட ...
10/04/2026

பிஜேபி + அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடாது? ஏன்?

♦ தமிழர் வரலாறு, தமிழர் பண்பாடு, தமிழ் மொழியின் தொன்மை உள்ளிட்ட அனைத்தையும் சிதைத்து, ஆரிய சமக்கிருத, வேதப் பண்பாட்டு வரலாற்றைத் திரித்து முன்னிலைப் படுத்துவார்கள்.

♦ தமிழர் நாகரிகம் சார்ந்த கீழடி, பூம்புகார், மல்லை, ஆதிச்சநல்லூர், கொடுமணல் உள்ளிட்ட அகழ்வாராய்ச்சி முடிவுகளை மாற்றி எழுதுவார்கள். கீழடி நாகரீகத்தை உரத்துப் பேசிய அமர்நாத் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதையும் இதோடு இணைத்து பாருங்கள்.

♦ பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அறிவியல் வகைப்பட்ட கல்வித் திட்டத்தை மாற்றி, சனாதன வேதக் கருத்துகளைப் புகுத்தி அறிவியல் கண்ணோட்டத்தை அழிப்பார்கள்.

♦ பார்ப்பன மேலாதிக்கத்தை அனைத்து நிலைகளிலும் உறுதிப்படுத்துவார்கள்.
தமிழர் வழிபாட்டுத் தலங்களில் நிர்வாக
மேலாதிக்கம் செய்ய முனைவார்கள். இந்து சமய அறநிலையத்துறை என்பதை அழித்து, பார்ப்பனர்களிடமும் தீட்சிதர்களிடமும் ஆலயங்களை ஒப்படைக்கும் முயற்சிகளில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

♦ மதச் சிறுபான்மையினரான இஸ்லாமியர், கிறித்தவர்கள் மீதான வெறுப்புணர்வை வளர்த்து சமூக நல்லிணக்கத்தைக் கெடுப்பார்கள். திருப்பரங்குன்றம் விஷயத்தில் எவ்வளவு மூர்க்கமாக நீதித்துறையின் உதவியோடு சமூக நல்லிணக்கத்தை கெடுக்க முயல்கிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

♦ வடவர்களை தமிழ்நாட்டில் நுழைய வைத்து, தமிழ்நாட்டை ஒரு மொழிக் கலப்பு மாநிலமாக மாற்றுவார்கள். பல நகரங்களில் ஆயிரக்கணக்கில் வடவர்கள் வந்து குடியேறுகிறார்கள். இவர்களுக்கு வாக்குரிமை வழங்கி தங்களை நிலைப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

♦ வடநாட்டு முதலாளிகளின் வேட்டைக்காடாகத் தமிழ்நாட்டை மாற்றுவார்கள். ஏற்கனவே அம்பானி அதானி போன்ற குசராத்திகளை மட்டுமே வளர்ப்பதற்காக ஆட்சி நடத்துகின்றனர்.

♦ வட இந்திய தொழிலாளர்களை தமிழ்நாட்டில் குடியேற்றி, தமிழர்களின் வாழ்வாதாரங்களை சூறையாடுவார்கள்.
மொத்தத்தில் தமிழ்நாட்டில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக மாற்றப்படுவார்கள்.

♦ தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய வரிவருவாய்களை முழுக்கச் சுரண்டிக் கொழுக்கிறார்கள். புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் பேரிடர்கள் ஏற்பட்டால் கூட தமிழகத்திற்குப் போதிய நிதிகளை ஒதுக்க மறுக்கிறார்கள். ஆனால் அதேவேளை வட மாநிலங்களுக்கு அள்ளி அள்ளி வாரி வழங்குகிறார்கள்.

♦ நடுவன் துறை சார்ந்த தொடர்வண்டித் துறை, எல்ஐசி, வங்கிகள், என்.எல்.சி.போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் தமிழர்களின் வேலைவாய்ப்பு உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு, வடவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கி வருகிறார்கள். மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பை மறுத்து வருகிறார்கள்.

♦ அரசமைப்புச் சட்டம் வழங்கிய குறைந்தபட்சக் கூட்டாட்சி முறைக்கு வேட்டுவைத்து, மத்தியில் அதிகாரங்களைக் குவிப்பதற்கு ஏதுவாக மோசமான சட்டத் திருத்தங்களைச் செய்து வருகிறார்கள்.

♦ என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் போன்றவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, அனைத்து மொழி வழி மாநிலங்களையும் ஒடுக்க நினைக்கிறார்கள்.

♦ இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின பழங்குடி மக்களின் சமூக நீதி உரிமைகளைப் பறித்து, கல்வி வேலை வாய்ப்புகளில் உரிய இட ஒதுக்கீடுப் பங்கீட்டை வழங்க மறுக்கிறார்கள். அதேநேரத்தில் உயர்சாதியினருக்கான 10% EWS இட ஒதுக்கீட்டை மட்டும் உடனடியாக நிறைவேற்றுகிறார்கள்.

♦ உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கி ஒன்றிய அரசுச் செயலாளர்கள், உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் வரை சமூக நீதியைப் பின்பற்ற மறுக்கிறார்கள். பெரும்பான்மை மக்களான இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமைகளைப் பறித்து உயர் சாதி இந்துக்களுக்காக மட்டுமே வழங்கி வருகிறார்கள்.

தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் இவ்வளவுக் கேடுகளைச் செய்யும் பாசகவோடு கூட்டணி வைத்துக்கொண்டு, கொத்தடிமையாய் வலம் வரும் அதிமுகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்.

தோழமையுடன்
மருது பாண்டியன்
சோசலிச மையம்
6379240290

Address

Kalavasal
Madurai
625016

Telephone

+919944034341

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kallar Nadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category