திராவிடர் விடுதலை கழகம் மதுரை

  • Home
  • India
  • Madurai
  • திராவிடர் விடுதலை கழகம் மதுரை

திராவிடர் விடுதலை கழகம் மதுரை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from திராவிடர் விடுதலை கழகம் மதுரை, Political organisation, Madurai.

மக்கள் சிவில் உரிமைக் கழகம் நடத்தும் தோழர்.பேரா.சாய்பாபா நினைவேந்தல் கூட்டத்தில்மதுரை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்...
27/10/2024

மக்கள் சிவில் உரிமைக் கழகம் நடத்தும்

தோழர்.பேரா.சாய்பாபா நினைவேந்தல் கூட்டத்தில்

மதுரை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாவட்டச் செயலாளர்.மா.பா.மணிஅமுதன் பங்கேற்கிறார்

வாய்ப்புள்ள தோழர்கள் பங்கேற்பீர்

மேலூரில் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகம் நடத்திய "பிஞ்சுக் குழந்தைகளை கொன்று குவிக்கும் இசுரேலுக்கு இந்தியாவின் ஆயுதமா...
26/10/2024

மேலூரில் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகம் நடத்திய "பிஞ்சுக் குழந்தைகளை கொன்று குவிக்கும் இசுரேலுக்கு இந்தியாவின் ஆயுதமா " கருத்தரங்கில் மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாவட்டச் செயலாளர் மா.பா.மணிஅமுதன் பங்கேற்று உரையாற்றினார்

கைது நடவடிக்கையும் கழகக் கூட்டமும் கொடைக்கானலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் 60 தோழர்கள...
24/10/2024

கைது நடவடிக்கையும் கழகக் கூட்டமும்
கொடைக்கானலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் 60 தோழர்கள் கைது...

தமிழ்நாட்டின் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநர் R.N.ரவியை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கருப்புக்கொடி காட்டி முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் கழகத்தின் தோழர்கள் 60 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து கொடைக்கானலில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்..

ஆளுநர் ரவியை நியமித்த நாள் முதல் இன்று வரை அவரின் திராவிட ஒவ்வாமை, தமிழ் மொழி வெறுப்பு, தமிழர் வெறுப்பு, இந்தி, சமஸ்கிருத திணிப்பு, பூனூல் விழா என அவர் பொறுப்புக்கு சம்பந்தமில்லாத வேலைகளையும் RSS ன் செயல்திட்டங்களையும் அரங்கேற்றம் செய்யும் இடத்தில் இருக்கும் ஆளுநர் ரவி யார்? பார்ப்பன மேலாதிக்கத்திற்காக ஏன் செயல்படுகிறார்? தமிழர் விரோத போக்குடன் ஏன் நடந்து கொள்கிறார்? திராவிடத்தை கண்டால் ஏன் இவர் அஞ்சுகிறார்? என்னும் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில்

திண்டுக்கல் மாவட்டத் தலைவர் தோழர் மருதமூர்த்தி Marutha Moorthy அவர்களும்,

சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் உமாபதி Uma Pathy அவர்களும்

திருப்பூர் மாவட்டத் தலைவர் தோழர் முகில இராசு அவர்களும்

மதுரை மாவட்டச் செயலாளர் தோழர் மணி அமுதன். மா.பா அவர்களும்

தேனி மாவட்ட அமைப்பாளர் தோழர் தேனி ராயன், Dalith Rayan ஆகியோரும் சிறப்பானதொரு உரையாற்றினர்...

சந்தேகங்கள், உரையாடல்கள் என கழகத்தின் கூட்டம் போலவே நடைபெற்றது என்பது சிறப்பு..
இந்த கருப்புக்கொடி முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் கிட்டத்தட்ட 60 தோழர்கள் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டனர்...

| | | #திவிக | | | | | | | | | | | | | | | | | #சன்_தொலைக்காட்சி

கொடைக்கானலில் ஆளுநருக்கு கருப்புக் கொடி திவிக தோழர்கள் 60 பேர் கைதுகொடைக்கானல் வந்த ஆளுநர் ரவியை கண்டித்து திண்டுக்கல் த...
23/10/2024

கொடைக்கானலில் ஆளுநருக்கு கருப்புக் கொடி திவிக தோழர்கள் 60 பேர் கைது

கொடைக்கானல் வந்த ஆளுநர் ரவியை கண்டித்து திண்டுக்கல் திராவிடர் விடுதலைக் கழகம சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாவட்டச் செயலாளர் மா பா மணிஅமுதன், மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி உள்ளிட்ட 60 தோழர்கள் கைது.

நேற்று ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து நடந்த தி.வி.க ஆர்ப்பாட்டம் - இன்றைய தினகரன் நாளிதழில்.
22/10/2024

நேற்று ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து நடந்த தி.வி.க ஆர்ப்பாட்டம் - இன்றைய தினகரன் நாளிதழில்.

தமிழ்த் தாய் வாழ்த்தை இழிவுபடுத்திய ஆர்என் ரவியை கண்டித்து இன்று காலை மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 10...
21/10/2024

தமிழ்த் தாய் வாழ்த்தை இழிவுபடுத்திய ஆர்என் ரவியை கண்டித்து இன்று காலை மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 1000 அஞ்சல் அட்டைகள் அனுப்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ..

கழக மதுரை மாவட்டச் செயலாளர்.மா.பா.மணிஅமுதன் தலைமையில்- தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்வில் ஆதித்தமிழர் கட்சி, பழங்தமிழர் இயக்கம், மக்கள் சட்டஉரிமை இயக்கம், தமிழக மக்கள் கழகம் உள்ளிட்ட தோழமை அமைப்புத் தோழர்களும் பங்கேற்றனர்..

Address

Madurai
625100

Alerts

Be the first to know and let us send you an email when திராவிடர் விடுதலை கழகம் மதுரை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share