தமிழக வெற்றிக் கழகம். குடந்தை மாநகரம்

  • Home
  • India
  • Kumbakonam
  • தமிழக வெற்றிக் கழகம். குடந்தை மாநகரம்

தமிழக வெற்றிக் கழகம். குடந்தை மாநகரம் தஞ்சை (கி) மாவட்ட வர்த்தக அணி

என்றும் தளபதி வழியில்

நம் தமிழக வெற்றிக் கழகத்தின் 101-வது நாள் வெற்றிப் பயணம்! ✨​இன்று சட்டசபை நிகழ்வுகளைத் தொடர்ந்து, மாண்புமிகு வேளாண்மை மற...
18/08/2026

நம் தமிழக வெற்றிக் கழகத்தின் 101-வது நாள் வெற்றிப் பயணம்! ✨
​இன்று சட்டசபை நிகழ்வுகளைத் தொடர்ந்து, மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனநிறைவுடன் வாழ்த்து பெற்ற இனிய தருணம்! 🌾🚩 #தமிழகவெற்றிக்கழகம் #101வதுநாள் #மக்கள்சேவை

எத்தனையோ படங்கள் பார்த்திருப்போம்... எத்தனையோ கொண்டாட்டங்களைக் கடந்திருப்போம்... ஆனால் இந்த ஃப்ளெக்ஸ் (Flex) வைக்கும் போ...
22/07/2026

எத்தனையோ படங்கள் பார்த்திருப்போம்... எத்தனையோ கொண்டாட்டங்களைக் கடந்திருப்போம்... ஆனால் இந்த ஃப்ளெக்ஸ் (Flex) வைக்கும் போது நெஞ்சில் ஏற்பட்ட அந்த கனத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது! 💔

​சின்ன வயசுல இருந்து எங்கள சிரிக்க வச்சு, ரசிக்க வச்சு, கொண்டாட வச்ச நம்ம தளபதி விஜய் அவர்களின் திரைப்பயணத்தின் கடைசிப் படம்! 🎬💥

​திரையில் நீங்கள் காட்டிய மேஜிக், கொடுத்த எனர்ஜி, விதைத்த நம்பிக்கை... இதெல்லாம் வெறும் சினிமா இல்ல, எங்களோட வாழ்க்கையோட கலந்த ஒரு அங்கம்!

​திரையுலகில் நீங்கள் படைத்த சாதனைகள் என்றும் அழியாது. வெள்ளித்திரையை விட்டு விலகினாலும், எங்கள் இதயங்களின் ஒரே தளபதி நீங்கள் தான்! ✨🚩

​உங்கள் அடுத்தகட்டப் பயணத்திற்கும், புதிய பாதைக்கும் எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் தலைவா! 💐🔥

​ VijayFans

🪑 குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக 25 நாற்காலிகள் வழங்கப்பட்டன 🪑மாண்புமிகு தமிழக முதல்வர் திரு சி. ஜோசப் விஜய் அவர்களின்...
06/07/2026

🪑 குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக 25 நாற்காலிகள் வழங்கப்பட்டன 🪑

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு சி. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர்களின் மக்கள் நல ஆட்சிக் கனவை முன்னெடுத்தும், தஞ்சை மாவட்ட பொறுப்பு அமைச்சரும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சருமான திரு வினோத் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், 33வது வார்டில் இயங்கி வரும் பால்வாடியில் பயிலும் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

அப்பால்வாடியில் பணியாற்றும் திருமதி உமா அவர்கள், 25 குழந்தைகளும் அமர்ந்து படிப்பதற்கு நாற்காலிகள் தேவை என கோரிக்கை வைத்திருந்தார். அந்த கோரிக்கையை உடனடியாக ஏற்று, இன்று பால்வாடிக்கு 25 நாற்காலிகள் நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் தஞ்சை கிழக்கு மாவட்ட பொருளாளர் திரு விஜய் சந்திரன் அவர்கள் நேரில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு நாற்காலிகளை வழங்கி சிறப்பித்தார். உடன் பகுதி செயலாளர் திரு தெட்சிணாமூர்த்தி அவர்கள், திரு பிரபு அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த நலத்திட்ட உதவி அரவிந்த் E.J., தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணை அமைப்பாளர் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.

"குழந்தைகளின் கல்வி வளர்ச்சியே சமூகத்தின் எதிர்கால வளர்ச்சி" என்ற எண்ணத்துடன், மக்கள் நலப் பணிகள் தொடரும்.

மக்களின் நலனுக்காக என்றும் களத்தில்...

#சி_ஜோசப்_விஜய் #அமைச்சர்_வினோத் #விஜய்சந்திரன் #தெட்சிணாமூர்த்தி #அரவிந்த் மக்கள்சேவை தாராசுரம் 33வதுவார்டு TVK தவெக தஞ்சைகிழக்குமாவட்டம்

🎂🎉 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு! 🎉🎂மக்களின் நம்பிக்கையை வென்ற...
22/06/2026

🎂🎉 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு! 🎉🎂
மக்களின் நம்பிக்கையை வென்று, தமிழ்நாட்டின் வளர்ச்சி, சமூகநீதி மற்றும் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மனமார வாழ்த்துகிறோம்.
நீங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு மேலும் பல நலத்திட்டங்களையும் சாதனைகளையும் வழங்க இறைவன் அருள் புரிய வேண்டுகிறோம்.
“மக்கள் சேவையே மகேசன் சேவை” என்ற உயரிய நோக்குடன் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்துக்கள்.
🎂 இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் முதல்வரே!
🌹 வாழ்க வளமுடன்!
🌹 வளர்க உங்கள் மக்கள் சேவை!
அன்புடன்,
அரவிந்த் E.J
மாவட்ட வர்த்தக அணி இணை அமைப்பாளர் மற்றும்
33வது வார்டு, தஞ்சை கிழக்கு மாவட்டம்

Address

Kumbakonam
612702

Alerts

Be the first to know and let us send you an email when தமிழக வெற்றிக் கழகம். குடந்தை மாநகரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category